xiaomi 12T Pro https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 03:06:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஷாவ்மி 12T ப்ரோ டேனியல் ஆர்ஷம் எடிஷன் விற்பனை தேதி அறிவிப்பு! https://www.91mobiles.com/tamil/xiaomi-12t-pro-daniel-arsham-edition-pre-order-and-sales-date-announced-to-go-live-from-december-5/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=xiaomi-12t-pro-daniel-arsham-edition-pre-order-and-sales-date-announced-to-go-live-from-december-5 Fri, 25 Nov 2022 09:43:31 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3908 ஷாவ்மி 12T ப்ரோ டேனியல் ஆர்ஷம் எடிஷன் (Xiaomi 12T Pro Daniel Arsham Edition) என்ற பெயரில் ஒரு சிக்னேச்சர் சிற்ப வடிவமைப்புடன் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. Xiaomi இன்று அந்த ஸ்பெஷல் எடிஷன் மொபைலை புகைப்படங்களுடன் வெளியிட்டு, உலக ஸ்மார்ட்போன் ரசிகர்களை டீஸ் செய்துள்ளது. Special Edition இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் (Xiaomi Special Edition Smartphone) ஆனது, இதற்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஷாவ்மி இன் ஸ்பெஷல் எடிஷன் […]

The post ஷாவ்மி 12T ப்ரோ டேனியல் ஆர்ஷம் எடிஷன் விற்பனை தேதி அறிவிப்பு! first appeared on .

]]>

ஷாவ்மி 12T ப்ரோ டேனியல் ஆர்ஷம் எடிஷன் (Xiaomi 12T Pro Daniel Arsham Edition) என்ற பெயரில் ஒரு சிக்னேச்சர் சிற்ப வடிவமைப்புடன் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. Xiaomi இன்று அந்த ஸ்பெஷல் எடிஷன் மொபைலை புகைப்படங்களுடன் வெளியிட்டு, உலக ஸ்மார்ட்போன் ரசிகர்களை டீஸ் செய்துள்ளது.

Special Edition

இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் (Xiaomi Special Edition Smartphone) ஆனது, இதற்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஷாவ்மி இன் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை போலவே, இதுவும் ஸ்பெஷலி மேட் ஸ்மார்ட்போன் பாகங்களுடன், பேக்கேஜிங் முதல் சார்ஜ்ர் ஹெட் வரை எல்லாமே தனித்தனியாகச் சிறப்புக் கவனத்துடன், கலை நுணுக்கங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே இதன் தோற்றம் கண்களைக் கவர்கிறது.

2000 மட்டுமே!

இந்த புதிய Xiaomi 12T Pro Daniel Arsham Edition போனின் யூசர் இன்டெர்பெஸ் கூட பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் (Xiaomi 12T Pro Daniel Arsham Edition) மாடல் உலகளவில் வெறும் 2,000 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்குமென்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் Xiaomi 12T Pro Daniel Arsham Edition ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் ஷாவ்மி ரசிகர்கள் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் ப்ரீ புக்கிங் செய்துகொள்ளலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அதான் பாஸ், விற்பனைக்கு முன்பாகவே நீங்கள் முன்பதிவு செய்து, உங்களுக்கான Xiaomi 12T Pro Daniel Arsham Edition யூனிட்டை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

உருவாக்கியவர் யார்

Xiaomi 12T Pro Daniel Arsham Edition என்ற பெயர் குறிப்பிடுவது போல, புதிய Xiaomi 12T ப்ரோ மாடல் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த சமகால கலைஞரான டேனியல் அர்ஷாம் உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்ஷம் அவரது படிகப்படுத்தப்பட்ட போகிமொன் (Pokémon) சிற்பங்களிலிருந்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடன் ஷாவ்மி நிறுவனம் கூட்டு சேர்த்து தான் இந்த புதிய Xiaomi 12T Pro Daniel Arsham Edition மாடலை உருவாக்கியுள்ளது. இது “செயல்பாட்டு பொருளாக வெளியில் ஒரு நோக்கத்துடன் கூடிய சிற்பமாக” வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனம் வெண்கலப் படிகங்களுடன், பச்சை நிறப் படிகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கு பிறகு

