vivo v25 pro https://www.91mobiles.com/tamil Thu, 15 Sep 2022 08:22:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 நிறம் மாறும் பேனலோடு வெளியானது விவோ V25 https://www.91mobiles.com/tamil/vivo-v25-released/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-v25-released Thu, 15 Sep 2022 07:40:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2332 விவோ நிறுவனத்தின் Vivo V25 மொபைல் சற்று நேரத்திற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. Vivo V25 Pro ஃப்ளிப்கார்ட்டின் ‘பிக் பில்லியன் டேஸ்’ விற்பனை மற்றும் இந்தியாவின் பண்டிகை கொண்டாட்டத்தை குறிவைத்து Vivo V25 Pro மொபைல் வெளியாகி இருக்கிறது. எலிகண்ட் ப்ளாக் (Elegant Black), சர்ஃபிங் ப்ளூ (Surfing Blue) என இரண்டு நிறங்களில் வெளியாகி இருக்கும் இந்த மொபைல், 8GB RAM – 128GB சேமிப்புத்திறன் மற்றும் 12GB RAM – 256GB சேமிப்புத்திறன் […]

The post நிறம் மாறும் பேனலோடு வெளியானது விவோ V25 first appeared on .

]]>

விவோ நிறுவனத்தின் Vivo V25 மொபைல் சற்று நேரத்திற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.


Vivo V25 Pro

ஃப்ளிப்கார்ட்டின் ‘பிக் பில்லியன் டேஸ்’ விற்பனை மற்றும் இந்தியாவின் பண்டிகை கொண்டாட்டத்தை குறிவைத்து Vivo V25 Pro மொபைல் வெளியாகி இருக்கிறது. எலிகண்ட் ப்ளாக் (Elegant Black), சர்ஃபிங் ப்ளூ (Surfing Blue) என இரண்டு நிறங்களில் வெளியாகி இருக்கும் இந்த மொபைல், 8GB RAM – 128GB சேமிப்புத்திறன் மற்றும் 12GB RAM – 256GB சேமிப்புத்திறன் என இரண்டு வேரியண்ட்களில் வெளிவந்து இருக்கிறது. இதில் நீல வண்ண மொபைலில் Color Changing Fluorite AG Glass Design என்ற அம்சம் இருக்கிறது. இது மொபைலின் வண்ணத்தை வெளிர் நீலத்தில் இருந்து அடர் நீலத்திற்கு மாற்றுகிறது.

டிஸ்ப்ளே

இந்த மொபைல் 6.44 அங்குல (16.66 cm) அளவில், 2376×1080 Resolutionல், FHD+ டிஸ்ப்ளேவுடன் வெளியாகி இருக்கிறது. இதன் திரை Capacitive multi-touch வசதியையும், 120Hz 3D Curved displayவை 300Hz touch sampling rate உடன் கொண்டு இருக்கிறது.

கேமரா

இதன் பின்பக்கத்தில் OIS வசதியுள்ள 64MP கேமரா முதன்மை கேமராவாக இருக்கிறது. இதில் இருக்கும் Bokeh Flare Portrait என்ற அம்சம் மூலம் புகைப்படத்தில் விதவிதமான Bokeh effectஐ கொண்டு வர முடியும்.இதன் மூலம் சிறந்த இரவு நேர புகைப்படங்களையும் எடுக்க முடியும். கூடவே இந்த மொபைல் 4K video மற்றும் HDR வீடியோவையும் ஆதரிக்கிறது. இதனையடுத்து 8MP wide angle கேமரா இருக்கிறது. கூடவே 2MP மேக்ரோ கேமராவும் இருக்கிறது. முன்பக்கத்தில் 50MP செல்ஃபி கேமரா இருக்கிறது. இதில் ‘Eye AF’ அம்சம் இருப்பதால் தெளிவான, சிறந்த செல்ஃபி புகைப்படங்களையும், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் முடியும். பின்பக்கத்தில் LED flash ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர, போட்டோவுக்கும், வீடியோவுக்கும் Panorama, Slow Motion, Live Photo, Time-Lapse, Pro, AR Stickers போன்ற பல அம்சங்கள் இதில் இருக்கிறது.


அம்சங்கள்

5G மொபைலான Vivo V25 இரட்டை சிம் வசதியைக் கொண்டுள்ளது. இதில் MediaTek Dimensity 900 சிப்செட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 -ஐ இயங்குதளமாக கொண்டுள்ள இந்த மொபைல் ஏற்கனவே குறிப்பிட்டது போல் 8GB RAM – 128GB சேமிப்புத்திறன் மற்றும் 12GB RAM – 256GB சேமிப்புத்திறன் என இரண்டு வேரியண்ட்களில் வெளிவந்து இருக்கிறது. கூடவே இதன் RAM அளவை 8GB வரை அதிகப்படுத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது. பிங்கர் ப்ரிண்ட் சென்சார் செக்யூரிட்டி வசதியுடன் வரும் இந்த மொபைலில் 4500mAh பேட்டரியும் 44W flash charge வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. சார்ஜரும் இந்த மொபைலோடு சேர்ந்து வருவது சிறப்பு.

