honda https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 10:58:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 2024 ஜனவரியில் வருகிறது ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். சிஇஓ தகவல்! https://www.91mobiles.com/tamil/honda-ceo-confirms-activa-electric-scooter-launch/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=honda-ceo-confirms-activa-electric-scooter-launch Wed, 25 Jan 2023 07:03:43 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5343 சிறப்பு அம்சங்களைக் கொண்ட புதிய ஆக்டிவா ஸ்கூட்டர் மாடலை ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஜனவரி 23 அன்று அறிமுகப்படுத்தியது. புதிய ஆக்டிவாவின் எச்-ஸ்மார்ட் வேரியண்டை அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாக அது உருவாக்கி இருக்கின்றது. இந்த மாடலுக்கு  மட்டும் கார்களுக்கு வழங்கப்படுவதைப் போல ஸ்மார்ட் சாவி வசதியை ஹோண்டா வழங்கி இருக்கின்றது. இது சாவியே இல்லாமல் டூ-வீலரை இயக்க அனுமதிக்கும். இத்தகைய தரமான ஸ்கூட்டராக ஆக்டிவாவை அப்டேட் செய்து, ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் […]

The post 2024 ஜனவரியில் வருகிறது ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். சிஇஓ தகவல்! first appeared on .

]]>

Highlights

  • சமீபத்தில் புதிய ஆக்டிவா ஸ்கூட்டரின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
  • அதில் ஹோண்டா நிறுவனத்தின் சிஇஓ அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது அறிமுகம் ஆகும் என்ற தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

சிறப்பு அம்சங்களைக் கொண்ட புதிய ஆக்டிவா ஸ்கூட்டர் மாடலை ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஜனவரி 23 அன்று அறிமுகப்படுத்தியது. புதிய ஆக்டிவாவின் எச்-ஸ்மார்ட் வேரியண்டை அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாக அது உருவாக்கி இருக்கின்றது. இந்த மாடலுக்கு  மட்டும் கார்களுக்கு வழங்கப்படுவதைப் போல ஸ்மார்ட் சாவி வசதியை ஹோண்டா வழங்கி இருக்கின்றது.

இது சாவியே இல்லாமல் டூ-வீலரை இயக்க அனுமதிக்கும். இத்தகைய தரமான ஸ்கூட்டராக ஆக்டிவாவை அப்டேட் செய்து, ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த வாகனத்தின் அறிமுக நிகழ்வில் கலந்துக் கொண்ட ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ-வுமான அட்சுஷி ஒகடா, யாரும் எதிர்பார்த்திராத ஓர் தகவலை வெளியிட்டார்.

 

எப்போது வெளியீடு?

அதன்படி ஹோண்டா எப்போது அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. 2024 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் ஹோண்டா அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பது அவர் நிகழ்ச்சியில் பேசியதன் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. ஆக்டிவா ஸ்கூட்டர் மாடலிலேயே நிறுவனத்தின் முதல் மின்சார இருசக்கர வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

 

திறன்

இது மணிக்கு 50 கிமீ வேகம் மற்றும் ஃபுல் சார்ஜில் 80 கிமீ முதல் 100 கிமீ வரையிலான ரேஞ்ஜ் திறன் கொண்டதாகவே விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நகர்புற பயன்பாடு மற்றும் அலுவல் ரீதியான பயன்பாடுகளுக்கு என இந்த வாகனம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. எனவேதான் போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்டிலும் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைவான திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகின்றது.

போட்டி

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் விடா வி1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஃபுல் சார்ஜில் 165 கிமீ ரேஞ்ஜ் தரும் வாகனமாக உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதைவிட திறன் கொண்டதாகவே ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாராகிக் கொண்டிருக்கின்றது. ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி இன்னும் சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையும் விற்பனைக்குக் கொண்டு வர திட்டம் போட்டு இருக்கின்றது. அது முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என தெரிகின்றது.

