Xiaomi 13 series https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 07:18:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மொபைல் வேர்ல்டு காங்கிரஸின் இந்த வார நிகழ்வில் 12 புதிய போன்கள் வெளியாகின்றன! https://www.91mobiles.com/tamil/12-new-phones-launching-in-global-markets-and-india-this-week-check-upcoming-smartphones-list/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=12-new-phones-launching-in-global-markets-and-india-this-week-check-upcoming-smartphones-list Sun, 26 Feb 2023 13:11:04 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6086 பார்ஸிலோனா நாட்டில் நாளை (27-02-2023) முதல் மார்ச் 2 வரை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (Mobile World Congress 2023) என்னும் நிகழ்வு நடக்க இருக்கிறது. இந் நிகழ்வில் மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய மொபைல்களையும். வருங்காலத்தில் தாங்கள் கொண்டு வர இருக்கும் தொழில்நுட்பங்களையும் பார்வைக்கு வைப்பார்கள். அப்படி பல நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்த் இருக்கின்றன. அவைகளில் சில போன்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால் அவைகளின் மாடல் பெயர்கள் மற்றும் […]

The post மொபைல் வேர்ல்டு காங்கிரஸின் இந்த வார நிகழ்வில் 12 புதிய போன்கள் வெளியாகின்றன! first appeared on .

]]>

Highlights

  • ஒன்றல்ல, இரண்டல்ல.. மார்ச் 1-க்குள் மொத்தம் 12 புதிய போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
  • ஷாவ்மி நிறுவனம், இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கும் உலகலாவிய நிகழ்வில், அதன் ஷாவ்மி 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

பார்ஸிலோனா நாட்டில் நாளை (27-02-2023) முதல் மார்ச் 2 வரை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (Mobile World Congress 2023) என்னும் நிகழ்வு நடக்க இருக்கிறது. இந் நிகழ்வில் மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய மொபைல்களையும். வருங்காலத்தில் தாங்கள் கொண்டு வர இருக்கும் தொழில்நுட்பங்களையும் பார்வைக்கு வைப்பார்கள். அப்படி பல நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்த் இருக்கின்றன. அவைகளில் சில போன்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால் அவைகளின் மாடல் பெயர்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் ஏற்கனவே உள்ளன!

Xiaomi 13, Xiaomi 13 Pro மற்றும் Xiaomi 13 Lite

ஷாவ்மி நிறுவனம், இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கும் உலகலாவிய நிகழ்வில், அதன் ஷாவ்மி 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் கீழ் ஷாவ்மி 13, ஷாவ்மி 13 ப்ரோ மற்றும் ஷாவ்மி 13 லைட் என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும்.

 

ஷாவ்மி 13 சீரிஸ்

ஷாவ்மி 13 சீரிஸில் லைக்காவால் ட்யூன் செய்யப்பட்ட கேமராக்கள் இடம்பெறலாம். மேலும் இதில் ஒன்பிளஸ் 11, ஐக்யூ 11 போன்ற போன்களில் உள்ள லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் இடம்பெறலாம். இதுதவிர 12ஜிபி வரை ரேம் மற்றும் 256 இன்டர்னல் ஸ்டோரேஜ் ஒதுக்கப்படலாம். திடீர் விலைக்குறைப்பு!

Realme GT 3

ரியல்மியின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக ரியல்மி ஜிடி 3 வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஏற்கனவே சீனாவில் அறிமுகமான ரியல்மி ஜிடி நியோ 5 (Realme GT Neo 5) என்கிற ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாகும். இது 150W மற்றும் 240W என்கிற 2 சார்ஜிங் ஸ்பீட் வகைகளில் கிடைக்கும். மேலும் 6.74 அங்குல 10-பிட் 144ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட், 50எம்பி சோனி IMX890 மெயின் கேமரா, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் போன்ற முக்கிய அம்சங்களையும் கொண்டு இருக்கும்.

 

Honor Magic 5 Series & Honor Magic Vs ஃபோல்டபிள் போன்

ஹானர் நிறுவனம் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 6 மணிக்கு உலகளாவிய நிகழ்வொன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்நிகழ்வில் 4 ஸ்மார்ட்போன்களை உள்ளடக்கிய ஹானர் மேஜிக் 5 சீரிஸ் மற்றும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஹானர் மேஜிக் விஎஸ்-ஐ அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹானர் மேஜிக் 5 சீரீஸின் கீழ் ஹானர் மேஜிக் 5, ஹானர் மேஜிக் 5 ப்ரோ, ஹானர் மேஜிக் 5 அல்டிமேட் மற்றும் ஹானர் மேஜிக் 5 லைட் என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். அவைகளில் முதல் 3 போன்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டும், கடைசி மாடலில் எஸ்டி 695 ப்ராசஸரும் இடம்பெறலாம்.

