iphone 14 series https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 14:15:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 iOS 16 அப்டேட்டால் ஐபோன் டிஸ்ப்ளேவுக்கு வந்த பிரச்சனை! https://www.91mobiles.com/tamil/iphone-14-pro-and-iphone-14-pro-max-users-complain-about-horizontal-line-glitch-issue/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=iphone-14-pro-and-iphone-14-pro-max-users-complain-about-horizontal-line-glitch-issue Mon, 26 Dec 2022 07:02:36 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4546 ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்ட இடைவெளியில் தனது இயங்குதளமான ஐஓஎஸ்க்கான அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. அப்படி சமீபத்தில் ஐபோனுக்கான அப்டேட் ஆக iOS 16 வெளியிடப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக இதை இன்ஸ்டால் செய்தவர்களின் ஆப்பிள் ஐபோன் டிஸ்பிளேவில் ஹாரிசாண்டல் க்ளிட்ச் (iPhone horizontal line glitch) தோன்றி இருக்கிறது. இது தற்போது பரவலான பேசு பொருளாகி இருக்கிறது. குறிப்பாக ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் சில பயனர்கள் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளனர். அப்டேட்டே […]

The post iOS 16 அப்டேட்டால் ஐபோன் டிஸ்ப்ளேவுக்கு வந்த பிரச்சனை! first appeared on .

]]>

ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்ட இடைவெளியில் தனது இயங்குதளமான ஐஓஎஸ்க்கான அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. அப்படி சமீபத்தில் ஐபோனுக்கான அப்டேட் ஆக iOS 16 வெளியிடப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக இதை இன்ஸ்டால் செய்தவர்களின் ஆப்பிள் ஐபோன் டிஸ்பிளேவில் ஹாரிசாண்டல் க்ளிட்ச் (iPhone horizontal line glitch) தோன்றி இருக்கிறது. இது தற்போது பரவலான பேசு பொருளாகி இருக்கிறது. குறிப்பாக ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் சில பயனர்கள் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளனர்.

அப்டேட்டே காரணம்

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 14 சீரிஸ் (iPhone 14 series) போன்களை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில், ஐபோன் 14 (iPhone 14), ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 plus), ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 pro), ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 pro max) ஆகிய 4 மாடல்களை கொண்டுள்ளது. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதிக டிமாண்ட் காரணமாக நிறுவனம் இன்னும் அதிகமான ஐபோன் 14 ப்ரோ மாடலக்ளை தயாரித்து வருகிறது. இப்படி லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து வாங்கிய புதிய ஐபோனில் தற்போது சில பிரச்சனைகள் கோளாறு ஏற்பட்டுள்ளன. இது ஆப்பிள் சமீபத்தில் வெளியிட்ட அதன் iOS 16 அப்டேட்டே காரணம்.

டிஸ்ப்ளேவில் கோடுகள்

இந்த அப்டேட்டை இன்ஸ்டால் செய்தவர்களின் ஆப்பிள் ஐபோன் டிஸ்பிளேவில் ஹாரிசாண்டல் க்ளிட்ச் (iPhone horizontal line glitch) இடம் பெற்றுள்ளது. இது பல ஐபோன் பயனர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.சமூக ஊடக தளங்களில், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் சில பயனர்கள் தங்கள் மொபைல்களை பயன்படுத்தும் போது (வேக் அப் (iPhone wake up) செய்யும் போது) ஹரிசாண்டல் கோடுகள் திரை முழுவதும் ஒளிருகிறது என்று புகார் அளித்துள்ளனர்.

ஐபோன் 14 ப்ரோ & ப்ரோ மேக்ஸ்

கலந்துரையாடல் தளமான Reddit இல் “1LastOutlaw” என்ற பயனர் தனது புதிய iPhone 14 Pro Max இல் ஏற்பட்ட கோளாறைக் கவனித்ததாகப் பகிர்ந்துள்ளார். இருப்பினும், பயனரின் கூற்றுப்படி, சிக்கல் தோராயமாக எழுகிறது. ஒவ்வொரு முறையும் ஐபோன் திரையை வேக் அப் செய்யும் போது இந்த கோளாறு (iPhone display error) காண்பிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் டிஸ்ப்ளேகளில் இந்த கோளாறு அதிகமாகக் காணப்படுவதாக MacRumors தெரிவித்துள்ளது. வெளியான தகவலின் படி, ஐபோன் 14 ப்ரோ இயக்கப்பட்டிருக்கும் போது, சிறிது நேரம் கழித்து மறைவதற்கு முன்பு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பச்சை மற்றும் மஞ்சள் கோடுகள் டிஸ்பிளே முழுவதும் ஒளிருகிறது என்று பல பயனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனை iOS 16 இல் உள்ள சாப்ட்வேர் பிழை (software issue) என்றும், வன்பொருள் (hardware) குறைபாடல்ல என்று Apple Support கூறியதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஆப்பிள் என்ன சொல்கிறது?

சில பயனர்கள் iOS 16.2 மேம்படுத்தலுக்குப் பிறகு சிக்கல் ஏற்பட்டதாகக் கூறியதாக அறிக்கை குறிப்பிடுகிறது. மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் (twitter), தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவுப் பக்கம் ஒரு பயனருக்குப் பதிலளித்து, டிஸ்பிளே சிக்கலைச் சரிசெய்ய நிறுவனம் ஏற்கனவே தீர்வை தேடி வருகிறது என்று கூறியுள்ளார். ஆப்பிள் நிறுவனம் இந்த சிக்கலுக்கான மென்பொருள் தீர்வை உருவாக்குகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எப்போது பயனர்களுக்குக் கிடைக்கும் என்றும் விவரங்கள் தெரியவில்லை.

இதற்கிடையில், சமீபத்திய காலங்களில், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 13 இன் பல பயனர்கள் iOS 16 இல் சிக்கல்களை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. iOS 16-க்கு அப்டேட் செய்த பிறகு பல சிக்கல்களை சந்தித்துள்ளனர். இதில் டிஸ்பிளே முடக்கம் (screen freezes), பச்சை நிற டிஸ்பிளே கோளாறு (green screens) மற்றும் ஹைலைட் சர்ச் கோளாறு (highlight searches) ஆகிய கோளாறுகள் சமீபத்தில் காணப்பட்டுள்ளன.