கனெக்டிவிட்டி

Vivo V25 மொபைல், 2.4GHz, 5GHz Wi-Fi, Bluetooth – 5.2, Type-C போர்ட், GPS, OTG போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. கண்ணாடியில் தயாரான இதன் எடை 186 கிராம் இருக்கிறது.

விலை

Vivo V25 மொபைலின் 8GB RAM – 128GB சேமிப்புத்திறன் கொண்ட மொபைல் ரூ27,999 என்ற விலையிலும், 12GB RAM + 128GB Storage 31,999 என்ற விலையிலும் கிடைக்கிறது.

The post நிறம் மாறும் பேனலோடு வெளியானது விவோ V25 first appeared on .

]]>
பெர்பாமென்ஸ், கேமரா இரண்டுலேயும் பெஸ்டா இருக்கிற ஒரு போன்! https://www.91mobiles.com/tamil/new-camera-smartphone-2022-vivo-v25-pro-launched/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-camera-smartphone-2022-vivo-v25-pro-launched Wed, 17 Aug 2022 12:41:48 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1675 நல்ல பெர்பாமென்ஸ் இருக்கிற மொபைலா இருக்கணும்.. அதோட கேமராவும் தரமா இருக்கணும்.. அப்படி ஒரு மொபைல் வாங்கணும்னா இன்னைக்கு அறிமுகமான விவோ மொபைலை தான் வாங்கணும். இந்தியாவில் இன்று அறிமுகமான Vivo (விவோ) நிறுவனத்தின் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் தான் Vivo V25 Pro! அதன் விலை என்ன? என்னென்ன வசதிகள் இருக்கு? எப்போ வாங்கலாம்? எல்லாத்தையும் பார்க்கலாம்! விவோ வி25 ப்ரோ (Vivo V25 Pro) ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 1300 SoC மற்றும் 12GB […]

The post பெர்பாமென்ஸ், கேமரா இரண்டுலேயும் பெஸ்டா இருக்கிற ஒரு போன்! first appeared on .

]]>

நல்ல பெர்பாமென்ஸ் இருக்கிற மொபைலா இருக்கணும்.. அதோட கேமராவும் தரமா இருக்கணும்.. அப்படி ஒரு மொபைல் வாங்கணும்னா இன்னைக்கு அறிமுகமான விவோ மொபைலை தான் வாங்கணும்.

இந்தியாவில் இன்று அறிமுகமான Vivo (விவோ) நிறுவனத்தின் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் தான் Vivo V25 Pro! அதன் விலை என்ன? என்னென்ன வசதிகள் இருக்கு? எப்போ வாங்கலாம்? எல்லாத்தையும் பார்க்கலாம்!

விவோ வி25 ப்ரோ (Vivo V25 Pro) ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 1300 SoC மற்றும் 12GB வரையிலான ரேம் உடன் வெளியாகும் ஒரு தரமான பெர்ஃபார்மென்ஸ் ஸ்மார்ட்போன். அதே சமயம் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் வரும் 64 மெகாபிக்சல் மெயின் சென்சாரை பேக் செய்யும் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையும், “தி பெஸ்ட்” என்று கூறுபடியான 32எம்பி செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. அதாவது – ஒரு தரமான கேமரா போனாகவும் உள்ளது!

அம்சங்கள்

இந்த விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது Full HD plus ரெசல்யூஷன் உடனான 6.56-அங்குல AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்கிறது. ஆண்ட்ராய்டு 12 உடன் Funtouch OS 12 மூலம் இயங்குகிறது. எல்லாவற்றை விடவும் முக்கியமாக இது 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.
‘கலர் சேஞ்சிங்’ (வண்ணத்தை மாற்றும்) பேக் கிளாஸ் பேனலுடன் வரும் Vivo V25 Pro 5G ஸ்மார்ட்போன் ஆனது Full-HD+ (2,376×1,080 பிக்சல்ஸ்) ரெசல்யூஷனை கொண்ட 6.56-அங்குல அளவிலான AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 1300 SoC மற்றும் 12GB வரையிலான ரேம் உடன் இணைந்து இயக்கப்படுகிறது. இதுவொரு இரட்டை சிம் கொண்ட ஸ்மார்ட்போன்.

கேமரா

கேமராக்களை பொறுத்தவரை, Vivo V25 Pro மாடல் ஆனது ட்ரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்டு இருக்கிறது. அதில் f/1.89 லென்ஸ் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவு கொண்ட 64-மெகாபிக்சல் சென்சார் + f/2.2 லென்ஸ் கொண்ட 8-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா + f/2.4 லென்ஸ் கொண்ட 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில், Vivo V25 Pro-வில் ஐ ஆட்டோஃபோகஸ் ஆதரவு மற்றும் f/2.45 லென்ஸ் உடன் வரும் 32-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

கனெக்டிவிட்டி & பேட்டரி

டூயல்-பேண்ட் Wi-Fi (2.4GHz மற்றும் 5GHz), ப்ளூடூத் v5.2, GPS மற்றும் USB டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களைக் கொண்டு இருக்கும் Vivo V25 Pro-வில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் இருக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இது 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 4,830mAh பேட்டரியை கொண்டுள்ளது. Vivo நிறுவனத்தின் கூற்றுப்படி இது 190 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.

