electric scooter https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 09:42:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 அறிமுகமானது சேத்தக்கின் ப்ரீமியம் எடிஷன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! https://www.91mobiles.com/tamil/bajaj-chetak-premium-edition-electric-scooter-launched/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=bajaj-chetak-premium-edition-electric-scooter-launched Fri, 03 Mar 2023 09:25:16 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6214 ‘சேத்தக்’ பெயருக்கு அறிமுகமே தேவையில்லை என நினைக்கிறேன். 1990ஆம் காலக்கட்டங்களில் பிரபலமாக இருந்த சேத்தக் பெயரில் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த 2020 ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் புதிய 2023ஆம் ஆண்டிற்காக புதியதாக சேத்தக் பிரீமியம் எடிசன் புத்துணர்ச்சியான பெயிண்ட் தேர்வில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உள்பட முக்கிய விபரங்களைப் பார்க்கலாம். விலை 2023 சேத்தக் பிரீமியம் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை […]

The post அறிமுகமானது சேத்தக்கின் ப்ரீமியம் எடிஷன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! first appeared on .

]]>

Highlights

  • பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய பிரீமியம் எடிசனை சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.
  • 2023 சேத்தக் பிரீமியம் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.52 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

‘சேத்தக்’ பெயருக்கு அறிமுகமே தேவையில்லை என நினைக்கிறேன். 1990ஆம் காலக்கட்டங்களில் பிரபலமாக இருந்த சேத்தக் பெயரில் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த 2020 ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் புதிய 2023ஆம் ஆண்டிற்காக புதியதாக சேத்தக் பிரீமியம் எடிசன் புத்துணர்ச்சியான பெயிண்ட் தேர்வில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உள்பட முக்கிய விபரங்களைப் பார்க்கலாம்.

விலை

2023 சேத்தக் பிரீமியம் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.52 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெயருக்கேற்ப புதிய சேத்தக் பிரீமியம் எடிசன் ஸ்கூட்டரில் பல்வேறு இடங்களில் பிரீமியம் தரத்திலான மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது ஊடக அறிக்கையிலும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், புதிய பிரீமியம் எடிசனுக்கு மேலும் சில புதிய பெயிண்ட் தேர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய நிறங்கள்

மேட் கோர்ஸ் கிரே, மேட் கரீபியன் நீலம் மற்றும் சாடின் கருப்பு என்பவை அந்த புதிய பெயிண்ட் தேர்வுகளாகும். புதிய சேத்தக் பிரீமியம் எடிசனுக்கான முன்பதிவுகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏற்க துவங்கியுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு ஸ்கூட்டரை டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.22 லட்சம் என்ற அளவில் உள்ளது.

 

கூடுதல் வசதி

அதனுடன் ஒப்பிடுகையில் புதிய பிரீமியம் எடிசனின் விலை ஆனது ஏறக்குறைய ரூ.30 ஆயிரம் அதிகமாகும். இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த புதிய சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்ன உள்ளது என கேட்டால், வண்ண நிறத்திலான பெரிய எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் திரை பொருத்தப்பட்டுள்ளது. இது ஓட்டுனருக்கு தேவையான விபரங்களை வண்ண நிறங்களில் வழங்கும். இதனுடன் ஸ்கூட்டரின் இருக்கை ஆனது இரு நிறங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்

பாடி கலரில் ரியர் வியூ மிரர்கள், சாடின் கருப்பு நிற க்ராப் ரெயில் மற்றும் அதற்கு பொருத்தமான பில்லன் ஃபுட்ரெஸ்ட் கேஸ்டிங், பிளிங்கர்ஸ் மற்றும் மைய ட்ரிம் பாகங்கள் உள்ளிட்டவை மற்ற அப்டேட்களாகும். ஸ்கூட்டரின் முன்பக்க ஹெட்லேம்ப்பை சுற்றிலும் கருப்பு நிறத்தில் கேசிங் பொருத்தப்பட்டுள்ளது. புதிய சேத்தக் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராக்கேஷ் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

The post அறிமுகமானது சேத்தக்கின் ப்ரீமியம் எடிஷன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! first appeared on .

]]>
டாப் ஸ்பீடு 60கிமீ, மைலேஜ் 100கிமீ.. அறிமுகமானது ‘ரைடர் சூப்பர்மேக்ஸ்’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! https://www.91mobiles.com/tamil/gemopai-ryder-supermax-electric-scooter-launched-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=gemopai-ryder-supermax-electric-scooter-launched-in-india Wed, 01 Mar 2023 12:06:29 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6160 பேட்டரி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் BLDC Hub Motor பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 2.7 kW பவரை வெளிப்படுத்தும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருப்பது AIS-156-க்கு இணக்கமான 1.8 kW பேட்டரி ஆகும். இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 100 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாப் ஸ்பீடு இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

The post டாப் ஸ்பீடு 60கிமீ, மைலேஜ் 100கிமீ.. அறிமுகமானது ‘ரைடர் சூப்பர்மேக்ஸ்’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! first appeared on .

]]>

Highlights

  • இந்தியாவின் ஜெமோபாய் (Gemopai) நிறுவனம் ரைடர் சூப்பர்மேக்ஸ் (Ryder Supermax) என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
  • எலெக்ட்ரிக் ப்ளூ, கிராபைட் க்ரே, பிளாசிங் ரெட், ஸ்பார்க்கிளிங் ஒயிட், ஜாஸி நியான் மற்றும் ஃப்ளோசரண்ட் யெல்லோ என 6 கலர்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும்.

பேட்டரி

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் BLDC Hub Motor பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 2.7 kW பவரை வெளிப்படுத்தும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருப்பது AIS-156-க்கு இணக்கமான 1.8 kW பேட்டரி ஆகும். இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 100 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு

இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேகம் நமக்கு போதுமான ஒன்றாக இருக்கும். இதுதவிர இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஜெமோபாய் கனெக்ட் செயலி தொழில்நுட்ப வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் நிகழ் நேரத்தில் கண்காணிக்க முடியும்.

 

விலை

அத்துடன் பேட்டரி, வேகம் தொடர்பான எச்சரிக்கைகள் மற்றும் எப்போது சர்வீஸ் செய்ய வேண்டும்? என்ற நினைவூட்டல்களையும் இது வழங்கும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பி வழியில் ஜெமோபாய் ரைடர் சூப்பர்மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 79,999 ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

முன்பதிவு

அத்துடன் இது அறிமுக சலுகை விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஜெமோபாய் ரைடர் சூப்பர்மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் 10ம் தேதியில் இருந்து தொடங்குகின்றன. ஜெமோபாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Website) மூலமாகவோ அல்லது அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் (Dealerships) மூலமாகவோ வெறும் 2,999 ரூபாயை முன்பணமாக செலுத்தி, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் (Booking) செய்து கொள்ளலாம்.

