south indian movies https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 17:01:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 நண்பகல் நேரத்து மயக்கம் – ஒரு புதிய அனுபவம் https://www.91mobiles.com/tamil/mammootty-s-nanpakal-nerathu-mayakkam-tamil-review/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mammootty-s-nanpakal-nerathu-mayakkam-tamil-review Fri, 24 Feb 2023 10:10:49 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6076 தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்துக்கு திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மம்முட்டி, முற்றிலும் வித்தியாசமாக நடித்துள்ள திரைப்படம் தான் நண்பகல் நேரத்து மயக்கம். அவரது சொந்த தயாரிப்பில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஒரு மேடை நாடகத்தை Live Location-ல் சினிமாவாக பார்ப்பது போன்ற அனுபவத்தை தரும் படைப்பாக உருவாகியுள்ளது நண்பகல் நேரத்து மயக்கம்.   கதை வேளாங்கண்ணி வந்துவிட்டு சொந்த ஊரான கேரளாவில் உள்ள […]

The post நண்பகல் நேரத்து மயக்கம் – ஒரு புதிய அனுபவம் first appeared on .

]]>

Highlights

  • மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
  • லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மம்முட்டியுடன் ரம்யா பாண்டியன், மறைந்த நடிகர் பூ ராமு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்துக்கு திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மம்முட்டி, முற்றிலும் வித்தியாசமாக நடித்துள்ள திரைப்படம் தான் நண்பகல் நேரத்து மயக்கம். அவரது சொந்த தயாரிப்பில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஒரு மேடை நாடகத்தை Live Location-ல் சினிமாவாக பார்ப்பது போன்ற அனுபவத்தை தரும் படைப்பாக உருவாகியுள்ளது நண்பகல் நேரத்து மயக்கம்.

 

கதை

வேளாங்கண்ணி வந்துவிட்டு சொந்த ஊரான கேரளாவில் உள்ள சங்கனாச்சேரி திரும்புகிறது ஒரு குழு. அதில் ஜேம்ஸ் பாத்திரத்தில் நடித்துள்ள மம்முட்டியும் தனது மனைவி, மகன், உறவினர்களுடன் பயணிக்கிறார். பழனி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தங்கள் வேனை நிறுத்த சொல்லும் ஜேம்ஸ், திடீரென அந்த ஊரில் சுந்தரம் என்ற நபராக வலம் வருகிறார். வேஷ்டி சட்டையுடன் மலையாளியாக அறிமுகமாகும் ஜேம்ஸ், எப்படி கட்டம்போட்ட லுங்கியுடன் தமிழன் சுந்தரமாக மாறுகிறார்.

 

சுந்தரம் ஜேம்ஸாக மாறியது ஏன்?

முதல்நாள் நண்பகல் நேரத்து உறக்கத்தில் தொடங்கும் கதை, மறுநாள் அதே நண்பகல் நேரத்து உறக்கத்துடன் முடிகிறது. இரண்டாண்டுகளுக்கு முன் காணாமல் போன சுந்தரம் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. அவன் காணாமல்போன அதேநாளில் ஜேம்ஸின் உடலில் சுந்தரத்தின் ஆன்மா மறுபிறவி எடுக்கிறது. சுந்தரத்தின் வீட்டார், கிராமத்தினர் எல்லோரும் திகைக்கிறார்கள். ‘அச்சு அசல் சுந்தரம்தான்’ எனத் நம்புகிறார்கள். ஆனால், உண்மையில் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதை நாஸ்டாலஜியாக விண்டேஜ் ஸ்டைலில் எடுத்துள்ளார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.

ஒளிப்பதிவு

காட்சிக்கு காட்சி ரகளையான விருந்து காட்சிக்கு காட்சி ரகளையான விருந்து மொத்தமாக 1.45 மணிநேரம் மட்டும் ஓடும் இந்தப் படத்தை அவ்வளவு அநாயசமாக விருந்து படைத்துள்ளது லிஜோ ஜோஸ் பெல்லிசேரி குழு. படம் முழுக்க எந்த இடத்திலும் கேமரா அசைவில்லாமல் அப்படியே Standby Mode-ல் தான் இருக்கும். மேடை நாடகத்தில் எப்படி பாத்திரங்கள் வருவதும் போவதுமாக இருக்குமோ அப்படித்தான் நண்பகல் நேரத்து மயக்கத்திலும். Frame மட்டும் சிறிதாகவும் பெரிதாகவும் விரிந்து சுருங்குகிறது, லொக்கேஷனும் மாறிக்கொண்டே இருக்கிறது. அச்சு அசலான கிராமத்தையும் அங்குள்ள பாசாங்கு இல்லாத மக்களின் அழகையும் மொத்தமாக அள்ளி வந்திருக்கிறது தேனி ஈஸ்வரின் கேமரா. இந்தப் படத்தின் ஹீரோ ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் என்றால் அது மிகையாகாது.!

 

பின்னணி இசையே இல்லாத சினிமா

அதேபோல், படத்திற்காக தனியாக பாடல்களோ பின்னணி இசையோ கிடையாது. அங்கேயும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி முற்றிலும் புதிய அனுபவத்தைக் கொடுக்கிறார். “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி” பாடலில் தொடங்கி “வீடுவரை உறவு வீதிவரை மனைவி” பாடலில் முடிகிறது நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் பின்னணி இசை. ஒரு காட்சியில் டிவியில் ஓடும் ‘வாஸிங் பவுடர் நிர்மா’ விளம்பரத்தையும் பின்னணி இசையாக வைத்து ரசிக்க வைத்துள்ளார். படம் முழுவதும் வரும் காட்சிகளும் அதன் பின்னணியும் வின்டேஜ் அழகியலில் விருந்து படைத்துள்ளது.