 

புதிய பிளாட்பாரம்

அவற்றை புதிய பிளாட்பாரத்தில் ஹோண்டா நிறுவனம் உருவாக்கி வருகின்றது. குறிப்பாக, ஆக்டிவாவைக் காட்டிலும் அதிக வசதிகள் மற்றும் திறன்மிக்கதாக அதை நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. ஆக்டிவாவில் வழங்கப்படாத அம்சங்கள் பலவற்றையும் இந்த புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் மூலம் ஹோண்டா வழங்கும் எனக் கூறப்படுகிறது. போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கும் ரேஞ்ஜ் திறன், அதிக பவர்ஃபுல் மின் மோட்டார்கள் மற்றும் பன்முக நவீன கால அம்சங்கள் என எக்கச்சக்க அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

 

அம்சங்கள்

ஸ்வாப்பபிள் பேட்டரி பேக், செல்போன் இணைப்பு, வாகனத்தை லைவாக டிராக் செய்யும் அம்சம் உள்ளிட்டவையும் ஹோண்டாவின் இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கலாம். இதுபோன்று இன்னும் பல ஏராளமான அம்சங்கள் இதில் இடம் பெற இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தீவிரம்

ஹோண்டா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் முன்னரே, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுக்கும் பணியில் களமிறங்கி விட்டது. அந்தவகையில், ஹோண்டா நிறுவனம் அதன் மற்றுமொரு அங்கமான ஹோண்டா பவர் பேக் எனெர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்கீழ் பெங்களூருவில் உள்ள பகுதிகளில் பேட்டரி ஸ்வாப் மையங்களை அமைக்கும் பணியில் களமிறங்கி இருக்கிறது.

 

The post 2024 ஜனவரியில் வருகிறது ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். சிஇஓ தகவல்! first appeared on .

]]>
ஆட்டோ பைலட், ப்ளேஸ்டேஷன் வசதிகளோடு அறிமுகமான ப்ரோடோடைப் எலெக்ட்ரிக் கார் அஃபீலா! https://www.91mobiles.com/tamil/honda-sony-afeela-prototype-revealed-ces-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=honda-sony-afeela-prototype-revealed-ces-2023 Mon, 09 Jan 2023 10:47:58 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4812 ஹோண்டாவும், சோனியும் இணைந்து உருவாக்கி இருக்கும் மின்சார கார் வெளியீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற சிஇஎஸ் நிகழ்ச்சியில் சோனி- ஹோண்டா கூட்டணியில்,  ‘அஃபீலா’ எனும் எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்துள்ளன. இது ஓர் எலெக்ட்ரிக் செடான் ரக காராகும். சோனியின் விஷன் எஸ் எலெக்ட்ரிக் காரை போலவே இது இருப்பதை நம்மால் உணர முடிகிறது. சோனி நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிஇஎஸ் நிகழ்ச்சியின்போது கான்செப்ட் […]

The post ஆட்டோ பைலட், ப்ளேஸ்டேஷன் வசதிகளோடு அறிமுகமான ப்ரோடோடைப் எலெக்ட்ரிக் கார் அஃபீலா! first appeared on .

]]>

ஹோண்டாவும், சோனியும் இணைந்து உருவாக்கி இருக்கும் மின்சார கார் வெளியீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற சிஇஎஸ் நிகழ்ச்சியில் சோனி- ஹோண்டா கூட்டணியில்,  ‘அஃபீலா’ எனும் எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்துள்ளன. இது ஓர் எலெக்ட்ரிக் செடான் ரக காராகும். சோனியின் விஷன் எஸ் எலெக்ட்ரிக் காரை போலவே இது இருப்பதை நம்மால் உணர முடிகிறது. சோனி நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிஇஎஸ் நிகழ்ச்சியின்போது கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்த எலெக்ட்ரிக் காரே விஷன் எஸ் ஆகும்.

காருக்குள் பிளே ஸ்டேஷன்!

இந்த காரில் யாரும் எதிர்பார்த்திராத தொழில்நுட்ப வசதிகளை வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் பெரிய திரை, பிளே ஸ்டேஷன், போன்ற சிறப்பம்சங்கள் எல்லாம் இடம் பெற இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால், இந்த காரில் பயணிக்கும்போது என்டர்டெயின்மென்டுக்கு சற்றும் குறைச்சலே இருக்காது. சோனி, ஹோண்டா தயாரித்திருக்கும் இந்த காரில் ஆட்டோ பைலட் போன்ற சிறப்பு வசதிகளையும் வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில முக்கிய சேவைகளை நிறுவனம் சந்தா திட்டத்தின்கீழ் வழங்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. காரை விற்பதனால் கிடைக்கும் லாபம் மட்டுமின்றி, விற்பனைக்கு பின்னரும் தொடர்ச்சியாக லாபத்தை ஈட்டும் வகையில் பல்வேறு சிறப்பு சேவைகளை அஃபீலாவில் வழங்க சோனி திட்டமிட்டுள்ளது.