யுலு மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் இணைந்து மிராகில் GR மற்றும் DeX GR மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த இரு நிறுவனங்களின் கூட்டணியில் தனிநபர் பயன்பாடு மற்றும் டெலிவரிக்காக தனித்தனி மாடல்கள் அறிமுகமாகி உள்ளன.

மிராகில் GR & டெக்ஸ் GR

இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கிறது. யுலு மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் இணைந்து மிராகில் GR மற்றும் DeX GR மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களும் யுலு நிறுவனத்தின் ஏஐ சார்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இவற்றை செட்டாக் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது. மிராகில் GR தனிநபர் பயன்பாட்டு வாகனம் ஆகும். இதனை குறைந்த தூர போக்குவரத்துக்கு ஏற்ற வாகனமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. DeX GR மாடல் வினியோக பயன்பாட்டுக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சம் 150 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும்.

வசதிகள்

இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் ஹெட்லைட், டெயில்லைட், டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், ரியர் ஸ்ப்ரிங்குகள், இரு வீல்களிலும் டிரம் பிரேக்குகள் உள்ளன. கடந்த மூன்று மாதங்களில் இந்த எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் நாடு முழுக்க முக்கிய நகரங்களில் சுமார் ஒரு லட்சம் வாகனங்களை இயக்க ஆயத்தமாகி இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் யுலு நிறுவனம் வருவாயை பத்து மடங்கு வரை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. பஜாஜ் ஆட்டோ உடனான கூட்டணி மூலம் யுலு நிறுவனம் செலவீனங்களை குறைப்பது மற்றும் ஒட்டுமொத்த நிதி மேலான்மையை மேம்படுத்தி, உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்துகிறது.

 

பேட்டரி

யுலு ஃப்ளீட்டில் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிகள் உள்ளன. இவை யுமா எனர்ஜி மூலம் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. தற்போது பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி பகுதிகளில் சுமார் 100 யுமா ஸ்டேஷன்கள் உள்ளன. 2024 வாக்கில் இந்த எண்ணிக்கையை 500 ஆக அதிகப்படுத்த இந்நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

 

The post டாப் ஸ்பீடு 60கிமீ, மைலேஜ் 100கிமீ.. அறிமுகமானது ‘ரைடர் சூப்பர்மேக்ஸ்’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! first appeared on .

]]>
4 புதிய நிறங்களில் வெளியானது பேட்ரே ஸ்டோரி எலெட்ரிக் ஸ்கூட்டர்! https://www.91mobiles.com/tamil/battre-announced-4-new-colour-options-for-storie-electric-scooter/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=battre-announced-4-new-colour-options-for-storie-electric-scooter Fri, 24 Feb 2023 07:25:01 +0000 https://www.91mobiles.com/tamil/?p=6064 பேட்ரே ஸ்டோரி (Battre Storie) ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக விளங்கும் பேட்ரே ஸ்டோரி (Battre Storie) எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 4 புதிய நிறங்கள் ரூ.89,600 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய நிறங்களில் சந்தையில் பிரபலமான இந்த பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எவ்வாறு உள்ளது என்பது குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம். ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் […]

The post 4 புதிய நிறங்களில் வெளியானது பேட்ரே ஸ்டோரி எலெட்ரிக் ஸ்கூட்டர்! first appeared on .

]]>

Highlights

  • ஸ்டோரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர், புதிதாக ஐஸ் நீலம், ஸ்டார்லைட் நீலம், கேண்டி சிவப்பு மற்றும் இக்ரு மஞ்சள் என 4 நிறங்களில் வெளியாகி இருக்கிறது
  • இந்த ஸ்கூட்டர் ரூ.89,600 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேட்ரே ஸ்டோரி (Battre Storie)

ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக விளங்கும் பேட்ரே ஸ்டோரி (Battre Storie) எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 4 புதிய நிறங்கள் ரூ.89,600 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய நிறங்களில் சந்தையில் பிரபலமான இந்த பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எவ்வாறு உள்ளது என்பது குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம். ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் பேட்ரே எலக்ட்ரிக் மொபைலிட்டி ஆகும். இந்த நிறுவனத்தின் பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றான ஸ்டோரி மாடலுக்கு புதிய 2023ஆம் ஆண்டை முன்னிட்டு ஐஸ் நீலம், ஸ்டார்லைட் நீலம், கேண்டி சிவப்பு மற்றும் இக்ரு மஞ்சள் என 4 நிறத்தேர்வுகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன.

 

4 புதிய நிறங்களில்!

பேட்ரே ஸ்டோரி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.89,600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நிறங்களுடன் மிட்நைட் கருப்பு, ஸ்டோர்மி கிரே மற்றும் எலக்ட்ரிக் நீலம் என வழக்கமான நிறங்களிலும் ஸ்டோரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பொறுத்தவரையில் இது குறைவான விலையே ஆகும். இதனால்தான் இந்த பேட்ரே எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு விற்பனையில் ஓலாவின் விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டரான எஸ்1 ஏர் நேரடி போட்டி மாடலாக விளங்குகிறது.

பேட்டரி

ஸ்டோரி எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2 கிலோவாட்ஸ் BLDC எலக்ட்ரிக் ஹப் மோட்டார் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 2.6 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த எலக்ட்ரிக் மோட்டாருக்கு ஆற்றலை வழங்க பொருத்தப்படும் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 132 கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

 

மைலேஜ்

ஸ்டோரியின் பேட்டரியை வெறும் 4 மணிநேரங்களில் முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிடலாம் என்கிறது பேட்ரே நிறுவனம். இந்த விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக மணிக்கு 65kmph வேகத்தில் பயணிக்கலாம்.

 

அம்சங்கள்

உலோக பேனல்களை கொண்டு உருவாக்கப்படும் பேட்ரே ஸ்டோரி எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5 அங்குல டிஎஃப்டி டிஜிட்டல் கன்சோல் வழங்கப்படுகிறது. இந்த 5 அங்குல திரை ஆனது ப்ளூடூத் கனெக்டிவிட்டி உடன் கிடைக்கிறது. ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் உள்ளதால் வாகனத்தை பற்றிய விபரங்கள், மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள்/ குறுஞ்செய்திகள், எரிபொருள் முடிவடைய உள்ள தொலைவு, வழிக்காட்டி உதவி உள்பட பல்வேறு விபரங்களை ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் திரையின் வழியாகவே அறியலாம்.

அறிமுகம்

இத்தகைய எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புதிய நிறங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பேட்ரே நிறுவனர் நிஷ்சல் சௌத்ரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “வாடிக்கையாளர் சேவை மற்றும் புதுமைக்கான எங்கள் ஆர்வமே எங்களை புதுமையாக இருக்க தூண்டுகிறது. இதுவே நாம் செய்யும் எல்லாவற்றிற்கும் அடிப்படையாகும். தற்போதைய காலத்தின் புதிய துடிப்பான மற்றும் கவர்ச்சிக்கரமான வண்ணங்கள் இப்போது ஸ்டோரி ஸ்கூட்டரில் பிரதிபலிக்கின்றன. அதாவது, அவர்கள் (வடிவமைப்பு குழு) ஒரு பிரகாசமான, கற்பனையான எதிர்காலத்தை சுட்டிக்காட்டுகின்றனர்” என்றார்.

