infinix note 12 pro https://www.91mobiles.com/tamil Thu, 01 Sep 2022 13:57:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 விற்பனைக்கு வந்தது இன்ஃபினிக்ஸ் நோட் 12 ப்ரோ https://www.91mobiles.com/tamil/infinix-note-12-pro-budget-price-smartphone-go-for-first-sale-today/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=infinix-note-12-pro-budget-price-smartphone-go-for-first-sale-today Thu, 01 Sep 2022 12:01:10 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1981 Infinix நிறுவனம் கடந்த வாரம், Infinix Note 12 Pro என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய Infinix Note 12 Pro ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கும் வந்து இருக்கிறது. சலுகை இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ பிரத்தியேகமாக பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்குவந்து இருக்கிறது. அறிமுகச் சலுகையாக கேஷ் ஆன் டெலிவரி கொடுக்காமல், நேரடியாக ப்ரீபெய்டு பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது ரூ. 1,500 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. கூடுதலாக, Flipkart Plus […]

The post விற்பனைக்கு வந்தது இன்ஃபினிக்ஸ் நோட் 12 ப்ரோ first appeared on .

]]>

Infinix நிறுவனம் கடந்த வாரம், Infinix Note 12 Pro என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய Infinix Note 12 Pro ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கும் வந்து இருக்கிறது.

சலுகை

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ பிரத்தியேகமாக பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்குவந்து இருக்கிறது. அறிமுகச் சலுகையாக கேஷ் ஆன் டெலிவரி கொடுக்காமல், நேரடியாக ப்ரீபெய்டு பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது ரூ. 1,500 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. கூடுதலாக, Flipkart Plus உறுப்பினர்கள் SuperCoins உடன் 500 ரூபாய் தள்ளுபடியைப் பெறவும் வாய்ப்புள்ளது.

விலை

Infinix Note 12 Pro இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த புதிய இன்ஃபினிக்ஸ் நோட் 12 ப்ரோ ஒற்றை வேரியண்ட் மாடலாக மட்டுமே வருகிறது. இது 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.16,999 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுகச் சலுகையைப் பயன்படுத்தும் போது உங்களுக்கு இதன் விலை இன்னும் கணிசமாகக் குறைய அதிக வாய்ப்புள்ளது.

சிறப்பம்சம்

இந்த டிவைஸ் 6.7 அங்குலம் கொண்ட முழு HD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 180Hz டச் சாம்பிளிங் உடன் 100% DCI-P3 அம்சத்துடன் 1000nits வரை பிரைட்னஸ் உடன் வாட்டர் டிராப் நாட்ச் அம்சத்தில் வெளிவருகிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 லேயர் மூலம் பாதுகாக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் உடன் மாலி ஜி57 ஜிபியூவுடன் வருகிறது.

கேமரா

முன்பே சொன்னது போல், இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த சாதனம் 5ஜிபி வரை விர்ச்சுவல் ரேமையும் ஆதரிக்கிறது. இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான XOS 10.6 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது ஒரு பட்ஜெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் சாதனம் என்றாலும் கூட, இதில் 108MP பிரைமரி சென்சார், 2MP டெப்த் சென்சார், AI லென்ஸ் மற்றும் குவாட்-எல்இடி ஃபிளாஷ் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி போட்டோ எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் 16MP ஷூட்டர் பிரண்ட் டூயல் எல்இடி ஃபிளாஷ் உடன் வருகிறது.

வசதிகள்

கூடவே இந்த ஸ்மார்ட்போனில் 5,000mah பேட்டரியும் அதனை சார்ஜ் செய்யக்கூடிய 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இந்த சாதனம் Tuscany Blue, Alpine White மற்றும் Volcanic Gray வண்ண விருப்பங்களில் வருகிறது. இது டூயல் சிம், 4ஜி, வைஃபை 802.11 ஏ/பி/ஜி/என்/ஏசி, புளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ் மற்றும் க்ளோனாஸ் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

இந்த Infinix Note 12 Pro ஸ்மார்ட்போன் Redmi Note 11S, Realme 9 மற்றும் Moto Edge 20 Fusion போன்றவற்றுக்கு எதிராகப் போட்டியிடும் திறனைக் கொண்டிருக்கிறது. இது தவிர செப்டம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள POCO M5 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நிகரான அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. உண்மையைச் சொல்லப் போனால் Infinix Note 12 Pro பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒரு சிறந்த போன் என்பதில் சந்தேகமில்லை.

The post விற்பனைக்கு வந்தது இன்ஃபினிக்ஸ் நோட் 12 ப்ரோ first appeared on .

