TheIndianGadgetAwards2022 https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 07:53:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மொபைல் விருது வகைகள் மற்றும் பரிந்துரைப் பட்டியல் 2022 – முடிவுகள் https://www.91mobiles.com/tamil/theindian-gadget-awards-2022-results/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=theindian-gadget-awards-2022-results Tue, 31 Jan 2023 13:00:56 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5399 இம்முறை 28 பிரிவுகளில், 150க்கும் மேற்பட்ட பரிந்துரைகள்! இதில் சிறந்ததை தேர்ந்தெடுத்தெடுக்க.. 18 நடுவர்கள், 13 சமூக வலைதள பங்காளர்கள், 35க்கும் அதிகமான பங்கெடுப்பாளர்கள், தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், முன்னணி விமர்சகர்கள் ஆகியோர் தேர்ந்தெடுத்தனர். இவை தவிர, பயனாளர்களின் விருப்ப விருது (Users’ Choice awards) என 4 விருதுகளும் வழங்கப்பட்டன.   சிறந்த போன் 2022 (ரூ.15,000க்கு கீழ்) சென்ற ஆண்டின் இறுதியிலேயே இந்தியாவில் 5ஜி அறிமுகமானது. ஆனால், அதை வரவேற்கத் தயாராக 5ஜி மொபைல்கள் […]

The post மொபைல் விருது வகைகள் மற்றும் பரிந்துரைப் பட்டியல் 2022 – முடிவுகள் first appeared on .

]]>

Highlights

  • நமது 91 மொபைல்ஸ் உட்பட முன்னணி 20 தொழிற்நுட்ப ஊடகவியலாளர்களின் பங்களிப்பில், தொழிற்துறையின் குரலாக ஒலிக்கும்  “இந்தியன் கேட்ஜெட் அவார்ட்ஸ் 2022”  விழா இனிதே நிறைவடைந்தது.
  • ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த விருதுப் பெருவிழா இந்த ஆண்டு இன்னும் அதிக சிறப்புகளோடு நடந்தது.
  • 2022ஆம் ஆண்டில் வெளியான ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிப்பெட்டிகள், டெக்-அணிகலன்கள் என பல்வேறு வகையான தொழில்நுட்பச் சாதனங்களில் இருந்து சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் திருவிழா இது.

இம்முறை 28 பிரிவுகளில், 150க்கும் மேற்பட்ட பரிந்துரைகள்!

இதில் சிறந்ததை தேர்ந்தெடுத்தெடுக்க.. 18 நடுவர்கள், 13 சமூக வலைதள பங்காளர்கள், 35க்கும் அதிகமான பங்கெடுப்பாளர்கள், தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், முன்னணி விமர்சகர்கள் ஆகியோர் தேர்ந்தெடுத்தனர். இவை தவிர, பயனாளர்களின் விருப்ப விருது (Users’ Choice awards) என 4 விருதுகளும் வழங்கப்பட்டன.

 

சிறந்த போன் 2022 (ரூ.15,000க்கு கீழ்)

சென்ற ஆண்டின் இறுதியிலேயே இந்தியாவில் 5ஜி அறிமுகமானது. ஆனால், அதை வரவேற்கத் தயாராக 5ஜி மொபைல்கள் அதற்கு முன்பே வரத் துவங்கி இருந்தன. அதுவும் குறைந்த விலையில்.  முதன்முறை ஆண்ட்ராய்டு போனை உபயோகிப்பவர்களும் சிறந்ததை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு 5ஜி போன்களே பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. அதில் சிறந்த பட்ஜெட் போனாக ‘Motorola Moto G62 5G’ தேர்ந்தெடுக்கப்பட்டது..

 

சிறந்த போன் 2022 (ரூ. 30,000க்கு கீழ்)

 

இந்த விலைப்பிரிவு கொஞ்சம் சவாலான விலைப்பிரிவு. ஏனெனில், விலை சற்று அதிகம் தர தயாராக இருந்தாலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பும் ஏகத்திற்கு இருக்கும். கிட்டத்தட்ட உயர் விலைப்பிரிவு மொபைல்களில் இருக்கும் எல்லா வசதிகளையும் எதிர்பார்பார்ப்பார்கள். ஆனால், இந்த வாடிக்கையாளரை ஒரு நிறுவனம் திருப்திபடுத்திவிட்டால், அதுதான் அவ்வருடத்தின் நம்பர் ஒன் நிறுவனமாக இருக்கும். அதனால் போட்டியும் இந்தப் பிரிவுக்கு கடுமையாகவே இருந்தது. இதில் கலந்து கொண்ட மொபைல்களில் வெற்றி பெற்றது.. ‘OnePlus Nord 2T 5G’.

 

சிறந்த போன் 2022 (ரூ. 50,000க்கு கீழ்)

 

ஒவ்வொரு நிறுவனமும் தங்களது சிறந்த போனை இந்த விலைப்பிரிவிலேயே தயாரித்து வைத்திருக்கும். ‘ஃப்ளாக்‌ஷிப்’ என்ற அடைமொழியில் அழைக்கப்படும் இந்த மொபைல்கள், புதிய தொழில்நுட்பம், மேம்பட்ட பாகங்கள், அதிகபட்ச தரம்.. என, எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்கும். அப்படி ‘சிறந்ததில் மிகச்சிறந்ததாக’ தேர்வானது ‘iQOO 9T’.

 

சிறந்த செஃல்பி போன் 2022 – மெயின்ஸ்ட்ரீம் (ரூ.30,000க்கு கீழ்)

 

செல்ஃபி வசதி பிரபலமடையத் தொடங்கியதில் இருந்தே, மொபைல் என்பது ஒரு அந்தரங்க சாதனமாகி விட்டது என்று கூறலாம். வெறும் புகைப்படம் எடுப்பது மட்டுமின்றி, தொழில் சார்ந்த வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும், செல்ஃபி கேமராக்கள் சிறப்பாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அப்படி 2022 ஆம் ஆண்டு மக்களால் அதிக வரவேற்பு அளிக்கப்பட்ட இந்த மொபைல்களில் சிறந்த செல்ஃபி போனாக ‘Vivo V25 5G’ மொபைல் தேர்வானது.

 

சிறந்த கேமரா போன் 2022 – மெயின்ஸ்ட்ரீம் (ரூ. 30,000க்கு கீழ்)

வருடத்திற்கு ஒருமுறையோ, வாழ்வில் எப்போதோ புகைப்படம் எடுத்த நமது முந்தைய தலைமுறையிடம் கேட்டுப் பார்த்தால் சொல்வார்கள்.. புகைப்படம் எடுப்பது என்பது எவ்வளவு பெரிய திருவிழாத் தருணம் என்று. இன்றோ நொடிக்கொரு புகைப்படம் எடுக்கும்படி, எண்ணற்ற வசதிகளோடு கைக்குள் அல்ல.. ஒரு தொலைபேசிக்குள் அடங்கி விட்டது கேமரா. ஆனால், அதில் சிறந்தது எது என்பதற்கான விடையாகத் தேர்வான 2022ஆம் ஆண்டின் சிறந்த மெயின்ஸ்ட்ரீம் கேமரா போன் ‘Realme 9 Pro+’

 

சிறந்த கேமரா போன் 2022 – ப்ரீமியம் (விலை பொருட்டல்ல)

 

மொபைலில் இருக்கும் கேமராக்களின் ‘மெகாபிக்சல்’கள் தொழிற்முறைக் கேமராக்களை விட அதிகமாகிவிட்டன. நடுக்கமின்றி எடுப்பது, நகர்ந்து கொண்டே எடுப்பது, அளவில் பெரிதாய் எடுப்பது, நீரின் ஆழத்தில் எடுப்பது என மொபைல் கேமராக்களின் தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. இதில் வெறும் வார்த்தை விளையாட்டு எது? உண்மையிலேயே வசதிகள் எது? என உண்மையைக் கண்டறிவது சிரமமான காரியம் தான். அப்படி ஆராய்ந்ததில் வெற்றி பெற்ற சிறந்த பிரீமியம் கேமரா மொபைலாக ‘Samsung Galaxy S22 Ultra 5G’ போன் வெற்றி வாகை சூடியது.