 

மம்முட்டியின் மாஸ்டர் கிளாஸ் ஆக்டிங்

இதுமாதிரியான கதைக்களத்தில் இப்படியான கேரக்டர்களில் நடிப்பதால் தான், மம்முட்டி மெகா ஸ்டாராக இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டும் இல்லாமல் அவர் தான் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் தயாரிப்பாளரும் கூட! ஜேம்ஸ், சுந்தரம் என இருவிதமான பாத்திரங்களுக்கும் தனது உடல்மொழியில் வித்தியாசம் காட்டி சிலிர்க்க வைத்துள்ளார். மம்முட்டி உட்பட மற்ற கலைஞர்களின் நடிப்பு, எடிட்டிங் என எல்லாமே அருமை. கண் தெரியாத பாட்டி, அவருக்காக 24 மணி நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும் டிவி, கடைசிக் காட்சியில் வேனின் பின்னால் ஓடும் நாய் என படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. சில காட்சிகளை சரியாக புரிந்துகொண்டால் விழுந்து விழுந்து சிரிக்கலாம்.

 

புதிய அனுபவம்

ஆனால், நண்பகல் நேரத்து மயக்கம் என்ற தலைப்பைப் போன்றே, படம் மொத்தமும் தூக்க கலக்கத்தில் நகர்வதாகதான் உள்ளது. இதுமாதிரியான படங்கள் இப்படி இருப்பதுதான் அழகே. அதனால் இது எல்லோருக்குமான படம் என்ற நினைப்பில் இருந்து விலகி, பொறுமை இருந்தால் கண்டிப்பாக ரசிக்கலாம். ஒருவேளை அப்படி பொறுமையாக பார்த்துவிட்டால் அட்டகாசமான அனுபவம் கிடைக்கும். முற்றிலும் அசாத்தியமான கலை படைப்பாக உருவாகியுள்ளது நண்பகல் நேரத்து மயக்கம். படத்தின் வழிநெடுக வரும் பழைய தமிழ்ப் படங்களின் பாடல்களும் வசனங்களும் ரசிகர்களுக்கு இன்னொரு புதிய அனுபவம். திரையரங்குகளைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இந்தப் படம், ஓடிடி ரசிகர்களுக்கான ஸ்பெஷல் விருந்தாக இருக்கும்.

The post நண்பகல் நேரத்து மயக்கம் – ஒரு புதிய அனுபவம் first appeared on .

]]>
ரஜினி படத்தை இயக்கும் ஜெய்பீம் இயக்குனர்! https://www.91mobiles.com/tamil/rajinikanth-s-next-moviewith-jaibhim-direcor-tj-gnanvel/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=rajinikanth-s-next-moviewith-jaibhim-direcor-tj-gnanvel Wed, 08 Feb 2023 12:26:10 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5671 இரண்டு தோல்விகள் தர்பார் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார். குடும்ப உறவுகள் தொடர்பாக சிவா எடுத்த வீரம், விஸ்வாசம் படங்கள் சூப்பர் ஹிட்டடித்ததால் ரஜினியுடன் அவர் இணைந்த அண்ணாத்த படத்துக்கு பல மடங்கு எதிர்பார்ப்பு எழுந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்தனர். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. பல வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்ததில் அதிக ட்ரோல்களை […]

The post ரஜினி படத்தை இயக்கும் ஜெய்பீம் இயக்குனர்! first appeared on .

]]>

Highlights

  • ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
  • ஜெய்பீம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் த.செ. ஞானவேலுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையவிருக்கிறார் என்ற தகவல் கோலிவுட்டில் வேகமாக பரவி வருகிறது.

இரண்டு தோல்விகள்

தர்பார் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார். குடும்ப உறவுகள் தொடர்பாக சிவா எடுத்த வீரம், விஸ்வாசம் படங்கள் சூப்பர் ஹிட்டடித்ததால் ரஜினியுடன் அவர் இணைந்த அண்ணாத்த படத்துக்கு பல மடங்கு எதிர்பார்ப்பு எழுந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்தனர். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. பல வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்ததில் அதிக ட்ரோல்களை சந்தித்ததும் அண்ணாத்த படம்தான். இதனால் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அதிகமாகவே அப்செட்டாகினர்.

 

ரஜினி அப்செட்

ரஜினி ரஜினிகாந்த்தும் அண்ணாத்த படத்தின் ரிசல்ட்டால் கொஞ்சம் அப்செட்டானார் என்றே கோலிவுட்டில் பேச்சு எழுந்தது. தர்பார், அண்ணாத்த என்ற இரண்டு படங்களின் தோல்வியை அடுத்து உடனடியாக ரஜினிக்கு ஒரு ஹிட் தேவை என்ற சூழல் உருவானது. இதனால் இளம் இயக்குநருடன் இணைய அவர் முடிவெடுத்தார். அதன்படி டாக்டர் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நெல்சன் திலீப்குமார் ரஜினியின் அடுத்த படத்துக்கு இயக்குநராக கமிட் செய்யப்பட்டார்.