]]>
ஹீலியோ ஜி99 பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் https://www.91mobiles.com/tamil/infinix-note-12-pro-with-helio-g99-processor-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=infinix-note-12-pro-with-helio-g99-processor-launched-in-india Wed, 31 Aug 2022 07:01:32 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1939 இன்பினிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இண்டர்னல் மெமரி கொண்டிருக்கிறது. இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.7 அங்குல FHD+AMOLED ஸ்கிரீன், யு வடிவ நாட்ச், 16MP செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி99 4ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ஹீலியோ ஜி99 […]

The post ஹீலியோ ஜி99 பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் first appeared on .

]]>

  • இன்பினிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இண்டர்னல் மெமரி கொண்டிருக்கிறது.

இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.7 அங்குல FHD+AMOLED ஸ்கிரீன், யு வடிவ நாட்ச், 16MP செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி99 4ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ஹீலியோ ஜி99 பிராசஸருடன் அறிமுகமாகி இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் நோட் 12 ப்ரோ 4ஜி ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, கூடுதலாக 5ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், DTS ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5000 mAh பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ மொபைல் போனில் பலவிதமான அம்சங்கள் உள்ளன. 6.7 அங்குல 2400×1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன் உள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் பாதுகாக்கப்படுகிறது, இந்த போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் Arm மாலி-G57 MC2 உடன் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் இந்த ப்ராஸசரை பயன்படுத்தும் முதல் மொபைல் போன் இதுவாகும். 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்புத்திறனைக் கொண்டு இருக்கிறது. சேமிப்புத் திறனை அதிகரித்துக் கொள்ள micro SD வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் இரட்டை சிம் ஸ்லாட் வசதி உள்ளது. இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 12 மேல் எக்ஸ் ஒஎஸ் 10.6 வழங்கப்பட்டு இருக்கிறது. கேமராவைப் பொருத்தவரை, பின்பக்கத்தில் 108MP பிரைமரி கேமரா, f/1.75, குவாட் எல்இடி பிளாஷ் 2MP டெப்த் சென்சாரும் வழங்கப் பட்டு இருக்கிறது. முன்பக்கத்தில் வீடியோ கால் பேசவும். புகைப்படம் எடுக்கவும் AI லென்ஸ் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதோடு, டூயல் எல்இடி பிளாஷ் பக்கவாட்டில் கைரேகை சென்சார் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்ற வசதிகள் இருக்கின்றன. கூடுதலாக இந்த இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 mAh பேட்டரி 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் உள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆல்பைன் வைட், வொல்கானிக் கிரே மற்றும் டஸ்கனி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 1 ஆம் தேதி (நாளை) துவங்குகிறது. அறிமுக சலுகையாக ரூ. 1500 வரை தள்ளுபடி மற்றும் 500 சூப்பர் காயின்கள் போன்றவை வழங்கப்படுகிறது.

The post ஹீலியோ ஜி99 பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் first appeared on .

]]>
ஆகஸ்ட் 26ல் அறிமுகமாகிறது Infinix Note 12 Pro 4G https://www.91mobiles.com/tamil/infinix-note-12-pro-4g-with-helio-g99-to-launch-on-august-26/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=infinix-note-12-pro-4g-with-helio-g99-to-launch-on-august-26 Tue, 23 Aug 2022 15:36:00 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1786 இன்பினிக்ஸ் நிறுவனம், Infinix Note 12 Pro 4G என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை, ஆகஸ்ட் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யுமென்று அறிவித்து இருக்கிறது. இன்பினிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே இதே மோனிகருடன் ஒரு புதிய 5G போனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 5ஜி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Flipkart பட்டியலின்படி, Infinix Note 12 Pro 4G ஆனது ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்தியாவில் […]

The post ஆகஸ்ட் 26ல் அறிமுகமாகிறது Infinix Note 12 Pro 4G first appeared on .

]]>

இன்பினிக்ஸ் நிறுவனம், Infinix Note 12 Pro 4G என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை, ஆகஸ்ட் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யுமென்று அறிவித்து இருக்கிறது. இன்பினிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே இதே மோனிகருடன் ஒரு புதிய 5G போனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 5ஜி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Flipkart பட்டியலின்படி, Infinix Note 12 Pro 4G ஆனது ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இது 6nm செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்ட மற்றும் அதிகபட்ச கிளாக் ஸ்பீட் கொண்ட Helio G99 சிப்செட் உடன் வெளிவரும் முதல் ஸ்மார்ட்போன் இது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் Note 12 Pro 5G ஆனது MediaTek Dimensity 810 5G சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டது