 

போட்டி

பேட்ரே ஸ்டோரி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 2kWh பேட்டரி தொகுப்பை பெறும் ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முக்கியமான போட்டி மாடலாக விளங்குகிறது. அதேநேரம், ஒகாயா, ஒகினவா, ஆம்பியர், ப்யூர் இவி உள்ளிட்ட மற்ற இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட்களின் தயாரிப்புகளும் இந்த பேட்ரே எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக உள்ளன.

 

 

The post 4 புதிய நிறங்களில் வெளியானது பேட்ரே ஸ்டோரி எலெட்ரிக் ஸ்கூட்டர்! first appeared on .

]]>
120 கிமீ மைலேஜ் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெறும் ரூ. 69,900! https://www.91mobiles.com/tamil/greaves-electric-mobility-launches-ampere-zeal-ex-electric-scooter/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=greaves-electric-mobility-launches-ampere-zeal-ex-electric-scooter Mon, 20 Feb 2023 12:18:08 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5938 கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி (Greaves Electric Mobility)-க்கு சொந்தமான நிறுவனம் ஆம்பியர் (Ampere). இது ஓர் ஸ்டார்ட்-அப் மின்வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்திய இளைஞர்களைக் கவரும் விதமாக ஓர் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஆம்பியர் ஜீல் இஎக்ஸ் (Ampere Zeal EX) எனும் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. இது ஓர் என்ட்ரீ லெவல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டருக்கு லேசான ஸ்போர்ட்டி தோற்றத்தை ஆம்பியர் […]

The post 120 கிமீ மைலேஜ் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெறும் ரூ. 69,900! first appeared on .

]]>

Highlights

  • ஆம்பியர் ஜீல் இஎக்ஸ் (Ampere Zeal EX) எனும் எலக்ட்ர்க் ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருக்கிறது.
  • இதற்கு அறிமுக விலையாக ரூ. 69,900 என்கிற மிகக் குறைவான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி (Greaves Electric Mobility)-க்கு சொந்தமான நிறுவனம் ஆம்பியர் (Ampere). இது ஓர் ஸ்டார்ட்-அப் மின்வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்திய இளைஞர்களைக் கவரும் விதமாக ஓர் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஆம்பியர் ஜீல் இஎக்ஸ் (Ampere Zeal EX) எனும் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. இது ஓர் என்ட்ரீ லெவல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டருக்கு லேசான ஸ்போர்ட்டி தோற்றத்தை ஆம்பியர் வழங்கி இருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 69,900 என்கிற மிகக் குறைவான விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மலிவு விலையில் இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே ஜூல் இஎக்ஸ் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

திறன் & மைலேஜ்

விலை குறைவான தயாரிப்பாக இருந்தாலும் இதில் சிறப்பு வசதிகளை கஞ்சத் தனமின்றி ஆம்பியர் வழங்கி இருக்கின்றது. மிக முக்கியமாக அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாக ஜூல் இஎக்ஸ் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. ஓர் முழுமையான சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 120 கிமீ வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. பேட்டரி பேக் விபரம் இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக ஆம்பியர் ஜீல்ல் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 60V, 2.3 KWh திறன் கொண்ட அட்வான்ஸ்டு லித்தியம் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் வரை தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சார மோட்டாரை பொருத்தவரை 1.8 KW திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆம்பியர் டாப் ஸ்பீடு இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 50 கிமீ முதல் 55 கிமீ ஆகும்.

ப்ரேக்

இந்த வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் டிரம் பிரேக் வசதி மட்டுமே வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக்கும், பின் பக்கத்தில் ட்வின் ட்யூபும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்தகைய சூப்பரான வாகனமாகவே ஆம்பியர் ஜீல் இஎக்ஸ் இந்திய மின்வாகன சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

சிறப்புச் சலுகை

இது தவிர எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் விதமாக சிறப்பு சலுகை ஒன்றை ஆம்பியர் அறிவித்துள்ளது. ஜீல் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு பலன்களை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த சிறப்பு பலன் திட்டம் மத்திய பிரதேசம், பிஹார், உத்தர் பிரதேசம் மற்றும் ஜார்காண்ட் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதேபோல், மேலே பார்த்த அறிமுக விலையும் இந்த மாநில வாசிகளுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 69,900 என்கிற விலையில் ஜீல் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அவர்களால் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும். இதற்கு பின்னர் சற்று உயர்வான விலையில் ஜீல் இஎக்ஸ் விற்கப்பட இருக்கின்றது.

 

வேறுபட்ட விலை

அதேவேளையில், தமிழகம் போன்ற பிற மாநிலங்களில் ரூ. 75 ஆயிரத்திற்கும் அதிகமான விலையில் இதனை விற்க ஆம்பியர் முடிவு செய்யதிருக்கிறது. இந்த விலையும் இன்னும் சில தினங்களில் மாற்றப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகி உள்ளன. ஆகையால், இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே இந்த மலிவு விலையில் ஜீல் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும் என தெரிகின்றது.

 

நிறங்கள்

ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரால் 150 கிலோ வரையில் எடையைத் தாங்க முடியும். ஆகையால், சற்று கொழு கொழுவென நபர்களாலும் இந்த வாகனத்தை பயன்படுத்தி பயணிக்க முடியும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டோன் கிரே (Stone Grey), ஐவரி ஒயிட் (Ivory White) மற்றும் இன்டிகோ ப்ளூ (Indigo Blue) மூன்று விதமான நிற தேர்வுகளில் ஜீல் இஎக்ஸ்  கிடைக்க இருக்கிறது. ஆம்பியர் நிறுவனம் மூன்று நாட்களுக்கு முன்புதான் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த வாகனம் மட்டுமின்றி ஹை-ஸ்பீடு திறன் கொண்ட ஆம்பியர் பிரைமஸ் (Ampere Primus) என்ற மற்றுமொரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.09 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

 

The post 120 கிமீ மைலேஜ் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெறும் ரூ. 69,900! first appeared on .

]]>
இந்த ஆண்டுக்குள் 2500+ ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஏத்தர் இலக்கு! https://www.91mobiles.com/tamil/ather-energy-plans-to-install-2500-plus-fast-charging-grids-by-end-of-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ather-energy-plans-to-install-2500-plus-fast-charging-grids-by-end-of-2023 Fri, 17 Feb 2023 07:19:41 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5884 திட்டங்கள் நாடு முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவுவதில் புதிய மைல்கல்லை அடைந்துள்ள ஏத்தர் எனர்ஜி நிறுவனம், ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவும் விஷயத்தில் தனது எதிர்கால திட்டங்களையும் அறிவித்துள்ளது. அந்த திட்டங்கள் என்னென்ன என்பதை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம். இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் முதன்மையான பிராண்ட்களுள் ஒன்றாக ஏத்தர் எனர்ஜி விளங்குகிறது. இன்னும் சொல்ல போனால், அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் ஏத்தர் எனர்ஜி முன்னிலை வகிக்கிறது. எலக்ட்ரிக் […]

The post இந்த ஆண்டுக்குள் 2500+ ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஏத்தர் இலக்கு! first appeared on .

