ஒவ்வொரு விலைப்பிரிவிலும் சிறந்த 5ஜி போன்கள்!

இந்த பண்டிகை காலத்தில் உங்களுக்காக ஒரு புது 5ஜி போனை (5G Phones) வாங்க விரும்பினாலோ? அல்லது உங்களுக்கு பிடித்தவர்களுக்காக ஒரு புதிய 5ஜி போனை வாங்க நினைத்தாலோ இந்த பதிவு உங்களுக்கு பயன்படும். அனைத்து விலை செக்மென்ட்டிலும் வாங்க கூடிய பெஸ்ட் 5G போன்களை இதில் தொகுத்து இருக்கிறோம்.

ரூ15,000 விலைக்குள்..

ஒப்போ (Oppo) , சாம்சங் (Samsung), லாவா (Lava) மற்றும் பல பிராண்டுகள் 5G போன்களை ரூ.15,000 விலைக்குள் வழங்குகின்றன. அவற்றில், Samsung Galaxy M13 5G, Redmi 11 Prime 5G மற்றும் Poco M4 5G ஆகியவை சிறந்த போன்களாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் இந்தியா (Amazon India) போன்ற இ-காமர்ஸ் தளங்களிலிருந்து இந்த போன்களை எளிதாக வாங்கலாம்.

Samsung Galaxy M13 5G (4ஜிபி + 64ஜிபி) அமேசான் இந்தியாவில் ரூ.11,999க்கு விலையில் கிடைக்கிறது. Redmi 11 Prime 5G மற்றும் Poco M4 5G ஆகியவை முறையே ரூ.12,999 (4ஜிபி+64ஜிபி) மற்றும் ரூ.12,499 (4ஜிபி+64ஜிபி) இல் கிடைக்கிறது. Lava Blaze 5G (4ஜிபி + 128ஜிபி) அமேசான் வழியாக ரூ. 10,999 விலையில் கிடைக்கிறது. இந்தியாவின் குறைந்த விலை 5ஜி போன் இதுதான்.

ரூ 15,000 – ரூ. 30,000 விலைக்குள்..

OnePlus Nord 2T 5G, OnePlus Nord CE 2 Lite 5G, Realme Narzo 50 Pro 5G மற்றும் Samsung Galaxy M53 5G ஆகியவை ரூ15,000 முதல் ரூ. 30,000 விலைக்குள் கிடைக்கின்றன.
OnePlus Nord 2T 5G (8ஜிபி +128ஜிபி) விலை ரூ.28,999 இல் தொடங்குகிறது. OnePlus Nord CE 2 Lite 5G (6ஜிபி + 128ஜிபி) விலை ரூ.18,999 இல் வருகிறது. இதில் கிடைக்கும் OnePlus மொபைலகள் நிறுவனத்தின் புதிய Oxygen OS 13 உடன் வருகின்றது. இதோடு, Realme Narzo 50 Pro 5G மற்றும் Samsung Galaxy M53 5G ஆகியவை முறையே ரூ.21,999 (6ஜிபி +128 ஜிபி) மற்றும் ரூ.26,999 (8ஜிபி +128ஜிபி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் இந்த 30,000 ரூபாய் பிரிவில் கிடைக்கிறது. இங்கு நாங்கள் சில குறிப்பிட்ட மாடல்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்.

ப்ரீமியம் போன்கள்

30,000 ரூபாய்க்கு மேல் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன் மாடல்களும் பிரீமியம் ஸ்மார்ட்போன் (Premium smartphone) அல்லது ஹாஃப் பிரீமியம் ஸ்மார்ட்போன் (half-premium smartphone) என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரிவில் OnePlus 10T 5G, OnePlus 10 Pro 5G, Samsung Galaxy S22, Samsung Galaxy S21 FE 5G மற்றும் iPhone 14 ஆகியவற்றை வாங்கலாம். இதன் விலை பட்ஜெட் செக்மென்ட்டிற்கும், அல்ட்ரா பிரீமியம் செக்மென்ட்டிற்கும் இடையில் இருப்பதால் சிறந்த அம்சங்களை நீங்கள் பெறலாம்.

OnePlus 10T 5G விலை ரூ. 44,999 (8ஜிபி + 128ஜிபி), OnePlus 10 Pro 5G விலை ரூ.61,999 (8ஜிபி + 128 ஜிபி), Samsung Galaxy S22 5G விலை ரூ. 52,999 (8ஜிபி + 128 ஜிபி), Samsung Galaxy S21 FE 5G விலை ரூ. 32,990 (8ஜிபி+128ஜிபி), மற்றும் ஐபோன் 14 ரூ.75,990 (128ஜிபி) என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.

அல்ட்ரா பிரீமியம்

நீங்கள் அல்ட்ரா பிரீமியம் பிரிவில் 5G போன்களைத் (Ultra-Premium 5G phones) தேடுகிறீர்களானால், உங்களுக்கு மூன்று விருப்பங்கள் மட்டுமே இருக்கும் – iPhone 14 Pro, iPhone 14 Pro Max மற்றும் Samsung Galaxy S22 Ultra மாடல்கள் மட்டுமே சிறந்த போன்களாக இருக்கிறது. ஐபோன் 14 ப்ரோ ரூ. 1,29,900 (128 ஜிபி) மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ரூ. 1,39,900 (256 ஜிபி) இல் தொடங்குகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா விலை ரூ.1,09,999 (12ஜிபி+256ஜிபி) இல் தொடங்குகிறது. சாம்சங் விரைவில் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா மொபைலை அறிமுகப்படுத்த இருக்கிறது. எனவே, சாம்சங் கேலக்ஸி எஸ் 22 அல்ட்ராவை வாங்குவதற்கு முன் கொஞ்சம் யோசிக்கவும்.