Infinix Note 12 Pro 4G சிறப்பம்சம்

Flipkart பட்டியல் வரவிருக்கும் இந்த புதிய Infinix போனின் சில சிறப்பம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது. Infinix Note 12 Pro 4G ஸ்மார்ட்போன் ஆனது FHD+ தெளிவுத்திறனுடன் கொண்ட 6.7 அங்குல AMOLED டிஸ்பிளேவை கொண்டு இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 60Hz ரெஃபிரஷ் ரேட் உடன் இந்த டிஸ்பிளே வருகிறது. இது வாட்டர் ட்ராப் நாட்ச் உடன் வெளிவரும் என்பதை பிளிப்கார்ட் பட்டியல் காண்பிக்கிறது. ஸ்டோரேஜ் விபரம் ஸ்டோரேஜ் விபரம் MediaTek Helio G99 சிப்செட் 8GB LPDDR4x ரேம் மற்றும் 128GB UFS 2.2 சேமிப்பகத்துடன் இணைக்கப்படும். இது எக்ஸ்பெண்டபிள் ரேம் வசதியைக் கொண்டு இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இது பயனர்களை 5 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜை virtual ரேமாகப் பயன்படுத்த அனுமதிக்கும். மேலும், கிராஃபிக்ஸிற்கான திறமையான ஆர்ம் மாலி ஜி57 ஜிபியுவை இந்த போன் கொண்டிருக்கும் என்று பட்டியல் காண்பிக்கிறது.

கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் f/1.75 அபெர்ச்சர் லென்ஸுடன் 108 எம்பி ப்ரைமரி சென்சார் உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இது 2MP டெப்த் லென்ஸ் மற்றும் பின்புறத்தில் AI லென்ஸைப் பெறும். இந்த ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமராவும் இருக்கிறது. Infinix இன் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

விலை?

இது ஆண்ட்ராய்டு 12 இல் XOS 10.6 ஸ்கின் மூலம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Infinix Note 12 Pro 5G இந்தியாவில் ரூ.17,999 ஆரம்ப விலையுடன் வருகிறது. இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 12 4G மாடல் இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இதன் விலை தோராயமாக ரூ.15,000 என்ற விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்பைன் ஒயிட், டஸ்கனி ப்ளூ மற்றும் வோல்கானிக் கிரே ஆகிய நிறங்களில் இந்த போன் வரும் எனத் தெரிகிறது

The post ஆகஸ்ட் 26ல் அறிமுகமாகிறது Infinix Note 12 Pro 4G first appeared on .

]]>
108MP கேமராவுடன் விற்பனைக்கு வருகிறது இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4G https://www.91mobiles.com/tamil/infinix-note-12-pro-4g-phone-to-launch-in-india-on-august-26/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=infinix-note-12-pro-4g-phone-to-launch-in-india-on-august-26 Mon, 22 Aug 2022 10:45:46 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1737 ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விலை? இணையத்தில் வெளியான தகவலின்படி இந்த இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் 12,000 ரூபாயில் இருந்து 13,000 ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம். டிஸ்பிளே இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி […]

The post 108MP கேமராவுடன் விற்பனைக்கு வருகிறது இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4G first appeared on .

]]>

ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை?

இணையத்தில் வெளியான தகவலின்படி இந்த இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் 12,000 ரூபாயில் இருந்து 13,000 ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

டிஸ்பிளே

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் 6.7-அங்குல Full HD Plus AMOLED டிஸ்பிளே உள்ளது. 2400 x 1080 பிக்சல்ஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், பாதுகாப்புக்கு கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 20:9 ரேஷியோ போன்ற பல அசத்தலான அம்சங்களுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ரேம் வசதி

அதேபோல் இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்புத்திறனையும் கொண்டு இருக்கிறது. இந்த மொபைலின் சேமிப்புத்திறனை இன்னும் அதிகரித்துக்கொள்ள ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

கேமரா

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 108 மெகா பிக்சல் முதன்மை கேமரா + 2 மெகா பிக்சல் டெப்த் லென்ஸ் + 2 மெகா பிக்சல் மேக்ரோ லென்ஸ் என பின்பக்கத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16 மெகா பிக்சல் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி

இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் மீடியாடெக் ஜி99 சிப்செட் வசதியைக் கொண்டு இருக்கிறது. இதனால் இந்த போன் தடையற்ற கேமிங் அனுபவத்தை வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி

4ஜி வோல்ட்இ, டூயல்-பேண்ட் வைஃபை, என்எப்சி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், USB-C போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி போன். இதனால், இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post 108MP கேமராவுடன் விற்பனைக்கு வருகிறது இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4G first appeared on .

]]>