moto g32 https://www.91mobiles.com/tamil Tue, 18 Jul 2023 05:08:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ரூ.12,000க்குக் கீழான விலையில் கிடைக்கும் 8GB RAM உள்ள மொபைல்கள்! https://www.91mobiles.com/tamil/list-of-mobiles-under-12000-with-8gb-ram/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=list-of-mobiles-under-12000-with-8gb-ram Tue, 18 Jul 2023 05:08:06 +0000 https://www.91mobiles.com/tamil/?p=9455 மொபைல் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நமது அன்றாட தேவைகள் பலவற்றிற்கும் நாம் மொபைலைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. உணவை ஆர்டர் செய்வது, வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளுவது, தகவல்கள் தேடுவது, பெரிய வீடியோ விளையாட்டுகளை விளையாடுவது, ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது, நண்பர்களுடன் உரையாடுவது, வீடியோ எடுப்பது, அதை எடிட் செய்து புதிய கண்டெண்ட்களை உருவாக்குவது, புகைப்படங்களை எடிட் செய்து மெருகேற்றுவது என தகவல் தொடர்பு சாதனமாக இருந்த மொபைலானது, பொழுதுபோக்கு […]

The post ரூ.12,000க்குக் கீழான விலையில் கிடைக்கும் 8GB RAM உள்ள மொபைல்கள்! first appeared on .

]]>

மொபைல் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நமது அன்றாட தேவைகள் பலவற்றிற்கும் நாம் மொபைலைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. உணவை ஆர்டர் செய்வது, வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளுவது, தகவல்கள் தேடுவது, பெரிய வீடியோ விளையாட்டுகளை விளையாடுவது, ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது, நண்பர்களுடன் உரையாடுவது, வீடியோ எடுப்பது, அதை எடிட் செய்து புதிய கண்டெண்ட்களை உருவாக்குவது, புகைப்படங்களை எடிட் செய்து மெருகேற்றுவது என தகவல் தொடர்பு சாதனமாக இருந்த மொபைலானது, பொழுதுபோக்கு மற்றும் வருமானத்திற்கான வழியாகவும் மாறி இருக்கிறது. இதனால், மொபைலின் திறனும் சிறப்பாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

மொபைலின் திறனில் முக்கிய பங்கு வகிப்பது இரண்டு. ஒன்று சிப்செட். மற்றொன்று ரேம். அதிக திறன்மிக்க சிப்செட் வேண்டுமென்றால், அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால், ரேமைப் பொருத்தவரை தற்போது குறைந்த விலை மொபைல்களில் கூட அதிமான ரேம் வழங்கப்படுகிறது. இதுவும் மொபைலின் திறனுக்கு முக்கியம் என்பதால், அதிக திறன் கொண்ட, அதே வேளையில் குறைந்த விலையில், அதாவது ரூ.12,000 விலைக்குள் 8GB RAM உடன் வரும் மொபைல்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம். இந்த மொபைல்கள் சிலவற்றில் இந்த 8GB பிசிகல் ரேம் தவிர விர்சுவல் ரேம் (Virtual RAM) அல்லது எஸ்டெண்டட் ரேம் (Extended RAM) வசதியும் இருப்பது கூடுதல் சிறப்பு.

 

ரூ.12,000 விலைக்குள் 8GB RAM உடன் வரும் மொபைல்கள்

  • Itel S23
  • Infinix Hot 30i
  • Tecno Spark 10
  • Moto G32
  • Tecno Spark 10C
  • Tecno Pova 4

 

Itel S23

இந்த Itel S23 மொபைல் Unisoc T606 என்ற ஆக்டாகோர் சிப்செட்டுடன் வருகிறது. இதன் பின்பக்கத்தில் 50MP முதன்மை கேமராவும், பின்பக்கத்தில் 8MP முன்பக்கக் கேமராவும் உள்ளது. 6.6 அங்குல, 90Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய டிஸ்ப்ளே உள்ளது. 4G மொபைலான இதில் 128GB சேமிப்புத்திறனும், அதை MicroSD கார்டு மூலம் 1TB வரை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதில் 5000mAh பேட்டரியும், Type-C போர்ட் வசதியும் உள்ளது.