தீர்வு

ஸ்பாட்லைட் சர்ச் மெனுவில் (Spotlight Search menu) ஐபோன் 14 ப்ரோவின் டிஸ்பிளே உறைந்திருப்பதாக ஒரு வீடியோவில் நிரூபிக்கப்பட்டது. இருப்பினும், பயனர் அதிலிருந்து வெளியேற அல்லது மறுதொடக்கம் செய்ய முயற்சிக்கும் போது ஐபோன் அவர்களின் கட்டளைகளுக்கு பதில் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து எழுந்து வரும் சாப்ட்வேர் சிக்கல்களை ஆப்பிள் நிறுவனம் சரி செய்து வருவதாகக் கூறியுள்ளது. எனவே நீங்கள் ஐபோன் உபயோகிப்பவறாக இருந்தால், இந்த சிக்கலை சரி செய்யும் வரை iOS 16 அப்டேட்டை செய்யாமல் இருப்பது நல்லது.

The post iOS 16 அப்டேட்டால் ஐபோன் டிஸ்ப்ளேவுக்கு வந்த பிரச்சனை! first appeared on .

]]>
இந்தியாவில் இன்று விற்பனையைத் துவங்குகிறது ஐபோன் 14 https://www.91mobiles.com/tamil/india-sale-of-iphone-14-iphone-14-pro-today-5-30-pm-september-16/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=india-sale-of-iphone-14-iphone-14-pro-today-5-30-pm-september-16 Fri, 16 Sep 2022 06:39:12 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2371 ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் 14 சீரிஸின் இந்திய விற்பனை இன்று (அதாவது 2022 செப்டம்பர் 16 ஆம் தேதி) தொடங்குகிறது. ஐபோன் 14 சீரீஸ் மாடல்கள் ஆனது அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வாரம் கழித்து, அதன் கீழ் வெளியான நான்கு ஐபோன் மாடல்களில், இரண்டு மாடல்கள் மட்டுமே இன்று விற்பனைக்கு வர இருக்கிறது! இந்தியாவில் இன்று மாலை 5:30 மணி முதல் iPhone 14 மற்றும் iPhone 14 Pro மாடல்களை வாங்க முடியும். இந்த […]

The post இந்தியாவில் இன்று விற்பனையைத் துவங்குகிறது ஐபோன் 14 first appeared on .

]]>

ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் 14 சீரிஸின் இந்திய விற்பனை இன்று (அதாவது 2022 செப்டம்பர் 16 ஆம் தேதி) தொடங்குகிறது. ஐபோன் 14 சீரீஸ் மாடல்கள் ஆனது அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வாரம் கழித்து, அதன் கீழ் வெளியான நான்கு ஐபோன் மாடல்களில், இரண்டு மாடல்கள் மட்டுமே இன்று விற்பனைக்கு வர இருக்கிறது!

இந்தியாவில் இன்று மாலை 5:30 மணி முதல் iPhone 14 மற்றும் iPhone 14 Pro மாடல்களை வாங்க முடியும். இந்த இரண்டு ஐபோன்களின் விலை நிர்ணயம் என்ன? இவைகளின் மீது கிடைக்கும் சலுகைகள் என்னென்ன? என்னென்ன நிறங்களில் கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்?

 

iPhone 14-இன் விலை விவரங்கள்

ஐபோன் 14-இன் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,900 க்கும், 256ஜிபி ஆப்ஷன் மற்றும் 512ஜிபி ஆப்ஷன் முறையே ரூ.89,900 மற்றும் ரூ.1,09,900 க்கும் வாங்க கிடைக்கும். இது நீலம், ஊதா, மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் ப்ராடெக்ட் (சிகப்பு) ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வரும்!

 

iPhone 14 Pro-வின் விலை விவரங்கள்

ப்ரோ மாடலான, ஐபோன் 14 ப்ரோவின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.1,29,900 க்கும், 256ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.1,39,900 க்கும், அதே சமயம் 512ஜிபி மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் ஆனது முறையே ரூ.1,59,900 மற்றும் ரூ.1,79,900 க்கும் கிடைக்கும். இது டீப் பர்பிள், கோல்ட், சில்வர் மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வரும்!

 

Apple Online Storeல் கிடைக்கும் சலுகைகள்

வாடிக்கையாளர்கள் ரூ.54,900 க்கு மேல் ஆர்டர் செய்தால், HDFC கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு ரூ.6,000 என்கிற உடனடி கேஷ்பேக்கை பெறலாம். மேலும் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை புதிய ஐபோன் 14 அல்லது ஐபோன் 14 ப்ரோ மாடல்களுடன் எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் ரூ.46,120 வரை சேமிக்கலாம்.

 

Flipkart வழியாக கிடைக்கும் சலுகைகள்

பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான Flipkart-இல் ஐபோன் 14 ப்ரோ மொபைலை வாங்கும் போது, நீங்கள் HDFC பேங்கின் கிரெடிட் நான்-இஎம்ஐ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு இஎம்ஐ விருப்பங்கள் கீழ் ரூ.4,000 என்கிற தள்ளுபடி கிடைக்கும்.. அதேபோல ஐபோன் 14-ஐ வாங்கினால் ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர்த்து Flipkart Axis பேங்க் கார்ட்டை பயன்படுத்தினால் ஐந்து சதவீத கேஷ்பேக் கிடைக்கும்!

 

iPhone 14 Pro-வின் முக்கிய அம்சங்கள்

  • 6.1 அங்குல சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே
  • ப்ரோமோஷன் டெக்னாலஜி
  • ஆல்வேஸ் ஆன்-டிஸ்ப்ளே
  • ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
  • 48MP + 12MP அல்ட்ரா-வைட் + 12MP டெலிஃபோட்டோ கேமரா – 12MP ட்ரூடெப்த் கேமரா
  • A16 பயோனிக் சிப்செட்
  • 1TB வரை ஸ்டோரேஜ்

 

iPhone 14-இன் முக்கிய அம்சங்கள்

  • 6.1 அங்குல சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே
  • டூயல் ரியர் கேமரா செட்டப்
  • 12MP + 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா – 12MP ட்ரூடெப்த் கேமரா
  • A15 பயோனிக் சிப்செட்
  • 512GB வரை ஸ்டோரேஜ்.

The post இந்தியாவில் இன்று விற்பனையைத் துவங்குகிறது ஐபோன் 14 first appeared on .

