vivo Y02 https://www.91mobiles.com/tamil Mon, 05 Dec 2022 09:38:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஆக்டா கோர் ப்ராசஸர், 5000mAh பேட்டரியுடன் இந்தியாவில் இன்று அறிமுகமானது விவோ Y02 https://www.91mobiles.com/tamil/vivo-y02-released-in-india-with-octa-core-processor/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-y02-released-in-india-with-octa-core-processor Mon, 05 Dec 2022 09:38:08 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4080 மீடியாடெக் ஆக்டா கோர் ப்ராசஸர், 5000mAh பேட்டரியுடன் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகி இருக்கிறது விவோ Y02 பட்ஜெட் மொபைல். பார்ப்பதற்கு ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் (Mid-range Smartphone) போல மிகவும் ஸ்டைல் ஆக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.8,999 என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பினாலும் சரி.. நம்பாவிட்டாலும் சரி.. அதுதான் உண்மை! இது என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கிறது? பார்க்கலாம்! இந்த ஸ்மார்ட்போன் – பிரபல சீன மொபைல் […]

The post ஆக்டா கோர் ப்ராசஸர், 5000mAh பேட்டரியுடன் இந்தியாவில் இன்று அறிமுகமானது விவோ Y02 first appeared on .

]]>

மீடியாடெக் ஆக்டா கோர் ப்ராசஸர், 5000mAh பேட்டரியுடன் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகி இருக்கிறது விவோ Y02 பட்ஜெட் மொபைல்.
பார்ப்பதற்கு ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் (Mid-range Smartphone) போல மிகவும் ஸ்டைல் ஆக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.8,999 என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பினாலும் சரி.. நம்பாவிட்டாலும் சரி.. அதுதான் உண்மை! இது என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கிறது? பார்க்கலாம்!

இந்த ஸ்மார்ட்போன் – பிரபல சீன மொபைல் தயாரிப்பாளர் ஆன விவோவின் (Vivo) லேட்டஸ்ட் மாடல்! இது விவோ நிறுவனத்தின் ஒய் சீரீஸின் (Y Series) கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும்.

டிஸ்பிளே

டிஸ்பிளேவின் மேல் புறத்தில் – வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச், ரியர் கேமரா செட்டப்பில் ரவுண்ட் கேமரா ஐலேண்ட் என விலையை மிஞ்சும் வடிவமைப்பைக் கொண்டு இருக்கிறது இந்த மொபைல். டூயல் சிம் ஆதரவை கொண்டுள்ள Vivo Y02 ஸ்மார்ட்போன் ஆனது 6.51 அங்குல அளவிலான HD+ halo full screen டிஸ்பிளேவோடு வந்துள்ளது. இந்த டிஸ்ப்ளே 720×1600 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 20:9 என்கிற ஆஸ்பெக்ட் ரேஷியோவை வழங்குகிறது.

கேமரா

கேமராக்களை பொறுத்தவரை, பின்பக்கத்தில், ஒரு 8 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. அது வட்ட வடிவிலான ஒரு கேமரா ஐலேண்டில் உட்பொதிக்கப்பட்டுள்ளது மற்றும் அதில் எல்இடி ப்ளாஷ் ஒன்றும் அடங்கும்! முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை செய்யவும் ஒரு 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கிறது. மேலும், Time-Lapse, Bokeh Mode மற்றும் Face Beauty போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

ப்ராசஸர், ரேம் & ஸ்டோரேஜ்

விவோ Y02 ஆனது 3ஜிபி ரேம், 32ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டு இருக்கிறது. மேலும் கூடுதல் ஸ்டோரேஜிற்காக இதில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஒன்றும் உள்ளது. இதன் மூலம் இதன் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.

சிப்செட்

இந்த விவோ Y02 மொபைலில் மீடியாடெக் ஆக்டா கோர் ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்த போனை திறன்பட பயன்படுத்த முடியும்.