விலை: ரூ.8,999

 

Infinix Hot 30i

இந்த Infinix Hot 30i மொபைல் MediaTek Helio G37 என்ற ஆக்டாகோர் சிப்செட்டுடன் வருகிறது. இதன் பின்பக்கத்தில் 50MP முதன்மை கேமராவும், பின்பக்கத்தில் 5MP முன்பக்கக் கேமராவும் உள்ளது. 6.6 அங்குல, 90Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய டிஸ்ப்ளே உள்ளது. 4G மொபைலான இதில் 128GB சேமிப்புத்திறனும், அதை MicroSD கார்டு மூலம் 1TB வரை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதில் 5000mAh பேட்டரியும், Type-C போர்ட் வசதியும் உள்ளது.

விலை: ரூ.8,099

 

Tecno Spark 10

இந்த Tecno Spark 10 மொபைல் MediaTek Helio G37 என்ற ஆக்டாகோர் சிப்செட்டுடன் வருகிறது. இதன் பின்பக்கத்தில் 50MP முதன்மை கேமராவும், பின்பக்கத்தில் 8MP முன்பக்கக் கேமராவும் உள்ளது. 6.6 அங்குல, 90Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய டிஸ்ப்ளே உள்ளது. 4G மொபைலான இதில் 128GB சேமிப்புத்திறனும், அதை MicroSD கார்டு மூலம் 1TB வரை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதில் 5000mAh பேட்டரியும், Type-C போர்ட் வசதியும் உள்ளது.

விலை: ரூ.11,699

 

Moto G32

இந்த Moto G32 மொபைல் Snapdragon 680 என்ற ஆக்டாகோர் சிப்செட்டுடன் வருகிறது. இதன் பின்பக்கத்தில் 50MP முதன்மை கேமரா உட்பட 3 கேமராவும், பின்பக்கத்தில் 16 MP முன்பக்கக் கேமராவும் உள்ளது. 6.5 அங்குல, 90Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய டிஸ்ப்ளே உள்ளது. 4G மொபைலான இதில் 128GB சேமிப்புத்திறனும், அதை MicroSD கார்டு மூலம் 1TB வரை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதில் 5000mAh பேட்டரியும், Type-C போர்ட் வசதியும் உள்ளது.

விலை: ரூ.11,999

 

Tecno Spark 10C

இந்த Tecno Spark 10C மொபைல் Unisoc T606 என்ற ஆக்டாகோர் சிப்செட்டுடன் வருகிறது. இதன் பின்பக்கத்தில் 16MP முதன்மை கேமராவும், பின்பக்கத்தில் 8MP முன்பக்கக் கேமராவும் உள்ளது. 6.6 அங்குல, 90Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய டிஸ்ப்ளே உள்ளது. 4G மொபைலான இதில் 128GB சேமிப்புத்திறனும், அதை MicroSD கார்டு மூலம் 1TB வரை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதில் 5000mAh பேட்டரியும், Type-C போர்ட் வசதியும் உள்ளது.

விலை: ரூ.9,999

 

Tecno Pova 4

இந்த Tecno Pova 4 மொபைல் MediaTek Helio G99 என்ற ஆக்டாகோர் சிப்செட்டுடன் வருகிறது. இதன் பின்பக்கத்தில் 50MP முதன்மை கேமராவும், பின்பக்கத்தில் 8MP முன்பக்கக் கேமராவும் உள்ளது. 6.82 அங்குல, 90Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய டிஸ்ப்ளே உள்ளது. 4G மொபைலான இதில் 128GB சேமிப்புத்திறனும், அதை MicroSD கார்டு மூலம் 2TB வரை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதில் 6000mAh பேட்டரியும், Type-C போர்ட் வசதியும் உள்ளது.