Vivo V27 சீரிஸ்

Vivo V27, Vivo V27 Pro மற்றும் Vivo V27e விவோவின் புதிய வி27 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற மார்ச் 1 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் கீழ் விவோ வி27, விவோ வி27 ப்ரோ மற்றும் விவோ வி27இ என மொத்தம் 3 மாடல்கள் வெளியாகும். இந்த மூன்றுமே சீனாவில் விற்கப்படும் விவோ எஸ்16 சீரீஸின் ரீபிராண்டட் வெர்ஷன்களாகும்.

 

The post மொபைல் வேர்ல்டு காங்கிரஸின் இந்த வார நிகழ்வில் 12 புதிய போன்கள் வெளியாகின்றன! first appeared on .

]]>
விரைவில் இந்தியா வரும் ஷாவ்மி 13 ப்ரோ https://www.91mobiles.com/tamil/xiaomi-13-pro-launching-soon-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=xiaomi-13-pro-launching-soon-in-india Tue, 24 Jan 2023 05:57:11 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5292 சமீபகாலமாக ஷாவ்மி அறிமுகம் செய்யும் எந்த போனும் அந்தளவிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதை நிவர்த்தி செய்யவே ஷாவ்மி இந்த ஸ்மார்ட்போனை இந்திய சந்தைக்கு கொண்டு வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் மொத்த கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ஷாவ்மி 13 என்ற புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. MWC 2023 நிகழ்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஷாவ்மி தனது ஷாவ்மி 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்தது. ஷாவ்மி 13 சீரிஸ் இல் […]

The post விரைவில் இந்தியா வரும் ஷாவ்மி 13 ப்ரோ first appeared on .

]]>

Highlights

  • Xiaomi 13 Pro இந்திய BIS சான்றிதழ் தளத்தில் தோன்றி இருக்கிறது.
  • இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக ஷாவ்மி அறிமுகம் செய்யும் எந்த போனும் அந்தளவிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதை நிவர்த்தி செய்யவே ஷாவ்மி இந்த ஸ்மார்ட்போனை இந்திய சந்தைக்கு கொண்டு வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் மொத்த கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ஷாவ்மி 13 என்ற புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. MWC 2023 நிகழ்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஷாவ்மி தனது ஷாவ்மி 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்தது. ஷாவ்மி 13 சீரிஸ் இல் ஷாவ்மி 13 மற்றும் ஷாவ்மி 13 ப்ரோ ஆகிய மாடல்கள் இடம்பெற்றுள்ளது. உலக சந்தையிலும் இதே மாடல்களில் ஷாவ்மி 13 சீரிஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் MWC 2023 நிகழ்வில் ஷாவ்மி இந்த ஸ்மார்ட்போனை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சான்றிதழ் தளங்களில்

ஷாவ்மி 13 சீரிஸ் ப்ரோ மாடல் இந்திய BIS சான்றிதழ் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் தாய்லாந்து NBTC சான்றிதழ் இணையதளத்திலும் தோன்றி இருப்பதாக கூறப்படுகிறது.

டிப்ஸ்டர் முகுல் சர்மா மூலம் Xiaomi 13 Pro ஆனது மாடல் எண் Xiaomi 2210132G உடன் இந்திய BIS சான்றிதழ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் NBTC சான்றிதழ் இணையதளத்திலும் தோன்றி இருக்கிறது. ஆனால் அங்கு Xiaomi 13 ஆனது மாடல் எண் 2211133G உடன் டேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு மாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5ஜி ஆதரவு போனாக இருக்கும் என்பது NBTC சான்றிதழ் தளத்தின் மூலம் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷாவ்மி 13 சீரிஸ் இல் உள்ள இரண்டு போன்களும் இந்தியாவில் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த வேறு எந்த தகவலும் சான்றிதழ் தளங்களில் கண்டறியப்பட முடியவில்லை என கூறப்படுகிறது.

 

Xiaomi Xiaomi 13 Pro சிறப்பம்சங்கள்

Xiaomi 13 Pro முன்னதாகவே சீனாவில் அறிமுகமாகி உள்ளது. அதன்படி இதன் அம்சங்களை பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடனான 6.73 அங்குல QHD+ அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது.

கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், ஷாவ்மி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று கேமராக்களைக் கொண்டிருக்கிறது. மூன்றும் 50 எம்பி சென்சார் தான். அதாவது இதில் 50MP + 50MP + 50MP என டிரிபிள் ரியர் கேமராக்கள் இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்ஃபி ஆதரவுக்கு என 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

 

இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸ் இல் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. அதேபோல் இதில் 4820 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் வழங்கப்பட்டுள்ளது.