விலை & விற்பனை

இந்தியாவில் Vivo V25 Pro ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்புத்திறனைக் கொண்ட பேஸிக் வேரியண்ட் ஆனது ரூ.35,999க்கும், இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜை கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட் ஆனது ரூ.39,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விற்பனை & சலுகைகள்

இந்த ஸ்மார்ட்போனை வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் வழியாகவும், விவோவின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிற ரீடெயில் சேனல்களின் வழியாகவும் வாங்க முடியும். ப்யூர் பிளாக் மற்றும் சைலிங் ப்ளூ என்கிற 2 நிறத் தேர்வுகளில் கிடைக்கும். HDFC கிரெடிட் / டெபிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளின் கீழ் Vivo V25 Pro-வை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.3500 என்கிற தள்ளுபடியை பெற முடியும். கூடுதலாக ரூ.3000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் கிடைக்கும்.

The post பெர்பாமென்ஸ், கேமரா இரண்டுலேயும் பெஸ்டா இருக்கிற ஒரு போன்! first appeared on .

]]>
சிறப்பான அம்சங்களோடு வெளியாகும் Vivo V25 Pro https://www.91mobiles.com/tamil/vivo-v25-pro-smartphone-to-launch-in-india-next-month/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-v25-pro-smartphone-to-launch-in-india-next-month Fri, 29 Jul 2022 06:32:30 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1170 விவோ நிறுவனம் புதிய விவோ வி25 ப்ரோ (Vivo V25 Pro) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான சிப்செட் வசதியுடன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. விவோ நிறுவனம் முன்பு போல் அதிகமான ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதில்லை என்றாலும், இந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்யும் சில போன்கள் தரமான அம்சங்களுடன் வெளிவருவதை மறுப்பதற்கில்லை. அந்தவகையில் விரைவில் வெளியாகும் விவோ வி25 ப்ரோ […]

The post சிறப்பான அம்சங்களோடு வெளியாகும் Vivo V25 Pro first appeared on .

]]>

விவோ நிறுவனம் புதிய விவோ வி25 ப்ரோ (Vivo V25 Pro) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான சிப்செட் வசதியுடன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.

விவோ நிறுவனம் முன்பு போல் அதிகமான ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதில்லை என்றாலும், இந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்யும் சில போன்கள் தரமான அம்சங்களுடன் வெளிவருவதை மறுப்பதற்கில்லை.

அந்தவகையில் விரைவில் வெளியாகும் விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போனும் சிறந்த அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. மேலும் இந்த புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தரமான சிப்செட்
இந்த புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது தரமான மீடியாடெக் Dimensity 1300 சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் விளையாடுபவர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த சிப்செட் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே விளையாட்டுச் செயலிகளை இதில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகிறது இந்த விவோ ஸ்மார்ட்போன்.

சூப்பர் டிஸ்பிளே
Vivo V25 Pro ஸ்மார்ட்போன் 6.56-அங்குல Full HD plus 3D curved AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்பலாம். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate), 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (touch sampling rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது.

12GB RAM
விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (in-display fingerprint scaner) வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

அருமையான பேட்டரி
விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 4500mAh பேட்டரியோடு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 80W fast charging வசதியும் இருக்கிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இதன் வடிவமைப்பில் விவோ அதிக கவனம் செலுத்தியுள்ளது.

அல்ட்ரா வைடு கேமரா
இந்த புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் 50 மெகா பிக்சல் முதன்மை கேமரா + 12 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 மெகா பிக்சல் portrait லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு இருக்கிறது. முன்பக்கத்தில் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32 மெகா பிக்சல் கேமராவும் இருக்கிறது. குறிப்பாக இந்த போனில் 12 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸ் இருப்பதால் அருமையாக புகைப்படங்களை எடுக்க முடியும்.

தரமான அம்சங்கள்
இந்த புதிய விவோ போன் நீல நிறத்தில் அறிமுகமாகும் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் வெளியான நத்திங் போன் (1) மற்றும் ஒன்பிளஸ் nord 2T, கூகுள் பிக்சல் 6A ஸ்மார்ட்போன்கனை விட தரமான அம்சங்களுடன் இந்த விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

விலை
ஆன்லைனில் வெளியான தகவலின்படி புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.40,000-க்குள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிறப்பான அம்சங்களோடு வெளியாகும் Vivo V25 Pro first appeared on .

]]>