]]>

Highlights

  • க்ரிட் என்ற பெயரில் சார்ஜிங் நிலையங்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே செயல்படுத்தி வருகிறது
  • இந்த மையங்களின் எண்ணிக்கையை 2023ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக 2,500க்கும் அதிகமானதாக அதிகரிக்கும் திட்டத்தில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உள்ளது.

திட்டங்கள்

நாடு முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவுவதில் புதிய மைல்கல்லை அடைந்துள்ள ஏத்தர் எனர்ஜி நிறுவனம், ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவும் விஷயத்தில் தனது எதிர்கால திட்டங்களையும் அறிவித்துள்ளது.

அந்த திட்டங்கள் என்னென்ன என்பதை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம். இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் முதன்மையான பிராண்ட்களுள் ஒன்றாக ஏத்தர் எனர்ஜி விளங்குகிறது. இன்னும் சொல்ல போனால், அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் ஏத்தர் எனர்ஜி முன்னிலை வகிக்கிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை கடந்த பல வருடங்களாகவே மெல்ல மெல்ல தான் வளர்ந்து வருகிறது. வேகமாக இந்த மாற்றம் நிகழாததற்கு முக்கிய காரணம் சார்ஜிங் வசதி போதிய அளவில் இல்லாமை ஆகும்.

 

ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடனும் சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவை நீண்ட நேரத்திற்கு சார்ஜ் செய்யக்கூடியவைகளாக உள்ளன. இதனால் அன்றாடம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவதில் சில சமயங்களில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை சரிச்செய்யும் விதமான ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் பல்வேறு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்காத நிறுவனங்கள் கூட சார்ஜிங் மையங்கள் உருவாக்கி அதன் மூலம் புதியதொரு வணிகத்தை துவங்க தயாராகி வருகின்றன.

1000+ மையங்கள்

அதேநேரம் சில இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்காக நேரடியாக சார்ஜிங் வணிகத்திலும் ஈடுப்பட்டு வருகின்றன. அத்தகைய நிறுவனங்களுக்கு மிக சிறந்த உதாரணம் ஏத்தர் எனர்ஜி ஆகும். க்ரிட் என்ற பெயரில் சார்ஜிங் நிலையங்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே செயல்படுத்தி வருகிறது. தற்போதுவரையில் மட்டும் 1000க்கும் அதிகமான ஏத்தர் க்ரிட் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் நாடு முழுவதும் உள்ளன.

 

2500 + மையங்கள்

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், 80 நகரங்களில் ஏத்தர் க்ரிட் நிலையங்கள் உள்ளன. தற்போது உள்ள 1000க்கும் அதிகமான க்ரிட் மையங்களின் எண்ணிக்கையை நடப்பு 2023ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக 2,500க்கும் அதிகமானதாக அதிகரிக்கும் திட்டத்தில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உள்ளது. இதனை ஏத்தர் நிறுவனமே தனது அறிக்கையின் மூலம் தெரிவித்து உள்ளது. இதன் மூலமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் பிரச்சனை இருக்காது என ஏத்தர் நிறுவனம் நம்புகிறது. ஏத்தர் எனர்ஜியின் க்ரிட் சார்ஜிங் நிலையங்கள் இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான பெரிய மற்றும் வேகமான சார்ஜிங் நெட்வொர்க் ஆக உள்ளன.

இந்தியாவின் 3வது நிறுவனம்

இருப்பினும் தற்போதைக்கு ஏத்தர் க்ரிட் நிலையங்கள் 40% முக்கிய டயர்-1 நகரங்களிலேயே உள்ளன. மீதி 60 சதவீதம் தான் டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில் உள்ளன. கடந்த 2023 ஜனவரி மாதத்தில் மட்டும் மொத்தம் 12,419 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் நிறுவனம் சந்தையில் விற்பனை செய்துள்ளது. இதன் மூலமாக இந்தியாவின் 3வது மிகப் பெரிய எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி உருவெடுத்துள்ளது. க்ரிட் சார்ஜிங் நிலையங்கள் மட்டுமின்றி, சில்லறை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையையும் 2023 மார்ச் மாதத்திற்கு உள்ளாக, 100 நகரங்களில் 150 ஆக அதிகரிக்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

உற்பத்தி அதிகரிப்பு

விற்பனை ஒருபக்கம் இவ்வாறு இருக்க, மறுப்பக்கம் ஸ்கூட்டர்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் முனைப்புடன் உள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் கடந்த 2023 ஜனவரி மாதத்தில்தான் 1 லட்சம் என்ற மைல்கல்லை ஏத்தர் நிறுவனம் கடந்தது குறிப்பிடத்தக்கது.

 

The post இந்த ஆண்டுக்குள் 2500+ ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஏத்தர் இலக்கு! first appeared on .

]]>
181கிமி ரேஞ்ச் தரும் புதிய பேட்டரியை அறிமுகப்படுத்திய ஓலா! https://www.91mobiles.com/tamil/ola-launches-new-battery-packs-of-s1-and-s1-air-electric-scooter/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ola-launches-new-battery-packs-of-s1-and-s1-air-electric-scooter Fri, 10 Feb 2023 10:34:01 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5733 ஓலா நிறுவனம் தனது எஸ்1ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் கடந்த ஓராண்டிற்கு முன்பு அறிமுகப்படுத்தியது. அந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்த நிலையில் மக்கள் மத்தியில் அதற்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது. இதனால் அதன் விற்பனை படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் தான் விற்பனை செய்து வருகிறது.   புதிய பேட்டரி ஓலா நிறுவனம் தனது எஸ்1 ஸ்கூட்டரில் எஸ்1 ப்ரோ, எஸ்1 மற்றும் எஸ்1 ஏர் ஆகிய வேரியன்ட்களை […]

The post 181கிமி ரேஞ்ச் தரும் புதிய பேட்டரியை அறிமுகப்படுத்திய ஓலா! first appeared on .

]]>

Highlights

  • ஓலா நிறுவனம் தனது ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ஏர் ஆகிய பைக்குகளில் புதிய பேட்டரி பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது 181 கி.மீ ரேஞ்சை வழங்கும் என கூறப்படுகிறது.

ஓலா நிறுவனம் தனது எஸ்1ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் கடந்த ஓராண்டிற்கு முன்பு அறிமுகப்படுத்தியது. அந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்த நிலையில் மக்கள் மத்தியில் அதற்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது. இதனால் அதன் விற்பனை படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் தான் விற்பனை செய்து வருகிறது.