குழப்பம்

ஆனால் அவர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் படுதோல்வியடைந்து கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது. ட்ரோல்களையும், விமர்சனத்தையும் கண்ட ரஜினி தரப்பு அவசரப்பட்டு நெல்சனை கமிட் செய்துவிட்டோமோ என்று யோசிக்க தொடங்கியதாக கூறப்பட்டது. அதன் வெளிப்பாடாக ரஜினி படத்திலிருந்து நெல்சன் நீக்கப்பட்டுவிட்டார். இல்லை இல்லை நெல்சன் இயக்கும் படத்தின் கதை இலாகாவில் கே.எஸ்.ரவிக்குமார் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன.

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இருப்பினும் ஒருவழியாக ரஜினியின் படத்தை நெல்சனே இயக்குகிறார் என்று ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் உறுதியானது. படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இப்படி பல நட்சத்திரங்கள் நடிப்பதால் ஜெயிலர் படத்தின் மீது பலரது கவனமும் திரும்பியிருக்கிறது. பீஸ்ட் படம் கொடுத்த மோசமான அனுபவத்தை நெல்சன் இந்தப் படம் மூலம் போக்கிக்கொள்வாரா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

ஜெய்பீம் இயக்குநருடன்

ஜெயிலர் படத்துக்கு பிறகு ரஜினி யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி உருவாக ஆரம்பித்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற தகவல் கோலிவுட்டில் பரவிவருகிறது.

 

முஸ்லீம் போலீஸாக நடிக்கிறாரா ரஜினி?

இந்தப் படமானது உண்மைக் கதையை தழுவி எடுக்கப்படவிருப்பதாகவும், படத்துக்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முஸ்லீம் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி கோலிவுட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே உண்மை கதையை மையமாக வைத்துதான் ஜெய்பீம் படத்தை இயக்கினார் ஞானவேல். தற்போது ரஜினியை வைத்து எடுக்கப்போகும் படமும் உண்மைக் கதையை தழுவி எடுக்கப்படவிருக்கிறது என சொல்லப்படுவதால் இந்தப் படமும் பெரும் விவாதத்தை கிளப்பலாம். அதுமட்டுமின்றி உண்மைக் கதையில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினி ஒத்துக்கொண்டிருப்பது நிச்சயம் ஆரோக்கியமான மற்றும் ஆச்சரியமான விஷயமே என்கின்றனர் திரை ஆர்வலர்கள்.

 

 

The post ரஜினி படத்தை இயக்கும் ஜெய்பீம் இயக்குனர்! first appeared on .

]]>
விஜயின் புதுப்படத்தின் பெயர் வெளியானது! https://www.91mobiles.com/tamil/vijay-as-leo-singam-lokesh-s-signature-loading/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vijay-as-leo-singam-lokesh-s-signature-loading Fri, 03 Feb 2023 14:51:14 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5557 இந்த ப்ரோமோவில் சிங்கத்தை குறிக்கும் வகையில் விஜய்யின் லியோ கேரக்டர் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   தளபதி 67 டைட்டில் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு லியோ என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. கமலின் விக்ரம் படத்தின் டைட்டில் ப்ரோமோ போன்றே, தளபதி 67 […]

The post விஜயின் புதுப்படத்தின் பெயர் வெளியானது! first appeared on .

]]>

Highlights

  • விஜய் நடித்து வரும் அவரது 67வது படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.
  • படத்தின் டைட்டில் ‘லியோ’ என ப்ரோமோ வீடியோவுடன் படக்குழு அறிவித்துள்ளது.  

இந்த ப்ரோமோவில் சிங்கத்தை குறிக்கும் வகையில் விஜய்யின் லியோ கேரக்டர் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தளபதி 67 டைட்டில்

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு லியோ என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. கமலின் விக்ரம் படத்தின் டைட்டில் ப்ரோமோ போன்றே, தளபதி 67 டைட்டில் லியோ ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.

 

லியோ – சிங்கம் – விஜய்

பனிபடர்ந்த பகுதியில் தனியாக இருக்கும் வீட்டில் விஜய் சாக்லேட்டையும் பெரிய வாள் ஒன்றையும் தயாரிப்பதாக உருவாகியுள்ளது. மேலும் பிளடி ஸ்வீட் என விஜய் பஞ்ச் வைக்க தங்க நாணையத்தின் ஒருபக்கம் சிங்கத்தின் உருவமும், இன்னொரு பக்கம் லியோ என்ற டைட்டிலும் வருகிறது. அதன்படி இந்தப் படத்தில் விஜய்யை தனிக்காட்டு சிங்கமாக களமிறக்குகிறார் லோகேஷ். முக்கியமாக இந்த சிங்க முத்திரை விக்ரம் படத்தில் வரும் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை நினைவுப்படுத்துவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

 

