realme GT3 https://www.91mobiles.com/tamil Mon, 27 Mar 2023 08:23:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 பிஐஎஸ் சான்றிதழைப் பெற்றதால் இந்தியாவில் விரைவில் வெளியாகிறது Realme GT 3 https://www.91mobiles.com/tamil/realme-gt-3-india-release-soon-as-it-bags-bis-certification/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-gt-3-india-release-soon-as-it-bags-bis-certification Mon, 27 Mar 2023 08:23:07 +0000 https://www.91mobiles.com/tamil/?p=7102   கடந்த மாதம், MWC 2023 தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சியில் Realme GT 3 மொபைலின் உலகளாவிய சந்தைக்கான மாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த சாதனம் இப்போது இந்திய தரநிலைகளின் பணியகத்தால் (BIS) அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது விரைவில் இந்திய சந்தையில் வெளியிடப்படும் என்பதைக் குறிக்கிறது. இந்த ரியல்மி GT 3 என்பது சீன சந்தையில் கிடைக்கும் Realme GT Neo 5 240W மொபைலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும்.   மெமரி Realme GT 3 BIS இன் […]

The post பிஐஎஸ் சான்றிதழைப் பெற்றதால் இந்தியாவில் விரைவில் வெளியாகிறது Realme GT 3 first appeared on .

]]>

Highlights

  • Realme GT 3 BIS இன் தரவுத்தளத்தில் RMX3709 என்ற மாதிரி எண் உடன் வெளிவந்துள்ளது.
  • இந்த மொபைல் Realme GT Neo 5 240W இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும்
  • இது மே அல்லது ஜூன் மாதத்தில் இந்திய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த மாதம், MWC 2023 தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சியில் Realme GT 3 மொபைலின் உலகளாவிய சந்தைக்கான மாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த சாதனம் இப்போது இந்திய தரநிலைகளின் பணியகத்தால் (BIS) அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது விரைவில் இந்திய சந்தையில் வெளியிடப்படும் என்பதைக் குறிக்கிறது. இந்த ரியல்மி GT 3 என்பது சீன சந்தையில் கிடைக்கும் Realme GT Neo 5 240W மொபைலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும்.

 

மெமரி

Realme GT 3 BIS இன் தரவுத்தளத்தில் மாதிரி எண் RMX3709 உடன் வெளிவந்துள்ளது. இந்த மொபைலின் விவரக்குறிப்புகளில் எந்த இரகசியமும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே ஐரோப்பாவில் 649 யூரோக்களின் ஆரம்ப விலையுடன் அறிமுகமான அதே மாடல் தான் இது. ஐரோப்பாவில், இது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு, மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி சேமிப்பு என பல வகைகளில் கிடைக்கும் எனத் தெரிகிறது.

எப்போது வெளியாகும்

மே அல்லது ஜூன் மாதத்தில் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இது உலக சந்தையில் அறிமுகமாகும் வாய்ப்பு உள்ளது.

 

ரீ-பிராண்டட்

Realme GT 3 இன் USP என்பது சீனாவிற்கு வெளியே உள்ள சந்தைகளில் 240W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் முதல் தொலைபேசியாகும். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், GT 3 என்பது சீன சந்தையில் கிடைக்கும் Realme GT Neo 5 240W இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும்.

அம்சங்கள்

Realme GT 3 ஆனது 6.74 அங்குல OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 1.5K தெளிவுத்திறன் மற்றும் 144Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்குகிறது. இது Snapdragon 8 Plus Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 16 GB வரை LPDDR5x ரேம் மற்றும் 256 GB வரை UFS 3.1 சேமிப்பிடம் உள்ளது. இது Realme UI 4.0 அடிப்படையிலான Android 13 OS இல் இயங்குகிறது.

