Home Featured மொபைலில் இணைய இணைப்பு கிடைக்காமல் போவதற்கானக் காரணங்கள்

மொபைலில் இணைய இணைப்பு கிடைக்காமல் போவதற்கானக் காரணங்கள்

 

பேசுவது தாண்டி, தற்போது வேலை பார்ப்பது, டாக்குமெண்ட்கள் அனுப்புவது, பெறுவது, போட்டோ / வீடியோ அனுப்புவது பெறுவது, தகவல் தேடுவது, குறுஞ்செய்திகள் அனுப்புவது, பெறுவது, சமூக வலைதளங்களை மேய்வது, மேப் உதவியோடு ஒரு இடத்திற்கு செல்வது, பயணம், தியேட்டர், பேருந்து என பலவகையான முன்பதிவுகளைச் செய்வது.. இப்படி தற்போது மொபைலை பலவிதங்களில் உபயோகிப்பது அதிகரித்து இருக்கிறது. இந்த அனைத்து பயன்பாட்டுக்கும் இணைய இணைப்பு தேவை.

மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் நமது திட்டத்திற்குத் தகுந்தபடி இதற்கான டேட்டாவை தருகின்றன. இவை 100MBயில் ஆரம்பித்து பல GB வரை கிடைக்கிறது. ஆனால், சில சமயங்களில் நமது மொபைலின் இணையம் திடீரென இயங்காமல் போகலாம். இதனால் நம்மால் நமது தினசரி வேலைகளை செய்ய முடியாத சூழல் உருவாகும். இப்படி திடீரென நமது மொபைலில் இணைய இணைப்பு கிடைக்காமல் போகக் காரணம் என்ன?அவற்றை எப்படி சரிபார்த்து மீட்டுக் கொண்டு வருவது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

 

மொபைலில் இணைய இணைப்பு கிடைக்காமல் போவதற்கானக் காரணங்கள்

 

மொபைல் இணைப்பு சரிபார்ப்பு

மொபைலில் இணைய பயன்பாட்டிற்கான ஆப்ஷன் ON செய்யப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். அதாவது மொபைலில் ‘Mobile Data’ ON செய்யப்பட்டு இருக்கிறதா என்று பார்க்கவும். ON செய்தும் இணையம் வரவில்லை எனில், ஒருமுறை ‘Flight Mode’க்கு மாற்றிவிட்டு பின் Normal Modeக்கு மாற்றிப் பார்க்கவும்.

 

திட்டத்தின் வேலிடிட்டியை / டேட்டா அளவைச் சரிபார்ப்பது

சில சமயங்களில் நாம் நமது தினசரி டேட்டா அளவை விட அதிகமாக டேட்டைவை பயன்படுத்தி விடுவதால் டேட்டா தீர்ந்து போயிருக்கும். அதை நாம் கவனிக்காமல் விட்டிருப்போம். எனவே அதையும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும். அதேபோல் சிலர் பேசுவதற்கு ஒரு திட்டத்தையும், டேட்டாவுக்கு தனி ரீசார்ஜ் திட்டத்தையும் பயன்படுத்துவார்கள். அத்தகைய சமயங்களில் அந்த டேட்டா பேக் (Date pack) வேலிடிட்டி முடிவடைந்திருப்பதை நாம் கவனிக்காமல் இருப்போம். எனவே அதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

மொபைல் நெட்வொர்க் சரிபார்ப்பு

சில நேரங்களில் மொபைலின் நெட்வொர்க்கிலேயே கோளாறு காரணமாக இணையம் வராமல் இருக்கலாம். இது பெரும்பாலும் சிறிது நேரத்திலேயே சரியாகிவிடும். எனவே சற்று காத்திருக்கவும்.

 

நாம் இருக்கும் இடத்தின் நெட்வொர்க்கை சரிபார்ப்பது

அதேபோல் நாம் சிக்னல் கிடைக்காத அல்லது சரியாகக் கிடைக்காத பகுதியில் இருக்கும்போது இணைய வேகம் மிக குறைவாகவோ அல்லது கிடைக்காமலோ போகும். எனவே நீங்கள் இருப்பது புதிய இடம் என்றால் சற்று இடம் மாறிப் பார்க்கவும்.

 

Wi-Fi இணைப்பு சரிபார்ப்பு

ஒருவேளை நீங்கள் இணையத்தை வை-ஃபை மூலம் பெறுகிறீர்கள் என்றால், மொபைலில் Wi-Fi ON செய்யப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். ON செய்தும் வரவில்லை என்றால், Wi-Fi இணைப்பை பெறும் மோடம் வேலை செய்கிறதா? இணைய இணைப்பை வழங்குகிறதா என்று சரிபார்க்கவும்.

 

மொபைலை சரிபார்ப்பது

இவை எல்லாமே சரியாக இருந்தும் உங்களுக்கு இணையம் கிடைக்கவில்லை என்றால் உங்கள் மொபைலில் ஏதேனும் பிரச்சனை இருக்கலாம். ஒருமுறை மொபைலை ‘Restart’ செய்து பார்க்கவும். அப்போது இணையம் கிடைக்கவில்லையென்றால் மொபைலை நல்ல சர்விஸ் செண்டரில் கொண்டுத்து சரிபார்க்கவும்.