ஸ்கார்ப்பியன் டாட்டூவுடன் ரோலக்ஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தின் இறுதியில் சூர்யாவும் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுத்து மிரட்டியிருந்தார். ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யாவின் அசுரத்தனமான வில்லத்தனம் சிலிர்க்க வைத்திருந்தது. இந்த சீனில் சூர்யா ஸ்கார்ப்பியன் டாட்டூவுடன் நடித்திருந்தார். இப்போது தளபதி 67 டைட்டில் லியோ என அறிவிக்கப்பட்டுள்ளது. லியோ என்பது சிங்கத்தை குறிப்பதால் விக்ரம் ரோலக்ஸுக்கும் விஜய்யின் லியோ கேரக்டருக்கும் தொடர்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கன்ஃபார்மா லோகேஷ் யுனிவர்ஸ் தான்

கைதி படத்தில் நெப்போலியன் என்ற போலீஸ் கேரக்டரில் நடித்திருந்த ஜார்ஜ் மரியன், விக்ரமில் ஏஜெண்ட் டினாவாக நடித்த வசந்தி இருவருமே லியோ படத்தில் இணைந்துள்ளனர். தற்போது ப்ரோமோவும் விக்ரம் பட ஸ்டைலில் வெளியாகியுள்ளது. இதனிடையே ரோலக்ஸின் ஸ்கார்ப்பியன் டாட்டூவும் விஜய்யின் லியோ கேரக்டரும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸான லீட் கொடுத்துள்ளது. இதனால் இந்தப் படம் கண்டிப்பாக லோகேஷ் யுனிவர்ஸில் கான்செப்ட்டில் இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

 

ஆயுத பூஜைக்கு ரிலீஸாகும் லியோ

லியோ படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே சென்னையில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத் கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் ஆகியோர் தளபதி 67ல் நடித்து வருகின்றனர். இந்நிலையில் லியோ டைட்டில் மட்டும் இல்லாமல், படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என அறிவித்து படக்குழு டபுள் ட்ரீட் கொடுத்துள்ளது.

The post விஜயின் புதுப்படத்தின் பெயர் வெளியானது! first appeared on .

]]>
தளபதி 67 அப்டேட்டில் அசந்து போன விஜய் ரசிகர்கள்! https://www.91mobiles.com/tamil/actors-of-thalapathy-67-movie-updated-by-the-team/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=actors-of-thalapathy-67-movie-updated-by-the-team Tue, 31 Jan 2023 15:44:32 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5417 வசூல்மழையில் வாரிசு வாரிசு படத்தையும் தாண்டி தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்பட்ட நிலையில், தற்போது அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தருணம் வந்துள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு படம் ரிலீசாகி சில தினங்களே ஆகியுள்ள நிலையில், படம் சர்வதேச அளவில் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் 300 கோடி ரூபாய் வசூலை படம் தாண்டும் என்று சினிமா ட்ராக்கர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் கொண்டாட்டம் முடிவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் […]

The post தளபதி 67 அப்டேட்டில் அசந்து போன விஜய் ரசிகர்கள்! first appeared on .

]]>

Highlights

  • தளபதி 67 படத்தின் தயாரிப்பு தரப்பு மற்றும் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
  • நடிகர் விஜய்யின் தளபதி 67 அறிவிப்பு வந்தது முதல் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சிக்கடலில் திளைத்து வருகின்றனர்.

வசூல்மழையில் வாரிசு

வாரிசு படத்தையும் தாண்டி தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்பட்ட நிலையில், தற்போது அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தருணம் வந்துள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு படம் ரிலீசாகி சில தினங்களே ஆகியுள்ள நிலையில், படம் சர்வதேச அளவில் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் 300 கோடி ரூபாய் வசூலை படம் தாண்டும் என்று சினிமா ட்ராக்கர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் கொண்டாட்டம் முடிவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் அடுத்த கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர்.

 

தளபதி 67 படம்

வாரிசு படத்தின் சூட்டிங்கின்போதே தளபதி 67 படத்தின் தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது. இதற்கேற்றாற்போல லோகேஷ் கனகராஜ் போகுமிடமெல்லாம் அவரை ரசிகர்கள் தொடர்ந்து தளபதி 67 அப்டேட் கேட்டு மொய்த்தவண்ணம் இருந்தனர். படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் தான் அப்டேட் கொடுப்பதாக அவர் நழுவினாலும் அவரை ரசிகர்கள் விட்டபாடில்லை.

அடுத்தடுத்த அப்டேட்கள்

இந்நிலையில் விஜய்யின் 67வது படமான தளபதி 67ல் அவர் 50 வயது கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக த்ரிஷா பல ஆண்டுகள் கழித்து இணையவுள்ளதாகவும், விஜய்க்கு சஞ்சய் தத் உள்ளிட்ட 6 வில்லன்கள் நெருக்கடி கொடுக்கவுள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் ஆக்கிரமிப்பு செய்தன.

 

தளபதி 67 குறித்த அறிவிப்பு

இந்நிலையில் வாரிசு படம் ரிலீசாகி படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதையடுத்து நேற்று மாலை தளபதி 67 படம் குறித்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. தயாரிப்பாளர் லலித்குமார் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து தளபதி 67 படம் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டனர்.