பேட்டரி

விவோ ஒய்02 ஸ்மார்ட்போனில் மைக்ரோ யுஎஸ்பி 2.0 போர்ட்டை பயன்படுத்தி 10W சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது. ரூ.9000 க்குள் வாங்க கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி இருப்பது உண்மையிலேயே மற்ற எல்லா குறைகளையும் காணாமல் அடிக்கச்செய்யும் ஒரு அம்சம் ஆகும்!

அம்சங்கள்

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது Android 12ல் இயங்கும் Funtouch 12 இயங்குதளத்தில் இயங்குகிறது, அதாவது Gmail Go, YouTube Go மற்றும் Maps Go போன்ற ஆப்களின் தொகுப்பை நீங்கள் பெறுவீர்கள். ஆர்க்கிட் ப்ளூ மற்றும் காஸ்மிக் கிரே என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் இந்த விவோ Y02 மொபைல் கிடைக்கிறது

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, இது 4G VoLTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவைகளைக் கொண்டுள்ளது. இந்த போனில் ஃபிங்கர் ஃபிரிண்ட் ஸ்கேனர் இல்லை, ஆனால் ஃபேஸ் அன்லாக் அம்சம் உள்ளது!

The post ஆக்டா கோர் ப்ராசஸர், 5000mAh பேட்டரியுடன் இந்தியாவில் இன்று அறிமுகமானது விவோ Y02 first appeared on .

]]>
ப்ரீமியம் லுக்கில் ஒரு லோ-பட்ஜெட் போன் அதுவும் 5000mAh பேட்டரியோடு! https://www.91mobiles.com/tamil/vivo-has-premium-look-and-5000-mah-battery-but-the-price-is-just-rs-7800/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-has-premium-look-and-5000-mah-battery-but-the-price-is-just-rs-7800 Wed, 30 Nov 2022 09:40:27 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3997 பார்ப்பதற்கு ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் (Mid-range Smartphone) போல மிகவும் ஸ்டைல் ஆக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.7,800 என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பினாலும் சரி.. நம்பாவிட்டாலும் சரி.. அதுதான் உண்மை! இது எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்? இதன் மாடல் பெயர் என்ன? இது என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கிறது? வாருங்கள் பார்க்கலாம்! இந்த ஸ்மார்ட்போன் – பிரபல சீன மொபைல் தயாரிப்பாளர் ஆன விவோவின் (Vivo) லேட்டஸ்ட் மாடல்! […]

The post ப்ரீமியம் லுக்கில் ஒரு லோ-பட்ஜெட் போன் அதுவும் 5000mAh பேட்டரியோடு! first appeared on .

]]>

பார்ப்பதற்கு ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் (Mid-range Smartphone) போல மிகவும் ஸ்டைல் ஆக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.7,800 என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பினாலும் சரி.. நம்பாவிட்டாலும் சரி.. அதுதான் உண்மை! இது எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்? இதன் மாடல் பெயர் என்ன? இது என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கிறது? வாருங்கள் பார்க்கலாம்!

இந்த ஸ்மார்ட்போன் – பிரபல சீன மொபைல் தயாரிப்பாளர் ஆன விவோவின் (Vivo) லேட்டஸ்ட் மாடல்! இது விவோ நிறுவனத்தின் ஒய் சீரீஸின் (Y Series) கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். இதன் மாடல் பெயர் – விவோ ஒய்02 (Vivo Y02).

சமீபத்தில் உலகின் மிகச்சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்களில் ஒன்றான எக்ஸ்90 ப்ரோ பிளஸ் (X90 Pro Plus) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தே அதே விவோ நிறுவனம் தான் தற்போது இப்படி ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. டிஸ்பிளேவின் மேல் புறத்தில் – வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச், ரியர் கேமரா செட்டப்பில் ரவுண்ட் கேமரா ஐலேண்ட் என இதன் வடிவமைப்பிற்கும் விலைக்கும் ஏணி வைத்தாலும் கூட எட்டாது என்றே கூறலாம்!