 

கேமரா & பேட்டரி

GT 3 ஆனது 240W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 4,600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது முன்பக்கத்தில் 16-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா மற்றும் பின்பக்கத்தில் 64-மெகாபிக்சல் (சோனி IMX890) + 8-மெகாபிக்சல் (அல்ட்ரா-வைட்) + 2-மெகாபிக்சல் (மேக்ரோ) டிரிபிள் கேமரா போன்றவற்றைக் கொண்ட மூன்று கேமராத் தொகுதிகளுடன் வெளிவரும்.

The post பிஐஎஸ் சான்றிதழைப் பெற்றதால் இந்தியாவில் விரைவில் வெளியாகிறது Realme GT 3 first appeared on .

]]>
10 நிமிடத்தில் 100% சார்ஜ்! https://www.91mobiles.com/tamil/realme-gt3-mobile-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=realme-gt3-mobile-launched-in-india Tue, 28 Feb 2023 15:18:49 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6125 Realme GT3 இந்தியாவில் Realme GT3 என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இந்த மொபைல் சில நாட்களுக்கு முன் வெளியான ரியல்மி நியோ 5 என்ற மொபைலின் மறுபதிப்பு ஆகும். இதில் ஸ்னாப்ட்ராகன் 8+ Gen 1 ப்ராஸசர், 50MP கேமரா தவிர மேலே சொன்னது போல் 240W சார்ஜிங் வசதி என சில குறிப்பிடத்தக்க அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது.   டிஸ்ப்ளே இந்த மொபைல் 6.74 அங்குல, 1பில்லியன் கலர்களை வெளிப்படுத்தும் HDR10+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. […]

The post 10 நிமிடத்தில் 100% சார்ஜ்! first appeared on .

]]>

Highlights

  • ரியல்மி நிறுவனத்தின் வசதியுள்ள ரியல்மி GT3 மொபைல் இந்தியாவில் வெளியானது.
  • இது 10 நிமிடத்திற்குள் முழுவதும் சார்ஜ் ஆகும்படி 240W சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வெளியாகி இருக்கிறது.

Realme GT3

இந்தியாவில் Realme GT3 என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இந்த மொபைல் சில நாட்களுக்கு முன் வெளியான ரியல்மி நியோ 5 என்ற மொபைலின் மறுபதிப்பு ஆகும். இதில் ஸ்னாப்ட்ராகன் 8+ Gen 1 ப்ராஸசர், 50MP கேமரா தவிர மேலே சொன்னது போல் 240W சார்ஜிங் வசதி என சில குறிப்பிடத்தக்க அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது.

 

டிஸ்ப்ளே

இந்த மொபைல் 6.74 அங்குல, 1பில்லியன் கலர்களை வெளிப்படுத்தும் HDR10+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும் இது 144Hz ரிஃப்ரெஷ் ரேட்டையும், 1400 nits வெளிச்சத்தன்மையையும் கொண்டுள்ளது. கூடவே 451ppi அடர்த்தியுடன் கூடிய 1240 x 2772 பிக்சல்களைக் கொண்டு 20:9 விகித்தில் வெளியாகி இருக்கிறது.

 

சிப்செட்

இந்த மொபைல் Snapdragon 8+ Gen 1 ப்ராஸசரைக் கொண்டுள்ளது. இதன் அட்ரினோ 730 ஆகும்.  மேலும் இது ஆண்ட்ராய்டு 13ன் மேல் ரியல்மியின் UI 4.0 ஸ்கின்னைக் கொண்டுள்ளது. இது ஒரு இரட்டை சிம் மொபைல் ஆகும்.

கேமரா

இந்த ரியல்மி ஜிடி3 மொபைலின் பின்பக்கத்தில் 50MP முதன்மை கேமராவும், 8MP அல்ட்ராவைடு கேமராவும், 2MP மைக்ரோஸ்கோப் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4K வீடியோக்களைக்கூட எடுக்க முடியும். அதேவேளையில் முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 1080p வீடியோகளை எடுக்க முடியும். இது தவிர இந்த கேமராக்கள் HDR, பனோரமா போன்ற வசதிகளையும் கொண்டுள்ளன. இதுபோக ட்யூயல்-LED ட்யூயல் டோன் ப்ளாஷ் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஷட்டர் கவுண்டிங் ஆப்ஷனைக் கொண்டுள்ளது.