விலை: ரூ.11,999

 

The post ரூ.12,000க்குக் கீழான விலையில் கிடைக்கும் 8GB RAM உள்ள மொபைல்கள்! first appeared on .

]]>
Moto G32 மொபைலின் 8GB + 128GB வேரியண்ட் இந்தியாவில் மார்ச் 22ல் அறிமுகமாகிறது! https://www.91mobiles.com/tamil/moto-g32-8gb-128gb-variant-tipped-to-launch-in-india-on-march-22/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=moto-g32-8gb-128gb-variant-tipped-to-launch-in-india-on-march-22 Mon, 20 Mar 2023 12:26:45 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6997   மோட்டோரோலா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் Moto G32 என்ற மொபைலை அறிமுகப்படுத்தியது. இது 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்புத் திறனுடன் வந்துள்ளது. விரைவில் இந்த மொபைலின் இன்னொரு வேரிண்டை மோட்டரோலா நிறுவனம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ், வரவிருக்கும் மார்ச் 22 ஆம் தேதி அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ளார். வரவிருக்கும் Moto G32 வேரியண்டானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புத்திறனுடன் கிடைக்கும். முந்தைய வேரியண்டைப் போலவே, […]

The post Moto G32 மொபைலின் 8GB + 128GB வேரியண்ட் இந்தியாவில் மார்ச் 22ல் அறிமுகமாகிறது! first appeared on .

]]>

Highlights

  • Moto G32வின் புதிய வேரியண்ட் மார்ச் 22 ஆம் தேதி அறிமுகமாகும் என்று டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் தெரிவித்துள்ளார்
  • இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பக உள்ளமைவில் கிடைக்கும்.
  • இந்த மொபைலை Flipkart தளத்தில் வாங்கலாம்

 

மோட்டோரோலா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் Moto G32 என்ற மொபைலை அறிமுகப்படுத்தியது. இது 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்புத் திறனுடன் வந்துள்ளது. விரைவில் இந்த மொபைலின் இன்னொரு வேரிண்டை மோட்டரோலா நிறுவனம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ், வரவிருக்கும் மார்ச் 22 ஆம் தேதி அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் Moto G32 வேரியண்டானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புத்திறனுடன் கிடைக்கும். முந்தைய வேரியண்டைப் போலவே, இதையும் Flipkart வழியாக வாங்க முடியும். இருப்பினும், ஸ்மார்ட்போனின் சரியான விற்பனை தேதி மற்றும் விலை இன்னும் மர்மமாகவே உள்ளது. பம்ப்-அப் ரேம் மற்றும் சேமிப்பகத்தைத் தவிர, Moto G32 இன் மீதமுள்ள விவரக்குறிப்புகள் பழைய மாடலைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்ப்ளே

Moto G32 ஆனது FHD+ தெளிவுத்திறனைக் கொண்ட 6.5 அங்குல் டிஸ்ப்ளே மற்றும் மேல்பக்க  மையத்தில் அமைந்த பஞ்ச்-ஹோல் கட்அவுட்டைக் கொண்டுள்ளது. இது 90Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்குகிறது. ஸ்மார்ட்ஃபோனில் பக்கவாட்டில் பாதுகாப்பிற்கென கைரேகை ஸ்கேனர் உள்ளது. கூடவே இந்த மொபைலில் IP52 தண்ணீர் தெரிப்பு-தடுப்பு வசதியும் உள்ளது.

கேமரா

இந்த moto G32 மொபைலின் முன்பக்கத்தில் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும், செல்ஃபி எடுக்கவும் 16MP  செல்ஃபி ஸ்னாப்பர் உள்ளது. கூடவே, 50MP பிரதான சென்சார், 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ யூனிட்டோடு கூடிய மூன்று பின்புற கேமரா அமைப்பும் உள்ளது. இதோடு சேர்த்து ஒரு LED ஃப்ளாஷ் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

சிப்செட்

திரையின் கீழ், மோட்டோ ஜி32 ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்புத் திறன் உள்ள இந்த மொபைலின் சேமிப்புத்திறனை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக விரிவாக்கிக் கொள்ள முடியும்.