]]>
அட்டகாசமான வசதிகளோடு வெளியானது ஐபோன் 14 சீரிஸ் https://www.91mobiles.com/tamil/iphone-14-series-full-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=iphone-14-series-full-details Thu, 08 Sep 2022 05:54:42 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2148 iPhone 14 & iPhone 14 plus மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த iPhone 14 மற்றும் iPhone 14 Plus போன்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் ஐபோன் 14, 6.1 அங்குல டிஸ்ப்ளேவையும், ஐபோன் 14 ப்ளஸ், 6.7 அங்குல டிஸ்ப்ளேவையும் கொண்டு இருக்கின்றன. இவை இரண்டும் IOS 16ல் இயங்குகிறது. மேலும் இதில் A15 Bionic Chip உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சிப்பானது 5 Core GPU மற்றும் 6 Core CPUவைக் கொண்டு இருக்கிறது. […]

The post அட்டகாசமான வசதிகளோடு வெளியானது ஐபோன் 14 சீரிஸ் first appeared on .

]]>
iPhone 14 & iPhone 14 plus

மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த iPhone 14 மற்றும் iPhone 14 Plus போன்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் ஐபோன் 14, 6.1 அங்குல டிஸ்ப்ளேவையும், ஐபோன் 14 ப்ளஸ், 6.7 அங்குல டிஸ்ப்ளேவையும் கொண்டு இருக்கின்றன. இவை இரண்டும் IOS 16ல் இயங்குகிறது. மேலும் இதில் A15 Bionic Chip உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சிப்பானது 5 Core GPU மற்றும் 6 Core CPUவைக் கொண்டு இருக்கிறது. இதனால் மிகுந்த திறன் மிக்கதாக இருக்கிறது.

டிஸ்ப்ளே

இதில் XDR Display வழங்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 1200nits வெளிச்சத்தன்மையைக் கொண்டு இருக்கிறது. மேலும் இதில் Dolby vision தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் காட்சிகள் துல்லியமாக இருக்கும்.

கேமரா

f1.5 Apature உடன் கூடிய 12MP பின்பக்க முதன்மை கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது முந்தைய ஐபோன் 13 மாடலுடன் ஒப்பிடும்போது 49% அதிகமான ‘Low light improvement’ஐ கொண்டு இருக்கிறது. இதற்கு இதில் இருக்கும் ‘Photonic engine’ உதவுகிறது. இதே போல் முன்பக்கத்தில் 12MP செல்ஃபி கேமராவும் இருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த வசதியாக ஆட்டோ போகஸ் வசதி இருக்கிறது. மேலும் இதிலுள்ள ‘True depth camera’ வசதி சிறந்த போர்ட்ரேட் படங்களை எடுக்க உதவுகிறது. இதுவும் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது 38% அதிக முன்னேற்றத்தைக் கொண்டு இருக்கிறது. வீடியோ எடுக்கும் போது, நடுக்கம் இல்லாத வீடியோக்களை எடுக்க இதில் ‘Action mode’ என்னும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஏறத்தாழ ‘Gimble’ உபயோகிப்பது போன்றதாகும். இது வீடியோவிற்கு ‘image stabilization’ ஐ தருகிறது.

கனெக்டிவிட்டி

இந்த போன்கள் 5G வசதியுடன் வருகின்றன. இந்த போன்களில் குறிப்பிடத்தகுந்த விஷயமாக இருப்பது, இதில் இருக்கும் ‘eSIM’ வசதி. இதன்மூலம் சிம்கார்டை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இந்த ‘eSIM’ என்பது ஒரு டிஜிட்டல் சிம் கார்டு ஆகும். இது அதிக பாதுகாப்பானது. ஒரே போனில் பல டிஜிட்டல் சிம்களை உபயோகிக்க முடியும். தேவைபடும் நேரத்தில் ஒரு ‘சிம்’மில் இருந்து இன்னொரு ‘சிம்’மிற்கு உடனடியாக மாறிக் கொள்ள முடியும். அதே போல் ஒரு ப்ளானில் இருந்து இன்னொரு ப்ளானிற்கும் மாற முடியும். குறிப்பாக அமெரிக்காவில் வெளியாகும் ஐபோனில் சிம் ஸ்லாட்டே இருக்காது.

பாதுகாப்பு வசதி

இந்த ஐபோனில் புதிய பாதுகாப்பு சில வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளன. அதில் முக்கியமான ஒன்று ‘Emergency SOS’ via satilite. இந்த வசதி மூலம் நெட்வொர்க் இல்லாத, Wifi இல்லாத இடத்திலும் கூட இது வேலை செய்யும். இதன் மூலம் நாம் எங்கேனும் ஆபத்தில் மாட்டிக்கொண்டால் மீட்புக்குழுவுக்கு தகவல் அனுப்ப முடியும். இது முழுக்க முழுக்க சாட்டிலைட் மூலம் செயல்படுகிறது. இதன் மூலம் நெட்வொர்க் இல்லாத மலை மேலும், கடல் ஆழத்திலும் இருந்து கூட செய்தி அனுப்பி உதவி கோர முடியும். இந்த சேவை வரும் நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவிலும், கனடாவிலும் துவங்க இருக்கிறது

விலை

இந்த போன், கருப்பு, வெள்ளை, நீலம், சிகப்பு மற்றும் ஊதா நிறங்களில் வெளியாகி இருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், ஐபோன் 13 அறிமுகமான அதே $799 விலைக்கே இந்த ஐபோன் 14 மொபைல் போனும் அறிமுகமாகி இருக்கிறது. அதுவும் இவ்வளவு கூடுதல் வசதிகளோடு. இதே வேளையில் ஐபோன் 14 ப்ளஸ் $899 என்ற விலைக்கு அறிமுகமாகி இருக்கிறது. இந்த போன்களை தற்போது ப்ரீ ஆர்டர் செய்தால் செப்டம்பர் 16ம் தேதி முதல் கிடைக்கப் பெறலாம்.

iPhone 14 Pro & iPhone 14 Pro Max

அடுத்ததாக iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max ஆகிய போன்கள் வெளியாகின. இந்த இரண்டு போன்களும் Stainless steel கொண்டு உருவாக்கப்பட்டு Ceramic seal செய்யப்பட்டு வெளியாகி உள்ளன. Silver,Gold, Deep purple மற்றும் Black ஆகிய நிறங்களில் வெளியாகி இருக்கின்றன. முன்பக்க கேமராவுக்கென இருக்கும் பகுதி 30% குறைக்கப்பட்டு இருக்கிறது.

