140 கிமீ மைலேஜ் தரும் டாடா மேஜிக் எலக்ட்ரிக் வெர்ஷனை வெளியிட்டது டாடா!

Highlights

  • 140 கிமீ மைலேஜ் தரும் டாடா மேஜிக் எலக்ட்ரிக் வெர்ஷனை வெளியிட்டது டாடா!
  • ஒரே நேரத்தில் பத்து பேர் வரை அமர்ந்து பயணிக்கும் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் வாகனத்தை டாடா மோட்டார்ஸ் வெளியீடு செய்திருக்கிறது.
  • ஏஸ் இவி-யை தழுவியே இந்த வாகனத்தை டாடா உருவாக்கி இருக்கின்றது. இதற்கு நிறுவனம் மேஜிக் இவி எனும் பெயரை வைத்திருக்கின்றது.

 

டாடா மோட்டார்ஸ் செம்ம சூப்பரான 10 சீட்டர் எலெக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போவிலேயே இந்த 10 சீட்டர் மின்சார வாகனத்தை டாடா மோட்டார்ஸ் வெளியீடு செய்திருக்கின்றது. நிறுவனத்தின் பிரபல வாகனமான ஏஸ் இவி-யை தழுவியே இந்த வாகனத்தை டாடா உருவாக்கி இருக்கின்றது. இதற்கு நிறுவனம் மேஜிக் இவி எனும் பெயரை வைத்திருக்கின்றது. இதன் மூலம் 140 கிமீ மைலேஜ் தரும் டாடா மேஜிக் எலக்ட்ரிக் வெர்ஷனை டாடா வெளியிட்டு இருக்கிறது!

 

இவ்-வாகனத்தை பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லுதல், அவசர கால வாகனமான ஆம்புலன்ஸ், ஸ்டோரேஜ் வாகனம் மற்றும் டெலிவரி பார்சல் வாகனம் என இவ்வாறு எந்த வகையில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸின் வெற்றிகரமான வர்த்தக பயன்பாட்டு வசதிக் கொண்ட வாகனமாக டாடா மேஜிக் இருக்கின்றது. இந்த வாகனத்தில் பூஜ்ஜியம் உமிழ்வு திறன் கொண்ட மின்சார வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி இருப்பதாக வர்த்தக வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

 

ஷேர் ஆட்டோ

குறிப்பாக, ஷேர் ஆட்டோ ஓட்டிகள் மத்தியில் இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் வெகு விரைவில் பூஜ்ஜியம் உமிழ்வு மொபிலிட்டிக்கு மாற இருக்கின்றது. அதாவது, மாசை வெளிப்படுத்தும் வாகனங்களின் உற்பத்தியை முழுமையாக நிறுத்திவிட்டு பசுமை இயக்கம் வசதிக் கொண்ட வாகனங்களை மட்டுமே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதை நோக்கிய நிறுவனத்தின் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே மேஜிக் இவி உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

தோற்றம்

இந்த வாகனத்தில் இட வசதி மிக அதிகம் ஆகும். இதன் நீளம் 3,790 mm, அகலம் 1,500 mm, உயரம் 1,870 mm -ஆக இருக்கின்றது. இதன் வீல் பேஸும் சற்று அதிகம் ஆகும். 2,100mm கொண்டதாகவே வீல்பேஸ் இருக்கின்றது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ்160 மிமீ ஆகும். இந்த வாகனத்தில் அட்வான்ஸ்ட் தொழில்நுட்பத்தினாலான பேட்டரி சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

பேட்டரி மற்றும் ரேஞ்ஜ் விபரம்

ஐபி 67 ரேட்டட் வாட்டர் மற்றும் ரஸ்ட் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதிக் கொண்டதாகவும் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பேட்டரி பேக் இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 140 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். டாடா மோட்டார்ஸ் இந்த வாகனத்தை 14-20 kWh பேட்டரி பேக் தேர்வில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

சிறப்பம்சங்கள்

இந்த வாகனம் பற்றிய இன்னும் பல்வேறு முக்கிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. வெகு விரைவில் அதுகுறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், டாடா மேஜிக் இவியில் 7 அங்குல டிஎஃப்டி இன்ஃபோடெயின்மென்ட் திரை, வாய்ஸ் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் பார்க் கேமிரா உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும், இந்த வாகனத்தை முழுமையாக சார்ஜ் 6 மணி முதல் 6.5 மணி நேரங்கள் வரை தேவைப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாஸ்ட் சார்ஜிங்

வழக்கமான சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் இந்த அளவு அதிக நேரத்தை மேஜிக் இவி எடுத்துக் கொள்ளும். அதேவேளையில், ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் ஒன்றரை மணி நேரங்களிலேயே முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியுமாம்.

 

மைலேஜ்

நாட்டிலேயே மின்சாரம், சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் முதல் மின்சார மினி லோடு வாகனம் ஆகும். இந்த வாகனத்தை நிறுவனம் இவோஜென் பிளாட்பாரத்தைக் கொண்டு உருவாக்குகின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் அதிகபட்சமாக 140 கிமீ வரை மைலேஜ் தரும்.

 

விலை

இந்த வாகனத்தை அமேசான், டெல்லிவெரி, டிஎச்எல், ஃபெட்எக்ஸ் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற வர்த்தக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு ஏதுவாக டாடா உருவாக்கி இருக்கிறது. டாடா மோட்டார்ஸின் இந்த ஏஸ் இவி எலெக்ட்ரிக் மினி லோடு வேனின் டெலிவரி பணிகள் தற்போது தொடங்கி விட்டது. இதன் விலை ரூ. 9.9 லட்சம் ஆகும்.

2022ஆம் ஆண்டின் சிறந்த மொபைலைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்!

https://www.indiangadgetawards.com/