 

புதிய பேட்டரி

ஓலா நிறுவனம் தனது எஸ்1 ஸ்கூட்டரில் எஸ்1 ப்ரோ, எஸ்1 மற்றும் எஸ்1 ஏர் ஆகிய வேரியன்ட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஓலா நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ஏர் ஆகிய வேரியன்ட்களில் புதிய பேட்டரி ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி 8.5 கிலோ வாட் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 181 கி.மீ ரேஞ்சை வழங்கும்.

ரேஞ்ச்

எஸ்1 ஸ்கூட்டரில் அதே மெக்கானிக்கல் மாற்றத்துடன் 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ஓலா நிறுவனம் தனது எஸ் 1 ஸ்கூட்டரில் 2 கிலோ வாட் பேட்டரியுடன் புதிய ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மோட்டாரை பொருத்தவரை அதே 8.5 கிலோ வாட் மோட்டார் தான் இருக்கிறது. ஆனால் இது ஐடிசி ரேஞ்சாக 91 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. அதிகபட்சமாக 90 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இந்த ஸ்கூட்டர் இருக்கும்.

 

மைலேஜ்

ஓலா நிறுவனம் எஸ்1 ஏர் ஸ்கூட்டரிலும் 3 விதமான போக்குகளை ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தனையிலும் பொதுவாக மோட்டாரை பொருத்தவரை 4.5 கிலோ வாட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அனைத்தும் அதிகபட்சமாக 85 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த மூன்றுக்கும் பேட்டரி பேக் மட்டுமே வித்தியாசமாக இருக்கும். 2 கிலோ வாட் ஹவர், 3 கிலோ வாட் ஹவர் மற்றும் 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் இருக்கிறது. இதில் 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் அதிகபட்சமாக 165 கி.மீ வரை ரேஞ்ச் தரும். அதுவே 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டது. 125 கி.மீ வரை ரேஞ்ச் தரும். இறுதியாக 2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டது. 85 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை

தற்போது ஓலா நிறுவனத்திடம் எஸ்1 ஏர் ஸ்கூட்டரில் 3 பேக்குகள். எஸ்1 ஸ்கூட்டரில் 2 பேக்குகள், எஸ்1 ப்ரோவில் 1 ஸ்கூட்டர் என மொத்தம் 6 விதமான ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் தற்போது மார்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இது மட்டுமல்ல ஓலா நிறுவனம் இந்த ஸ்கூட்டர்களுக்கான விலை விபரங்களையும் வெளியிட்டுள்ளது. எஸ்1 ஏர் 2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடனான ஸ்கூட்டர் ரூ84,999 என்ற விலையிலும், 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் ரூ99,999 என்ற விலையிலும், 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் ரூ1,09,999 என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இதுவே எஸ்1 ஸ்கூட்டரை பொருத்தவரை 2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் ரூ99,999 என்ற விலையிலும், 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் ரூ1,09,999 என்ற விலையிலும், எஸ்1 ப்ரோ என்ற 4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் ரூ1,29,999 என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விலையெல்லாம் பெங்களூரு எக்ஸ் ஷோரூம் விலையாகும். மொத்தத்தில் புதிதாக 2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் ஓலா ஸ்கூட்டரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

அப்கிரேடு

எஸ்1 ஏர் ஸ்கூட்டர்களுக்கான அனைத்து பேட்டரி பேக் வேரியன்ட்களுக்கான புக்கிங்கும் துவங்கிவிட்டது. ஆனால் இந்த ஸ்கூட்டர்கள் எல்லாம் ஜூலை மாதம் தான் விற்பனைக்கு வரவுள்ளன. இதற்கு முன்னர் 2.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் எஸ்1 ஏர் ஸ்கூட்டரை ரிசர்வ் செய்தவர்களுக்கு இலவசமாக 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் அப்கிரேடு செய்யப்படும் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post 181கிமி ரேஞ்ச் தரும் புதிய பேட்டரியை அறிமுகப்படுத்திய ஓலா! first appeared on .

]]>
250 கிலோ எடையைத் தாங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒடிசி ட்ரோட். https://www.91mobiles.com/tamil/odysse-trot-electric-scooter-launched-at-rs-99999/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=odysse-trot-electric-scooter-launched-at-rs-99999 Wed, 08 Feb 2023 07:49:41 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5653 இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உள்பட ஸ்கூட்டர் குறித்த முக்கிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம். புதிய ஒடிசி ட்ரோட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது பி2பி சந்தைக்கானது ஆகும். அதாவது, கேஸ் சிலிண்டர்கள், எடைமிக்க ஹார்ட்வேர் பாகங்கள், வாட்டர் கேன்கள் உள்பட அன்றாடம் பயன்படுத்தக்கூடிய குறைந்த எடைமிக்க பொருட்களை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு ட்ரோட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்றதாக இருக்கும்.   விலை & உத்திரவாதம் மேலும், இத்தகைய […]

The post 250 கிலோ எடையைத் தாங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒடிசி ட்ரோட். first appeared on .

]]>

Highlights

  • ஒடிசி எலக்ட்ரிக் வாகனங்கள் (Odysee Electric Vehicles) நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய ட்ரோட் (Trot) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவந்து இருக்கிறது.
  • இந்த ஒடிசி ட்ரோட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வணிக தேவைக்கு ஏற்றதாக இருக்கும்.

இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உள்பட ஸ்கூட்டர் குறித்த முக்கிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம். புதிய ஒடிசி ட்ரோட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது பி2பி சந்தைக்கானது ஆகும். அதாவது, கேஸ் சிலிண்டர்கள், எடைமிக்க ஹார்ட்வேர் பாகங்கள், வாட்டர் கேன்கள் உள்பட அன்றாடம் பயன்படுத்தக்கூடிய குறைந்த எடைமிக்க பொருட்களை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு ட்ரோட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்றதாக இருக்கும்.

 

விலை & உத்திரவாதம்

மேலும், இத்தகைய பணிகளுக்கு ஏற்றவாறு இந்த ஸ்கூட்டரை கஸ்டமைஸ்ட் செய்தும் கொள்ளலாம். ட்ரோட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மும்பை எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.99,999-ஐ ஒடிசி நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த இ-ஸ்கூட்டரின் பேட்டரிக்கு 3 வருட உத்தரவாதத்தையும், எலக்ட்ரிக் மோட்டாருக்கு 1 வருட உத்தரவாதத்தையும் ஒடிசி நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய ட்ரோட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள ஒடிசி டீலர்ஷிப் மையங்களில் வாங்கலாம்.

 

திறன்

ஏற்கனவே கூறியதுபோல், லாஸ்ட்-மைல் டெலிவிரி பணிகளுக்கு ஏற்றதாக விளங்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகப்பட்சமாக 250 கிலோ வரையிலான எடையை கொண்டு செல்லும் திறன் கொண்டது. ட்ரோட் ஸ்கூட்டரை மஞ்சள், கருப்பு, சிவப்பு மற்றும் மெரூன் என மொத்தம் 4 விதமான நிறத்தேர்வுகளில் வாங்கலாம்.