பேட்டரி

இந்த மொபைல் 30W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியோடு வெளிவருகிறது. பெரிய பேட்டரி என்பதால் ஒரே சார்ஜில் இந்த மொபைலை அதிக நேரம் வரை உபயோகிக்க முடியும். மேலும் 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால் இதை மிக விரைவாக முழுவதுமாக சார்ஜ் செய்து கொள்ளலாம். இது Android 12 OS இல் இயங்குகிறது. இது தவிர இந்த ஸ்மார்ட்போனில் USB-C போர்ட், WiFi, Bluetooth, NFC, dual 4G VoLTE போன்ற கனெக்டிவிட்டியும் உள்ளன.

The post Moto G32 மொபைலின் 8GB + 128GB வேரியண்ட் இந்தியாவில் மார்ச் 22ல் அறிமுகமாகிறது! first appeared on .

]]>
விற்பனைக்கு வந்தது Moto G32 https://www.91mobiles.com/tamil/moto-g32-goes-on-sale-today-in-india-price-specifications-offer-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=moto-g32-goes-on-sale-today-in-india-price-specifications-offer-details Wed, 17 Aug 2022 09:00:19 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1660 மோட்டோரோலா நிறுவனம் கடந்த வாரம், இந்தியாவில் மோட்டோ ஜி32 (Moto G32) என்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்தது. இதனை அடுத்து, இந்த புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனின் விற்பனை, நேற்று முதல் துவங்கியது. இந்த புதிய Moto G32 சாதனம் என்ன விலையில், என்னென்ன சலுகைகளுடன் கிடைக்கும் என்பது போன்ற தகவலைப் பார்க்கலாம். Moto G32 விலை மற்றும் சலுகைகள் மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் உள்ள பெருமளவு பட்ஜெட் வாடிக்கையாளர்களை மையமாக வைத்து […]

The post விற்பனைக்கு வந்தது Moto G32 first appeared on .

]]>

மோட்டோரோலா நிறுவனம் கடந்த வாரம், இந்தியாவில் மோட்டோ ஜி32 (Moto G32) என்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்தது. இதனை அடுத்து, இந்த புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனின் விற்பனை, நேற்று முதல் துவங்கியது. இந்த புதிய Moto G32 சாதனம் என்ன விலையில், என்னென்ன சலுகைகளுடன் கிடைக்கும் என்பது போன்ற தகவலைப் பார்க்கலாம்.

Moto G32 விலை மற்றும் சலுகைகள்

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் உள்ள பெருமளவு பட்ஜெட் வாடிக்கையாளர்களை மையமாக வைத்து இந்த புதிய Moto G32 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த Moto G32 ஆனது 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் என்ற மாடலில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,999 என்ற விலையில் கிடைக்கிறது. இது பிளிப்கார்ட் வழியாகப் பிரத்தியேகமாக விற்பனைக்கு வந்துள்ளது.

Moto G32 வாங்கும் போது கிடைக்கும் சலுகைகள் என்ன?

இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக விற்பனையை முன்னிட்டு Motorola நிறுவனம் சில சலுகைகளையும் அறிவித்துள்ளது. இதன் படி, HDFC வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி Moto G32 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,250 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இத்துடன், Google Nest Hub மற்றும் Google Nest Mini ஆகியவற்றை Moto G32 உடன் வாங்குபவர்களுக்கு அதன் விலை முறையே ரூ.4,999 மற்றும் ரூ.1,999 என்ற கட்டணத்தில் கிடைக்கிறது.