 

மெமரி

இந்த ரியல்மி ஜிடி3 மொபைல்..

8ஜிபி ரேம் – 128ஜிபி சேமிப்புத்திறன்

12ஜிபி ரேம் – 256ஜிபி சேமிப்புத்திறன்

16ஜிபி ரேம் – 256ஜிபி சேமிப்புத்திறன்

16ஜிபி ரேம் – 512ஜிபி சேமிப்புத்திறன்

16ஜிபி ரேம் – 1டிபி சேமிப்புத்திறன் என 5 வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது.  இதில் போனின் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வழங்கப்படவில்லை.

 

பேட்டரி

இதில் 4600mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 240W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20% சார்ஜினை 80 வினாடிகளிலும், 50% சார்ஜினை 4 நிமிடத்திலும், 100% சார்ஜினை 10 நிமிடங்களிலும் நிரப்பிக் கொள்ள முடியும்.

நிறங்கள்

199 கிராம் எடையுள்ள இந்த மொபைல் பர்ப்பிள், ப்ளாக் மற்றும் ஒயிட் என மூன்று வண்ணங்களில் வெளியாகி இருக்கிறது.

 

கனெக்டிவிட்டி

இந்த மொபைலின் பாதுகாப்புக்கு அண்டர் டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார் பயபடுத்தப்பட்டுள்ளது. இது தவிர, ப்ளூடூத் 5.3, Wi-Fi, டூயல் பேண்ட் GPS, NFC, Infrared, Type C போன்ற பலவிதமான கனெக்டிவிட்டி வசதிகளும் இந்த மொபைலில் இருக்கிறது. 3.5mm ஆடியோ ஜாக், ரேடியோ இல்லை.

 

விலை

இந்த ரியல்மி GT3 மொபைலின் 8ஜிபி ரேம் – 128ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட வேரியண்டின் விலை இந்திய மதிப்புக்கு ரூ.53,605 ($649) ஆகும். மற்ற வேரியண்ட்களின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post 10 நிமிடத்தில் 100% சார்ஜ்! first appeared on .

]]>
மொபைல் வேர்ல்டு காங்கிரஸின் இந்த வார நிகழ்வில் 12 புதிய போன்கள் வெளியாகின்றன! https://www.91mobiles.com/tamil/12-new-phones-launching-in-global-markets-and-india-this-week-check-upcoming-smartphones-list/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=12-new-phones-launching-in-global-markets-and-india-this-week-check-upcoming-smartphones-list Sun, 26 Feb 2023 13:11:04 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6086 பார்ஸிலோனா நாட்டில் நாளை (27-02-2023) முதல் மார்ச் 2 வரை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (Mobile World Congress 2023) என்னும் நிகழ்வு நடக்க இருக்கிறது. இந் நிகழ்வில் மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய மொபைல்களையும். வருங்காலத்தில் தாங்கள் கொண்டு வர இருக்கும் தொழில்நுட்பங்களையும் பார்வைக்கு வைப்பார்கள். அப்படி பல நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்த் இருக்கின்றன. அவைகளில் சில போன்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால் அவைகளின் மாடல் பெயர்கள் மற்றும் […]

The post மொபைல் வேர்ல்டு காங்கிரஸின் இந்த வார நிகழ்வில் 12 புதிய போன்கள் வெளியாகின்றன! first appeared on .