சிறந்த கேமிங் போன் 2022

 

விளையாட்டின் விறுவிறுப்பில் சூடுபிடிக்க வேண்டுமே தவிர, விளையாடும் போது மொபைல் சூடாகக் கூடாது. அதுபோல் தடைகள் விளையாட்டில் வரலாமே தவிர, விளையாடும் மொபைலில் வரக்கூடாது. அப்படி, சிறந்த திரை அனுபவம், பேட்டரி, ஆடியோ போன்ற திறன் மிக்க சிறந்த கேமிங் மொபைல் எது என்பதைத் தேர்ந்தெடுக்கத்தான் இந்த போட்டியே. எல்லாமே திறன் மிக்கதாக இருந்தாலும் இதில், ‘வல்லவனுக்கு வல்லவனை’நடுவர்கள் கைகாட்டியது ‘ASUS ROG Phone 6 Pro’ மொபைலையே.

 

2022 ஆம் ஆண்டின் சிறந்த போன்

இந்தியர்கள் உணவைத் தேர்ந்தெடுப்பது போல் தான் ஒவ்வொரு விஷயத்தையும் தேர்ந்தெடுப்பார்கள். வெளிநாட்டினரைப் போல் சில ரொட்டித்துண்டுகள், சிறிது இறைச்சியில் திருப்தி காண்பவர்கள் அல்ல நாம். பசியைத் தூண்ட ஆரம்பத்தில் சூப், இனிப்பு! அதன் பின் சோறு. அதற்கு இரண்டு, மூன்று வகை குழம்பு, அதோடு தொட்டுக் கொள்ள அவியல், பொறியல், கூட்டு, அப்பளம். அவை செரிக்க ரசம். அதன் பின் கொஞ்சம் தயிர். அதற்கு ஊறுகாய் என்று ஒருவேளை சாப்பாட்டிலேயே அவ்வளவு எதிர்பார்ப்பார்ப்போம். மாதக்கணக்கில் அல்லது சில வருடங்கள் நம்முடைய உடலில் ஒட்டாத உறுப்பாக இருக்கப்போகும் மொபைலில் என்னெவெல்லாம் எதிர்பார்ப்போம்? அப்படி பெரும்பான்மையானவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்த 2022 ஆம் வருடத்தின் மிகச் சிறந்த மொபைலாக ‘Samsung Galaxy S22 Ultra 5G’ தேர்வானது.

The post மொபைல் விருது வகைகள் மற்றும் பரிந்துரைப் பட்டியல் 2022 – முடிவுகள் first appeared on .

]]>
பிப்ரவரி 3ல் வெளியாகிறது ஒப்போ ரெனோ 8டி 5ஜி! https://www.91mobiles.com/tamil/oppo-reno-8t-5g-smartphone-launching-in-india-on-february-3-check-expected-price-and-specifications/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=oppo-reno-8t-5g-smartphone-launching-in-india-on-february-3-check-expected-price-and-specifications Tue, 31 Jan 2023 04:32:03 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5370 அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் கேமரா செட்டப் எப்படி இருக்கும்? அது என்ன விலைக்கு வரும்? பார்க்கலாம்.  அது ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 8டி 5ஜி (Oppo Reno 8T 5G) ஆகும். இந்த ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை ஒப்போ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ரெனோ 8 சீரீஸின் கீழ் ஏற்கனவே 2 மாடல்கள் அறிமுகமாகி விட்டன. அவைகள் ஒப்போ ரெனோ 8 (Oppo Reno 8) மற்றும் ஒப்போ […]

The post பிப்ரவரி 3ல் வெளியாகிறது ஒப்போ ரெனோ 8டி 5ஜி! first appeared on .

]]>

Highlights

  • ஒப்போ நிறுவனம் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதியன்று ஒரு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • இது, இந்த ரெனோ 8 சீரிஸின் கீழ் வரும் மூன்றாவது மாடலாக இருக்கும்!

அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் கேமரா செட்டப் எப்படி இருக்கும்? அது என்ன விலைக்கு வரும்? பார்க்கலாம்.  அது ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 8டி 5ஜி (Oppo Reno 8T 5G) ஆகும். இந்த ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை ஒப்போ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ரெனோ 8 சீரீஸின் கீழ் ஏற்கனவே 2 மாடல்கள் அறிமுகமாகி விட்டன. அவைகள் ஒப்போ ரெனோ 8 (Oppo Reno 8) மற்றும் ஒப்போ ரெனோ 8 ப்ரோ (Oppo Reno 8) ஆகும். ஆக ஒப்போ ரெனோ 8டி மாடல், இந்த சீரிஸின் கீழ் வரும் மூன்றாவது மாடலாக இருக்கும்!

என்ன விலை?

கிடைக்கப்பெற்ற லீக் தகவலின் அடிப்படையில், ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் தோராயமாக ரூ.28,500 ஆக இருக்கலாம். இது எதிர்பார்க்கப்படும் விலை ஆகும்; அதிகாரபூர்வமான விலை நிர்ணயம் அல்ல. ஒப்போ ரெனோ 8 5ஜி ஸ்மார்ட்போன், ரூ.29,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மறுகையில் உள்ள ப்ரோ மாடல், ரூ.45,999 க்கு வாங்க கிடைக்கிறது!

வெளியாகி இருக்கும் பல்வேறு லீக்-களைக் கொண்டு ஒப்போ ரெனோ 8டி 5ஜி: என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

டிஸ்ப்ளே

ஒப்போ ரெனோ 8டி ஸ்மார்ட்போனில் பஞ்ச்-ஹோல் டிசைன் உடனான 6.43 அங்குல AMOLED டிஸ்ப்ளே பேனல் இடம் பெறலாம். மேலும் இந்த டிஸ்பிளே 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் என்றும், ஃபுல்எச்டி பிளஸ் ரெசல்யூஷனுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா

ரெனோ 8டி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். அதில் 100எம்பி மெயின் சென்சார் + 2எம்பி மைக்ரோ சென்சார் + 2எம்பி மோனோ லென்ஸ் இருக்கலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, 32எம்பி செப்ஃபி கேமரா இருக்கலாம்.

 

ப்ராசஸர்

கீக்பெஞ்ச் வழியாக கிடைத்த தகவலின்படி, ரெனோ 8டி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் பேக் செய்யப்படலாம். அது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் அனுப்பப்படலாம்.

கனெக்டிவிட்டி

ப்ளூடூத் எஸ்இஜி லிஸ்டிங் வழியாக கிடைத்த தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டியை ஆதரிக்கும் மற்றும் கலர்ஓஎஸ் 13 உடன் அனுப்பப்படும். பேட்டரியை பொறுத்தவரை, எவ்வளவு எம்ஏஎச் திறனை பேக் செய்யும் என்பது பற்றி விவரங்கள் இல்லை. ஆனால் 33W வயர்டு பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் என்பது போல் தெரிகிறது.