Moto G32 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் 2400 x 1080 பிக்சல்கள் கொண்ட 90Hz ரெப்பிரஷ் ரேட் உடைய 6.5 அங்குல டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது சென்டர்டு பஞ்ச் ஹோல் LCD டிஸ்பிளேவாக வெளியாகி இருக்கிறது. இந்த பேனல் 405 PPI மற்றும் 20:9 விகிதத்தைக் கொண்டுள்ளது. Motorola நிறுவனத்தின் இந்த புதிய Moto G32 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலை பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் இது பிளாஸ்டிக் பாடியுடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. 30W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரி 30W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரி இந்த புதிய ஸ்மார்ட்போன் 4GB LPDDR4x ரேம் உடன் வருகிறது. இது சக்தி வாய்ந்த Qualcomm Snapdragon 680 சிப்செட்டின் கீழ் இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 12 இல் கிடைக்கிறது. கூடவெ இதற்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் மற்றும் மூன்று வருடப் பாதுகாப்பு அப்டேட்களை கிடைக்கும் என்று மோட்டரோலா உறுதியளித்துள்ளது. இது 5,000mAh பேட்டரி யூனிட்டைக் கொண்டுள்ளது. இது 30W பாஸ்ட் சார்ஜிங்கை வழங்குகிறது.

கேமரா

இது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் என்றாலும் கூட, இதன் கேமரா அம்சங்கள் மிகவும் சிறப்பாக அமைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் (டெப்த் சென்சாராகவும் இரட்டிப்பாகிறது) மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இதன் முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் செல்ஃபி ஸ்னாப்பர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சிம், 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, ஜிஎன்எஸ்எஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆகிய வசதிகளோடு வெளியாகி இருக்கிறது. கூடுதலாக, இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், டால்பி அட்மோஸை ஆதரிக்கும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

The post விற்பனைக்கு வந்தது Moto G32 first appeared on .

]]>
அறிமுகமானது மோட்டோரோலாவின் Moto G32 https://www.91mobiles.com/tamil/new-budget-smartphone-moto-g32-launched-in-india-flipkart-sale-date-august-16/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=new-budget-smartphone-moto-g32-launched-in-india-flipkart-sale-date-august-16 Tue, 09 Aug 2022 12:55:33 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1495 மோட்டோரோலா நிறுவனத்தின் ‘G’ சீரீஸின் கீழ், லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக Moto G32 இன்று (ஆகஸ்ட் 9, 2022) இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் அதன் விலையை விட அதிகமான வசதிகளை வழங்குகிறது என்றே கூறலாம். இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடனான 6.5-இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 680 SoC, 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 5000mAh பேட்டரி மற்றும் Android 12 OS போன்ற முக்கிய […]

The post அறிமுகமானது மோட்டோரோலாவின் Moto G32 first appeared on .

]]>

மோட்டோரோலா நிறுவனத்தின் ‘G’ சீரீஸின் கீழ், லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக Moto G32 இன்று (ஆகஸ்ட் 9, 2022) இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் அதன் விலையை விட அதிகமான வசதிகளை வழங்குகிறது என்றே கூறலாம். இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடனான 6.5-இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 680 SoC, 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 5000mAh பேட்டரி மற்றும் Android 12 OS போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டு இருக்கிறது.

மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனில் கிடைக்கும் மொபைல்களுக்கான திங்க்ஷீல்டு செக்யூரிட்டி சொல்யூஷன், தூசி & நீர் எதிர்ப்பிற்கான IP52 மதிப்பீடு, ஸ்போர்ட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு போன்ற அம்சங்கள் உங்களை கண்டிப்பாக கவர்ந்திழுக்கும்!

இரட்டை சிம் (நானோ) வசதியுடன் வரும் Moto G32 ஆனது நியர்-ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12 OS மூலம் இயங்குகிறது. இதன் 6.5-அங்குல அளவிலான டிஸ்பிளேவானது ஒரு Full HD plus (1,080 x 2,400 பிக்சல்ஸ்) LCD டிஸ்பிளே ஆகும். இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோவுடன் (Aspect ratio) வருகிறது. இதில் 4GB RAM இருக்கிறது.