சொகுசு வசதிகள் ஏராளம்

வடிவமைப்பைப் பொருத்த வரை மிகவும் நேர்த்தியான காராக அஃபீலாவை சோனி- ஹோண்டா கூட்டணி உருவாக்கி இருக்கின்றது. தான் ஓர் சொகுசு வசதிகள் நிறைந்த கார் என்பதை தோற்றத்திலேயே அஃபீலா நமக்கு உறுதிப்படுத்துகின்றது. இதில் கை பிடிகளை நம்மால் காண முடியவில்லை. கார் உரிமையாளர் அருகில் தானாகவே திறக்கும் வசதி இதில் கொடுக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே காரின் எந்த கதவிலும் கை பிடி வழங்கப்படவில்லை.

இதேபோல், பின் பக்கத்தை பார்ப்பதற்கு கண்ணாடிகளுக்கு பதிலாக கேமிராக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இது காருக்குள் இருந்தபடியே காரை சுற்றிலும் நடை பெறும் சம்பவங்களை நேரடியாக திரை வாயிலாக காண்பிக்கும். எனவே சிறு சிறு அசைவுகளைகூட தவற விடாமல் நம்மால் காண முடியும். இந்த காரை உருவாக்கியதில் ஹோண்டா நிறுவனத்தின் பங்களிப்பை போலவே சோனியின் பங்களிப்பும் மிக அதிகமாகவே உள்ளது. தொழில்நுட்ப கருவிகளின் உருவாக்கத்திலும் சோனி பெரும் பங்களிப்பை வழங்கி இருக்கின்றது.

பெரிய பேட்டரி

அனைத்திலும் அஃபீலா மிக சிறப்பான எலெக்ட்ரிக் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, தற்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு எலெக்ட்ரிக் காரிலும் இல்லாத அம்சங்கள் பல இதில் இடம் பெற இருக்கின்றது. ஆகையால், ஆப்பிள் நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் மிக சிறந்த போட்டியாளனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அஃபீலா கான்செப்ட் எலெக்ட்ரிக் காரில் 100 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மைலேஜ்

இதை ஒரு முறை சார்ஜ் செய்யும்பட்சத்தில் 500 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இந்த கார் விற்பனைக்காக தயாரிக்கப்படும்போது இதைவிட அதிகம் ரேஞ்ஜ் தரும் வகையில் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உயர் ரக தொழில்நுட்பங்களான ஹை டெக் சென்சார்கள், கேமிராக்கள், லிடார் சென்சார்கள் மற்றும் ரேடார் மாடுல்கள் உள்ளிட்டவையும் அஃபீலாவில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செமி -அட்டானமஸ் டிரைவிங்கை வழங்கும் விதமாக இந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விலை

இதுமட்டுமின்றி, ரிமோட் வாயிலாகவே கார் இருக்கும் இடம் இடத்தைக் கண்டறிதல் மற்றும் நம்மை தேடி காரை வரவழைத்தல் போன்றவற்றை செய்து கொள்ள முடியும். அஃபீலா எலெக்ட்ரிக் ரூ. 82 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதலில் இந்த எலெக்ட்ரிக் கார் அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கிறது. 2025 அல்லது 2026 ஆம் ஆண்டுகளுக்குள் இதன் விற்பனை தொடங்கிவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவுக்கு வருவதற்கு பெரும்பாலும் வாய்ப்பு இல்லை.

The post ஆட்டோ பைலட், ப்ளேஸ்டேஷன் வசதிகளோடு அறிமுகமான ப்ரோடோடைப் எலெக்ட்ரிக் கார் அஃபீலா! first appeared on .