 

இசை, நடனம், சண்டை

நேற்றைய தினம் படத்தின் அறிவிப்புடன் படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், சண்டை, நடனம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவுள்ளவர்கள் குறித்த அறிவிப்புகளும் காணப்பட்டது. படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த கூட்டணி நியூக்ளியர் பாமாக ரசிகர்களை தாக்கும் என்று அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

நடிகர்கள் அப்டேட்

இந்நிலையில் இன்று மாலையிலிருந்து படத்தின் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. முதலில் படத்தில் இணையவுள்ள சஞ்சய் தத், தமிழில் தன்னுடைய முதல் படமான தளபதி 67 குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அடுத்த ஒரு மணிநேரத்தில் படத்தில் இணைந்துள்ள பிரியா ஆனந்த் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ப்ரியா ஆனந்த்

இந்த வலிமையான டீமுடன் இணைந்து பணியாற்றுவது த்ரில்லிங்காக உள்ளதாக பிரியா ஆனந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்னும் 4 மணிநேரத்திற்கு அடுத்தடுத்து நடிகர்கள், நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் காஷ்மீரின் ஸ்ரீநகரில் நாளைய தினம் துவங்கவுள்ளதாகவும் அதற்காக த்ரிஷா உள்ளிட்டவர்கள் தனி விமானத்தில் தங்களது பயணத்தை துவங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post தளபதி 67 அப்டேட்டில் அசந்து போன விஜய் ரசிகர்கள்! first appeared on .

]]>
ஜனவரி 19 2023 – இந்த வார ஓடிடி ரிலீஸ்! https://www.91mobiles.com/tamil/ott-this-week-release-19-jan-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ott-this-week-release-19-jan-2023 Thu, 19 Jan 2023 11:27:22 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5208   ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் மாஸ் காட்டின. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி கோலிவு ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா இந்த வாரம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது. கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான டிரைவர் ஜமுனா, மூன்றே வாரங்களில் ஓடிடியில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. தியேட்டரில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், வாரிசு, […]

The post ஜனவரி 19 2023 – இந்த வார ஓடிடி ரிலீஸ்! first appeared on .

]]>
 

Highlights

  • ஓடிடி ரசிகர்கள் இந்த வாரம் என்னென்ன படங்கள் எந்தெந்த தளங்களில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
  • ஓடிடி ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களின் பட்டியலையும், அது வெளியாகும் தளங்கள் பற்றியும் பார்க்கலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா

பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் மாஸ் காட்டின. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி கோலிவு ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா இந்த வாரம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது. கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான டிரைவர் ஜமுனா, மூன்றே வாரங்களில் ஓடிடியில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. தியேட்டரில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், வாரிசு, துணிவு ரிலீஸால் உடனடியாக ஓட்டிக்கு வருகிறது டிரைவர் ஜமுனா.

 

மலையாள ரசிகர்களுக்கான அப்டேட்

மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த காபா திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகிறது. ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் கமர்சியலாக உருவான இந்தப் படம் கடந்த மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது காபா. பிருத்விராஜுடன் அபர்ணா பாலமுரளி, ஆசிப் அலி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

 

டோலிவுட் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட்

தெலுங்கில் இந்த வாரம் இரண்டு திரைப்படங்களும் ஒரு வெப் சீரிஸ்ஸும் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. இதில் ரவிதேஜா நடித்துள்ள தமாக்கா படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படம் கடந்த மாதம் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. தற்போது நெட்பிளிஸ் ஓடிடியில் வெளியாகிறது.

அதேபோல், தமன்னா நடிப்பில் திரையரங்குகளில் ரிலீஸான குர்துண்ட சீதாகாலம் இந்த வாரம் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ரொமாண்டிக் ஜானரில் உருவான இந்தப் படத்துக்கும் ஓடிடி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மேலும் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள ஏடிஎம் ( ATM ) என்ற வெப் சீரிஸ் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

 

பாலிவுட் ரசிகர்களுக்கு..

பாலிவுட்டில் சத்ரிவாலி திரைப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது. ரகுல் ப்ரீத் சிங் லீடிங் ரோலில் நடித்துள்ள இந்தப் படம் ரொமண்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் மிஷன் மஜ்னு திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. இந்தியில் வெளியாகும் இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது.

 

கொரியன்

மேலும் Jung_E என்ற கொரியன் திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. சிவில் வாரை பின்னணியாக வைத்து சயின்ஸ் ஃபிக்சன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகிறது. இது ஓடிடி ரசிகர்களுக்கான ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

2022ஆம் ஆண்டின் சிறந்த மொபைலகளின் பட்டியலைக் காண, அவற்றில் மிகச்சிறந்ததைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்!

https://www.indiangadgetawards.com/

The post ஜனவரி 19 2023 – இந்த வார ஓடிடி ரிலீஸ்! first appeared on .

]]>
வாரிசு 150 கோடி வசூல்! குஷ்பு காட்சிகளை வெளியிட முடிவு! https://www.91mobiles.com/tamil/varisu-director-vamshi-paidipalli-says-that-kushbhu-portion-in-the-movie-to-be-released-soon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=varisu-director-vamshi-paidipalli-says-that-kushbhu-portion-in-the-movie-to-be-released-soon Tue, 17 Jan 2023 11:44:09 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5085 நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகி கடந்த 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான படம் வாரிசு. பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ளார். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து படம் உருவாகியிருந்தாலும் படத்தில் விஜய் படத்திற்கேயுரிய ஆக்ஷன், காமெடி உள்ளிட்ட அம்சங்களும் வெகு சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் படத்தின் பாடல்களும் […]

The post வாரிசு 150 கோடி வசூல்! குஷ்பு காட்சிகளை வெளியிட முடிவு! first appeared on .

