sharuk khan https://www.91mobiles.com/tamil Tue, 14 Feb 2023 11:37:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஷாருக்கான் படத்தில் விஜய்க்கு பதில் நடிக்கும் முன்னணி நடிகர்! https://www.91mobiles.com/tamil/actress-trisha-krishnan-shared-leo-shooting-spot/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=actress-trisha-krishnan-shared-leo-shooting-spot Tue, 14 Feb 2023 11:37:57 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5828 இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். ஜவான் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் […]

The post ஷாருக்கான் படத்தில் விஜய்க்கு பதில் நடிக்கும் முன்னணி நடிகர்! first appeared on .

]]>

Highlights

  • இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான்.
  • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். ஜவான் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் தற்போது ‘லியோ’ பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளதால் அவர் அப்படத்தில் நடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் இதன் காரணமாக விஜய்க்கு நிகரான மாஸ் நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் இயக்குனர் அட்லீ பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் தற்போது அல்லு அர்ஜுனிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லியோ படத்தில் இருந்து திரிஷா விலகிவிட்டதாக செய்திகள் காட்டுத்தீ போல பரவிய நிலையில், படப்பிடிப்பு தளத்திலிருந்து போட்டோவை வெளியிட்டுள்ளார் திரிஷா.

திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்த படத்தில் குந்தவையாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய்யுடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார். லியோ படத்தின் பூஜையின் போது இருவரும் இருந்த க்யூட்டான புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இப்படத்தில், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், சாண்டி, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

 

லியோ படத்தின் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் சென்ற திரிஷா மூன்று நாட்களிலேயே சென்னை திரும்பினார். படப்பிடிப்புக்கு போன வேகத்திலேயே திரிஷா மீண்டும் சென்னை திரும்பியதால், திரிஷா லியோ படத்திலிருந்து விலகி விட்டதாகவும், லோகேஷூக்கும் திரிஷாவுக்கும் பிரச்சனை என்றும் பலவிதமான வதந்திகள் பரவின.

 

ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

இந்நிலையில் நடிகை திரிஷா லியோ படத்தின் ஷூட்டிங் நடக்கும் காஷ்மீரில் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் காஷ்மீர் ஆப்பிள் போல சும்மா ஜில்லுனு இருக்கிறார் திரிஷா. இந்த போட்டோ வெளியானதும் அவரின் தீவிர ரசிகர்கள் திரிஷா லியோ படத்திலிருந்து விலகி விட்டார், லோகேஷுக்கும் திரிஷாவுக்கும் சண்டை என, என்னா உருட்டு உருட்டுனாங்க, இன்னைக்கு எல்லாரும் கப்சிப் என கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

 

பான் இந்திய திரைப்படம்

லியோ திரைப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பான் இந்திய படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்ற அறிவித்துள்ளதால், லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

உடனடியாக நீக்கப்படும்

நேற்று லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்கானதால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால்,படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வீடியோவா, புகைப்படமோ வெளியானால், அது உடனடியாக நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய ஏற்பாட்டையும் படக்குழு செய்துள்ளது.

The post ஷாருக்கான் படத்தில் விஜய்க்கு பதில் நடிக்கும் முன்னணி நடிகர்! first appeared on .

]]>
வாரிசு, துணிவு படத்துக்கு சிறப்பு காட்சிகள் கிடையாது. கட்-அவுட்டையும் தூக்கு – அரசு அதிரடி https://www.91mobiles.com/tamil/tamil-nadu-government-ordered-no-special-shows-for-varisu-and-thunivu-on-these-dates/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tamil-nadu-government-ordered-no-special-shows-for-varisu-and-thunivu-on-these-dates Tue, 10 Jan 2023 08:46:07 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4848 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தியேட்டரில் கட் அவுட் வைக்கவும், பால் அபிஷேகம் செய்யவும் தடை விதித்துள்ளது. அதிக டிக்கெட் விலை தொடர்பான புகார்கள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெஷல் ஷோ நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் நாளை வெளியாக உள்ளன. அஜித்தின் துணிவு […]

The post வாரிசு, துணிவு படத்துக்கு சிறப்பு காட்சிகள் கிடையாது. கட்-அவுட்டையும் தூக்கு – அரசு அதிரடி first appeared on .

]]>

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தியேட்டரில் கட் அவுட் வைக்கவும், பால் அபிஷேகம் செய்யவும் தடை விதித்துள்ளது.

அதிக டிக்கெட் விலை தொடர்பான புகார்கள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் ஷோ

நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் நாளை வெளியாக உள்ளன. அஜித்தின் துணிவு படம் அதிகாலை 1 மணிக்கு வெளியாகிறது. விஜய்யின் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு வெளியாகிறது. ஜனவரி 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை சிறப்பு காட்சிகளை வெளியிட இரண்டு படக்குழுவும் முடிவு செய்திருந்தது.

அனுமதி இல்லை

இந்நிலையில், விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14, 15 மற்றும் 16ம் தேதி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேனர் கூடாது

மேலும், திரையரங்குகளில் உள்ள விஜய், அஜித் படங்களின் பேனர்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் பேனர்கள் வைத்து பாலாபிஷேகம் செய்யக் கூடாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் காட்சியில் பாலாபிஷேகம் செய்வதற்காக பால் வண்டிகளில் இருந்து பால் திருடும் நிலை உருவாகலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக டிக்கெட் விலை

இதுமட்டுமின்றி அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்வதாக புகார் எழுந்தால் வாரிசு மற்றும் துணிவு படக்குழுக்கள் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்துக்கு அதிக டிக்கெட் விற்ற நிலையில், அதற்கான அபராதம் விதிக்கப்பட்டது. அதுபோல் இப்போதும் அதிக டிக்கெட் விலை தொடர்பாக புகார் வெளியானால் தியேட்டர் நிர்வாகங்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில் குடியரசு தினத்தன்று ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி டிரெண்டிங் ஆகி வருகிறது. தீபிகா படுகோன் ஷாருக்கானுக்கு இணையாக சண்டை போடும் காட்சிகள் மற்றும் ஜான் ஆபிரகாமின் வில்லத்தனம் பார்வையாளர்க்ளை கவருகிறது.

ட்விட்டரில் பகிர்ந்த விஜய்

நடிகர் விஜய் வழக்கமாக தனது படங்களின் போஸ்டர்கள் மற்றும் டீசர், ட்ரெய்லர்களை மட்டுமே ட்விட்டரில் ட்வீட் போட்டு வந்த நிலையில், தற்போது ஷாருக்கானின் பதான் படத்தின் தமிழ் ட்ரெய்லரை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ஷாருக்கானின் அடுத்த ஜவான் படத்தில் விஜய்யின் கேமியோ இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய் ட்ரெயிலரை பகிர்ந்து இருக்கிறார்.

விஜயைப் போல் தெலுங்கில் ராம்சரணும் இந்த படத்தின் ட்ரெயிலரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். தென்னிந்தியாவில் ப்ரமோஷன் செய்ய ஷாருக்கான் இன்னும் வரவில்லையே என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பான் இந்தியா அளவில் பிரபலமான நடிகர்களை வைத்து பதான் ட்ரெய்லர் வெளியீட்டு இருக்கிறார் ஷாருக்கான்.

The post வாரிசு, துணிவு படத்துக்கு சிறப்பு காட்சிகள் கிடையாது. கட்-அவுட்டையும் தூக்கு – அரசு அதிரடி first appeared on .

]]>