அறிமுகத் தேதி

ஒப்போவின் புதிய ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன், இந்தியாவில் மட்டுமல்ல பிலிப்பைன்ஸ் நாட்டிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது; ஆனால் பிப்ரவரி 3 ஆம் தேதிக்கு பதிலாக, பிப்ரவரி 8 அன்று அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

The post பிப்ரவரி 3ல் வெளியாகிறது ஒப்போ ரெனோ 8டி 5ஜி! first appeared on .

]]>
பட்ஜெட் விலையில் இரண்டு ஃபோன்களை அறிமுகப்படுத்தும் மோட்டரோலா! https://www.91mobiles.com/tamil/moto-intoduce-2-budget-mobiles/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=moto-intoduce-2-budget-mobiles Wed, 25 Jan 2023 11:50:48 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5348 தற்போது ஆன்லைனில்  மோட்டோ ஜி13, மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் கசிந்துள்ளது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். மோட்டோ ஜி13 டிஸ்பிளே அம்சங்கள் மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவரும். கூடவே, 720×1,600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் […]

The post பட்ஜெட் விலையில் இரண்டு ஃபோன்களை அறிமுகப்படுத்தும் மோட்டரோலா! first appeared on .

]]>

Highlights

  • மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி13, மோட்டோ ஜி23 ஆகிய ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் குறைந்த விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

தற்போது ஆன்லைனில்  மோட்டோ ஜி13, மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் கசிந்துள்ளது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி13 டிஸ்பிளே அம்சங்கள்

மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவரும். கூடவே, 720×1,600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி13 கேமரா

மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

மோட்டோ ஜி13 பேட்டரி

மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும். இதோடு 20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இந்த போன் நீல நிறத்தில் அறிமுகமாக இருக்கிறது.


மோட்டோ ஜி23 டிஸ்பிளே

மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. கூடவே, இந்த போன் 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போன் தரமான கேமரா வசதியுடன் வெளிவர இருக்கிறது.

மோட்டோ ஜி23 கேமரா

மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே, செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி23 பேட்டரி

மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. கூடவே, 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், உள்ளிட்ட பல அசத்தலான வசதிகளுடன் வெளிவர இருக்கிறது.

5ஜி ஆதரவு?

மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள மோட்டோ ஜி13,மோட்டோ ஜி23 ஸ்மார்ட்போன்களில் 5ஜி ஆதரவு கிடையாது இல்லை எனத் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்த போன்கள் 4ஜி ஆதரவுடன் மட்டுமே அறிமுகமாகும். இருந்தபோதிலும் குறைந்த விலையில் இந்த போன்கள் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்த இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

The post பட்ஜெட் விலையில் இரண்டு ஃபோன்களை அறிமுகப்படுத்தும் மோட்டரோலா! first appeared on .

]]>
சின்ன டிஸ்ப்ளே.. குறைஞ்ச விலை! அறிமுகமானது ஐடெல் ஏ24 ப்ரோ https://www.91mobiles.com/tamil/itel-a24-pro-with-5-inch-display-launched-specs-features/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=itel-a24-pro-with-5-inch-display-launched-specs-features Wed, 25 Jan 2023 05:44:40 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5337 தற்போது அனைத்து நிறுவனங்களும் பெரிய டிஸ்பிளே கொண்ட போன்களை தான் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் இந்த ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறிய டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. எனவே சிறிய போனை விரும்புபவர்களிடம் இந்த போனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கலாம். இந்த போன் தற்போது பங்களாதேஷில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் […]

The post சின்ன டிஸ்ப்ளே.. குறைஞ்ச விலை! அறிமுகமானது ஐடெல் ஏ24 ப்ரோ first appeared on .

]]>

Highlights

  • ஐடெல் நிறுவனம் புதிய ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் சிறிய டிஸ்பிளே மற்றும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது.

தற்போது அனைத்து நிறுவனங்களும் பெரிய டிஸ்பிளே கொண்ட போன்களை தான் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் இந்த ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறிய டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. எனவே சிறிய போனை விரும்புபவர்களிடம் இந்த போனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கலாம். இந்த போன் தற்போது பங்களாதேஷில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

 

டிஸ்பிளே

ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் கைக்கு அடக்கமாக இருக்கும். இது 850 x 480 பிக்சல் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

 

சிப்செட்

ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவாட்-கோர்ட 1.4ஜிகாஹெர்ட்ஸ் Unisoc SC9832E சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

இந்த ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது

கேமரா

இந்த புதிய போனில் கேமராவைத் தவிர அனைத்து அம்சங்களுமே அருமையாக உள்ளது. அதாவது இந்த போன் 2எம்பி ரியர் கேமரா மற்றும் 0.3எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. தற்போது வரும் பட்டன் போன்களில் கூட இதைவிட அதிகமான மெகாபிக்சல்கள் கொண்ட கேமராக்கள் உள்ளன. அந்த வகையில் இந்த போன் கேமரா வகையில் பெரிய பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இதில் ஒரு எல்இடி பிளாஷ் இருப்பது சிறிய ஆறுதல்.

 

பேட்டரி

ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 3020எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. சிறிய டிஸ்ப்ளே என்பதால் இந்த பேட்டரி பேக்கப் ஒருநாளுக்குப் போதுமானதாக இருக்கும். இதோடு  மைக்ரோ-யுஎஸ்பி போர்ட் ஆதரவைக் கொண்டுள்ளது.

 

கைரேகை ஸ்கேனர்

இந்த ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் ஆதரவு இல்லை. அதற்குப் பதிலாக பேஸ் அன்லாக் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இது ஒரு 4ஜி போன் ஆகும். ஆதரவுடன் வெளிவந்துள்ளது. இந்த மொபைல் பச்சை மற்றும் நீல நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 

விலை

ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை BTD 5,990 (இந்திய மதிப்பில் ரூ.4,570) ஆக உள்ளது. இது இந்தியாவில் இதே விலைப்பிரிவில் அறிமுகம் ஆகும் பட்சத்தில், குறைந்த விலையில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு போன் இதுவாக இருக்கும். குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மொபைல் வாங்க விரும்புபவர்கள் இதனை வாங்க வாய்ப்பு இருக்கிறது.

The post சின்ன டிஸ்ப்ளே.. குறைஞ்ச விலை! அறிமுகமானது ஐடெல் ஏ24 ப்ரோ first appeared on .

]]>
சாம்சங் கேலக்ஸி M54 5G மொபைலின் லீக் படங்கள் வெளியானது! https://www.91mobiles.com/tamil/samsung-galaxy-m54-5g-design-renders/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-galaxy-m54-5g-design-renders Wed, 25 Jan 2023 04:27:05 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5331 இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M54 5G மொபைல் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு இந்த மொபைலின் படங்கள் (ரெண்டர்கள்) தற்போது வெளியாகி இருக்கின்றன. வரும் பிப்ரவரி 1ல்  உலகச் சந்தையில் வெளியாக இருக்கும் ஃப்ளாக்‌ஷிப் மொபைலான கேலக்ஸி S23 மொபைலின் வெளியீட்டுக்குப் பிறகு மிட்ரேஞ்ச் போனான இந்த கேலக்ஸி M54 5G வெளியாகும் எனத் தெரிகிறது. தற்போது ‘மை ஸ்மார்ட் ப்ரைஸ்’ தளத்தில் இந்த மொபைலின் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பது குறித்த படங்கள் வெளியாகி […]

The post சாம்சங் கேலக்ஸி M54 5G மொபைலின் லீக் படங்கள் வெளியானது! first appeared on .