Xiaomi 12T Pro Daniel Arsham Edition போனில் உள்ள படிகங்கள் துருத்திக் கொள்ளாவிட்டாலும், இதன் பூச்சு மற்றும் பாட்டினாவின் பாகங்களில் அச்சிடப்பட்ட ரத்தினங்கள் அவற்றை மிகவும் உறுதியானதாகக் காட்டுகின்றது. 20 ஆண்டுகளில், இந்த ஃபோனை வைத்திருப்பவர்கள் இதை ஒரு ஸ்மார்ட்போனாக பயன்படுத்துகிறாரோ இல்லையோ.! கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட தருணத்திற்கு பிறகு, அதன் செயல்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு சிற்பப் பொருளாகவோ அல்லது இதை ஒரு கலை பொக்கிஷமாகவோ பயன்படுத்துவார்கள் என்று கலைஞர் டேனியல் கூறுகிறார். சிற்ப கலைஞரால் உருவாக்கப்பட்டதனால் இதை சிற்பமாக வைத்து அழகு பார்க்கவும் வாய்ப்புள்ளது என்கிறார் டேனியல்.

இந்த Xiaomi 12T Pro Daniel Arsham Edition போனின் UI ஐயும் நிறுவனம் தனிப்பயனாக்கியுள்ளது. இது ஒரு கண்டெம்ப்ரரி தோற்றத்தை அளிக்கிறது. இந்த Xiaomi 12T Pro Daniel Arsham Edition ஸ்மார்ட்ஃபோனில் தனிப்பயனாக்கப்பட்ட கைரோஸ்கோபிக் வால்பேப்பர் கூட வழங்கப்பட்டுள்ளது. இது அர்ஷமின் தீம் ஆப் ஏரோஷன் (Arsham’s theme of erosion) என்று கூறப்படுகிறது. 3D விளைவுகளுடன் இந்த வால்பேப்பர் மெதுவாக மாறுகிறது.

விலை என்ன

Xiaomi 12T Pro Daniel Arsham பதிப்பின் விலை சுமார் $ 932 டாலர்களாகும். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ. 76107 என்ற விலையை நெருங்குகிறது. டிசம்பர் 5 முதல் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கும். இது டிசம்பர் 16 முதல் விற்பனைக்கு வரும்.

எங்கு கிடைக்கும்?

இந்த ஸ்பெஷல் எடிஷன் போன் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயினில் மட்டுமே விற்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். ஆனால், ஆர்வமுள்ள வாசகர்கள் Mi.com இலிருந்து சாதனத்தை வாங்க முடியும். உங்களுக்கு தெரிந்த நபர் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் ட்ரிக்ஸ்களை வைத்து முயற்சி செய்யலாம்.

The post ஷாவ்மி 12T ப்ரோ டேனியல் ஆர்ஷம் எடிஷன் விற்பனை தேதி அறிவிப்பு! first appeared on .

]]>
200MP கேமரா மொபைலை வெளியிடுகிறதா ஷாவ்மி! https://www.91mobiles.com/tamil/xiaomi-12t-pro-specifications-spotted-on-google-play-console-before-launch/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=xiaomi-12t-pro-specifications-spotted-on-google-play-console-before-launch Wed, 24 Aug 2022 11:37:56 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1799 ஷாவ்மி நிறுவனத்திடம் இருந்து அடுத்து Xiaomi 12T Pro என்ற ஸ்மார்ட்போன் வர இருக்கிறது. ஷாவ்மி ரசிகர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் பிரியர்களின் கவனத்தை இந்த ஸ்மார்ட்போன் அதிகம் ஈர்த்துள்ளது. காரணம், இது பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, இதில் 200MP கேமரா எதிர்பார்க்கப்படுகிறது. Xiaomi 12T Pro-வில் என்ன ஸ்பெஷல் இப்போது இந்த புதிய Xiaomi 12T Pro ஸ்மார்ட்போனில் என்னென்ன ஸ்பெஷல் என்று பார்க்கலாம். சமீபத்தில் Xiaomi 12T Pro ஸ்மார்ட்போனானது Google […]

The post 200MP கேமரா மொபைலை வெளியிடுகிறதா ஷாவ்மி! first appeared on .