]]>

Highlights

  • விஜய்யின் வாரிசு படம் கடந்த 11ம் தேதி ரிலீசாகி 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.
  • குஷ்புவின் காட்சிகள் விரைவில் வெளியிடப்படும் என இயக்குனர் அறிவிப்பு
  • இதையொட்டி படக்குழு சென்னை ஈசிஆரில் சக்சஸ் மீட்டை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகி கடந்த 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான படம் வாரிசு. பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ளார்.

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி

பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து படம் உருவாகியிருந்தாலும் படத்தில் விஜய் படத்திற்கேயுரிய ஆக்ஷன், காமெடி உள்ளிட்ட அம்சங்களும் வெகு சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகு சிறப்பாக ரசிகர்களை கவர்ந்துள்ளன.

படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள நிலையில், ரஞ்சிதமே, தீ தளபதி உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து யூடியூவில் அதிகமான வியூஸ்கள் மற்றும் லைக்ஸ்களை பெற்றுள்ளன. படத்தில் நடிகர் விஜய் பாடல் காட்சிகளில் நடனத்தில் தெறிக்க விட்டுள்ளார். அவருக்கு ஈடுகொடுத்து ராஷ்மிகாவும் நடனமாடியுள்ளார்.

ரூ.150 கோடி வசூல்

படம் இத்தகைய பல சிறப்பம்சங்களுடன் வெளியான நிலையிலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆயினும் வசூல்மழையில் தெறிக்க விட்டுள்ளது. அஜித்தின் துணிவு படத்துடன் மோதிய நிலையிலும் 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலை எட்டி சாதித்துள்ளது. இதை படத்தின் தயாரிப்பு தரப்பு பெருமையுடன் பகிர்ந்துள்ளது. இதையொட்டி படக்குழு சென்னை ஈசிஆரில் சக்சஸ் மீட்டை நடத்தியுள்ளனர்.

வாரிசு படத்தில் குஷ்பூ

இந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்று ஆரம்பத்தில் குஷ்பூ பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் ட்ரெயிலரில் அவரை காண முடிந்தது. இந்நிலையில் படம் தற்போது வெளியான நிலையில் அவரது போர்ஷன் அதிகமாக இல்லாத நிலையில், ரசிகர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விரைவில் குஷ்பூ காட்சிகள் வெளியீடு

இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய படத்தின் இயக்குநர் வம்சி படிப்பள்ளி, படத்தின் முதல் பாதியில் குஷ்பூவின் போர்ஷன் 17 நிமிடங்கள் இருந்ததாகவும் மிகவும் அழகான காட்சிகளாக அமைந்திருந்த அவை, படத்தின் நீளம் கருதி அவை நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் டெலிட்டட் காட்சிகளாக அவை வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

 

The post வாரிசு 150 கோடி வசூல்! குஷ்பு காட்சிகளை வெளியிட முடிவு! first appeared on .

]]>
இன்னும் இரண்டு சர்வதேச விருதுகளைப் பெற்றது RRR! https://www.91mobiles.com/tamil/rrr-film-won-two-critics-choice-awards/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=rrr-film-won-two-critics-choice-awards Mon, 16 Jan 2023 13:07:51 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5039 Preview (opens in a new tab) ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி வெளியானது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியான ஆர்.ஆர்.ஆர் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. Critics Choice Awards தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குநர் என கொண்டாடப்படும் ராஜமெளலி, தற்போது சர்வதேச அளவில் அதிக கவனம் ஈர்த்து வருகிறார். அவரது இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச் […]

The post இன்னும் இரண்டு சர்வதேச விருதுகளைப் பெற்றது RRR! first appeared on .

]]>
Preview (opens in a new tab)

Highlights

  • RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடல் கோல்டன் குளோப் விருதை வென்ற நிலையில், மேலும் இரு சர்வதேச விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
  • சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம், சிறந்த பாடல் என இரு பிரிவுகளில் Critics Choice Awards வென்று சாதனை படைத்துள்ளது.

ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி வெளியானது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியான ஆர்.ஆர்.ஆர் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

Critics Choice Awards

தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குநர் என கொண்டாடப்படும் ராஜமெளலி, தற்போது சர்வதேச அளவில் அதிக கவனம் ஈர்த்து வருகிறார். அவரது இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் ரிலீஸான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய்தேவ் கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டையை தொடர்ந்து தற்போது சர்வதேச விருதுகளை வென்று அசத்தி வருகிறது.

இரண்டு விருதுகள்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற Critics Choice Awards விழாவில், இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர் வெளியானதில் இருந்தே இந்தப் படத்திற்கு சர்வதேச விருதுகள் கிடைக்கும் என ஹாலிவுட் பிரபலங்கள் கூறி வந்தனர். இந்நிலையில், Critics Choice Awards விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான விருது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்கு கிடைத்துள்ளது. அதேபோல் சிறந்த பாடலுக்கான விருதும் இந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. Critics Choice Awards விழாவில் பங்கேற்ற ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் இந்த விருதுகளை வென்றதை உற்சாகமாக கொண்டாடினர். ராஜமெளலியும் அவரது மகன் கார்த்திகேயாவும் இரண்டு விருதுகளுடன் சியர்ஸ் அடித்து உற்சாகமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கீரவாணி