]]>

Highlights

  • Samsung Galaxy M54 5G ஆனது S23 தொடருக்குப் பிறகு விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த மொபைல் நடுத்தர விலையில் எதிர்பார்க்கப்படுகிறது
  • இதன் லீக் ரெண்டர் படங்கள், இந்த மொபைல் இரண்டு நிறங்களில், 3 பின்பக்க கேமராக்களோடு வெளிவருவதை உறுதி செய்து இருக்கிறது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M54 5G மொபைல் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு இந்த மொபைலின் படங்கள் (ரெண்டர்கள்) தற்போது வெளியாகி இருக்கின்றன. வரும் பிப்ரவரி 1ல்  உலகச் சந்தையில் வெளியாக இருக்கும் ஃப்ளாக்‌ஷிப் மொபைலான கேலக்ஸி S23 மொபைலின் வெளியீட்டுக்குப் பிறகு மிட்ரேஞ்ச் போனான இந்த கேலக்ஸி M54 5G வெளியாகும் எனத் தெரிகிறது. தற்போது ‘மை ஸ்மார்ட் ப்ரைஸ்’ தளத்தில் இந்த மொபைலின் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பது குறித்த படங்கள் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் இந்த மொபைலில் இருக்கும் அம்சங்கள் தெரிய வந்துள்ளன.

 

வடிவமைப்பு

வெளியான படங்களை வைத்துப் பார்க்கும்போது சாம்சங் கேலக்ஸி M54 5G  மெல்லிய, கீழ் பகுதி தவிர்த்து ஒரே போன்ற பெசல்களை உடையதாக இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளாட் டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கிறது. மேலும் பின்பக்கத்தில் கேமரா மாட்யூலுக்கென தனிப்பட்ட டிசைன் எதுவும் இல்லாத தெளிவான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

கேமரா

கேலக்ஸி M53 5G மொபைலோடு ஒப்பிடும் போது, அதிலிருந்த நான்கு கேமரா செட்டப்பில் இருந்து இந்த மொபைல் 3 கேமரா செட்டப்பிற்கு மாறியுள்ளது. இவை தவிர இதன் முன்பக்கத் திரையில் செஃல்பி கேமராவுக்கென பன்ச்-ஹோல் டிசைன் வழங்கப்பட்டுள்ளது.

 

பட்டன்கள்

மேலும் இந்த மொபைலின் வலது பக்கத்தில் பவர் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதுவே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாராகவும் செயல்படுகிறது. இந்த பவர் பட்டனுக்கு மேற்புறம் வால்யூம் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

போர்ட்கள்

சாம்சங் கேலக்ஸி M54 5G  மொபைலின் இடதுபுறத்தில் சிம் கார்டுக்கான ட்ரே வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், இந்த ரெண்டர் படங்கள் மூலம் இந்த மொபைலின் போர்ட் பற்றி தெரிந்து கொள்ள முடியவில்லை.டைப் சி போர்ட் கண்டிப்பாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி M53 5G  மொபைலில் 3.5mm ஆடியோ போர்ட் வழங்கப்படவில்லை. ஆனால், சாம்சங் கேலக்ஸி M54 5G  மொபைலில் 3.5mm ஆடியோ போர்ட் வழங்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

நிறங்கள்

இந்த மொபைல் அடர் நீலம் மற்றும் சில்வர், நீலம், பிங்க் மற்றும் பச்சை நிறங்கள் கலந்த மல்டி கலர் க்ரேடியண்ட் நிறங்களில் வெளிவர இருப்பதாக வெளியான படங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பின்பக்க கேமராவின் தோற்றம் தற்போது வெளியான சாம்சங்கின் ஃப்ளாக்‌ஷிப் மொபைலின் வடிவமைப்பை போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது.

 

சிப்செட் & ரேம்

இந்த சாம்சங் கேலக்ஸி M54 5G  மொபைலின் அம்சங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. கீக்பெஞ்ச் பட்டியலின் படி இந்த மொபைலில் எக்ஸினோஸ் 1380 SoC சிப்செட் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பதும், இதில் 8ஜிபி ரேம் இருக்கும் என்றும், இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

 

எதிர்பார்ப்பு

இதன் முந்தைய மாடலான சாம்சங் கேலக்ஸி M53 5G  மொபைலில் 108 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு இருந்தது. இதிலும் அதே கேமரா வழங்கப்படலாம். அதே போல், அந்த மொபைலின் தற்போதைய விலையான ரூ. 23,999 என்ற விலையைச் சுற்றியே இந்த மொபைலின் விலையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post சாம்சங் கேலக்ஸி M54 5G மொபைலின் லீக் படங்கள் வெளியானது! first appeared on .

]]>
மொபைல் பேட்டரி சீக்கிரம் தீராமல் இருக்க செய்ய வேண்டியது என்ன? https://www.91mobiles.com/tamil/helps-to-save-battery-and-battery-life/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=helps-to-save-battery-and-battery-life Tue, 24 Jan 2023 14:13:47 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5326   ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் சந்திக்கும் பிரச்சனை Battery விரைவில் தீர்ந்து போவது. உங்கள் போனில் இந்த முறையை கடைபிடித்தால் உங்கள் பேட்டரி ஆயுள் நீடித்து இருக்கும். நீங்கள் பயன்படுத்துவது எந்த ஸ்மார்ட்போனோ அதற்கு ஏற்ற சார்ஜரை தான் பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட்போனை சூடாகவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.   ரீஸ்டார்ட் செய்யவும் ஸ்மார்ட்போனின் தகுதிக்கு மீறிய அம்சங்களை அதில் தொடர்ந்து பயன்படுத்தினால் சூடாகும். பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்கி அதில் ப்ரீமியம் தர ஸ்மார்ட்போனில் உபயோகிக்கும் […]

The post மொபைல் பேட்டரி சீக்கிரம் தீராமல் இருக்க செய்ய வேண்டியது என்ன? first appeared on .

]]>

 

Highlights

  • ஸ்மார்ட்போனின் தகுதிக்கு மீறிய அம்சங்களை அதில் தொடர்ந்து பயன்படுத்தினால் சூடாகும்.
  • பல செயலிகள் ஸ்மார்ட்போனின் Background இல் ரன் ஆகிக் கொண்டிருப்பது பேட்டரியை சீக்கிரம் தீர்ந்துபோகச் செய்கிறது.

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் சந்திக்கும் பிரச்சனை Battery விரைவில் தீர்ந்து போவது. உங்கள் போனில் இந்த முறையை கடைபிடித்தால் உங்கள் பேட்டரி ஆயுள் நீடித்து இருக்கும். நீங்கள் பயன்படுத்துவது எந்த ஸ்மார்ட்போனோ அதற்கு ஏற்ற சார்ஜரை தான் பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட்போனை சூடாகவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

ரீஸ்டார்ட் செய்யவும்

ஸ்மார்ட்போனின் தகுதிக்கு மீறிய அம்சங்களை அதில் தொடர்ந்து பயன்படுத்தினால் சூடாகும். பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்கி அதில் ப்ரீமியம் தர ஸ்மார்ட்போனில் உபயோகிக்கும் அம்சங்களை பயன்படுத்தினால் இந்த சிக்கல் ஏற்படும். அதேபோல் ஸ்மார்ட்போனில் ஒரே நேரத்தில் பல ஆப்ஸ்களை பயன்படுத்தக் கூடாது. மொபைலை குறிப்பிட்ட இடைவெளியில் ரீஸ்டார்ட் செய்வது நல்லது.

