Meta விரைவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் விளம்பரமில்லா கட்டண பதிப்புகளை அறிமுகப்படுத்தலாம்

Highlights
  • EU இல் விளம்பரங்கள் மற்றும் பயனர் தனியுரிமை குறித்து Meta தொடர்ந்து ஆய்வுகளை எதிர்கொள்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் கட்டண பதிப்புகள் மெட்டாவிற்கு மற்றொரு வருவாய் மாதிரியை வழங்க உதவும்.
  • மெட்டாவிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. 

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) உள்ள பயனர்களுக்கு பேஸ்புக் மற்றும்  இன்ஸ்டாகிராமின் கட்டண பதிப்புகளை வழங்க Meta பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இரண்டின் கட்டணப் பதிப்பு விளம்பரம் இல்லாத பதிப்பாக இருக்கும். பயனர் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக அதிகாரிகள் சட்டங்களை கடுமையாக்குவதால், ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போது  Meta எதிர்கொள்ளும் விளம்பரம் மற்றும் தனியுரிமைச் சிக்கல்களில் இருந்து விடுபட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டண Instagram, Facebook

இது தொடங்கப்பட்டால், இது Facebook மற்றும் Instagram ஆகிய இரண்டிற்கும் முதல் முறையாக இருக்கும், ஏனெனில் இரண்டு ‘ஆப்’களையும் தற்போது இலவசமாக பயன்படுத்தலாம். சந்தா எதுவும் தேவையில்லை. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் கட்டண பதிப்புகள் மூலம், பயனர்கள் விளம்பரமில்லா அனுபவத்தைப் பெறுவார்கள் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மற்ற இடங்களில் வழக்கம்போல பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை விளம்பரங்களுடன் தொடர்ந்து வழங்கும்.

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தோன்றும் இலக்கு விளம்பரங்கள் குறித்த கவலைகளுடன் மெட்டா பல ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் முரண்பட்டுள்ளது. இந்த விளம்பரங்கள் பயனரின் ப்ரெளசிங் ஹிஸ்ட்ரி மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் காட்டப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களுக்கும் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. பயனரின் தனிப்பட்ட தகவலின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்டாமல் இருக்க, அத்தகைய தளங்களைத் தடைசெய்வதன் மூலம் விளம்பரங்கள் மீது இன்னும் கடுமையான கட்டுப்பாட்டை இது உறுதி செய்கிறது. ஃபேஸ்புக் டிஜிட்டல் சேவைகள் சட்டத்திற்கு இணங்க எவ்வாறு செயல்படுகிறது என்பதை விவரிக்கும் ஒரு வலைப்பதிவு இடுகையை வெளியிட்டது. ஆனால் இவை அனைத்தும் மெட்டாவிற்கு கூடுதல் வேலை ஆகும். மேலும் விளம்பர வருவாயை இழப்பது தொழில்நுட்ப நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் கட்டண பதிப்புகளுடன், இது மெட்டாவிற்கு மற்றொரு வருவாய் மாதிரியாக இருக்கலாம். இரண்டு செயலிகளிலும் விளம்பரங்கள் எல்லா இடங்களிலும் எவ்வாறு வீசப்படுகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு பயனருக்கும் விளம்பரமில்லாத அனுபவம் சிறந்ததாக இருக்கும். இந்த ஆப்ஸின் கட்டணப் பதிப்புகளை மெட்டா எப்போது தொடங்கும் என்பது பற்றித் தெரியவில்லை. மேலும், சந்தா விலை பற்றியும் அறிவிக்கவில்லை.