]]>

Highlights

  • ஒன்றல்ல, இரண்டல்ல.. மார்ச் 1-க்குள் மொத்தம் 12 புதிய போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
  • ஷாவ்மி நிறுவனம், இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கும் உலகலாவிய நிகழ்வில், அதன் ஷாவ்மி 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

பார்ஸிலோனா நாட்டில் நாளை (27-02-2023) முதல் மார்ச் 2 வரை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (Mobile World Congress 2023) என்னும் நிகழ்வு நடக்க இருக்கிறது. இந் நிகழ்வில் மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய மொபைல்களையும். வருங்காலத்தில் தாங்கள் கொண்டு வர இருக்கும் தொழில்நுட்பங்களையும் பார்வைக்கு வைப்பார்கள். அப்படி பல நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்த் இருக்கின்றன. அவைகளில் சில போன்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால் அவைகளின் மாடல் பெயர்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் ஏற்கனவே உள்ளன!

Xiaomi 13, Xiaomi 13 Pro மற்றும் Xiaomi 13 Lite

ஷாவ்மி நிறுவனம், இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கும் உலகலாவிய நிகழ்வில், அதன் ஷாவ்மி 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் கீழ் ஷாவ்மி 13, ஷாவ்மி 13 ப்ரோ மற்றும் ஷாவ்மி 13 லைட் என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும்.

 

ஷாவ்மி 13 சீரிஸ்

ஷாவ்மி 13 சீரிஸில் லைக்காவால் ட்யூன் செய்யப்பட்ட கேமராக்கள் இடம்பெறலாம். மேலும் இதில் ஒன்பிளஸ் 11, ஐக்யூ 11 போன்ற போன்களில் உள்ள லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் இடம்பெறலாம். இதுதவிர 12ஜிபி வரை ரேம் மற்றும் 256 இன்டர்னல் ஸ்டோரேஜ் ஒதுக்கப்படலாம். திடீர் விலைக்குறைப்பு!

Realme GT 3

ரியல்மியின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக ரியல்மி ஜிடி 3 வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஏற்கனவே சீனாவில் அறிமுகமான ரியல்மி ஜிடி நியோ 5 (Realme GT Neo 5) என்கிற ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாகும். இது 150W மற்றும் 240W என்கிற 2 சார்ஜிங் ஸ்பீட் வகைகளில் கிடைக்கும். மேலும் 6.74 அங்குல 10-பிட் 144ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட், 50எம்பி சோனி IMX890 மெயின் கேமரா, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் போன்ற முக்கிய அம்சங்களையும் கொண்டு இருக்கும்.

 

Honor Magic 5 Series & Honor Magic Vs ஃபோல்டபிள் போன்

ஹானர் நிறுவனம் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 6 மணிக்கு உலகளாவிய நிகழ்வொன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்நிகழ்வில் 4 ஸ்மார்ட்போன்களை உள்ளடக்கிய ஹானர் மேஜிக் 5 சீரிஸ் மற்றும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஹானர் மேஜிக் விஎஸ்-ஐ அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹானர் மேஜிக் 5 சீரீஸின் கீழ் ஹானர் மேஜிக் 5, ஹானர் மேஜிக் 5 ப்ரோ, ஹானர் மேஜிக் 5 அல்டிமேட் மற்றும் ஹானர் மேஜிக் 5 லைட் என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். அவைகளில் முதல் 3 போன்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டும், கடைசி மாடலில் எஸ்டி 695 ப்ராசஸரும் இடம்பெறலாம்.

Vivo V27 சீரிஸ்

Vivo V27, Vivo V27 Pro மற்றும் Vivo V27e விவோவின் புதிய வி27 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற மார்ச் 1 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் கீழ் விவோ வி27, விவோ வி27 ப்ரோ மற்றும் விவோ வி27இ என மொத்தம் 3 மாடல்கள் வெளியாகும். இந்த மூன்றுமே சீனாவில் விற்கப்படும் விவோ எஸ்16 சீரீஸின் ரீபிராண்டட் வெர்ஷன்களாகும்.

 

The post மொபைல் வேர்ல்டு காங்கிரஸின் இந்த வார நிகழ்வில் 12 புதிய போன்கள் வெளியாகின்றன! first appeared on .

]]>