 

ஏன் சார்ஜ் குறைகிறது?

ஸ்மார்ட்போனை பயன்படுத்தவே இல்லை, காலை சார்ஜ் போட்டு அலுவலகம் செல்கிறேன் மாலை பார்த்தால் பேட்டரி ஆயுள் அடிமட்டத்துக்கு குறைந்துவிடுகிறது. இதற்கும் காரணம் இருக்கிறது. அது பல செயலிகள் ஸ்மார்ட்போனின் Background இல் ரன் ஆகிக் கொண்டிருப்பது தான். நீங்கள் டவுன்லோட் மட்டும் செய்தால் போதும் அது இயங்கிக் கொண்டே இருக்கும். உங்களுக்கு ஒரு செயலியில் இருந்து தொடர்ந்து நோட்டிபிகேஷன் வந்துக் கொண்டிருக்கிறது என்றால் அது எப்படி? அந்த ஆப்ஸ் உங்கள் மொபைல் Background இல் தொடர்ந்து ரன் ஆகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். முதலில் உங்கள் மொபைலில் தேவையில்லாமல் இருக்கும் ஆப்ஸ்களை டெலிட் செய்துக் கொள்ளுங்கள். Background இல் ரன் ஆகும் அப்ஸ்களை தெரிந்துக் கொள்வது எப்படி, அதை நிறுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

வழிமுறை 1

உங்கள் மொபைலை எடுத்து செட்டிங்ஸ் பயன்பாட்டை ஓபன் செய்து கொள்ளுங்கள், இதில் உள்ள சிஸ்டம் என்ற விருப்பத்தை திறந்தால் Developer Options என்ற தேர்வு காட்டப்படும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள். Developer Options என்ற விருப்பத்துக்குள் சென்றதும் அதில் Running Services என்ற விருப்பம் காட்டப்படும். அதற்குள் சென்றால் ஒவ்வொரு ஆப்ஸ்களும் எத்தனை ரேம் பவரை எடுத்துக் கொள்கிறது. எவ்வளவு நேரம் ரன் ஆகிறது என காட்டப்படும். இதன்மூலம் பேக்கிரவுண்ட் இல் ரன் ஆகும் ஆப்ஸ் குறித்த விவரங்களை அறிந்துக் கொள்ளலாம்.

 

வழிமுறை 2

அதேபோல் ஸ்மார்ட்போனின் செட்டிங்க்ஸ் பயன்பாட்டுக்குள் சென்று கொள்ளவும். அதில் உள்ள பேட்டரி என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பேட்டரி விருப்பம் எங்கு இருக்கிறது என தெரியிவில்லை என்றால் செட்டிங்க்ஸ் ஆப்ஷனில் மேலே காட்டப்படும் தேடல் விருப்பத்தில் பேட்டரி என டைப் செய்து தேடலாம். பேட்டரி என்ற பயன்பாட்டுக்குள் சென்று பேட்டரி யூசேஜ் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இதில் உங்கள் மொபைலின் பேட்டரி எந்தெந்த ஆப்ஸ்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என காட்டப்படும். இதன்மூலம் எந்த ஆப்ஸ் காரணமாக உங்கள் பேட்டரி அதிகம் செலவாகிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

 

வழிமுறை 3

உங்களுக்கு அந்த ஆப்ஸ் தேவையில்லை என்றால் உடனே அன்-இன்ஸ்டால் செய்து கொள்ளவும். அப்படி அந்த ஆப்ஸ் தேவை இருக்கும் பட்சத்தில் செட்டிங்க்ஸ் பயன்பாட்டுக்குள் சென்று ஆப்ஸ் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து கொள்ளவும். இதில் அனைத்து ஆப்ஸ்களும் காட்டப்படும். உங்களுக்கு தேவையில்லாத ஆப்ஸை கிளிக் செய்து ஓபன் செய்யவும். அதில் காட்டப்படும் Force Stop என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்தால். உங்கள் மொபைலின் Background இல் இயங்குவது நிறுத்தப்படும்.

 

மொபைல் ஏன் வெடிக்கிறது?

மொபைல் வெடிக்க காரணம்.. அதன் பேட்டரி தான். பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது. அப்போது செல்போனும் தானாக வெடிக்கிறது. பேட்டரி வெடிப்பதற்கும் வீக் ஆவதற்கும் பிரதான காரணங்களில் சார்ஜரும் ஒன்று. ஒரு மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும். எனவே வேறுஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது. சார்ஜர் என்பது மிக முக்கியம் குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது. இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும். அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது. அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போட வேண்டும். அல்லது மொபைலுக்கேற்ற சிறந்த பிராண்டின் சார்ஜரை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

 

The post மொபைல் பேட்டரி சீக்கிரம் தீராமல் இருக்க செய்ய வேண்டியது என்ன? first appeared on .

]]>
நெட்ஃப்ளிக்ஸ்: பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பை உறுதி செய்த புதிய நிர்வாக அதிகாரிகள் https://www.91mobiles.com/tamil/netflix-new-ceo-confirms-everyone-want-to-pay-extra-who-sharing-password/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=netflix-new-ceo-confirms-everyone-want-to-pay-extra-who-sharing-password Tue, 24 Jan 2023 12:17:45 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5323 பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை முன்னதாகவே பல நாடுகளில் நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை அமலுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து நாடுகளிலும் விரிவு செய்யப்பட்டு மார்ச் 2023க்குள் முழுமையாக கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் பயனர்கள் பலரும் இதற்கு தயாராகி வருகின்றனர். இதில் கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், பயனர்கள் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடையாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் நெட்ஃபிளிக்ஸ் […]

The post நெட்ஃப்ளிக்ஸ்: பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பை உறுதி செய்த புதிய நிர்வாக அதிகாரிகள் first appeared on .

]]>

Highlights

  • Netflix முன்னாள் சிஇஓ ரீட் ஹேஸ்டங்ஸ் கடந்த ஆண்டே பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை குறித்து உறுதி செய்தார்.
  • இதையடுத்து தற்போது புதிய இணை-தலைமை நிர்வாக அதிகாரிகளான (CEO) கிரெக் பீட்டர் மற்றும் டெட் சரண்டோஸ் இதுகுறித்த கூடுதல் விவரங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை முன்னதாகவே பல நாடுகளில் நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை அமலுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து நாடுகளிலும் விரிவு செய்யப்பட்டு மார்ச் 2023க்குள் முழுமையாக கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் பயனர்கள் பலரும் இதற்கு தயாராகி வருகின்றனர். இதில் கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், பயனர்கள் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடையாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் விளம்பர ஆதரவு சந்தா திட்டத்தை அறிமுகம் செய்தது.