Dynamic island

இந்த போனில் ‘Dynamic island’ என்ற புதிய அம்சம் புகுத்தப்பட்டுள்ளது. இது முன்பக்க கேமரா இருக்கும் இடத்தில் இருக்கிறது. உபயோகிக்கும் செயலிகள், நோட்டிபிகேஷன்கள், ஆடியோ ப்ளேயர், அழைப்புகள் போன்ற எல்லாவற்றையும் சுறுக்கி வைத்து பின் தேவைப்படும் நேரம் எடுத்து உபயோகிக்கும் இடமாக இந்த ‘Dynamic island’ இருக்கிறது. இதன் அனிமேஷன்கள் மற்றும் ட்ரான்சிஷன்கள் பார்க்க மிக அழகாக உள்ளது.

டிஸ்ப்ளே

ஐபோன் 14 ப்ரோவில் 6.1 அங்குல டிஸ்ப்ளேவும், ஐபோன் 14 ப்ரோ ப்ளஸ் மொபைலில் 6.7 அங்குல டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த போன்களில் ‘Always-on display’ வழங்கப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு. 466ppi resolution உடன் கூடிய திரை 1600 nits பிரகாசத்தைக் கொண்டு இருக்கிறது. இதனை தேவைப்பட்டால் 2000 nits வரை கூட அதிகரித்துக் கொள்ள முடியும்.

சிப்செட்

இந்த போன்களில் A16 Bionic Chip பயன்படுத்தப் பட்டு இருக்கிறது. இந்த புதிய சிப்செட் குறைந்த மின்சாரத்தில் அதிக திறனை வழங்க கூடியதாகவும், சிறந்த டிஸ்ப்ளே மற்றும் தரமான கேமராவுக்கு ஏற்றதாகவும் இருக்கக்கூடியது. இது ஒரு 4 Nanometer processor ஆகும். முந்தைய சிப்பை விட 40% அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

போட்டோ

இந்த போன்களில் 48MP முதன்மை கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் iphone 13ஐ விட 65% பெரிய போட்டோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஐபோன் 13ஐ விட இரு மடங்கு தரமான ‘Low light photo’களை எடுக்க முடியும். இது தவிர 12MP Tele photo camera ஒன்றும், 12 MP Ultra wide camera ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் அம்சமாக, இந்த போனில் ‘Apple Pro RAW’ வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழுவதுமாக 48MP போட்டோகளை ஆதரிக்கிறது. இதன்மூலம் புகைப்படம் எடுத்த பின் அதனை தரக்குறைவு இன்றி மேம்படுத்திக் கொள்ள முடியும். அதுபோல இதில் ‘Flash’ம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

வீடியோ

இதில் எடுக்கப்படும் வீடியோக்கள் தரமானதாக இருக்க வேண்டி இதில், ‘Pro Res’ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கூடவே ‘Dolby Vision’ அம்சமும் இருக்கிறது. எடுக்கப்படும் வீடியோக்கள் நடுக்கமின்றி இருக்க ‘Action mode’ வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் ‘Gimble’ உபயோகித்து எடுப்பது போன்ற ஆட்டமில்லாத வீடியோக்களை எடுக்க முடியும். சினிமா எடுக்க வசதியாய் இதில் ‘Cinematic mode’ என்ற ஒரு வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 4K வீடியோக்களை 24framesல் எடுக்க முடியும்.

பாதுகாப்பு வசதிகள்

ஆப்பிள் வாட்சில் இருப்பது போலவே இதிலும் ‘Emergency SOS service’ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதுபோல் விபத்து நடந்தால் அதை தானாகவே தெரிவிக்கும் ‘Crash detection’ வசதியும் இந்த போனில் இருக்கிறது. இதன் மூலம் வாகனங்களில் செல்லும் போது விபத்து ஏற்பட்டால் அதை தானாகவே கண்டறிந்து தகவல் மையத்துக்கு செய்தி அனுப்பிவிடும். இது தவிர இந்த போனில் நாள் முழுவதும் போனை பயன்படுத்தும் வண்ணம் சிறப்பான பேட்டரியும் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் 1TB சேமிப்புத்திறனும் இருக்கிறது.

விலை

ஐபோன் 14 ப்ரோ மொபைல் $999 என்ற விலைக்கும், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் $1099 என்ற விலைக்கும் கிடைக்கிறது. இவற்றை இப்போது ப்ரீ ஆர்டர் கொடுத்தால் செப்டம்பர் 16ம் தேதி முதல் கிடைக்கப் பெறலாம்.

The post அட்டகாசமான வசதிகளோடு வெளியானது ஐபோன் 14 சீரிஸ் first appeared on .

]]>
வெளியானது புதிய ஆப்பிள் வாட்ச் & ஏர்பாட் ப்ரோ https://www.91mobiles.com/tamil/apple-event-2022-full-detail/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=apple-event-2022-full-detail Wed, 07 Sep 2022 20:54:08 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2138 ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் ’Apple Event 2022’ நேற்று இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்குத் தொடங்கியது. புதிய தயாரிப்புகள் இந்த நிகழ்வில் ஆப்பிளின் 3 புதிய வாட்சுகள், புதிய ஏர்பாட் மற்றும் 4 விதமான ஐபோன்கள் வெளியிடப்பட்டன. ஆப்பிள் வாட்ச்கள் மற்றும் ஏர்பாட் ப்ரோ பற்றி இப்போது பார்க்கலாம். Apple watch ஆப்பிள் வாட்ச் 8 இதில் இரண்டு வகையான வாட்சுகள் வெளியிடப்பட்டன. ஆப்பிள் வாட்ச் 8 GPS = $399 ஆப்பிள் வாட்ச் […]

The post வெளியானது புதிய ஆப்பிள் வாட்ச் & ஏர்பாட் ப்ரோ first appeared on .

]]>
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் ’Apple Event 2022’ நேற்று இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்குத் தொடங்கியது.

புதிய தயாரிப்புகள்

இந்த நிகழ்வில் ஆப்பிளின் 3 புதிய வாட்சுகள், புதிய ஏர்பாட் மற்றும் 4 விதமான ஐபோன்கள் வெளியிடப்பட்டன. ஆப்பிள் வாட்ச்கள் மற்றும் ஏர்பாட் ப்ரோ பற்றி இப்போது பார்க்கலாம்.