]]>
ஆக்டிவா ஸ்கூட்டரின் 7வது தலைமுறையை அறிமுகப்படுத்த இருக்கிறது ஹோண்டா! https://www.91mobiles.com/tamil/honda-plans-to-launch-activa-7g-scooter-with-hybrid-engine/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=honda-plans-to-launch-activa-7g-scooter-with-hybrid-engine Tue, 29 Nov 2022 08:57:17 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3968 ஹோண்டா நிறுவனம் விரைவில் தனது ஆக்டிவா ஸ்கூட்டரின் அடுத்த தலைமுறையான ஆக்டிவா 7ஜி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய தலைமுறையில் பழைய தலைமுறை ஸ்கூட்டரிலிருந்து ஏராளமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. புதிய இன்ஜின், புதிய டிசைன் மற்றும் ஏராளமான தொழிற்நுட்பங்கள் உள்ளிட்டவற்றுடன் புதிய தோற்றத்தில் வரப்போகும் ஆக்டிவா பைக் குறித்த விரிவான தகவல்களை இங்கே காணலாம். இன்று இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டர் என்ற பெருமை ஆக்டிவாவிற்கு இருக்கிறது. பல ஆண்டுகளாக இதன் இடத்தை வேறு ஸ்கூட்டர்களாலும் […]

The post ஆக்டிவா ஸ்கூட்டரின் 7வது தலைமுறையை அறிமுகப்படுத்த இருக்கிறது ஹோண்டா! first appeared on .

]]>

ஹோண்டா நிறுவனம் விரைவில் தனது ஆக்டிவா ஸ்கூட்டரின் அடுத்த தலைமுறையான ஆக்டிவா 7ஜி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய தலைமுறையில் பழைய தலைமுறை ஸ்கூட்டரிலிருந்து ஏராளமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. புதிய இன்ஜின், புதிய டிசைன் மற்றும் ஏராளமான தொழிற்நுட்பங்கள் உள்ளிட்டவற்றுடன் புதிய தோற்றத்தில் வரப்போகும் ஆக்டிவா பைக் குறித்த விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

இன்று இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டர் என்ற பெருமை ஆக்டிவாவிற்கு இருக்கிறது. பல ஆண்டுகளாக இதன் இடத்தை வேறு ஸ்கூட்டர்களாலும் பிடிக்க முடியவில்லை. ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டரின் மார்கெட்டை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள இந்த ஸ்கூட்டரை அவ்வப்போது அப்டேட் செய்வது வருகின்றனர். இதுவரை 6 தலைமுறை ஸ்கூட்டர்கள் அறிமுகமாகியுள்ள நிலையில் தற்போது ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டரின் அடுத்த அப்டேட்டாக 7ஜி என்ற புதிய தலைமுறை ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இஞ்சின் மாற்றம்

ஹோண்டா நிறுவனம் இந்த புதிய தலைமுறை ஆக்டிவா 7ஜி ஸ்கூட்டரில் முக்கியமாக இதன் இன்ஜினை மாற்றவுள்ளது. தற்போது பெட்ரோல் இன்ஜின் இந்த ஸ்கூட்டருக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இது மாற்றப்பட்டு 109 சிசி ஹைபிரிட் இன்ஜின் இந்த ஸ்கூட்டருக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒரே நேரத்தில் பேட்டரி மற்றும் பெட்ரோலில் இயங்கும்படியாக ஹைபிரிட் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழிற்நுட்பம் கார்களில் இப்பொழுது பிரபலமாகவுள்ளது. இப்படியாக ஹைபிரிட் இன்ஜின் வழங்கப்பட்டால் இந்த ஸ்கூட்டரின் மைலேஜ் பெருமளவு அதிகரிக்கும்.

மைலேஜ்

ஆனால் தற்போது இந்த ஸ்கூட்டரில் வரப்போவது ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜினா அல்லது மைல்டு ஹைபிரிட் இன்ஜினா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஹோண்டா நிறுவனம் லிட்டருக்கு 100 கி.மீ மைலேஜ் தரும் படி இதன் இன்ஜினை தயாரித்து வருவதாகச் செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இதை ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.