 

வருவாய் வீழ்ச்சி

வருவாயில் வீழ்ச்சியை சந்தித்த நெட்ஃபிளிக்ஸ் அதை அதிகரிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. நெட்ஃபிளிக்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ், பாஸ்வேர்ட் பகிர்வு விருப்பம் படிப்படியாக அனைவருக்கும் முடிவுக்கு வரும் என கடந்த ஆண்டே அறிவித்தார். இந்த நிலையில் தற்போது புதிய இணை-தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) கிரெக் பீட்டர்ஸ் மற்றும் டெட் சாண்டோஸ் ஆகியோர் ப்ளூபெர்க் இடம் அளித்த ஒரு நேர்காணலில் நெட்ஃபிளிக்ஸ் கடவுச்சொல் பகிர்வு விருப்பம் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் முடிவடையும் என குறிப்பிட்டுள்ளனர்.

 

எதிர்பார்ப்பு

எனவே நெட்ஃபிளிக்ஸ் பயன்படுத்த நண்பர்கள் அல்லது பிறரை நம்பி இருக்கும் இந்தியர்கள், இனி தளத்தை பயன்படுத்த விரைவில் பணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. Netflix சேவைக்கு பணம் செலுத்தாமல் தளத்தை பயன்படுத்த பிறரை நம்பி இருக்கும் பயனர்கள் விரைவில் பணம் செலுத்தத் தொடங்குவார்கள் என பீட்டர்ஸ் கூறினார். பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கையில் சிஇஓக்கள், இந்தியா போன்ற நாடுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 15-20 மில்லியன் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கின்றனர்.

 

புதிய வழிகள்

Netflix நிறுவனம் அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய வழிகளை முயற்சி செய்து வருகிறது. அதில் ஒன்று தான் பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை ஆகும். நெட்ஃபிளிக்ஸ் தங்கள் பயனர்கள் கடவுச்சொல்லை பகிர்வதை தடுப்பதற்கு நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. தற்போது நிறுவனம் விரைவில் இதை அனைவருக்கும் செயல்படுத்த இருக்கிறது. தொடர்ந்து சந்தாதாரர்களை இழந்து வரும் நெட்ஃபிளிக்ஸ் இதை முடிவுக்கு கொண்டு வர இந்த நடவடிக்கையை எடுக்கத் தொடங்கி இருக்கிறது. பயனர்கள் இனி உங்கள் பாஸ்வேர்ட்டை பகிர்ந்தால் நிறுவனம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. நீங்கள் இனி உங்கள் பாஸ்வேர்ட்டை நண்பர்களுடனோ அல்லது வேறு ஒருவரிடமோ பகிர்ந்தால் அந்த நபர் உங்கள் சுயவிவரத்தை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

 

எவ்வளவு கட்டணம்?

பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு குறித்து நிறுவனம் கோஸ்டாரிகா, சிலி, பெரு மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் சோதனை செய்தது. அங்கு பாஸ்வேர்ட் பகிரும் நபர்களிடம் $3 (தோராயமாக ரூ.250) வசூலிக்கிறது. இந்தியாவில் ஒரு பகிர்வுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. IP முகவரிகள், சாதன ஐடிகள் மற்றும் கணக்கு செயல்பாடு மூலம் இந்த பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட இருக்கிறது. அறிமுகமான புது ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகமான புது ரீசார்ஜ் திட்டங்கள் மறுபுறம் பயனர்கள் இந்த நடவடிக்கையில் அதிருப்தி அடைந்துவிடக் கூடாது என விளம்பரத்துடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை நிறுவனம் அறிமுகம் செய்தது. Basic with Ads திட்டங்களில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நான்கு முதல் ஐந்து விளம்பரங்கள் வருவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு விளம்பரங்களும் 15 முதல் 30 வினாடிகள் நீளம் இருப்பதாக கூறப்படுகிறது. உலகளாவிய விளம்பர திட்டங்களுக்கு என நெட்பிளிக்ஸ் மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

 

கட்டுப்பாடுகள்

திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் 720p வீடியோ தரத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும் எனவும் வரையறுக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் இந்த திட்டத்தில் அணுக முடியாது எனவும் கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் பார்க்க முடியாத நிகழ்ச்சிகள் லாக் (பூட்டு) ஐகான் உடன் காட்டப்படும். அதேபோல் ஆப்பிள் டிவி உள்ளிட்ட சில சாதனங்களில் விளம்பர அடுக்கு திட்டங்கள் வேலை செய்யாது எனவும் கூறப்படுகிறது. விளம்பர ரீசார்ஜ் திட்ட விலை விளம்பர ரீசார்ஜ் திட்ட விலை இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டிஸ்னி ப்ளஸ் இன் விளம்பர அடுக்கு ரீசார்ஜ் திட்டம் $7.99 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் ரீசார்ஜ் திட்ட விலை $6.99 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நெட்பிளிக்ஸ் திட்டத்தின் விலையை விட டிஸ்னி ப்ளஸ் விலை $1 அதிகம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. ஒவ்வொரு நாட்டிலும் நெட்ஃபிளிக்ஸ் ரீசார்ஜ் திட்டத்தின் விலை மாறுபடுகிறது.

 

The post நெட்ஃப்ளிக்ஸ்: பாஸ்வேர்ட் பகிர்வு தடுப்பை உறுதி செய்த புதிய நிர்வாக அதிகாரிகள் first appeared on .

]]>
மதுரை, திருச்சி, கோயமுத்தூர், ஓசூருக்கும் ஏர்டெல் 5ஜி வந்தாச்சு! https://www.91mobiles.com/tamil/list-of-areas-where-airtel-5g-introduced-and-coverage-available-in-coimbatore-madurai-trichy-hosur/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=list-of-areas-where-airtel-5g-introduced-and-coverage-available-in-coimbatore-madurai-trichy-hosur Tue, 24 Jan 2023 11:43:22 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5320 அந்த நகரங்கள் – 5கோயம்புத்தூர் (Coimbatore), ஓசூர் (Hosur), திருச்சி (Trichy) மற்றும் மதுரை (Madurai) ஆகும்! 5ஜி சேவைகளை அறிமுகம் செய்த கையோடு, மேற்கூறிய 4 நகரங்களில் எந்தெந்த பகுதிகளில் / ஏரியாக்களில் 5ஜி பிளஸ் சேவைகள் அணுக கிடைக்கும் என்கிற பட்டியலையும் ஏர்டெல் வெளியிடப்பட்டுள்ளது.   மொத்தம் 52.. தமிழ்நாட்டில் மட்டும் 5! கோவை, ஓசூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியதின் மூலம், தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி […]

The post மதுரை, திருச்சி, கோயமுத்தூர், ஓசூருக்கும் ஏர்டெல் 5ஜி வந்தாச்சு! first appeared on .

]]>

Highlights

  • பார்தி ஏர்டெல் நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள 4 நகரங்களில் தனது 5ஜி சேவைகளை (Airtel 5G) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதன் மூலம் இந்தியாவில் 52 நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கத்துவங்கி இருக்கிறது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 நகரங்களும் அடக்கம்.

அந்த நகரங்கள் – 5கோயம்புத்தூர் (Coimbatore), ஓசூர் (Hosur), திருச்சி (Trichy) மற்றும் மதுரை (Madurai) ஆகும்! 5ஜி சேவைகளை அறிமுகம் செய்த கையோடு, மேற்கூறிய 4 நகரங்களில் எந்தெந்த பகுதிகளில் / ஏரியாக்களில் 5ஜி பிளஸ் சேவைகள் அணுக கிடைக்கும் என்கிற பட்டியலையும் ஏர்டெல் வெளியிடப்பட்டுள்ளது.