Apple watch

ஆப்பிள் வாட்ச் 8

இதில் இரண்டு வகையான வாட்சுகள் வெளியிடப்பட்டன.
ஆப்பிள் வாட்ச் 8 GPS = $399
ஆப்பிள் வாட்ச் 8 GPS + Celluler = $499

இதனையடுத்து ஆப்பிள் வாட்ச் SE வெளியிடப்பட்டது

ஆப்பிள் வாட்ச் SE

இதில் இரண்டு வகையான வாட்சுகள் வெளியிடப்பட்டன.
ஆப்பிள் வாட்ச் 8 SE GPS = $249
ஆப்பிள் வாட்ச் 8 SE GPS + Celluler = $299

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா

அதன்பின் Apple watch Ultra வெளியிடப்பட்டது. இது பலவகையான சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. இதில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஒரு GPS (frequency) சிக்னலுக்கு பதில் இரண்டு GPS Frequencyகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இரண்டு மடங்கு துல்லியத்துடன் இந்த வாட்ச் இயங்குகிறது. மேலும் இதனை இரவிலும் நன்றாக பயன்படுத்தும் வண்ணம் சிகப்பில் ஒளிரும் ‘Night mode’ வசதியும் இருக்கிறது. இதனை ஆழ்கடல் நீச்சலின் போதுகூட பயன்படுத்தும் வண்ணம் இரண்டு மடங்கு ‘Water Resistance’ வசதியுடன் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும் இதன் வெளிச்சத்தன்மை 2000nits வரை இருக்கிறது. இதனால் உச்சி வெயிலாக இருந்தாலும் சரி, ‘கும்’ இருட்டாக இருந்தாலும் சரி.. எந்த காலத்திற்கும் ஏற்றதாக இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா இருக்கும். இதனை இப்போதே ப்ரீஆர்டர் செய்யும் வசதியும் இருக்கிறது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் இதனை 23ம் தேதி பெற முடியும்.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா = $799.

Apple Airpod

அடுத்ததாக ஆப்பிள் நிறுவனம் Apple Airpod Pro-வை வெளியிட்டது.
இதில் H2 chip பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது தடையில்லாமல் வேலை செய்ய பெரிதும் உதவுகிறது. இந்த ஏர்பாட் ப்ரோ முந்தைய மாடலைவிட பல வகைகளில் மேம்படுத்தப் பட்டு இருக்கிறது.

Personal Spacial Audio

இந்த ஏர்பாட் ப்ரோவில் புதிதாக Personal Spatial Audio என்ற சிறப்பு அம்சம் புகுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்த ஏர்பாடை பயன்படுத்துபவரின் காது அமைப்புக்கு ஏற்றவாறு ஒலியை சிறப்பாக மாற்றிக் கொள்ள முடியும். இதனால் சிறப்பான ஒலியமைப்பைப் உணர முடியும்.

அதே போல் சென்ற மாடல் ஏர்பாடை விட இரண்டு மடங்கு சிறந்த ‘Active Noice Cancelation’ஐ அனுபவிக்க முடியும். இது நாம் இருக்கும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி தானாகவே மாற்றிக்கொள்கிறது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் ‘Touch control’ மூலம் இதனை இயக்க முடியும். இதன் பேட்டரி கேஸை எங்கேயேனும் மறந்து வைத்துவிட்டால் அதை ஐபோன் மூலம் ட்ராக் செய்து கண்டுபிடிக்கும் வசதியும் இதில் இருக்கிறது. இதற்கென கேஸில் ஒலியை எழுப்பும் வசதியும் இருக்கிறது.

இதன் பேட்டரி 6 மணி நேரம் வரையிலான ‘listening time’ஐ கொண்டு இருக்கிறது. அதுவே கேஸில் வைத்து பயன்படுத்தும் போது 30 மணி நேரம் வரை இதை பயன்படுத்த முடியும். இதனை ஆப்பிள் வாட்ச் சார்ஜரைக் கொண்டே சார்ஜ் செய்ய முடியும் என்பது கூடுதல் வசதி. இதனை இப்போது ஆர்டர் செய்தால் செப்டம்பர் 23ம் தேதி பெற்றுக் கொள்ள முடியும்.
Airpod Pro விலை = $249

The post வெளியானது புதிய ஆப்பிள் வாட்ச் & ஏர்பாட் ப்ரோ first appeared on .

]]>
புதிய ஐபோன் 14 சீரிஸில் சிம் ஸ்லாட் இருக்காதா? https://www.91mobiles.com/tamil/apple-said-to-remove-sim-card-slot-in-iphone-14/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=apple-said-to-remove-sim-card-slot-in-iphone-14 Tue, 06 Sep 2022 16:35:21 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2102 ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புது ஐபோன் 14 மாடல்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவலில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடலின் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2022 ஐபோன்களில் முற்றிலும் புது டிசைன் வழங்கப்பட இருக்கும் நிலையில், இந்த போன்களில் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. […]

The post புதிய ஐபோன் 14 சீரிஸில் சிம் ஸ்லாட் இருக்காதா? first appeared on .

]]>

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புது ஐபோன் 14 மாடல்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவலில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடலின் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2022 ஐபோன்களில் முற்றிலும் புது டிசைன் வழங்கப்பட இருக்கும் நிலையில், இந்த போன்களில் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து மாடல்களிலும் அல்லாமல், குறைந்தபடசம் சில மாடல்களில் மட்டுமாவது சிம் கார்டு ஸ்லாட் நீக்குவது பற்றி ஆப்பிள் நிறுவனம் விவாதித்து வருவதாக தெரிகிறது. மேலும் ஐபோன் 15 சீரிசில் முழுமையாக சிம் கார்டு ஸ்லாட் நீக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதற்கு பதிலாக ஐபோன்களில் இ சிம் மற்றும் போர்ட்-லெஸ் மாடலை கொண்டு வருவதில் ஆப்பிள் அதிக ஆர்வம் செலுத்தி வருவதாக தற்போது வெளியாகி இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த முறை இ சிம் வழங்குவதில் ஆப்பிள் அதிக முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறது. இதன் மூலம் பயனர்களை டிஜிட்டல் யுகத்திற்கு தயார்ப்படுத்த இருக்கிறது.

இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு அறிமுகமாகும் மாடல்களில் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது,” என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பெயருக்கு ஏற்றார்போல் இ சிம் என்பது டிஜிட்டல் சிம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வரும் இ சிம் நிஜ சிம் கார்டு தேவையின்றி அதன் சேவைகளை வழங்கி வருகிறது. பல்வேறு நாடுகளிலும் இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனமும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளது.

செப்டம்பர் 7 ஆம் தேதி ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், புது ஐபோன் மாடல்கள் வெளியாகும் முன் ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 மாடலுக்கு 12 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு 128 ஜிபி ஐபோன் 13 மாடல் தற்போது ரூ. 69 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 256 ஜிபி விலை ரூ. 79 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி ஐபோன் 13 மாடலுக்கு அசத்தலான எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது.

எக்சேன்ஜ் சலுகையில் பயனர்கள் அதிகபட்சம் ரூ. 19 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக், ஐந்து சதவீதம் வரை தள்ளுபடி ரூ. 1000 கேஷ்பேக் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் பிராசஸர், 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐபோன்களின் விலை அதன் முந்தைய மாடலை விட 50 டாலர்கள் வரை விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபோன் 14 மாடலின் விலை 750 டாலர்கள் என துவங்கும் என தெரிகிறது.

The post புதிய ஐபோன் 14 சீரிஸில் சிம் ஸ்லாட் இருக்காதா? first appeared on .

]]>
7ம் தேதி 7 பொருட்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்! https://www.91mobiles.com/tamil/apple-tipped-to-launch-7-devices-at-september-7-launch-event/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=apple-tipped-to-launch-7-devices-at-september-7-launch-event Mon, 22 Aug 2022 11:09:21 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1745 செப்டம்பர் 7ம் தேதி நடைபெற இருக்கும் வெளியீட்டு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம், 7 சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் iPhone சீரிஸ், 3 iPad டேப்லெட்டுகள் என பல முக்கிய சாதனங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. 7 சாதனங்களை ஆப்பிள் அறிமுகம் செய்யும் பட்சத்தில் இது ஆப்பிள் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக என்பதில் ஆச்சரியமில்லை. அது என்ன 7 சாதனங்கள், எப்போது அறிமுகம் என்று பார்க்கலாம். ஐபோன் 14 சீரிஸ் இன்னும் […]

The post 7ம் தேதி 7 பொருட்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்! first appeared on .

]]>

செப்டம்பர் 7ம் தேதி நடைபெற இருக்கும் வெளியீட்டு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம், 7 சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் iPhone சீரிஸ், 3 iPad டேப்லெட்டுகள் என பல முக்கிய சாதனங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

7 சாதனங்களை ஆப்பிள் அறிமுகம் செய்யும் பட்சத்தில் இது ஆப்பிள் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக என்பதில் ஆச்சரியமில்லை. அது என்ன 7 சாதனங்கள், எப்போது அறிமுகம் என்று பார்க்கலாம்.

ஐபோன் 14 சீரிஸ் இன்னும் மூன்று வாரங்களில் அறிமுகம் செய்யப்படுவது ஏரத்தாள முடிவு செய்யப்பட்டு விட்டது. அறிவித்தபடி செப்டம்பர் 7 ஆம் தேதி ஆப்பிள் அறிமுக நிகழ்வு நடைபெறும் பட்சத்தில் இதில் 7 டிவைஸ்கள் அறிமுகம் செய்யப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபாட் டேப்லெட்கள் உட்பட ஏழு சாதனங்கள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 14 மேக்ஸ் அறிமுகமாகுமா?

Evan Blass பகிர்ந்த தகவலின்படி, குபெர்டினோவை தளமாகக் கொண்ட ஆப்பிளின் ஐபோன் 14 இல் iPhone 14 mini இடம்பெறும் என குறிப்பிட்டார். iPhone 14 mini இடம்பெறும் பட்சத்தில் ஐபோன் 14 மேக்ஸ் அறிமுகமாவது சந்தேகம் தான். டேப்லெட் பிரிவை பொறுத்தவரை, வழக்கம் போல் ஒரு சாதாரண மாடல் மற்றும் இரண்டு ப்ரோ மாடல்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 சாதனங்கள் என்னென்ன?

ஆப்பிள் அறிமுகம் செய்யும் 7 டிவைஸ்கள் குறித்து டிப்ஸ்டர் தளத்தில் வெளியான தகவலின்படி, ஐபோன் 14, ஐபோன் 14 மினி, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ், ஐபாட் 10.2 (10-வது ஜென்), ஐபாட் ப்ரோ 12.9 (6-வது ஜென்) மற்றும் ஐபாட் ப்ரோ 11(4-வது ஜென்) உள்ளிட்டவை இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளது.

டிப்ஸ்டர் தகவலில் மிகவும் உறுதியாக இருக்கிறோம் எனவும் இதற்கு சாத்தியம் இருக்கிறது எனவும் Evan Blass குறிப்பிட்டுள்ளார். டிப்ஸ்டர் தகவலில் ஐபோன் 14 மேக்ஸ் குறிப்பிடப்படவில்லை, நேரடியாக ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் தான் பட்டியலிடப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

எப்போது அறிமுகம்? எப்போது விற்பனை?

இது உறுதியாகும் பட்சத்தில் iPhone 14 மாடல்கள் மற்றும் மூன்று iPad டேப்லெட்கள் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த அனைத்து சாதனங்களும் செப்டம்பர் 16 ஆம் தேதி விற்பனைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. மறுபுறம் ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மனின் தகவலில், உயர்நிலை iPad டேப்லெட்டுகள் மற்றும் மூன்று ஆப்பிள் வாட்ச் மாடல்கள் இதில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 இல் மிகவும் எதிர்பார்க்கப்படும் சாதனங்களில் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் பிரதான ஒன்று. அந்நாட்டில் செப்டம்பர் 5 (திங்கட்கிழமை) தொழிலாளர் தினம் (Labor Day) என்றும் செப்டம்பர் 6 (செவ்வாய்கிழமை) பயண நாளாகவும் (travel day) இருக்கும் காரணத்தால் செப்டம்பர் 7 (புதன்கிழமை) அன்று ஐபோன் 14 வெளியிடப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 7ம் தேதி 7 பொருட்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்! first appeared on .

