Lava Blaze 1X 5G மொபைலின் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் கசிந்தன

Highlights

  • Lava Blaze 1X 5G அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது
  • இந்த மொபைல் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது
  • Lava Blaze 1X 5G கண்ணாடி பின் பேனலுடன் வருகிறது

 

இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லாவா விரைவில் இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் Lava Agni 2, Lava Blaze 1X 5G மொபைல்கள் அடங்கும். இவற்றில், லாவா அக்னி 2 மிக விரைவில் வெளியிடப்படும். இதன் பிறகு Lava Blaze 1X 5G அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த போன் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.

ஆனால் சமீபத்தில், Lava Blaze 1X 5G சாதனத்தின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் புதிய கசிவு மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அரித்ரா சர்க்கார் என்ற ட்விட்டர் பயனாளி, லாவா மொபைல்களில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் Lava Blaze 1X 5G வடிவமைப்பு வெளியாகியுள்ளது.

மேலும், பிரபல டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் Lava Blaze 1X 5G மொபைலின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பகிர்ந்துள்ளார் .

 

லாவா பிளேஸ் 1X 5G லீக்ஸ் அம்சங்கள்

Lava Blaze 1X 5G ஆனது விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். அறிமுகத்திற்கு முன்னதாக, Lava Blaze 1X 5G போன் வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த போன் பிளாட் பிரேம், ப்ளூ கலர் ஆப்ஷன் மற்றும் கிளாஸ் பேக் உடன் வரும் என்று கசிந்த படத்திலிருந்து தெரிகிறது. Lava Blaze 1X 5G சாதனம் பிரீமியம் பொருட்களுடன் வர வாய்ப்புள்ளது.

 

Lava Blaze 1X 5G சாதனம் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருவதாகத் தெரிகிறது. டூயல்-டோன் கேமரா மாட்யூலில் LED ஃபிளாஷ் தெரியும். தொலைபேசியின் முன்பக்கத்தில் மெல்லிய பக்க பெசல்கள் மற்றும் தடிமனான கீழ் கன்னம் உள்ளன. வலதுபுறத்தில் ஆற்றல் பொத்தான், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது.

லாவா பிளேஸ் 1X 5G விவரக்குறிப்புகள் (கசிவு)

டிஸ்ப்ளே

Lava Blaze 1X 5G ஆனது 6.5 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

 

வண்ண விருப்பங்கள் & கனெக்டிவிட்டி

Lava Blaze 1X 5G மொபைல் Glass Blue மற்றும் Glass Green வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. USB Type-C போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ஸ்பீக்கர் கிரில் ஆகிய கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. இந்த போன்  n1/n3/n5/n8/n28/n41/n77/n78 என பல்வேறு 5ஜி பேண்டுகளை ஆதரிக்கிறது.

சிப்செட் & மெமரி

Lava Blaze 1X 5G ஆனது MediaTek Dimension 700 சிப்செட்டைக் கொண்டிருக்கும். இது ஒரு நுழைவு நிலை சிப்செட். இந்த போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜ் உள்ளது.

 

பேட்டரி & சார்ஜ்

Lava Blaze 1X 5G ஆனது பவர் பேக்கப்பிற்காக 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும். லாவா நிறுவனம்  இதற்கான 12W சார்ஜரை மொபைலோடு வழங்கும்.

கேமரா

கசிவின் படி, லாவா பிளேஸ் 1X 5G மொபைலானது 50MP பிரதான கேமரா, 2MP இரண்டாம் நிலை கேமரா மற்றும் VGA லென்ஸ் என மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.. இந்த போனில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8எம்பி முன்பக்க கேமரா இருக்கும்.

 

OS

Lava Blaze 1X 5G மொபைல் Android 12 OS உடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 8.9 மிமீ தடிமன் மற்றும் 207 கிராம் எடை கொண்டது.