இந்தியாவில் 10 நாட்களுக்கு இலவச வாடிக்கையாளர் சேவை முகாமைத் தொடங்கியது Xiaomi

Highlights

  • கோடைகால வாடிக்கையாளர் சேவை முகாமை Xiaomi  தொடங்கியுள்ளது.
  • இது ஜூன் 1 முதல் ஜூன் 10 வரை நடைபெறும்.
  • இதில் இலவசமாக Xiaomi, Redmi போன்களை பரிசோதனை செய்துகொள்ள முடியும்.

 

Xiaomi இந்தியா நிறுவனம் இந்தியாவில் பத்து நாள் வாடிக்கையாளர் சேவை கோடைக்கால முகாமைத் தொடங்கியுள்ளது. இது ஒரு இலவச சோதனைச் சேவை ஆகும். உங்கள் Xiaomi-Redmi மொபைலில் ஏதேனும் சிக்கல் இருந்தால், இந்த சேவை மையத்தில் எந்தச் செலவும் இல்லாமல் சரிபார்க்கலாம். இது முற்றிலும் இலவசமாக இருக்கும். அதன் விவரங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

xiaomi இலவச தொலைபேசி பரிசோதனை முகாம்

 

  • Xiaomi வாடிக்கையாளர் சேவை கோடைக்கால முகாம் 10 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இது ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி ஜூன் 10 ஆம் தேதி வரை நடைபெறும்.
  • 1000+ Xiaomi அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் இந்த முகாம் நடக்கிறது.
  • இதில், Xiaomi மற்றும் Redmi ஆகிய இரண்டு பிரிவுகளின் ஸ்மார்ட்போன்களையும் இலவசமாக சரிபார்க்கலாம்.

என்னென்ன வசதிகள் இருக்கும்?

 

  • நிறுவனத்தால் 100% இலவச தொலைபேசி பரிசோதனை செய்யப்படுகிறது.
  • பேட்டரி மாற்றுவதற்கான லேபர் கட்டணம் (சர்வீஸ் சார்ஜ்) முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
  • பேட்டரியை மாற்றும் போது 50% தள்ளுபடி கிடைக்கும்.
  • டிஸ்ப்ளே மாற்றுவது மற்றும் பிற சேவைகளுக்கு பணம் செலுத்த வேண்டும். ஆனால் செக்-அப் கட்டணம் இலவசமாகவே இருக்கும்.

 

பயனர்களுக்கு சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்காக நிறுவனத்தின் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.  உங்கள் Xiaomi ஸ்மார்ட்போனில் ஏதேனும் கோளாறு இருந்தால், Xiaomi சேவை மையத்தை நீங்கள் அணுகலாம்.