 

மொத்தம் 52.. தமிழ்நாட்டில் மட்டும் 5!

கோவை, ஓசூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியதின் மூலம், தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைகளானது நாட்டின் 52 நகரங்களில் அணுக கிடைக்கின்றன. அதேபோல சென்னையையும் சேர்த்து, தமிழகத்தில் உள்ள 5 நகரங்களில் ஏர்டெல்லின் 5ஜி பிளஸ் சேவைகள் அணுக கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் ஓசூரில் வசிப்பவராக இருந்தால், எந்தெந்த பகுதிகளில் / ஏரியாக்களில் ஏர்டெல் 5ஜி பிளஸ் கவரேஜ் கிடைக்கும் என்கிற பட்டியல் இதோ..

 

திருச்சி

 

  • தில்லை நகர்
  • ராக் ஃபோர்ட்
  • கே.கே.நகர்
  • கருமண்டபம்
  • திருநகர்
  • சஞ்சீவி நகர்
  • ஸ்ரீரங்கம்,
  • வள்ளுவர் சாலை
  • செல்வபுரம்
  • மேலூர் சாலை
  • பி.ஹெச்.இ.எல்.

 

மதுரை

 

  • கே.கே.நகர்
  • கோச்சடை
  • எல்லீஸ் நகர்
  • பசுமலை
  • மாட்டுத்தாவணி
  • திருப்பரங்குன்றம்
  • சோலைஅழகுபுரம்
  • மீனாட்சி நகர்
  • விரகனூர்
  • நேதாஜி தெரு
  • அலங்காநல்லூர் சாலை
  • திருவள்ளுவர் நகர்
  • கடச்சனேந்தல் சாலை
  • பழங்காந்தம்

 

ஓசூர்

 

  • பாரதிதாசன் நகர்
  • மூகொண்டப்பள்ளி
  • கணபதி நகர்
  • சிப்காட் ஐ லேண்ட்
  • பெரியார் நகர்
  • அவலப்பள்ளி
  • சாந்தி நகர்
  • பழைய ஏஎஸ்டிசி ஹட்கோ
  • விஓசி நகர்.

 

கோயம்புத்தூர்

 

  • 100 அடி சாலை
  • டவுன் ஹால்
  • காந்திபுரம்
  • சாய்பாபா காலனி
  • ரத்தினபுரி
  • கவுண்டம்பாளையம்
  • டாடாபாத்
  • சரவணம்பட்டி
  • சத்தி சாலை
  • உப்பிலிபாளையம்
  • சேரன் மா நகர்
  • ஆர்.எஸ்.புரம்
  • போதனூர்

 

20x முதல் 30x முறை அதிக வேகம்!

ஏர்டெல்லின் கூற்றுப்படி, நிறுவனத்தின் 5ஜி பிளஸ் நெட்வொர்க் ஆனது தற்போதைய 4ஜி நெட்வொர்க்குகளை விட 20x முதல் 30x அதிக வேகத்தை வழங்கும். ரிலையன்ஸ் ஜியோ அளவிற்கு இல்லையென்றாலும் கூட, ஏர்டெல் முடிந்த வேகத்தில் அதன் 5ஜி பிளஸ் சேவைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. மேலும் இந்நிறுவனம், வருகிற மார்ச் 2024 க்குள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துவிட வேண்டும் என்கிற இலக்கையும் வைத்துள்ளது.

The post மதுரை, திருச்சி, கோயமுத்தூர், ஓசூருக்கும் ஏர்டெல் 5ஜி வந்தாச்சு! first appeared on .

]]>
ரூ.15,000 போன்ல இருக்கிற வசதிகள் ரூ.6,999 போன்ல! டெக்னோ அதிரடி! https://www.91mobiles.com/tamil/rs-6-999-priced-smartphone-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=rs-6-999-priced-smartphone-launched-in-india Tue, 24 Jan 2023 11:01:36 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5313 சீன டிரான்ஷன் ஹோல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான டெக்னோ மலிவு விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது Tecno Spark Go (2023) ஸ்மார்ட்போன் ஆகும்.. ரூ.10,000  முதல் ரூ.15,000 வரையிலான விலைப்பிரிவு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அம்சங்கள் Tecno Spark Go (2023) மொபைலில் இருக்கிறது.   வேரியண்ட் ரூ.7,000க்கு கீழ் அறிமுகமான ஸ்மார்ட்போன் டெக்னோ ஸ்பார்க் கோ 2023 ஸ்மார்ட்போனானது மூன்று வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது. அது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி […]

The post ரூ.15,000 போன்ல இருக்கிற வசதிகள் ரூ.6,999 போன்ல! டெக்னோ அதிரடி! first appeared on .

]]>

Highlights

  • Tecno Spark Go (2023) என்ற ஸ்மார்ட்போன் ரூ.6,999 என்ற விலையில் அறிமுகம் ஆகி இருக்கிறது.
  • இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி, டூயல் ரியர் கேமராக்கள், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் என பல மேம்பட்ட அம்சங்கள் இருக்கிறது.

சீன டிரான்ஷன் ஹோல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான டெக்னோ மலிவு விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது Tecno Spark Go (2023) ஸ்மார்ட்போன் ஆகும்.. ரூ.10,000  முதல் ரூ.15,000 வரையிலான விலைப்பிரிவு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அம்சங்கள் Tecno Spark Go (2023) மொபைலில் இருக்கிறது.

 

வேரியண்ட்

ரூ.7,000க்கு கீழ் அறிமுகமான ஸ்மார்ட்போன் டெக்னோ ஸ்பார்க் கோ 2023 ஸ்மார்ட்போனானது மூன்று வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது. அது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும். இதில் உள்ள 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை தான் ரூ.6,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற வேரியண்ட்களான 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

நிறங்கள்

புதிய டெக்னோ ஸ்மார்ட்போனானது பிளாக், நெபூலா பர்ப்பிள் மற்றும் உயுனி ப்ளூ ஆகிய நிறங்களில் வெளியாகி இருக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வேரியண்ட் தற்போதே விற்பனைக்கு கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

டிஸ்ப்ளே

Tecno Spark Go (2023) ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான HiOS 12.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. 6.56 அங்குல எச்டி+ ஐபிஎஸ் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 720×1,612 பிக்சல் அடர்த்தியைக் கொண்டுள்ளது. அதேபோல் 480 நிட்ஸ் உச்ச பிரகாச நிலை மற்றும் 90 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி விகிதமாக இதில் இருக்கிறது.

 

சிப்செட்

Tecno Spark Go (2023) ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஏ22 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. முன்னதாகவே குறிப்பிட்டது போல் 4 ஜிபி ரேம் ஆதரவு இதில் உள்ளது.

