பட்ஜெட்விலை 5ஜி போனாக உருவாகி வருகிறது லாவா அக்னி 2!

Highlights

  • Lava Aagni 2 5G ஸ்மார்ட்போன் ஒரு தரப்படுத்தல் தளத்தில் தோன்றியதாகத் தெரிகிறது
  • இந்த போன் ஆனது MediaTek Dimensity 1080 சிப்செட் மூலம் 8ஜிபி ரேம் உடன் பட்டியலில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது

Lava Aagni 2 5G!

சமீபத்தில், உலகளவில் உள்ள டெக் பிரியர்களை வியப்பில் ஆழ்த்திய இந்திய நிறுவனம் தான் லாவா (Lava). லாவா நிறுவனம் அறிமுகம் செய்த லாவா அக்னி 5ஜி (Lava Agni 5G) ஸ்மார்ட்போன் மாடலை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட காரணம், இது பட்ஜெட் விலையில் வந்தது என்பதை தாண்டி, சிறந்த அம்சங்களை பேக் செய்து, 5ஜி இணைப்புடன் வெளியாகிறது என்பது தான். புதிய தயாரிப்புகளை வெளியிடுவதில் ஒரு சீரான அலைவரிசையை இந்திய ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆனா லாவா கடைப்பிடிக்கிறது. லாவா நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் Lava Agni 5G என்ற புதிய 5ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நிறுவனம் இப்போது அதன் அடுத்த 5ஜி வாரிசை வெளியிடத் தயாராகி வருகிறது.

தரப்படுத்தல் தளத்தில்..

சில நாட்களுக்கு முன்பு, லாவா அக்னி 2 5ஜி (Lava Aagni 2 5G) என்று அழைக்கப்படும் மொபைலின் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய விவரங்களையும் ஒரு லீக் தகவல் வெளிப்படுத்தியது. இப்போது, ​​​​இந்த புதிய Lava Aagni 2 5G ஸ்மார்ட்போன் ஒரு தரப்படுத்தல் தளத்தில் தோன்றியதாகத் தெரிகிறது. Paras Guglani (@passionategeekz) கூற்று படி, புதிய Lava ஸ்மார்ட்போன் மாடல் எண் LXX504 உடன் கீக்பெஞ்சில் (Geekbench) வந்துள்ளது. இந்த மொபைல் வரவிருக்கும் Lava Agni 2 5G ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

ஆண்ட்ராய்டு 13

சமீபத்திய தகவலின் படி, இந்த புதிய Lava Aagni 2 5G மொபைல் போன் ஆனது MediaTek Dimensity 1080 சிப்செட் மூலம் 8ஜிபி ரேம் உடன் பட்டியலில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இது Android 13 இயங்குதளத்தில் இயங்குமென்பதையும் பட்டியல் காண்பித்ததாகக் கூறப்படுகிறது. Lava Aagni 2 5G ஸ்மார்ட்போனின் சிப்செட் விவரம் முந்தைய லீக் தகவலுடன் பொருந்துகிறது. இருப்பினும், மென்பொருளைப் பற்றி நாம் கேட்பது இதுவே முதல் முறையாகும். Lava Aagni 2 5G ஸ்மார்ட்போன் அதிர்ஷ்டவசமாக, Android இன் சமீபத்திய பதிப்பில் வெளிவர இருக்கிறது என்பது கூடுதல் சிறப்பாகும்.

கேமரா

இந்த மொபைல் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5 அங்குல HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இது 50MP பிரைமரி கேமராவுடன் வரும் என்று கூறப்படுகிறது. இதில் OIS-க்கான ஆதரவு இடம்பெறும் என்று கூறப்படுகிறது. Lava Aagni 2 5G ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16MP ஸ்னாப்பரைப் பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மெமரி

ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 8ஜிபி ரேம் உடன் 128ஜிபி / 256ஜிபி உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இடம்பெறும் என்றும் தெரிகிறது.

 

விலை

Lava Aagni 2 5G ஸ்மார்ட்போன்  5,000mAh பேட்டரியைக் கொண்டு இருக்கும். இந்த பேட்டரி 44W சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. லாவா அக்னி 2 5ஜி மொபைல் வரும் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Lava Aagni 2 5G சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இந்த சாதனம் ரூ.20,000 முதல் ரூ.25,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.