தொழில்நுட்பம்

ஹைபிரிட் தொழிற்நுட்பம் மட்டுமல்ல இந்த ஸ்கூட்டரில் ஐடியல் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழிற்நுட்பமும் பொருத்தப்படவுள்ளது. அதாவது சிக்னல்களில் நிற்கும் போது நீண்ட நேரம் ஸ்கூட்டர் நின்றால் இன்ஜின் தானாக நின்று விடும். பின்னர் கிளம்பும் போது பிரேக்கை லேசாக அழுத்தினாலே போதும் இன்ஜின் ஸ்டார்ட் ஆகி உடனடியாக அங்கிருந்து கிளம்பி விடலாம். இந்த தொழிற்நுட்பமும் பைக்கின் மைலேஜை அதிகரிக்க உதவுகிறது. இதனால் பைக்கின் சிக்னல்களில் நிற்கும் போது இன்ஜின் இயங்குவதற்குத் தேவையான பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தலாம்.

பிற மாற்றங்கள்

விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய ஆக்டிவா 7ஜி ஸ்கூட்டரில் தற்போது உள்ள தலைமுறை ஸ்கூட்டரில் உள்ளதை விட பெரியதான வீல் மற்றும் டயர்கள் பொருத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்ததாக தற்போது விற்பனையில் உள்ள தலைமுறையில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் அனலாக் முறையில் இருக்கிறது. புதிய தலைமுறை ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் இடம்பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஓடோ மீட்டர், பெட்ரோல் இன்டிகேட்டர், உள்ளிட்ட ஏராளமான தகவல்கள் இடம்பெறவுள்ளன. இந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வெறும் கிளஸ்டர் அப்டேட் மட்டுமல்ல மாறாக இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷனும் வரவிருக்கிறது.

வசதிகள்

மேலும் இந்த புதிய தலைமுறை ஸ்கூட்டர் ஹைபிரிட் ஆப்ஷன் உடன் வரவுள்ளதாக முன்பே கூறியிருந்தோம். இந்த ஹைபிரிட்டை ஆன்/ ஆஃப் செய்ய ஸ்விட்ச் ஒன்றும் வழங்கப்படவுள்ளது. ஹைபிரிட் ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே ஹைபிரிட் ஆப்ஷன் செயலில் இருக்கும். இல்லை என்றால் வெறும் பெட்ரோலில் மட்டுமே இயங்கும் ஸ்கூட்டராக செயல்படும். புதிய தலைமுறை 7ஜி ஸ்கூட்டரில் டிசைனை பொருத்தவரை ஹோண்டா நிறுவனம் அதன் அடிப்படை டிசைனில் எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை என்றும், தற்போதைய தலைமுறை ஸ்கூட்டரில் உள்ள டிசைனிலேயே சிறு சிறு மாற்றங்களை மட்டும் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் முதல் தலைமுறை ஸ்கூட்டர் முதல் விரைவில் வெளியாகவுள்ள 7ம் தலைமுறை ஸ்கூட்டர் வரை எல்லாம் கிட்டத்தட்ட ஒரே டிசைனில் தான் இருக்கும்.

The post ஆக்டிவா ஸ்கூட்டரின் 7வது தலைமுறையை அறிமுகப்படுத்த இருக்கிறது ஹோண்டா! first appeared on .

]]>
அறிமுகமானது ஹோண்டாவின் எலக்ட்ரிக் மொபெட் EM1 https://www.91mobiles.com/tamil/honda-unveiled-em1-electric-moped-at-2022-eicma/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=honda-unveiled-em1-electric-moped-at-2022-eicma Fri, 11 Nov 2022 06:08:58 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3551 ஹோண்டா நிறுவனம் இஎம்1 (Honda EM1) எலெக்ட்ரிக் மொபட் ஒன்றை பிரத்யேகமாக ஐரோப்பிய சந்தைக்காக உருவாக்கி இருக்கிறது. 2022 இஐசிஎம்ஏ (EICMA) வாகன கண்காட்சி இத்தாலி நாட்டின் மிலன் பகுதியில் நடைபெற்றுக் வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருக்கும் வாகன உற்பத்தியாளர்கள் பங்கேற்று தங்களது புதுமுக வாகனங்களை காட்சிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், நம் தமிழகத்தைச் சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை முதல் முறையாக காட்சிப்படுத்தியது. விரைவில் இந்த […]

The post அறிமுகமானது ஹோண்டாவின் எலக்ட்ரிக் மொபெட் EM1 first appeared on .

