electric vehicle https://www.91mobiles.com/tamil Thu, 09 Mar 2023 17:18:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 150கிமீ. மைலேஜ் கொடுக்கும் எலக்ட்ரிக் ஆட்டோ வந்தாச்சு! https://www.91mobiles.com/tamil/osm-launches-muse-kraze/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=osm-launches-muse-kraze Tue, 24 Jan 2023 08:01:53 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5306 ஒஎஸ்எம் எனப்படும் ஒமெகா செய்கி மொபிலிட்டி நிறுவனம் இந்தியா ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் அதன் புதிய தயாரிப்புகள் சிலவற்றைக் காட்சிப்படுத்தியது. அந்தவகையில், நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவை மிரள வைக்கும் வகையில் தனது அழகிய தயாரிப்புகளான ஆட்டோ ரிக்ஷாக்கள் சிலவற்றையும் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த ஆட்டோக்கள் கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.   இரண்டு ஆட்டோக்கள் அழகிலும் சரி, சிறப்பு வசதிகளிலும் சரி இந்த ஆட்டோக்கள் சிறப்பாக தயாரிக்கப்பட்டு இஒஎஸ்எம் ம்யூஸ் (OSM […]

The post 150கிமீ. மைலேஜ் கொடுக்கும் எலக்ட்ரிக் ஆட்டோ வந்தாச்சு! first appeared on .

]]>

Highlights

  • ஆட்டோ எக்ஸ்போ 20233ல் இஒஎஸ்எம் ம்யூஸ் (OSM Muse) மற்றும் ஒஎஸ்எம் க்ரேஸ் (OSM Kraze) எனும் இரு எலக்ட்ரிக் ஆட்டோக்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
  • இவை ஒரு முழு சார்ஜ்க்கு 150கிமீ வரை மைலேஜ் தரும் திறன் கொண்டவை.

ஒஎஸ்எம் எனப்படும் ஒமெகா செய்கி மொபிலிட்டி நிறுவனம் இந்தியா ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் அதன் புதிய தயாரிப்புகள் சிலவற்றைக் காட்சிப்படுத்தியது. அந்தவகையில், நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவை மிரள வைக்கும் வகையில் தனது அழகிய தயாரிப்புகளான ஆட்டோ ரிக்ஷாக்கள் சிலவற்றையும் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த ஆட்டோக்கள் கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

இரண்டு ஆட்டோக்கள்

அழகிலும் சரி, சிறப்பு வசதிகளிலும் சரி இந்த ஆட்டோக்கள் சிறப்பாக தயாரிக்கப்பட்டு இஒஎஸ்எம் ம்யூஸ் (OSM Muse) மற்றும் ஒஎஸ்எம் க்ரேஸ் (OSM Kraze) எனும் பெயரில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இவற்றிற்கான புக்கிங் பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன. ஆட்டோக்களின் விலையும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

விலை

ஒஎஸ்எம் ம்யூஸ் மாடலுக்கு 4 லட்ச ரூபாயும், ஒஎஸ்எம் க்ரேஸ் மாடலுக்கு 4.20 லட்சம் ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிகபட்ச விலைக்கு இவை இரண்டும் எலெக்ட்ரிக் ஆட்டோ என்பதும் இதில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களுமே காரணமாக இருக்கிறது.

 

வசதிகள்

இரண்டிலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஜிபிஎஸ் மற்றும் மொபைல் ஆப் வாயிலாக கன்ட்ரோல் செய்யும் வசதி மற்றும் மானிட்டரிங் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

 

பேட்டரி & மைலேஜ்

இரண்டிலும் ஓர் முழுமையான சார்ஜில் 80 கிமீ முதல் 100 கிமீ வரையில் பயணிக்க முடியும். இதை சார்ஜ் செய்ய 15A சாக்கெட்டே போதும். ம்யூஸ் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவில் அதிகபட்சமாக இரண்டு பேர் மிக தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். 950 கிலோ வரையில் இது ஏற்றி செல்லும் திறன் கொண்டது. 8 kWh பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஃபுல் சார்ஜில் 150 கிமீ மைலேஜ் தரும். 4 மணி நேரத்தில் இதை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