அம்சங்கள்

முக்கிய தொழிற்நுட்ப அம்சங்களாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்மார்ட் பிஎம்எஸ் மற்றும் எல்இடி ஓடோமீட்டர் இடம்பெற்றுள்ளன. அத்துடன் ஐஒடி எனப்படும் இன்ஃபர்மேஷன் ஆஃப் டெக்னாலஜி இணைப்பு வசதியும் ட்ரோட் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாகனம் இருக்கும் இடத்தை அடையாளம் காணுதல், ஜியோ-ஃபென்சிங் மற்றும் இம்மொபைலிசேஷன் உள்ளிட்ட அம்சங்களை பெறலாம்.

பேட்டரி

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த இ-ஸ்கூட்டரில் 250 வாட் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. நீக்கக்கூடிய 60 வோல்ட் 32 ஆம்பியர் வாட்டர்ப்ரூஃப் பேட்டரியின் மூலம் இயக்க ஆற்றலை எலக்ட்ரிக் மோட்டார் பெறுகிறது.

மைலேஜ்

இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 75 கிமீ-க்கு தொடர்ந்து பயணிக்க முடியும். ஸ்கூட்டருடன் வழங்கப்படும் சார்ஜரை கொண்டு இந்த பேட்டரியை வெறும் 2 மணிநேரங்களில் 0-60% சார்ஜ் நிரப்பிவிட முடியும். அதுவே 0-100% சார்ஜ் நிரப்ப ஏறக்குறைய 4 மணிநேரங்கள் தேவைப்படும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிகப்பட்சமாக மணிக்கு 25கிமீ வேகத்தில் மட்டுமே இயக்க முடியும்.

ட்ரோட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து பேசிய ஒடிசி எலக்ட்ரிக் வாகனங்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சிஇஓ நெமின் வோரா, “புதிய ஒடிசி ட்ரோட் எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் மூலம் இந்தியாவின் வணிகங்களுக்கான லாஸ்ட் மைல் டெலிவிரி சேவைகளை எலக்ட்ரிக் ஆக்குவதை நோக்கமாக நாங்கள் கொண்டுள்ளோம். பி2பி இவி பிரிவில் எங்களது எண்ட்ரீயை பதிவு செய்துவதுடன், சந்தையின் போக்கை மாற்றக்கூடிய ஸ்கூட்டர்களுள் இதுவும் ஒன்று. ட்ரோட் போன்ற தயாரிப்புகளின் மூலமாக வளர்ச்சியை பதிவு செய்யவும், பிரிவில் புதிய பென்ச் மார்க்கை அமைக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.

 

வேரியண்ட்கள்

இந்த புதிய அறிமுகத்தின் மூலம் ஒடிசி பிராண்டில் இருந்து சந்தையில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. புதிய ட்ரோட் ஸ்கூட்டர் மட்டுமின்றி, இ2கோ, ரேசர் மற்றும் ஹாவ்க் என்ற மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும், எவோக்கிஸ் என்ற எலக்ட்ரிக் பைக்கையும் ஒடிசி நிறுவனம் விற்பனை செய்கிறது.

 

The post 250 கிலோ எடையைத் தாங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒடிசி ட்ரோட். first appeared on .

]]>
ஒகாவா நிறுவனத்தின் 6வது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகமாகிறதா ஃபாஸ்ட் எஃப்3? https://www.91mobiles.com/tamil/okaya-ev-launches-new-electric-scooter-feb-10/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=okaya-ev-launches-new-electric-scooter-feb-10 Tue, 07 Feb 2023 11:48:20 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5615 இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் மின்வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒகாயா-வும் ஒன்று. இந்த நிறுவனம் இந்தியாவில் ஃபாஸ்ட் எஃப்4, ஃபாஸ்ட் எஃப்2பி, ஃபாஸ்ட் எஃப்2டி, ஃப்ரீடம் மற்றும் கிளாசிக் பிளஸ் என ஐந்து விதமான எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றின் வரிசையிலேயே புதிதாக மற்றுமொரு புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை ஒகாயா இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் ஓர் டீசர் படத்தை வெளியிட்டு […]

The post ஒகாவா நிறுவனத்தின் 6வது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகமாகிறதா ஃபாஸ்ட் எஃப்3? first appeared on .

]]>

Highlights

  • ஒகாயா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி இந்தியாவில் வெளியீடு செய்ய இருக்கிறது.
  • இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் டீசர் படத்தையும் அது வெளியிட்டு உள்ளது.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் மின்வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒகாயா-வும் ஒன்று. இந்த நிறுவனம் இந்தியாவில் ஃபாஸ்ட் எஃப்4, ஃபாஸ்ட் எஃப்2பி, ஃபாஸ்ட் எஃப்2டி, ஃப்ரீடம் மற்றும் கிளாசிக் பிளஸ் என ஐந்து விதமான எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

இவற்றின் வரிசையிலேயே புதிதாக மற்றுமொரு புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை ஒகாயா இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் ஓர் டீசர் படத்தை வெளியிட்டு இருக்கின்றது. டீசர் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒகாயா நிறுவனம், வருகின்ற 10 தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

விலை

இந்த தகவலை நிறுவனம் அதன் சமூக வலைதள பக்க பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபாஸ்ட் எஃப்3 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதையும் அது உறுதி செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக 1 லட்சத்து 13 ஆயிரத்து 999 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல முக்கிய விபரங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி வெளியீடு செய்யப்பட்டு உள்ளது.

 

மோட்டார்

வருகைக்கு முன்னரே அதன் மின் வாகன பிரியர்களை ஈர்க்கும் பொருட்டு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் மின் வாகன பிரியர்கள் அல்லாதோரையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது என்றே கூறலாம். காரணம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிக திறன் வெளிப்பாடாகும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 1200 வாட் மின் மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. இது 2500 வாட் வரையில் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது.

ரேஞ்ச்

இதுதவிர டூயல் பேட்டரி ஆப்ஷனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படும். 3.5 kWh லித்தியம் அயன் எல்எஃப்பி பேட்டரிகளே வழங்கப்பட்டிருக்கும். பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஸ்விட்சிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்ற சிறப்பு வசதிகளைக் கொண்டதாகவே ஒகாயா ஃபாஸ்ட் எஃப்3 உருவாகி இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் ஃபுல் சார்ஜில் 140 கிமீ முதல் 160 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

பேட்டரி

இந்நிறுவனத்தின் மற்றுமொரு டூயல் பேட்டரி செட்-அப் கொண்ட வாகனமான ஃபாஸ்ட் எஃப்4 இதே ரேஞ்ஜைய வழங்குகின்றது. இதில், 72V 30Ah எல்எஃப்பி பேட்டரி பேக்கையே நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது. இதனுடன் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் இ-ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சம் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

வசதிகள்

இது தவிர ஆன்டி தெஃப்ட் அலாரம், திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களும் புதுமுக ஒகாயா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் அதன் மின் வாகன தயாரிப்புகளின் பக்கம் மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பிற நிதி நிறுவனங்களுடன் இணைந்து தன்னுடைய எலெக்ட்ரிக் வாகனங்களைக் குறைவான விலையிலும், வட்டி விகிதத்திலும் அது விற்பனைச் செய்து வருகின்றது.