]]>

ஹோண்டா நிறுவனம் இஎம்1 (Honda EM1) எலெக்ட்ரிக் மொபட் ஒன்றை பிரத்யேகமாக ஐரோப்பிய சந்தைக்காக உருவாக்கி இருக்கிறது.

2022 இஐசிஎம்ஏ (EICMA) வாகன கண்காட்சி இத்தாலி நாட்டின் மிலன் பகுதியில் நடைபெற்றுக் வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருக்கும் வாகன உற்பத்தியாளர்கள் பங்கேற்று தங்களது புதுமுக வாகனங்களை காட்சிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், நம் தமிழகத்தைச் சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை முதல் முறையாக காட்சிப்படுத்தியது. விரைவில் இந்த பைக்கை உலகளவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை முன்னிட்டு இஐசிஎம்ஏ-வில் இப்பைக்கை வெளியீடு செய்தது. இதேபோல் இன்னும் பல நிறுவனங்கள் தங்களின் புதுமுக மற்றும் எதிர்கால தயாரிப்புகளை இந்த கண்காட்சியில் வெளியீடு செய்து வருகின்றனர்.

அந்தவகையில், இஐசிஎம்ஏ கண்காட்சியில் இணைந்திருக்கும் ஹோண்டா நிறுவனமும் அதன் எதிர்கால தயாரிப்புகளில் ஒன்றான இஎம்1 (Honda EM1) எனும் இருசக்கர வாகனத்தைக் காட்சிப்படுத்தி இருக்கிறது.

இது ஓர் எலெக்ட்ரிக் மொபட் (electric moped) ரக வாகனமாகும். இதைக்குறிக்கும் வகையிலேயே பெயரில், ‘EM’ என சேர்க்கப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் வெகுவிரைவில் உலகளவில் 10 புதுமுக மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது. 2025ம் ஆண்டிற்கு இந்த இலக்கை அடைய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே ஹோண்டா நிறுவனம் அதன் அட்டகாசமான இஎம்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வாகன கண்காட்சியின் வாயிலாக இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றது. பிரத்யேகமாக இந்த வாகனத்தை ஐரோப்பிய சந்தைக்காக ஹோண்டா தயாரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகையால், முதலில் ஐரோப்பாவிலேயே இந்த வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதற்கு பின்னர் வேண்டுமானால் உலக நாடுகள் பிறவற்றில் இந்த வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், இந்தியாவில் இந்த மின்சார டூ-வீலர் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தற்போது இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரேவற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதை வைத்தே இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் இவ்வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என கருதப்படுகின்றது. அதேவேளையில், இதன் வருகை குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

ஹோண்டா நிறுவனம் இந்த மின்சார வாகனத்தை இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் காம்பேக்ட்டான (அடக்கமான) தோற்றத்தில் உருவாக்கியிருக்கின்றது. மேலும், இலகுவான எடையிலும் இவ்வாகனத்தைக் கட்டமைத்திருக்கின்றது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் சுலபமான இயக்க அனுபவத்தை இவ்வாகனம் வழங்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான யுக்திகளை ஹோண்டா கையாண்டிருக்கின்றது.

கச்சிதமான தோற்றத்தில் உருவாக்கப்பட்ட இந்த வாகனத்தில் சிறப்பம்சங்களையும் வாரி வழங்க ஹோண்டா தயங்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. பெரிய கால் வைக்கும் இடம், பெரிய மற்றும் அகலமான இருக்கை மற்றும் பொருட்களை ஏற்றி செல்ல ஏதுவாக கேரியர் செட்-அப் உள்ளிட்டவை இஎம்1 எலெக்ட்ரிக் மொபட்டில் வழங்கப்பட்டிருக்கின்றது.
தினசரி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருப்பதால் இதில் மிக சிறிய பேட்டரி பேக்கையே ஹோண்டா பயன்படுத்தியிருக்கின்றது. ஓர் முழு சார்ஜில் 40 கிமீ ரேஞ்ஜ் மட்டுமே வழங்கக் கூடிய சிறிய பேட்டரி பேக்கே இஎம்1 இ-மொபட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் மிக மிகக் குறைவான வேகத்தில் பயணிக்கக் கூடிய மின்சார மோட்டாரே இவ்வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்தும் தினசரி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே இந்த வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளது. சிறிய பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இதன் விலையும் குறைவானதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஒரு சில மாதங்களில் இவ்வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

The post அறிமுகமானது ஹோண்டாவின் எலக்ட்ரிக் மொபெட் EM1 first appeared on .