]]>
ஐபோன் தயாரிப்பை இந்தியாவில் முதலிலேயே துவங்க இருக்கும் ஆப்பிள் https://www.91mobiles.com/tamil/apple-to-start-iphone-14-production-in-india-for-the-first-time/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=apple-to-start-iphone-14-production-in-india-for-the-first-time Sat, 06 Aug 2022 09:37:27 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1413 ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பர் மாதம் தனது புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஐபோன் சீரிஸ் மாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் வெளியீடு வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் முன்பே, புதிய ஐபோன் மாடல்கள் வெளியீட்டின் போதே உற்பத்தியும் துவங்கி விடும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி ஆப்பிள் வல்லுநரான மிங் சி […]

The post ஐபோன் தயாரிப்பை இந்தியாவில் முதலிலேயே துவங்க இருக்கும் ஆப்பிள் first appeared on .

]]>

ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பர் மாதம் தனது புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
புது ஐபோன் சீரிஸ் மாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் வெளியீடு வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் முன்பே, புதிய ஐபோன் மாடல்கள் வெளியீட்டின் போதே உற்பத்தியும் துவங்கி விடும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் தனது ஐபோன் 14 உற்பத்தியை சீனாவில் துவங்கும் போதே, இந்தியாவிலும் துவங்கும் என தெரிவித்து இருக்கிறார்.

சீனா மற்றும் இந்தியாவில் ஐபோன் 14 உற்பத்தி இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் துவங்குகிறது. புது ஐபோன்கள் வெளியீட்டை தொடர்ந்து இந்திய உற்பத்தியும் துவங்க இருப்பது இதுவே முதல் முறை ஆகும். வழக்கமாக புது ஐபோன் வெளியான இரு காலாண்டுக்கு பின்னர் தான் இந்தியாவில் அதன் உற்பத்தி துவங்கும்.

புதிய ஐபோன் 14 மாடல்களின் உற்பத்தி தமிழ்நாட்டில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இரண்டாவது காலாண்டு வருவாய் அறிக்கையின் படி ஆப்பிள் நிறுவன வருவாய் இந்தியாவில் இருமடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் தனது புதிய ஐபோன்களை இந்திய சந்தையில் உற்பத்தி செய்ய முடிவெடுத்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் போது புது ஐபோன்களின் விலை கணிசமாக குறையவும் வாய்ப்புகள் உண்டு.

தற்போதைய தகவல்களின் படி புதிய ஐபோன் 14 மாடல் விலை 799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 63 ஆயிரத்து 200 முதல் துவங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்யலாம். இவை அனைத்திலும் 120Hz ப்ரோமோஷன் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.

ஐபோன் 14 சீரிஸ் 30W வயர்டு சார்ஜிங்குடன் வரும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த புதிய ஐபோன் 14 மாடல் சாதனங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்குச் சொந்தமான புதிய A16 பயோனிக் சிப்செட் உடன் வெளிவரும் என்றும் தெரிய வருகிறது. அதேபோல், இந்த ஐபோனில் இருக்கும் ஹீட் மேனேஜ்மென்ட் சிஸ்டம், ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே, ஐபோனில் பயன்படுத்தப்படும் பொருட்கள், Face ID தொழில்நுட்பம், Gorilla Glass Victus மற்றும் MagSafe பேட்டரி பற்றிய குறிப்புகளையும் வெளிப்படுத்தியுள்ளது.

டிப்ஸ்டர் ஜியோரிகு வெளியிட்ட அறிவிப்பின் படி, ஐபோன் 14 கருப்பு, நீலம், வெள்ளை மற்றும் ஊதா வண்ணங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன் ஐபோன் 13ல் வந்த பிங்க் நிறம் இப்போது ஐபோன் 14 வரிசையில் பர்பிள் நிறமாக மாற்றப்பட்டுள்ளது.

இதேபோல் ஐபோன் 14 ப்ரோவைப் பொறுத்தவரை, இந்த போன் கோல்டு, கிராஃபைட், பச்சை, ஊதா மற்றும் வெள்ளை நிறங்களில் வரும் என்றும் கூறியிருக்கிறார். இதற்கு முன் வந்த ஐபோன் 13 ப்ரோ மாடலில் வழங்கப்பட சியரா ப்ளூ நிறத்திற்கு பதில் ஊதா நிறத்தைக் கொண்டுவந்திருக்கிறது.

The post ஐபோன் தயாரிப்பை இந்தியாவில் முதலிலேயே துவங்க இருக்கும் ஆப்பிள் first appeared on .

]]>
ஐபோன் 14ல் என்னென்ன புதுசு? https://www.91mobiles.com/tamil/iphone-14-and-iphone-14-pro-tipped-with-purple-colour-option-before-launch-on-september/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=iphone-14-and-iphone-14-pro-tipped-with-purple-colour-option-before-launch-on-september Thu, 04 Aug 2022 11:03:11 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1362 ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யவிருக்கும் iPhone 14 சீரிஸில் புதிய சில மாற்றங்களைச் செய்ய இருக்கிறது. iPhone 14 வரிசையில் என்னென்ன மாடல்கள் எதிர்பார்க்கப்படுகிறது? Apple நிறுவனம் அதன் ஐபோன் சீரிஸ் வரிசையில் அடுத்த மாதம் களமிறக்கத் தயாராக இருக்கும் புதிய ஐபோன் சீரிஸ் மாடல் தான் இந்த ‘ஐபோன் 14’ (iPhone 14). இந்த வரிசையில், ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் […]

The post ஐபோன் 14ல் என்னென்ன புதுசு? first appeared on .

]]>

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யவிருக்கும் iPhone 14 சீரிஸில் புதிய சில மாற்றங்களைச் செய்ய இருக்கிறது.

iPhone 14 வரிசையில் என்னென்ன மாடல்கள் எதிர்பார்க்கப்படுகிறது?

Apple நிறுவனம் அதன் ஐபோன் சீரிஸ் வரிசையில் அடுத்த மாதம் களமிறக்கத் தயாராக இருக்கும் புதிய ஐபோன் சீரிஸ் மாடல் தான் இந்த ‘ஐபோன் 14’ (iPhone 14). இந்த வரிசையில், ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்யவிருக்கிறது. இவற்றை செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ போன்களின் நிறங்கள் தற்போது ஆன்லைனில் லீக் ஆகி இருக்கிறது. ஐபோன் 14 மாடல் இந்த முறை ஆறு வண்ண விருப்பங்களுடன் வரும் என்றும், ஐபோன் 14 ப்ரோ மாடல் ஐந்து வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் ஒரு டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இந்த வெவ்வேறு நிறங்களில் ஒன்று ‘பர்பிள்’ (Purple) நிறமாக இருக்கும் என்றும் அந்த டிப்ஸ்டர் தெரிவித்திருக்கிறார்.