]]>

ஷாவ்மி நிறுவனத்திடம் இருந்து அடுத்து Xiaomi 12T Pro என்ற ஸ்மார்ட்போன் வர இருக்கிறது. ஷாவ்மி ரசிகர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் பிரியர்களின் கவனத்தை இந்த ஸ்மார்ட்போன் அதிகம் ஈர்த்துள்ளது. காரணம், இது பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, இதில் 200MP கேமரா எதிர்பார்க்கப்படுகிறது.

Xiaomi 12T Pro-வில் என்ன ஸ்பெஷல்

இப்போது இந்த புதிய Xiaomi 12T Pro ஸ்மார்ட்போனில் என்னென்ன ஸ்பெஷல் என்று பார்க்கலாம். சமீபத்தில் Xiaomi 12T Pro ஸ்மார்ட்போனானது Google Play Console வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. இதில், இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஷாவ்மி 12T ப்ரோ போன் இதற்கு முன்பு FCC சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டது.

இது ரீபிராண்டட் மாடலா?

அதேபோல், Xioami 12T Pro போனின் புகைப்படம் டிசைன் விபரங்கள் மற்றும் கேமரா விபரங்கள் கூட இணையத்தில் லீக் ஆனது. மற்றொரு லீக் தகவலில் Xiaomi 12T Pro இன் ஹார்டுவேர் விபரங்கள் கூட வெளியானது. ஷாவ்மி 12T ப்ரோவின் இந்த கசிந்த விபரங்களை வைத்து பார்த்தால், இது இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi K50 Ultra இன் ரீபிராண்டட் பதிப்பாக தெரிகிறது.

கூகிள் பட்டியலில் டிட்டிங் (diting) கோட்நேம்

ஷாவ்மி 12டி ப்ரோவின் கூகுள் பிளே கன்சோல் பட்டியல் விபரங்கள் அதன் வெளியீட்டு நிகழ்வு மிக விரைவில் நடக்கக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. சரி, இந்த அட்டகாசமான Xiaomi 12T Pro ஸ்மார்ட்போனில் இருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்? Xiaomi 12T Pro இந்த கூகிள் பட்டியலில் டிட்டிங் (diting) என்ற கோட்நேம் பெயருடன் பதிவிடப்பட்டுள்ளதை நம்மால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

சிப்செட்

இதே கோட்நேம் பெயரை ஷாவ்மி இதற்கு முன்பு ரெட்மி கே50 அல்ட்ராவில் பயன்படுத்தியிருந்தது கவனிக்கத்தக்கது. Xiaomi 12T Pro டிவைஸ் 12ஜிபி ரேம் உடன் பட்டியலில் காணப்பட்டுள்ளது. இது லேட்டஸ்ட் Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் உடன் Adreno 730 GPU உடன் வருமென்று பட்டியல் குறிப்பிடுகிறது. Xiaomi 12T Pro சாதனம் ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆப் தி பாக்ஸில் வரும். இது 1220×2712 பிக்சல் மற்றும் 480 டென்சிட்டி கொண்ட டிஸ்பிளேவுடன் காணப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

ஷாவ்மி 12டி ப்ரோ உண்மையில் ரெட்மி கே50 அல்ட்ராவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாக இருந்தால், அது ஒரே மாதிரியான சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 120Hz ஆதரிக்கும் 6.67 அங்குல AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 120W பாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கூடிய 5,000mAh பேட்டரியையும் கொண்டு இருக்கிறது.

கேமரா

கேமராவைப் பற்றி பார்க்கையில், இந்த போன் 200MP அல்லது 108MP பிரைமரி கேமரா சென்சார், 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ ஷூட்டர் உடைய ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. முன்பக்கத்தில் 20MP அல்லது 30MP செல்ஃபி கேமரா எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.39,000 என்ற விலையில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.

The post 200MP கேமரா மொபைலை வெளியிடுகிறதா ஷாவ்மி! first appeared on .

]]>