]]>
முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது ஹீரோ https://www.91mobiles.com/tamil/heros-vida-electric-scooter-unveil-on-october-7/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=heros-vida-electric-scooter-unveil-on-october-7 Mon, 19 Sep 2022 10:01:10 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2432 ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா பிராண்டின் கீழ் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் இந்திய வெளியீட்டு விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அக்டோபர் 7 ஆம் தேதி எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க இருக்கிறது. இந்திய சந்தையில் விடா பிராண்டின் கீழ் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்கூட்டர் ஜூலை 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருந்த நிலையில், […]

The post முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது ஹீரோ first appeared on .

]]>

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா பிராண்டின் கீழ் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் இந்திய வெளியீட்டு விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அக்டோபர் 7 ஆம் தேதி எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க இருக்கிறது. இந்திய சந்தையில் விடா பிராண்டின் கீழ் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

முன்னதாக இந்த ஸ்கூட்டர் ஜூலை 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருந்த நிலையில், திடீரென இதன் அறிமுக தேதி மாற்றப்பட்டது. சிப்செட் குறைபாடு காரணமாகவே ஸ்கூட்டர் வெளியீடு தாமதமானது. தற்போது இந்த ஸ்கூட்டரின் வெளியீடு அக்டோபர் மாத முதல் வாரத்தில் நடைபெற இருக்கிறது.

கடந்த ஆண்டு இந்த ஸ்கூட்டரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதில் குறிப்பிட்டபடி புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அசத்தல் ஸ்டைலிங் மற்றும் சிறப்பான செயல்திறனைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்வதற்கு மாற்றாக புது ஸ்கூட்டரை அனைவரும் வாங்கக்கூடிய விலை பிரிவில் அறிமுகம் செய்ய விடா பிராண்டு முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டதும் ஹீரோ விற்பனை மையங்களை வந்தடையும் என தெரிகிறது.

முதற்கட்டமாக இந்த ஸ்கூட்டர் தேர்வு செய்யப்பட்ட சில நகரங்களில் மட்டும் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. ஹீரோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் பஜாஜ் செட்டாக் மற்றும் டிவிஎஸ் ஐகியூப் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

இந்நிலையில் ஹோண்டா 2 வீலர்ஸ் நிறுவனமும் எலக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் களமிறங்க முடிவு செய்து இருப்பதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் எப்போது அறிமுகமாகும் இது எந்த மாடலாக இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் முதன்மை மாடலாக எலெக்ட்ரிக் மொபெட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகமாகும் என தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவன தலைவர், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அடுஷி ஒகடா தெரிவித்தார்.

எலெக்ட்ரிக் பைக், எலெக்ட்ரிக் மொபெட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் என மூன்று பிரிவுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்த ஹோண்டா முடிவு செய்து இருக்கிறது. மூன்று பிரிவுகளிலும் அதிக வேகம் தான் வித்தியாசமாக இருக்கும். எலெக்ட்ரிக் பைக் பிரிவில் வாகனத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆக இருக்கும். இந்த வாகனங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எலெக்ட்ரிக் மொபெட் மாடல் மணிக்கு அதிகபட்சம் 50 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும். இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் எலெக்ட்ரிக் மொபெட் தான் என்றும் அடுஷி ஒகடா தெரிவித்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து அதிவேகமாக செல்லும் எலெக்ட்ரிக் வாகனம் அறிமுகம் செய்யப்படும்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான கவனம் சமீப காலங்களில் அதிகரித்து வந்த போதிலும், கம்யுட்டர் மோட்டார்சைக்கிள் பிரிவில் பெட்ரோல் மாடல்களுக்கு இன்னமும் அதிக வரவேற்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது, இதன் காரணமாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஹோண்டாவின் முதன்மை கவனம் இந்த பிரிவின் மீது செலுத்தப்படும் என மேலும் அவர் தெரிவித்தார்.