Moto G32 ஆனது 50 மெகாபிக்சல் ( f/1.8) மெயின் கேமரா + 8எம்பி (f/2.2) அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி (f/2.4) மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி (f/2.4) கேமரா உள்ளது.

மோட்டோ G32 ஆனது 64GB அளவிலான சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்க முடியும். கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, டூயல்-பேண்ட் வைஃபை, 4ஜி LTE, ப்ளூடூத் v5.2, 3.5mm ஹெட்ஃபோன் போர்ட் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போன்றவைகள் உள்ளன.

ஃபேஸ் அன்லாக் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் ரீடர் உடன் வரும் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் ஆனது 33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் (Turbo power fast charging) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதில் 5,000mAh பேட்டரியும் உள்ளது. மேலும் மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் மற்றும் டூயல் மைக்ரோஃபோன்களும் உள்ளன.

இந்தியாவில் Moto G32 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.12,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மினரல் கிரே மற்றும் சாடின் சில்வர் என்கிற 2 நிறத் தேர்வுகளில், வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் Flipkart (பிளிப்கார்ட்) மற்றும் முன்னணி ஆஃப்லைன் அவுட்லெட்டுகளின் வழியாக விற்பனை செய்யப்படும்.

வாடிக்கையாளர்கள் HDFC பேங்க் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில், 10% உடனடி தள்ளுபடியை பெறலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.2,000 மதிப்பிலான ஜியோவின் கேஷ்பேக் சலுகை ஒன்றும் கிடைக்கிறது. இந்த கேஷ்பேக் ஆனது ரூ.549 ரீசார்ஜ் + Zee5 சேவையின் ஆண்டு சந்தாவின் மீதான ரூ.2,549 என்கிற தள்ளுபடியாகக் கிடைக்கும்.

The post அறிமுகமானது மோட்டோரோலாவின் Moto G32 first appeared on .

]]>
வருகிறது மோடோவின் 2 பட்ஜெட் போன்கள்! https://www.91mobiles.com/tamil/looking-for-new-budget-smartphone-2022-moto-g32-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=looking-for-new-budget-smartphone-2022-moto-g32-india Thu, 04 Aug 2022 13:00:42 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1368 நீங்கள் எதிர்பார்ப்பது பட்ஜெட் விலையில் ஒரு மொபைல் என்றால், நிச்சயம் இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கானது தான். அது Moto G32 ஸ்மார்ட்போன் ஆகும். இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், மோட்டோ ஜி32 மாடலை தொடர்ந்து, மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய 5G ஸ்மார்ட்போனாக Moto G62 மொபைலும் இந்தியாவில் அறிமுகமாகிறது. அதுவும் கூட பட்ஜெட் விலையில் தான் அறிமுகம் ஆகிறது. அறிமுகம் எப்போது? இந்தியாவில், மோட்டோரோலா நிறுவனம் தனது ஜி-சீரிஸின் கீழ் 2 புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட தயாராக […]

The post வருகிறது மோடோவின் 2 பட்ஜெட் போன்கள்! first appeared on .

]]>

நீங்கள் எதிர்பார்ப்பது பட்ஜெட் விலையில் ஒரு மொபைல் என்றால், நிச்சயம் இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கானது தான். அது Moto G32 ஸ்மார்ட்போன் ஆகும்.

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், மோட்டோ ஜி32 மாடலை தொடர்ந்து, மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய 5G ஸ்மார்ட்போனாக Moto G62 மொபைலும் இந்தியாவில் அறிமுகமாகிறது. அதுவும் கூட பட்ஜெட் விலையில் தான் அறிமுகம் ஆகிறது.

அறிமுகம் எப்போது?

இந்தியாவில், மோட்டோரோலா நிறுவனம் தனது ஜி-சீரிஸின் கீழ் 2 புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட தயாராக உள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன்கள் ஒரே நாளில் அறிமுகம் ஆகாது; மாறாக தனித்தனியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதாவது மோட்டோ ஜி32 ஆனது ஆகஸ்ட் 9 ஆம் தேதி அறிமுகமாகும். மோட்டோ ஜி62 5ஜி ஆனது ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும்.