 

நிதியுதவி

பஜாஜ் பின்சர்வ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் போன்ற முன்னணி வங்கிகளுடன் இதற்காக ஒகாயா கூட்டணியை வைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி இன்னும் சில வங்கிகளுடன் ஒகாயா இணைந்த வண்ணம் உள்ளது. தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எளிதில் நிதியுதவி கிடைக்கம் விதமாக இந்த இணைப்பை அது மேற்கொண்டு வருகின்றது. நிறுவனம் தற்போது விற்பனையகங்களின் எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்தியிருக்கின்றது.

 

வளர்ச்சி

2021 வரை 225க்கும் குறைவாக இருந்த விற்பனை மையங்களின் எண்ணிக்கை தற்போது 5500-க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை உயர்த்தும் பணியையும் ஒகாயா மேற்கொண்டு வருகின்றது. வாடிக்கையாளர்களைக் கவர புதுமுக வாகனங்கள் மட்டுமே போதாது, புதிய ஷோரூம்களும் தேவை என்பதை உணர்ந்து அது விற்பனையகங்களை விரிவாக்கம் செய்து வருகிறது.

The post ஒகாவா நிறுவனத்தின் 6வது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகமாகிறதா ஃபாஸ்ட் எஃப்3? first appeared on .

]]>
ஒரு லட்சம் எலெட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து ஏத்தர் புதிய சாதனை! https://www.91mobiles.com/tamil/ather-electric-scooter-sales-record-in-jan-2023-marked-1-lakh-production/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ather-electric-scooter-sales-record-in-jan-2023-marked-1-lakh-production Thu, 02 Feb 2023 08:40:12 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5497 ஏத்தர் நிறுவனத்தின் வளர்ச்சி படிப்படியாக மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் தனது முதல் 10 ஆயிரம் ஸ்கூட்டர்களை தயாரிக்க 35 மாதங்களை எடுத்துக்கொண்டது. அதன் தனது தயாரிப்பை அதிகப்படுத்திய நிலையில் அடுத்த 5 மாதத்தில் 20 ஆயிரம் என்ற மைல் கல்லையும், அடுத்த 5 மாதத்தில் 30 ஆயிரம் என்ற மைல் கல்லையும் எப்படிப் பிடித்தது. இந்த நேரத்தில் ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிமாண்ட் அதிகமாகிவிட்டது. இதனால் அந்நிறுவனம் உற்பத்தித் திறனை அதிகரித்தது. அடுத்த 3 […]

The post ஒரு லட்சம் எலெட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து ஏத்தர் புதிய சாதனை! first appeared on .

]]>

Highlights

  • ஏத்தர் நிறுவனம் தனது 1 லட்சமாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்துக் கடந்த ஜனவரி மாதம் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
  • இதைக் கொண்டாடும் விதமாக ஏத்தர் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தி ட்ரூ ரெட் ஏத்தர் 450எக்ஸ் என்ற கலர் ஆப்ஷனை காட்சிப்படுத்தியது.
  • தற்போது இந்த கலரில் ஸ்கூட்டர்கள் தயாராகத் துவங்கிவிட்டன.

ஏத்தர் நிறுவனத்தின் வளர்ச்சி படிப்படியாக மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் தனது முதல் 10 ஆயிரம் ஸ்கூட்டர்களை தயாரிக்க 35 மாதங்களை எடுத்துக்கொண்டது. அதன் தனது தயாரிப்பை அதிகப்படுத்திய நிலையில் அடுத்த 5 மாதத்தில் 20 ஆயிரம் என்ற மைல் கல்லையும், அடுத்த 5 மாதத்தில் 30 ஆயிரம் என்ற மைல் கல்லையும் எப்படிப் பிடித்தது.

இந்த நேரத்தில் ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிமாண்ட் அதிகமாகிவிட்டது. இதனால் அந்நிறுவனம் உற்பத்தித் திறனை அதிகரித்தது. அடுத்த 3 மாதத்திலேயே10 ஆயிரம் ஸ்கூட்டர்களை தயாரித்து 40 ஆயிரம் என்ற மைல் கல்லையும் அடுத்த 2 மாதத்தில் அடுத்த 10 ஆயிரம் ஸ்கூட்டர்களை தயாரித்து 50 ஆயிரம் என்ற மைல் கல்லையும் எட்டி பிடித்து தனது தயாரிப்பைத் தீவிரப்படுத்தியது.

 

50,000 ஸ்கூட்டர்

இந்த 50 ஆயிரம் என்ற மைல் கல்லை ஏத்தர் நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி தான் எட்டி பிடித்தது. தற்போது 6 மாதங்கள் கூட ஆகவில்லை அதற்குள் அடுத்த 50 ஆயிரம் இல்லை எட்டி பிடித்து 1 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரித்துவிட்டது. இது இந்நிறுவனத்தின் மிகப்பெரிய வளர்ச்சியை காட்டுகிறது. புதிய ஆலையில் அதிக உற்பத்தித் திறன் காரணமாக இவ்வளவு பெரிய வளர்ச்சியை எட்டி பிடித்துள்ளது.

வளர்ச்சி

கடந்த ஜனவரி மாதம் முதன் முறையாக ஏத்தர் நிறுவனம் ஒரே மாதத்தில் 12 ஆயிரம் ஸ்கூட்டர்களையும் தாண்டி தயாரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 12,149 ஸ்கூட்டர்களை தயாரித்துள்ளது. இவே கடந்தாண்டு ஜனவரி மாதம் வெறும் 2825 ஸ்கூட்டர்களை தான் தயாரித்திருந்ததது. ஒரே ஆண்டில் 9324 ஸ்கூட்டர்களை அதிகம் தயாரித்து 330.05 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

 

இதுவே கடந்த டிசம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது கடந்த டிசம்பர் மாதம் 9187 ஸ்கூட்டர்களை தான் இந்நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது அதை விடக் கூடுதலாக 2962 ஸ்கூட்டர்களை தயாரித்துள்ளது. இது 32.24 சதவீத வளர்ச்சியாகும். ஏத்தர் நிறுவனத்திற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.

ஷோரூம்கள்

2022ம் ஆண்டு இறுதியில் ஏத்தர் நிறுவனம் 70 நகரங்களில், 89 ஷோரூம்களை அனுபவ மையங்களாகத் திறந்துள்ளது. இந்நிறுவனம் துவங்கப்பட்டதிலிருந்தே கடந்த ஜனவரி மாதம் தான் இந்நிறுவனம் மிகப்பெரிய அளவிலான விற்பனையைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பிப்1ம் தேதி ஆட்டோ ஹோல்டு வசதியைத் தனது ஜென்3 ஸ்கூட்டர்களில் அப்டேட் செய்தது. இது சரிவான பகுதிகளில் ஸ்கூட்டரை நிறுத்தும்போது சரியாமல் இருக்கும்.