டிஸ்பிளே

டூயல் சிம் ஆதரவை கொண்டுள்ள Vivo Y02 ஸ்மார்ட்போன் ஆனது 6.51 அங்குல அளவிலான ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை பேக் செய்கிறது. இந்த டிஸ்ப்ளே 720×1600 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 20:9 என்கிற ஆஸ்பெக்ட் ரேஷியோவை வழங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை, முன்பக்கத்தில் ஒரு 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. பின்பக்கத்தில், ஒரு 8 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. அது வட்ட வடிவிலான ஒரு கேமரா ஐலேண்டில் உட்பொதிக்கப்பட்டுள்ளது மற்றும் அதில் எல்இடி ப்ளாஷ் ஒன்றும் அடங்கும்!

ப்ராசஸர், ரேம் & ஸ்டோரேஜ்

விவோ Y02 ஆனது 2ஜிபி மற்றும் 3ஜிபி என்கிற இரண்டு ரேம் ஆப்ஷன்களின் கீழ் 32ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டு இருக்கிறது. மேலும் கூடுதல் ஸ்டோரேஜிற்காக இதில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஒன்றும் உள்ளது. தற்போது வரையிலாக, விவோ ஒய்02 ஸ்மார்ட்போனில் இருப்பது ஒரு ஆக்டா-கோர் ப்ராசஸர் என்பது மட்டுமே தெரிய வருகிறது. ஏனென்றால், விவோ நிறுவனம் இந்த சிப்செட்டின் பெயரை அதன் அதிகாரப்பூர்வ பட்டியலில் குறிப்பிடப்படவில்லை!

பேட்டரி

விவோ ஒய்02 ஸ்மார்ட்போனில் மைக்ரோ யுஎஸ்பி 2.0 போர்ட்டை பயன்படுத்தி 10W சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது. ரூ.8000 க்குள் வாங்க கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி இருப்பது உண்மையிலேயே மற்ற எல்லா குறைகளையும் காணாமல் அடிக்கச்செய்யும் ஒரு அம்சம் ஆகும்!

அம்சங்கள்

மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது Android 12 (கோ எடிஷன்) கொண்டு இயங்குகிறது, அதாவது Gmail Go, YouTube Go மற்றும் Maps Go போன்ற ஆப்களின் தொகுப்பை நீங்கள் பெறுவீர்கள். கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, இது 4G VoLTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவைகளைக் கொண்டுள்ளது. இந்த போனில் ஃபிங்கர் ஃபிரிண்ட் ஸ்கேனர் இல்லை, ஆனால் ஃபேஸ் அன்லாக் அம்சம் உள்ளது!

அறிமுகம்

ஆர்க்கிட் ப்ளூ மற்றும் காஸ்மிக் கிரே என்கிற 2 கலர் ஆப்ஷன்களில், இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவோ ஒய்02 ஸ்மார்ட்போன் ஆனது எப்போது இந்தியாவிற்கு வரும் என்கிற சரியான விவரஙகள் இல்லை. இருப்பினும் பட்ஜெட் விலை போன்களுக்கான தேவை இங்கே அதிகமாக இருப்பதால், இது எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post ப்ரீமியம் லுக்கில் ஒரு லோ-பட்ஜெட் போன் அதுவும் 5000mAh பேட்டரியோடு! first appeared on .

]]>
விரைவில் வெளியாகிறது விவோவின் பட்ஜெட் போன். https://www.91mobiles.com/tamil/vivo-may-soon-launch-new-vivo-y02-smartphone-under-rs-9000-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vivo-may-soon-launch-new-vivo-y02-smartphone-under-rs-9000-in-india Tue, 15 Nov 2022 05:26:23 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3618 விவோ நிறுவனம் X90 தொடரை சீனாவில் வெளியிட இருக்கிறது. இந்த சீரிஸில் மூன்று பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் Vivo X90, Vivo X90 Pro மற்றும் Vivo X90 Pro+ 5G போன்ற மாடல்கள் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக விவோ ஃபிளாக்ஷிப்கள் பற்றிய கூடுதல் விவரங்களை புதிய லீக் தகவல்கள் வெளியிட துவங்கியுள்ளன. இந்நிலையில் விவோ நிறுவனம் மற்றொரு புதிய Vivo ஸ்மார்ட்போன் மாடலை மிகவும் மலிவான விலையில் அறிமுகம் […]

The post விரைவில் வெளியாகிறது விவோவின் பட்ஜெட் போன். first appeared on .