லெனோவாவுக்கு சொந்தமான இந்நிறுவனம் மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தோடு, அது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதையும் உறுதி செய்துள்ளது. மை ஸ்மார்ட் ப்ரைஸ் (my smart price) உடன் இணைந்து டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆகஸ்ட் 9 இல் அறிமுகமாகும் Moto G32 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,000 முதல் ரூ.13,000 க்குள் இருக்கும்.

இந்த மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனை Flipkart வழியாக வாங்க முடியும். இதில் 4GB RAM, 64GB அளவிலான சேமிப்புத்திறனும் இருக்கலாம். இதன் சேமிப்புத்திறனை மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி 1 டிபி வரை நீட்டிக்க முடியும். இது தவிர்த்து Moto G32 ஆனது சாடின் சில்வர் (satin silver) மற்றும் மினரல் கிரே (mineral gray) என்கிற 2 நிறத் தேர்வுகளில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி32வில் இருக்கும் அம்சங்கள்

Moto G32 ஆனது 6.5 அங்குல LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate) மற்றும் Full HD plus ரெசல்யூஷனை வழங்கும். இதன் டிஸ்பிளேவில் செல்ஃபி கேமராவிற்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட்டும் இடம்பெறும். மோட்டோரோலோவின் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 680 சிப்செட் உடன் வரும்.

கேமரா, இயங்குதளம், பேட்டரி?

மொபைலின் பின்பக்கம் 50MP + 118-டிகிரி FOV லென்ஸுடன் 8MP அல்ட்ரா-வைட் சென்சார் + 2MP மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் கேமரா செட்டப்பைக் கொண்டிருக்கிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை, 16MP செல்ஃபி கேமரா இருக்கும். ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான UI கொண்டு இயங்கும் Moto G32 ஆனது 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 30W fast charging-ஐ கொண்டிருக்கிறது.

Moto G62 5G விலை என்ன?

முன்னரே குறிப்பிட்டபடி, இந்தியாவில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி, மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன், ரூ15,000 என்கிற பட்ஜெட்டை ஒட்டி அறிமுகமாகும். பின்னர், ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று அறிமுகமாகும் மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போன் அதிகபட்சமாக ரூ.17,000 வரை செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.

மோட்டோ G62 5G ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் Snapdragon 480+ SoC உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்தியாவில் இது சற்றே சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 695 மூலம் இயக்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இருக்கிறது. அதில் 50MP முதன்மை கேமரா + 8எம்பி அல்ட்ராவைடு கேமரா (இது டெப்த் சென்சார் ஆகவும் செயல்படும்) + 2எம்பி மேக்ரோ சென்சார் உள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரியை கொண்டிருக்கிறது. மேலும் இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-அங்குல LCD டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது.

The post வருகிறது மோடோவின் 2 பட்ஜெட் போன்கள்! first appeared on .

]]>
மிரட்டலான அம்சங்களுடன் அறிமுகமான Moto G32 https://www.91mobiles.com/tamil/moto-g32-coming-soon-to-india-what-to-expect-from-a-budget-price-smartphone/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=moto-g32-coming-soon-to-india-what-to-expect-from-a-budget-price-smartphone Mon, 01 Aug 2022 04:17:26 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1216 பட்ஜெட் விலையில் உங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வருகிறது Moto G32 ஸ்மார்ட்போன். மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள, இந்த புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் வரும் பட்ஜெட் சார்ந்த ஸ்மார்ட்போனாக ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோ ஜி32 ஒரு 4G ஸ்மார்ட்போன் மாடலாகும். இந்த புதிய மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் டிவைஸில் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமராக்களை நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் புதிய ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் […]

The post மிரட்டலான அம்சங்களுடன் அறிமுகமான Moto G32 first appeared on .