இந்திய சுதந்திரத்துக்காக போராடிய அல்லுரி சீதாராம ராஜூ, கொமாரம் பீம் இருவரும் நண்பர்களாக இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவானது தான் இந்த ஆர்.ஆர்.ஆர். ராஜமெளலியின் உறவினரும் முன்னணி மியூசிக் கம்போஸருமான கீரவாணி இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். தற்போது Critics Choice Awards வென்ற நாட்டு கூத்து பாடல், கடந்த வாரம் கோல்டன் குளோப் விருதையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் கீரவாணிக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக Critics Choice Awards விழாவில் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு இரு பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது. ஆஸ்கர் ரேஸில் எகிறும் எதிர்பார்ப்பு ஆஸ்கர் ரேஸில் எகிறும் எதிர்பார்ப்பு ஹாலிவுட் திரைப்படங்களின் மேக்கிங் எப்படி இருக்குமோ, அதற்கு இணையாக உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர், ஆஸ்கர் விருதை வெல்லுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பாஃப்தா & ஆஸ்கர்

15 பிரிவுகளில் இந்த படம் ஆஸ்கர் போட்டியில் நாமினேட் ஆகியுள்ளது. அதேபோல் பாஃப்தா விருதுக்கும் ஆர்.ஆர்.ஆர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி பாஃப்தா விருது விழாவும், 24ம் தேதி ஆஸ்கர் விருதுகளும் வழங்கப்படவுள்ளன. இதனால் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு இந்த விருதுகளும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

The post இன்னும் இரண்டு சர்வதேச விருதுகளைப் பெற்றது RRR! first appeared on .

]]>
வாரிசுடு ரிலீஸ் 14ம் தேதிக்கு தள்ளிவைப்பு! விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி! https://www.91mobiles.com/tamil/varasudu-will-arrive-in-theaters-on-january-14th/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=varasudu-will-arrive-in-theaters-on-january-14th Mon, 09 Jan 2023 13:08:36 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4824 விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பூ, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் 11ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாரிசு விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. தில் […]

The post வாரிசுடு ரிலீஸ் 14ம் தேதிக்கு தள்ளிவைப்பு! விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி! first appeared on .

]]>

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பூ, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் 11ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வாரிசு

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. தில் ராஜூவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. 11ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட வாரிசு படத்தின் டிக்கெட் புக்கிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில். அஜித்தின் துணிவும் 11ம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் வாரிசு என்ற டைட்டிலிலும் தெலுங்கில் வாரிசுடு எனவும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது

ரிலீஸ் தேதி மாற்றம்

முதன்முறையாக் தெலுங்கிலும் விஜய் நேரடியாக அறிமுகமாவதால் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேநேரம் தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரைய்யா, பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்களும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகிறது. முதலில் இந்தப் படத்தை தமிழில் வெளியாகும் அதே 11ம் தேதியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது ஆனால் ரிலீசுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், வாரிசுடு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

14ம் தேதி ரிலீஸ்

அதன்படி வாரிசுடு திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் தில் ராஜூ அறிவித்துள்ளார். ஆனால் அதேநேரம் தமிழில் திட்டமிட்டபடி 11ம் தேதியே வாரிசு படம் ரிலீசாகும் என்பதையும் அவர் உறுதிசெய்துள்ளார். ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்ற வாரிசுடு படத்தின் பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு இது குறித்து அறிவித்துள்ளார். இந்த தேதி மாற்றத்திற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

காரணம் என்ன?

ஏற்கனவே பண்டிகை காலங்களில் தெலுங்கில் உருவாகும் படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. ஆனால், அதன்பின்னர் இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்கள் பொங்கலுக்கு வெளியாவதால், போதுமான் திரையரங்குகள் வாரிசு படத்திற்கு கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே வாரிசுடு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post வாரிசுடு ரிலீஸ் 14ம் தேதிக்கு தள்ளிவைப்பு! விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி! first appeared on .

]]>
அஜித்க்கு வில்லன் அரவிந்த்சாமி.. ரஜினிக்கு வில்லன் மோகன்லால்! https://www.91mobiles.com/tamil/aravind-swamy-and-kajal-aggarwal-will-play-a-role-in-ajith-s-ak-62/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=aravind-swamy-and-kajal-aggarwal-will-play-a-role-in-ajith-s-ak-62 Fri, 06 Jan 2023 12:39:01 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4784 துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் தனது அடுத்த படத்திற்காக ரெடியாகி வருகிறார். லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்தின் 62வது படம் உருவாகிறது. தற்போதைக்கு ‘ஏகே 62’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங், பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் எனக் கூறப்படுகிறது. போடா போடி, நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்க இருக்கிறார். ஏகே 62 படத்தில் அஜித்துடன் […]

The post அஜித்க்கு வில்லன் அரவிந்த்சாமி.. ரஜினிக்கு வில்லன் மோகன்லால்! first appeared on .

]]>

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் தனது அடுத்த படத்திற்காக ரெடியாகி வருகிறார். லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்தின் 62வது படம் உருவாகிறது. தற்போதைக்கு ‘ஏகே 62’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங், பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் எனக் கூறப்படுகிறது. போடா போடி, நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்க இருக்கிறார்.