]]>

விவோ நிறுவனம் X90 தொடரை சீனாவில் வெளியிட இருக்கிறது. இந்த சீரிஸில் மூன்று பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் Vivo X90, Vivo X90 Pro மற்றும் Vivo X90 Pro+ 5G போன்ற மாடல்கள் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக விவோ ஃபிளாக்ஷிப்கள் பற்றிய கூடுதல் விவரங்களை புதிய லீக் தகவல்கள் வெளியிட துவங்கியுள்ளன.
இந்நிலையில் விவோ நிறுவனம் மற்றொரு புதிய Vivo ஸ்மார்ட்போன் மாடலை மிகவும் மலிவான விலையில் அறிமுகம் செய்யுமென்று மற்றொரு வதந்தியும் பரவத் துவங்கியுள்ளது. இது பற்றிய விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. விவோ தனது Y சீரிஸ் வரிசையில் புதிதாக ஒரு மொபைலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கிறது என்று ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது.

Vivo Y02

Vivo நிறுவனம் இந்த புதிய மலிவு விலை ஸ்மார்ட்போனை Vivo Y02 என்ற பெயரில் அறிமுகம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விவோவின் மிகவும் மலிவான ஸ்மார்ட்போன் மாடலாக இந்த புதிய விவோ Y02 இருக்கும் என்று தெரிகிறது. இது விவோவின் Y01 மாடலின் அப்டேட்டாக வெளிவருகிறது.

முக்கிய தகவல்!

இது குறிப்பிட்ட நாடுகளில் வரும் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்திற்கு முன்னதாக Vivo Y02 ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

சிறப்பம்சம்

இந்த போன் V2217 என்ற மாடல் எண் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் வரவிருக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளை டிப்ஸ்டர் பராஸ் குக்லானி வெளியிட்டுள்ளார்.

ஸ்டோரேஜ் & சிப்செட்

விவோவின் இந்த மலிவு விலை Y02 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்டை நாம் எதிர்பார்க்கலாம். குறைந்தது இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், இதன் ஸ்டோரேஜ் குறைந்தபட்சம் 32 ஜிபி இன்டெர்னல் உடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக ஸ்டோரேஜை விரிவாக்கத்திற்கான ஆதரவும் இருக்கும்.

கேமரா

Vivo மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி அல்லது 512 ஜிபி வரை எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்புறத்தில், சிங்கிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இது ஒற்றை 8MP பின்புற கேமரா சென்சார் உடன் LED ஃபிளாஷ் உடன் வரும். முன்பக்கத்தில் இது 5MP சென்சார் உடன் வரும்.

அம்சங்கள்

இந்த மலிவு விலை போன் 5000mAh பேட்டரியை கொண்டு இருக்கும். இது 5W அல்லது 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கலாம். விவோவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் 6.51 அங்குல ஹாலோ ஃபுல்வியூ ஐபிஎஸ் எல்சிடியைக் கொண்டிருக்கும். இது 1600 x 720 பிக்சல்கள் HD+ அடர்த்தியுடன் வரலாம். இந்த Y02 ஸ்மார்ட்போன் இரட்டை சிம் ஸ்லாட்டைக் கொண்டிருக்கும்.

விலை

இறுதியாக, ஃபோன் Funtouch OS 12 உடன் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கும். விவோ இந்த போனை ரூ. 8,449 என்ற விலைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று டிப்ஸ்டர் கூறுகிறார். இந்த சாதனம் வரும் வாரங்களில் இந்தியாவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதன் சரியான அறிமுக தேதி இன்னும் தெளிவாகக் கிடைக்கவில்லை.

The post விரைவில் வெளியாகிறது விவோவின் பட்ஜெட் போன். first appeared on .

]]>