]]>

பட்ஜெட் விலையில் உங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வருகிறது Moto G32 ஸ்மார்ட்போன். மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள, இந்த புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் வரும் பட்ஜெட் சார்ந்த ஸ்மார்ட்போனாக ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோ ஜி32 ஒரு 4G ஸ்மார்ட்போன் மாடலாகும்.
இந்த புதிய மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் டிவைஸில் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமராக்களை நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் புதிய ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்குகிறது.

Moto G32 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

Moto G32 ஸ்மார்ட்போன் ஆனது 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.5 அங்குல அளவு உடைய LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 90Hz ரெப்ரெஷிங் ரேட் உடன், 405 ppi மற்றும் 20:9 ரேட்ஸியோ உடன் வருகிறது. பட்ஜெட் விலையில் கிடைக்கக்கூடிய சிறந்த டிஸ்பிளே இது என்பது கவனிக்கத்தக்கது.

பட்ஜெட்டில் 1TB வரையிலான ஸ்டோரேஜா?

இந்த புதிய மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் 6GB வரையிலான ரேம், 128GB சேமிப்புத்திறனுடன் வருகிறது. ஸ்மார்ட்போன் பயனர்களின் கூடுதல் ஸ்டோரேஜ்க்காக, micro SD card வழியாக 1TB வரையிலான எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் வசதியை வழங்கியுள்ளது. பட்ஜெட் போனில் 1TB ஸ்டோரேஜ் என்பது சிறந்த விஷயம் தான்.

புதிய MOTO G32 போனின் கேமரா அம்சம்

இந்த ஸ்மார்ட்போனின் கேமராவைப் பொருத்தவரை புதிய MOTO G32 மூன்று பின்புற கேமராகளுடன் கூடிய ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது. இதன் முதன்மைக் கேமரா 50 மெகா பிக்சல் கொண்ட f/1.8 சென்சார் உடன் வருகிறது. இதன் இரண்டாம் கேமரா 8 மெகா பிக்சல் கொண்ட f/2.2 உடைய அல்ட்ரா வைட் சென்சார் உடன் வருகிறது. அதேபோல், இந்த ஸ்மார்ட்போன் மூன்றாவது கேமரா 2 மெகா பிக்சல் f/2.4 உடைய மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, இந்த சாதனம் 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க ஷூட்டரைப் பயன்படுத்துகிறது.

டர்போ சார்ஜ் அம்சத்துடன் 5,000mAh பேட்டரி

முன்பே சொன்னது போல, இந்த டிவைஸ் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது. பேட்டரி மற்றும் சார்ஜிங் அம்சங்களைப் பற்றிப் பார்க்கையில் இது 30W டர்போ சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதில் பாதுகாப்புக்காகப் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்
(finger print scanner) உள்ளது. இந்த போனில் பேஸ் அன்லாக் (face unlock) வசதியும் உள்ளது.

மிரட்டலான அம்சங்களுடன் அறிமுகமான Moto G32

புதிய மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களைப் பற்றிப் பேசுகையில், இந்த புதிய டிவைஸ் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு மைக்ரோஃபோன்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் உள்ள இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் v5.2, GPS, A-GPS, GLONASS, NFC, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB Type-C போர்ட் போன்றவை அடங்கும். இந்த புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Moto G32 ஸ்மார்ட்போன் விலை என்ன?

மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் இப்போது 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இரண்டு வகை மாடல்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ. 16,600 விலையில் தொடங்குகிறது. இந்த சாதனம் வரும் வாரங்களில் லத்தீன் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் வெளியிடப்படும் என்று motorola உறுதி செய்துள்ளது. Moto G32 ஸ்மார்ட்போன் மினரல் கிரே, சாடின் சில்வர் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய மூன்று நிறங்களில் வருகிறது.

The post மிரட்டலான அம்சங்களுடன் அறிமுகமான Moto G32 first appeared on .

]]>