The post விரைவில் இந்தியா வரும் ஷாவ்மி 13 ப்ரோ first appeared on .

]]>
டிச.1 மீண்டும் களம் இறங்கும் ஷாவ்மி https://www.91mobiles.com/tamil/best-premium-smartphone-xiaomi-13-series-to-launch-on-december-1/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=best-premium-smartphone-xiaomi-13-series-to-launch-on-december-1 Tue, 29 Nov 2022 06:27:05 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3960 ஷாவ்மி நிறுவனம் Xiaomi 13 சீரிஸ் டிசம்பர் 1 2022 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த தொடரில் ஷாவ்மி 13 வெண்ணிலா, ஷாவ்மி 13 ப்ரோ ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் குவால்காம் இன் முதன்மை சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என தகவல்கள் வந்துள்ளன. லெதர் ஃபினிஷ் பேனல் ஷாவ்மி 13 தொடரின் இரண்டு ரெண்டர்கள் இணையதளத்தில் கசிந்துள்ளன. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனின் பின்புற வடிவமைப்பு மற்றும் சில வண்ண விருப்பங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. […]

The post டிச.1 மீண்டும் களம் இறங்கும் ஷாவ்மி first appeared on .

]]>

ஷாவ்மி நிறுவனம் Xiaomi 13 சீரிஸ் டிசம்பர் 1 2022 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த தொடரில் ஷாவ்மி 13 வெண்ணிலா, ஷாவ்மி 13 ப்ரோ ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் குவால்காம் இன் முதன்மை சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என தகவல்கள் வந்துள்ளன.

லெதர் ஃபினிஷ் பேனல்

ஷாவ்மி 13 தொடரின் இரண்டு ரெண்டர்கள் இணையதளத்தில் கசிந்துள்ளன. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனின் பின்புற வடிவமைப்பு மற்றும் சில வண்ண விருப்பங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்பது இதில் இடம்பெறும் சிப்செட் குறித்த தகவலை வைத்தே கணிக்கமுடிகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் லெதர் ஃபினிஷ் கொண்ட பிரவுன் கலர் ஆப்ஷனை கொண்டிருக்கும் என புதிய ரெண்டர் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல் பின்புறத்தில் சதுர வடிவத்தில் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தெரிகிறது. அதேபோல் இதன் பிரேம் அலுமினியத்தால் செய்யப்பட்டது போல் இருக்கிறது. ப்ரீமியம் விலை பிரிவு ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்பதை இதனைக் கொண்டு முடிவு செய்யலாம்.

சிறப்பம்சங்கள்

Xiaomi 13 சிறப்பம்சங்கள் குறித்து வெளியான தகவலை பார்க்கலாம். ஷாவ்மி 13 சீரிஸ் இல் ஷாவ்மி 13 மற்றும் ஷாவ்மி 13 ப்ரோ இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த இரண்டு மாடல்களிலும் 2கே தெளிவுத்திறன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.2 அங்குல எல்டிபிஓ அமோலெட் டிஸ்ப்ளே இடம்பெறும் என கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்

Xiaomi 13 சீரிஸ் ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் என தெரிகிறது. குவால்காம் இன் மிகவும் சமீபத்திய சக்தி வாய்ந்த சிப்செட் இது ஆகும். இதே சிப்செட் தான் ஒன்பிளஸ் 11 ப்ரோ, ஐக்யூ 11 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ், மோட்டோரோலா எட்ஜ் 40 அல்ட்ரா போன்ற பிற உயர்நிலை ஸ்மார்ட்போன்களிலும் இடம்பெறுகிறது.

கேமரா

Xiaomi 13 சீரிஸ் இன் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி சோனி IMX989 1 அங்குல முதன்மை சென்சார் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த சென்சார் ஆனது OIS ஆதரவை கொண்டிருக்கும். இதில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறும் எனத் தெரிகிறது. அதன்படி 50 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் இரண்டாம் நிலை கேமராவாகவும் மற்றும் 50 எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் மூன்றாம் நிலை கேமராவாகவும் இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவில்..

Xiaomi 13 Pro மாடலில் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4800 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான எம்ஐயூஐ 13 மூலம் இயங்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டும் தானா என்றால் அதுதான் இல்லை. Xiaomi 13 சமீபத்தில் BIS (Bureau of Indian Standards) சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

The post டிச.1 மீண்டும் களம் இறங்கும் ஷாவ்மி first appeared on .

]]>