The post முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது ஹீரோ first appeared on .

]]>
10 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்க இருக்கிறது ஹோண்டா! https://www.91mobiles.com/tamil/honda-confirmed-10-electric-models-globally-by-2025/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=honda-confirmed-10-electric-models-globally-by-2025 Wed, 14 Sep 2022 13:03:23 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2317 ஜப்பானிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா வெகு விரைவில் 10 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் உற்பத்தி பணிகளைத் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்சார இருசக்கர வாகனங்களை உருவாக்கும் பணியில் மிக தீவிரமாக ஹோண்டா நிறுவனம் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிறுவனம் அடுத்தடுத்து 10 புதிய எலெக்ட்ரிக் டூ-வீலர்களை உலகளவில் வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அனைத்தும் வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சார இருசக்கர வாகனங்களின் உற்பத்தியை குறிப்பிடும் வகையில் […]

The post 10 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்க இருக்கிறது ஹோண்டா! first appeared on .

]]>

ஜப்பானிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா வெகு விரைவில் 10 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் உற்பத்தி பணிகளைத் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்சார இருசக்கர வாகனங்களை உருவாக்கும் பணியில் மிக தீவிரமாக ஹோண்டா நிறுவனம் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிறுவனம் அடுத்தடுத்து 10 புதிய எலெக்ட்ரிக் டூ-வீலர்களை உலகளவில் வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அனைத்தும் வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்சார இருசக்கர வாகனங்களின் உற்பத்தியை குறிப்பிடும் வகையில் தயாரித்திருக்கும் பிரசன்டேஷன் படங்களே தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. இந்த படங்களின் வாயிலாகவே நிறுவனம் ஒட்டுமொத்தமாக பத்து புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது என்பது வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது.

இவை சீனா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கான வாகனங்கள் என்பதும் அந்த பிரசன்டேஷன் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. மேலும், இதில் இருப்பவற்றில் ஐந்து இருசக்கர வாகனங்கள் தினசரி பயன்பாட்டிற்கு (கம்யூட்டர்)-ஆனவை என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இவை மட்டுமின்றி நிறுவனத்தின் லிஸ்டில் நியோ ரெட்ரோ, க்ரூஸர் மற்றும் பெரிய மேக்ஸி ரக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களும் உள்ளன.

இதுதவிர சிறுவர்களுக்கான டர்ட் ரக எலெக்ட்ரிக் பைக்கும் ஹோண்டா நிறுவனத்தின் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன. இந்த அனைத்து வாகனங்களும் 2024 தொடங்கி 2025 ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களுக்கு சற்று கூடுதல் வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த சூழலை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக ஹோண்டா நிறுவனம் இந்தியாவிலும் அதன் சில எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது கசிந்திருக்கும் படங்களைப் பார்க்கையில், ஆக்டிவா வெர்ஷனிலும் ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்து எந்தவொரு தகவலையும் ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றாலும், இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் இப்போதே இவ்வாகனத்திற்காக ஆவலுடன் காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

இந்தியாவில் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. இதனாலேயே இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டரைக் காட்டிலும் பல மடங்கு மாறுபட்ட தோற்றத்தில் இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது சற்று புதுமையான மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தைப் பெற்றிருக்கும். குறிப்பாக, இது ஓர் எலெக்ட்ரிக் வாகனம் என்பதை வெளிக்காட்டுகின்ற வகையில் குறிப்பிட்ட சில மாற்றங்களும் இடம் பெற இருக்கின்றன. ஆனால், என்ன மாதிரியான மாற்றங்கள் மற்றும் என்ன மாதிரியான சிறப்பு வசதிகளுடன் அது சந்தையை வந்தடையும் என்பதை ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கவில்லை.

நவீன காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்ப கருவிகள் மற்றும் ஸ்வாப்பபிள் பேட்டரி டெக்னாலஜி உள்ளிட்ட அம்சங்கள் ஹோண்டா ஆக்டிவா ஸ்டைலிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

The post 10 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்க இருக்கிறது ஹோண்டா! first appeared on .

]]>