 

கேமரா

இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமராக்கள் இருக்கிறது. அதாவது 13 எம்பி பிரைமரி சென்சார் மற்றும் ஏஐ லென்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என இதன் முன்புறத்தில் 5 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மெமரி விரிவாக்கம்

Tecno Spark Go (2023) ஸ்மார்ட்போனில் விர்ச்சுவல் ரேம் நீட்டிப்பு வசதி வழங்கப்பட்டிருக்கிறது. அதுபோல், 64 ஜிபி வரையிலான சேமிப்பக ஆதரவு இதில் வழங்கப்பட்டிருந்தாலும் பிரத்யேகமாக மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதியும் உள்ளது. இதன்மூலம் 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

 

பேட்டரி

இதில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சார்ஜ் செய்வதற்கு 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. 32 மணிநேர காத்திருப்பு நேரம், 12 மணிநேர கேமிங், 124 மணிநேரத்துக்கும் மேல் இசை மற்றும் 25 மணிநேர வீடியோ ப்ளேபேக் டைம் அணுகலை இந்த பேட்டரி மூலம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கனெக்டிவிட்டி

இந்த டெக்னோ ஸ்மார்ட்போனில் டூயல் சிம் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, ஓடிஜி மற்றும் யூஎஸ்பி டைப்-சி இணைப்பு ஆதரவுகள் உள்ளது. பாதுகாப்பு வசதிக்கு என ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் வழங்கப்பட்டிருக்கிறது.

The post ரூ.15,000 போன்ல இருக்கிற வசதிகள் ரூ.6,999 போன்ல! டெக்னோ அதிரடி! first appeared on .

]]>
150கிமீ. மைலேஜ் கொடுக்கும் எலக்ட்ரிக் ஆட்டோ வந்தாச்சு! https://www.91mobiles.com/tamil/osm-launches-muse-kraze/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=osm-launches-muse-kraze Tue, 24 Jan 2023 08:01:53 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5306 ஒஎஸ்எம் எனப்படும் ஒமெகா செய்கி மொபிலிட்டி நிறுவனம் இந்தியா ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் அதன் புதிய தயாரிப்புகள் சிலவற்றைக் காட்சிப்படுத்தியது. அந்தவகையில், நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவை மிரள வைக்கும் வகையில் தனது அழகிய தயாரிப்புகளான ஆட்டோ ரிக்ஷாக்கள் சிலவற்றையும் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த ஆட்டோக்கள் கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.   இரண்டு ஆட்டோக்கள் அழகிலும் சரி, சிறப்பு வசதிகளிலும் சரி இந்த ஆட்டோக்கள் சிறப்பாக தயாரிக்கப்பட்டு இஒஎஸ்எம் ம்யூஸ் (OSM […]

The post 150கிமீ. மைலேஜ் கொடுக்கும் எலக்ட்ரிக் ஆட்டோ வந்தாச்சு! first appeared on .

]]>

Highlights

  • ஆட்டோ எக்ஸ்போ 20233ல் இஒஎஸ்எம் ம்யூஸ் (OSM Muse) மற்றும் ஒஎஸ்எம் க்ரேஸ் (OSM Kraze) எனும் இரு எலக்ட்ரிக் ஆட்டோக்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
  • இவை ஒரு முழு சார்ஜ்க்கு 150கிமீ வரை மைலேஜ் தரும் திறன் கொண்டவை.

ஒஎஸ்எம் எனப்படும் ஒமெகா செய்கி மொபிலிட்டி நிறுவனம் இந்தியா ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் அதன் புதிய தயாரிப்புகள் சிலவற்றைக் காட்சிப்படுத்தியது. அந்தவகையில், நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவை மிரள வைக்கும் வகையில் தனது அழகிய தயாரிப்புகளான ஆட்டோ ரிக்ஷாக்கள் சிலவற்றையும் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த ஆட்டோக்கள் கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

இரண்டு ஆட்டோக்கள்

அழகிலும் சரி, சிறப்பு வசதிகளிலும் சரி இந்த ஆட்டோக்கள் சிறப்பாக தயாரிக்கப்பட்டு இஒஎஸ்எம் ம்யூஸ் (OSM Muse) மற்றும் ஒஎஸ்எம் க்ரேஸ் (OSM Kraze) எனும் பெயரில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இவற்றிற்கான புக்கிங் பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன. ஆட்டோக்களின் விலையும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

விலை

ஒஎஸ்எம் ம்யூஸ் மாடலுக்கு 4 லட்ச ரூபாயும், ஒஎஸ்எம் க்ரேஸ் மாடலுக்கு 4.20 லட்சம் ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிகபட்ச விலைக்கு இவை இரண்டும் எலெக்ட்ரிக் ஆட்டோ என்பதும் இதில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களுமே காரணமாக இருக்கிறது.

 

வசதிகள்

இரண்டிலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஜிபிஎஸ் மற்றும் மொபைல் ஆப் வாயிலாக கன்ட்ரோல் செய்யும் வசதி மற்றும் மானிட்டரிங் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

 

பேட்டரி & மைலேஜ்

இரண்டிலும் ஓர் முழுமையான சார்ஜில் 80 கிமீ முதல் 100 கிமீ வரையில் பயணிக்க முடியும். இதை சார்ஜ் செய்ய 15A சாக்கெட்டே போதும். ம்யூஸ் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவில் அதிகபட்சமாக இரண்டு பேர் மிக தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். 950 கிலோ வரையில் இது ஏற்றி செல்லும் திறன் கொண்டது. 8 kWh பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஃபுல் சார்ஜில் 150 கிமீ மைலேஜ் தரும். 4 மணி நேரத்தில் இதை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

அம்சங்கள்

ஆட்டோ ஏசி, மிக தாராளமான லெக் ரூம் வசதி, இரவில் வானம் இருப்பதைப் போன்ற உட்பக்க மேற்கூரை என எக்கசக்க அம்சங்கள் ம்யூஸில் வழங்கப்பட்டிருக்கும். ஐஓடி சிஸ்டம், டிஜிட்டல் க்ரூஸர், டூயல் எல்இடி ஹெட்லைட், 200 லிட்டர் பூட் ஸ்பேஸ், கட்டிங் எட்ஜ், மாடர்ன் ஏரோ டைனமிக் என எக்கசக்க அம்சங்கள் ம்யூஸில் வழங்கப்பட்டுள்ளன. க்ரேஸ் இதன் ஃபுல் சார்ஜ் ரேஞ்ஜ் திறன் 150 கிமீ மைலேஜ் ஆகும். மேலும், இது அதிகபட்சமாக மணிக்கு 46 கிமீ வேகத்தில் பயணிக்கும். நகரம் மற்றும் நடுத்தர கிராமங்களுக்கு ஏற்ற வாகனம் இது ஆகும்.

 

வடிவமைப்பு

மிகவும் அட்டகாசமான ஸ்டைலில் இந்த வாகனத்தை ஒஎஸ்எம் உருவாக்கி இருக்கின்றது. கட்டிங் எட்ஜ், ஏரோடைனமிக் டிசைன் என தோற்றத்தில் இந்த வாகனம் கலக்கலாக இருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் ஓர் வசதியான கார் மாடலைக் காட்டிலும் இது மிகவும் அழகானதாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. தற்போது ஓஎஸ்எம் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஃபரிதாபாத்தில் உள்ளது. இங்கு வைத்தே நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோக்களைத் தயாரிக்க இருக்கின்றது.

 

விற்பனை & டெலிவரி

இந்தியா மட்டுமின்று உலக நாடுகளுக்கும் இந்த மின்சார ஆட்டோக்கள் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஆண்டுக்கு 4 ஆயிரம் யூனிட்டுகள் வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இன்னும் சில வாரங்களில் இரு ஆட்டோக்களும் விற்பனைக்கு வர இருக்கின்றன. மேலும், அவற்றின் டெலிவரி பணிகள் மே 2023 இல் தொடங்க இருக்கின்றது.

 

The post 150கிமீ. மைலேஜ் கொடுக்கும் எலக்ட்ரிக் ஆட்டோ வந்தாச்சு! first appeared on .

]]>