ஐபோன் 14 மாடல்களில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

ஐபோன் 14 சீரிஸ் 30W வயர்டு சார்ஜிங்குடன் வரும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த புதிய ஐபோன் 14 மாடல் சாதனங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்குச் சொந்தமான புதிய A16 பயோனிக் சிப்செட் உடன் வெளிவரும் என்றும் தெரிய வருகிறது. அதேபோல், இந்த ஐபோனில் இருக்கும் ஹீட் மேனேஜ்மென்ட் சிஸ்டம், ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே, ஐபோனில் பயன்படுத்தப்படும் பொருட்கள், Face ID தொழில்நுட்பம், Gorilla Glass Victus மற்றும் MagSafe பேட்டரி பற்றிய குறிப்புகளையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஐபோன் 14 வரிசையில் எந்தெந்த மாடல்களில் இந்த நிறம் கிடைக்கும்?

டிப்ஸ்டர் ஜியோரிகு வெளியிட்ட அறிவிப்பின் படி, ஐபோன் 14 கருப்பு, நீலம், வெள்ளை மற்றும் ஊதா வண்ணங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன் ஐபோன் 13ல் வந்த பிங்க் நிறம் இப்போது ஐபோன் 14 வரிசையில் பர்பிள் நிறமாக மாற்றப்பட்டுள்ளது.

இதேபோல் ஐபோன் 14 ப்ரோவைப் பொறுத்தவரை, இந்த போன் கோல்டு, கிராஃபைட், பச்சை, ஊதா மற்றும் வெள்ளை நிறங்களில் வரும் என்றும் கூறியிருக்கிறார். இதற்கு முன் வந்த ஐபோன் 13 ப்ரோ மாடலில் வழங்கப்பட சியரா ப்ளூ நிறத்திற்கு பதில் ஊதா நிறத்தைக் கொண்டுவந்திருக்கிறது.

வித்தியாசமான பஞ்ச் ஹோல் கட் அவுட்!

ஆப்பிளின் புதிய ஐபோன் 14 மாடல்கள் 30W சார்ஜிங்கிற்கான ஆதரவைப் பெறும் என்று டிப்ஸ்டர் கூறுகிறார். கடந்த ஆண்டு இருந்த அதே பாடி வடிவமைப்பு, ஸ்டோரேஜ் விருப்பங்கள், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு மற்றும் பெரிய மற்றும் கனமான MagSafe பேட்டரி போன்றவற்றை நாம் இந்த புதிய மாடலிலும் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. ஐபோன் 14 இன் பஞ்ச் ஹோல் கட் அவுட்கள் “எதிர்பார்த்தது போல் வித்தியாசமாகத் தெரிகிறது”, என்று அவர் கூறியிருக்கிறார்.

வரவிருக்கும் புதிய ஐபோன்களில் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே அம்சம் எதிர்பார்க்கப்படுகிறது. A15 பயோனிக் சிப் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அதே 5nm உற்பத்தி செயல்முறையைப் பயன்படுத்தும் A16 Bionic சிப்செட் பற்றிய சில குறிப்புகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது. Ming-Chi Kuo என்ற ஆய்வாளரின் கூற்றுப்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட A16 சிப்செட்கள், தற்போதுள்ள A15 Bonic ஐ விட அதிக செயல்திறன் ஊக்கத்தை வழங்கும் என்று அவர் நம்பிக்கை கூறியுள்ளார்.

iPhone 14 இன் விலை தோராயமாக ரூ. 63,200 என்ற விலையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது iPhone 13 அறிமுகமான அதே விலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி ஐபோன் 14 தொடர் வெளியீட்டு நிகழ்வை நடத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 உள்ளிட்ட பிற சாதனங்களின் வெளியீட்டையும் எதிர்பார்க்கலாம்.

The post ஐபோன் 14ல் என்னென்ன புதுசு? first appeared on .

]]>
iPhone 14 Seriesன் வெளியீடு எப்போது? https://www.91mobiles.com/tamil/apple-to-reportedly-announce-upcoming-iphone-14-series-on-september-13/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=apple-to-reportedly-announce-upcoming-iphone-14-series-on-september-13 Fri, 15 Jul 2022 07:43:33 +0000 https://www.91mobiles.com/tamil/?p=911 iPhone 14 Pro Max மாடலில், ஐபோன் 13 Pro Max மாடலில் உள்ளதை விட பெரிய சென்சார் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஐபோன் 14 சீரிஸில் மொத்தம் 4 மாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதில் உள்ள ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ளதை விட பெரிய சென்சார் வழங்கப்பட […]

The post iPhone 14 Seriesன் வெளியீடு எப்போது? first appeared on .

]]>

iPhone 14 Pro Max மாடலில், ஐபோன் 13 Pro Max மாடலில் உள்ளதை விட பெரிய சென்சார் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஐபோன் 14 சீரிஸில் மொத்தம் 4 மாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக அதில் உள்ள ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ளதை விட பெரிய சென்சார் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி இதன் இரு மாடல்கள் 6.1 அங்குல திரையுடனும், இதர இரு மாடல்கள் 6.7 அங்குல பேனல்களுடனும் உள்ளன.

இதன் ப்ரோ மாடல்களில் மட்டும் பெரிய கேமரா பம்ப் இடம்பெற்று இருக்கும் எனத் தெரிகிறது. மேம்பட்ட 48 மெகாபிக்சல் கேமரா வழங்கப்படுவதால் இதில் கேமரா பம்ப் பெரிதாக இருக்கலாம்.
இந்நிலையில், iPhone 14 Seriesகளின் வெளியீட்டு தேதி தற்போது கசிந்து இருக்கிறது. அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 13ந் தேதி ஐபோன் 14 சீரிஸ் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் ஐபோன் 14 சீரிஸ் மட்டுமின்றி ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மற்றும் ஆப்பிள் வாட்ச் ப்ரோ வெர்ஷன் (Apple watch pro) ஆகியவையும் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

The post iPhone 14 Seriesன் வெளியீடு எப்போது? first appeared on .

]]>