ஏகே 62 படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய அப்டேட் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் அஜித் ஜோடியாக திரிஷாவும், காமெடி கேரக்டரில் ஜிபி முத்துவும் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகி இருந்தன. அதேபோல் நடிகர் தனுஷ் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகின. தனுஷுக்கு போலீஸ் கேரக்டர் அல்லது அஜித்துக்கு வில்லன் என சொல்லப்பட்டது. இந்த சூழலில் தான் ஏகே 62 படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏகே 62 படத்தில் தனுஷ் நடிப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேபோல், திரிஷா தான் ஹீரோயின் என்ற பேச்சுகள் அடிப்பட்டன. ஆனால், தற்போது திரிஷாவுக்கு பதிலாக காஜல் அகர்வால் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்தக் கூட்டணி விவேகம் படத்தில் நடித்திருந்தனர். இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததால் இனிமேல் நடிப்பது சந்தேகம் தான் என செய்திகள் வெளியாகின. ஆனால் அஜித்தின் ஏகே 62 படத்தில் அவர் இணையவுள்ளதாக வரும் செய்திகள், காஜல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. துணிவு ரிலீஸானதும் உடனடியாக ஏகே 62 அப்டேட்கள் வெளியாகும் என்றும், படப்பிடிப்பும் உடனே தொடங்கப்படும் எனவும் உறுதியாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் மோகன்லால் கேமியோ ரோலில் நடிக்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீப காலமாக சினிமாவில் பிரபல நடிகர்களை கேமியோவாக அழைத்து வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவது முதல் பாக்ஸ் ஆபிஸ் வேட்டைக்கு வரை அவர்களை பயன்படுத்துவது வழக்கமாக மாறி உள்ளது.

மலையாள திரையுலகின் நம்பர் ஒன் நடிகரான மோகன்லால் ஜெயிலர் படத்தில் இணைந்தால் கேரளாவிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை கன்ஃபார்ம். ஜெயிலர் படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் நடித்து வருகிறார். இந்நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகரும் நடிக்கிறார் என்றால் ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலேயே படம் வேறலெவல் கலெக்ஷனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருவரும் ஸ்க்ரீனில் வந்தால் திரை தீப்பிடிக்குமே என ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் அடைந்து வருகின்றனர். ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் முத்துவேல் பாண்டியனின் வேட்டை வரும் சம்மரில் பெரிய சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிடுமா? அல்லது படத்தின் ரிலீஸ் சமயத்தில் அறிவிக்குமா?

The post அஜித்க்கு வில்லன் அரவிந்த்சாமி.. ரஜினிக்கு வில்லன் மோகன்லால்! first appeared on .

]]>
OTT இந்த வார ரிலீஸ்! https://www.91mobiles.com/tamil/vadivelu-naai-sekar-returns-and-a-few-more-movies-are-releasing-on-ott-this-week/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vadivelu-naai-sekar-returns-and-a-few-more-movies-are-releasing-on-ott-this-week Thu, 05 Jan 2023 11:22:58 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4736 இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் வரிசையில் தமிழில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மட்டுமே இடம்பெற்றுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை சுராஜ் இயக்கியிருந்தார். லைகா தயாரிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான […]

The post OTT இந்த வார ரிலீஸ்! first appeared on .

]]>
இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.


நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் வரிசையில் தமிழில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மட்டுமே இடம்பெற்றுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை சுராஜ் இயக்கியிருந்தார். லைகா தயாரிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. காமெடி ஜானரில் உருவாகி இருந்தாலும், ரசிக்கும்படி இல்லையென ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர். அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மிக மோசமான தோல்வியையே சந்தித்தது. இந்நிலையில், இந்தத் திரைப்படம் வரும் 6ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. இதனால் திரையரங்குகளில் தவறவிட்ட ரசிகர்கள் ஓடிடியில் வரவேற்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் படக்குழு காத்திருக்கிறது.


இந்தி விக்ரம் வேதா

தமிழில் மெகா ஹிட் அடித்த விக்ரம் வேதா திரைப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், சையிப் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் மூன்று மாதங்களுக்குப் பின்னர் ஓடிடியில் வெளியாகிறது. அதன்படி இந்தப் படம் வரும் 6ம் தேதி வூட் (VOOT) ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ஓடிடி ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். அதேபோல், இந்தியில் Uunchai திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகிறது.

மலையாள ஓடிடி அப்டேட்

மலையாளத்தில் ‘சவுதி வேலைக்கா’ என்ற திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. தருண் மூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படம் சோனி ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகிறது. அதேபோல் ஷபிக்கிண்டே சந்தோஷம் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடி ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. உன்னி முகுந்தன், திவ்யா பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், சிம்பிளி சவுத் ஓடிடியில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

மற்ற மொழி படங்கள்

ஹாலிவுட் ரசிகர்களுக்கு ‘தி மெனு’ என்ற திரைப்படம் இந்த வாரம் ஓடிடி வெளியீடாக வருகிறது. இந்தப் படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறது. தெலுங்கில் ‘3Cs’ என்ற திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல் பஞ்சாபி மொழியில் உருவாகியுள்ள Babe Bhangra Paunde Ne என்ற திரைப்படம் ஜீ5 ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகிறது. மேலும் ஸ்டோரி ஆஃப் திங்ஸ் போன்ற படங்களும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகின்றன.

The post OTT இந்த வார ரிலீஸ்! first appeared on .

]]>