திட்டம்

ஏத்தர் நிறுவனத்தின் இந்த அபார வளர்ச்சிக்குக் காரணம் இந்நிறுவனம் தமிழ்நாட்டில் ஓசூர் மாவட்டத்தில் துவங்கிய ஆலை தான். தற்போது இந்த ஆலையில் மொத்தம் 4.2 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு ஆண்டிற்குத் தயாரிக்க முடியும். இந்நிலையில் இந்நிறுவனம் தனது 3வது ஆலையைக் கட்டமைக்க முடிவு செய்துள்ளது. இது தயாரானால் அந்த ஆலையில் 10 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்க முடியும் அத்துடன் தற்போது உள்ள 4.2 லட்சம் ஆலையையும் சேர்த்து மொத்தம் ஆண்டுக்கு 14.2 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஏற்றுமதி

அடுத்த 2-3 ஆண்டுகளில் ஏத்தர் நிறுவனம் தனது தயாரிப்புகளை விரிவுபடுத்தவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. உள்நாட்டில் தனது விற்பனையை அதிகரிக்க 250 நகரங்களில் 350 அனுபவ மையங்களைத் திறக்க முடிவு செய்துள்ளனர். மேலும் ஏத்தர் கிரிட் சார்ஜிங் மையங்களை 1400 இடங்களில் செயல்பாட்டிற்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

The post ஒரு லட்சம் எலெட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து ஏத்தர் புதிய சாதனை! first appeared on .

]]>
2024 ஜனவரியில் வருகிறது ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். சிஇஓ தகவல்! https://www.91mobiles.com/tamil/honda-ceo-confirms-activa-electric-scooter-launch/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=honda-ceo-confirms-activa-electric-scooter-launch Wed, 25 Jan 2023 07:03:43 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5343 சிறப்பு அம்சங்களைக் கொண்ட புதிய ஆக்டிவா ஸ்கூட்டர் மாடலை ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஜனவரி 23 அன்று அறிமுகப்படுத்தியது. புதிய ஆக்டிவாவின் எச்-ஸ்மார்ட் வேரியண்டை அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாக அது உருவாக்கி இருக்கின்றது. இந்த மாடலுக்கு  மட்டும் கார்களுக்கு வழங்கப்படுவதைப் போல ஸ்மார்ட் சாவி வசதியை ஹோண்டா வழங்கி இருக்கின்றது. இது சாவியே இல்லாமல் டூ-வீலரை இயக்க அனுமதிக்கும். இத்தகைய தரமான ஸ்கூட்டராக ஆக்டிவாவை அப்டேட் செய்து, ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் […]

The post 2024 ஜனவரியில் வருகிறது ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். சிஇஓ தகவல்! first appeared on .

]]>

Highlights

  • சமீபத்தில் புதிய ஆக்டிவா ஸ்கூட்டரின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
  • அதில் ஹோண்டா நிறுவனத்தின் சிஇஓ அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது அறிமுகம் ஆகும் என்ற தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

சிறப்பு அம்சங்களைக் கொண்ட புதிய ஆக்டிவா ஸ்கூட்டர் மாடலை ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஜனவரி 23 அன்று அறிமுகப்படுத்தியது. புதிய ஆக்டிவாவின் எச்-ஸ்மார்ட் வேரியண்டை அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாக அது உருவாக்கி இருக்கின்றது. இந்த மாடலுக்கு  மட்டும் கார்களுக்கு வழங்கப்படுவதைப் போல ஸ்மார்ட் சாவி வசதியை ஹோண்டா வழங்கி இருக்கின்றது.

இது சாவியே இல்லாமல் டூ-வீலரை இயக்க அனுமதிக்கும். இத்தகைய தரமான ஸ்கூட்டராக ஆக்டிவாவை அப்டேட் செய்து, ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த வாகனத்தின் அறிமுக நிகழ்வில் கலந்துக் கொண்ட ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ-வுமான அட்சுஷி ஒகடா, யாரும் எதிர்பார்த்திராத ஓர் தகவலை வெளியிட்டார்.

 

எப்போது வெளியீடு?

அதன்படி ஹோண்டா எப்போது அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. 2024 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் ஹோண்டா அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பது அவர் நிகழ்ச்சியில் பேசியதன் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. ஆக்டிவா ஸ்கூட்டர் மாடலிலேயே நிறுவனத்தின் முதல் மின்சார இருசக்கர வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

 

திறன்

இது மணிக்கு 50 கிமீ வேகம் மற்றும் ஃபுல் சார்ஜில் 80 கிமீ முதல் 100 கிமீ வரையிலான ரேஞ்ஜ் திறன் கொண்டதாகவே விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நகர்புற பயன்பாடு மற்றும் அலுவல் ரீதியான பயன்பாடுகளுக்கு என இந்த வாகனம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. எனவேதான் போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்டிலும் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைவான திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகின்றது.

போட்டி

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் விடா வி1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஃபுல் சார்ஜில் 165 கிமீ ரேஞ்ஜ் தரும் வாகனமாக உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதைவிட திறன் கொண்டதாகவே ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாராகிக் கொண்டிருக்கின்றது. ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி இன்னும் சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையும் விற்பனைக்குக் கொண்டு வர திட்டம் போட்டு இருக்கின்றது. அது முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என தெரிகின்றது.

 

புதிய பிளாட்பாரம்

அவற்றை புதிய பிளாட்பாரத்தில் ஹோண்டா நிறுவனம் உருவாக்கி வருகின்றது. குறிப்பாக, ஆக்டிவாவைக் காட்டிலும் அதிக வசதிகள் மற்றும் திறன்மிக்கதாக அதை நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. ஆக்டிவாவில் வழங்கப்படாத அம்சங்கள் பலவற்றையும் இந்த புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் மூலம் ஹோண்டா வழங்கும் எனக் கூறப்படுகிறது. போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கும் ரேஞ்ஜ் திறன், அதிக பவர்ஃபுல் மின் மோட்டார்கள் மற்றும் பன்முக நவீன கால அம்சங்கள் என எக்கச்சக்க அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

 

அம்சங்கள்

ஸ்வாப்பபிள் பேட்டரி பேக், செல்போன் இணைப்பு, வாகனத்தை லைவாக டிராக் செய்யும் அம்சம் உள்ளிட்டவையும் ஹோண்டாவின் இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கலாம். இதுபோன்று இன்னும் பல ஏராளமான அம்சங்கள் இதில் இடம் பெற இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தீவிரம்

ஹோண்டா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் முன்னரே, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுக்கும் பணியில் களமிறங்கி விட்டது. அந்தவகையில், ஹோண்டா நிறுவனம் அதன் மற்றுமொரு அங்கமான ஹோண்டா பவர் பேக் எனெர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்கீழ் பெங்களூருவில் உள்ள பகுதிகளில் பேட்டரி ஸ்வாப் மையங்களை அமைக்கும் பணியில் களமிறங்கி இருக்கிறது.

 

The post 2024 ஜனவரியில் வருகிறது ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். சிஇஓ தகவல்! first appeared on .

]]>