அம்சங்கள்

ஆட்டோ ஏசி, மிக தாராளமான லெக் ரூம் வசதி, இரவில் வானம் இருப்பதைப் போன்ற உட்பக்க மேற்கூரை என எக்கசக்க அம்சங்கள் ம்யூஸில் வழங்கப்பட்டிருக்கும். ஐஓடி சிஸ்டம், டிஜிட்டல் க்ரூஸர், டூயல் எல்இடி ஹெட்லைட், 200 லிட்டர் பூட் ஸ்பேஸ், கட்டிங் எட்ஜ், மாடர்ன் ஏரோ டைனமிக் என எக்கசக்க அம்சங்கள் ம்யூஸில் வழங்கப்பட்டுள்ளன. க்ரேஸ் இதன் ஃபுல் சார்ஜ் ரேஞ்ஜ் திறன் 150 கிமீ மைலேஜ் ஆகும். மேலும், இது அதிகபட்சமாக மணிக்கு 46 கிமீ வேகத்தில் பயணிக்கும். நகரம் மற்றும் நடுத்தர கிராமங்களுக்கு ஏற்ற வாகனம் இது ஆகும்.

 

வடிவமைப்பு

மிகவும் அட்டகாசமான ஸ்டைலில் இந்த வாகனத்தை ஒஎஸ்எம் உருவாக்கி இருக்கின்றது. கட்டிங் எட்ஜ், ஏரோடைனமிக் டிசைன் என தோற்றத்தில் இந்த வாகனம் கலக்கலாக இருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் ஓர் வசதியான கார் மாடலைக் காட்டிலும் இது மிகவும் அழகானதாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. தற்போது ஓஎஸ்எம் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஃபரிதாபாத்தில் உள்ளது. இங்கு வைத்தே நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோக்களைத் தயாரிக்க இருக்கின்றது.

 

விற்பனை & டெலிவரி

இந்தியா மட்டுமின்று உலக நாடுகளுக்கும் இந்த மின்சார ஆட்டோக்கள் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஆண்டுக்கு 4 ஆயிரம் யூனிட்டுகள் வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இன்னும் சில வாரங்களில் இரு ஆட்டோக்களும் விற்பனைக்கு வர இருக்கின்றன. மேலும், அவற்றின் டெலிவரி பணிகள் மே 2023 இல் தொடங்க இருக்கின்றது.

 

The post 150கிமீ. மைலேஜ் கொடுக்கும் எலக்ட்ரிக் ஆட்டோ வந்தாச்சு! first appeared on .

]]>
140 கிமீ மைலேஜ் தரும் டாடா மேஜிக் எலக்ட்ரிக் வெர்ஷனை வெளியிட்டது டாடா! https://www.91mobiles.com/tamil/tata-magic-electric-10-seater/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tata-magic-electric-10-seater Thu, 19 Jan 2023 07:23:46 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5190   டாடா மோட்டார்ஸ் செம்ம சூப்பரான 10 சீட்டர் எலெக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போவிலேயே இந்த 10 சீட்டர் மின்சார வாகனத்தை டாடா மோட்டார்ஸ் வெளியீடு செய்திருக்கின்றது. நிறுவனத்தின் பிரபல வாகனமான ஏஸ் இவி-யை தழுவியே இந்த வாகனத்தை டாடா உருவாக்கி இருக்கின்றது. இதற்கு நிறுவனம் மேஜிக் இவி எனும் பெயரை வைத்திருக்கின்றது. இதன் மூலம் 140 கிமீ மைலேஜ் தரும் டாடா மேஜிக் எலக்ட்ரிக் வெர்ஷனை […]

The post 140 கிமீ மைலேஜ் தரும் டாடா மேஜிக் எலக்ட்ரிக் வெர்ஷனை வெளியிட்டது டாடா! first appeared on .

]]>

Highlights

  • 140 கிமீ மைலேஜ் தரும் டாடா மேஜிக் எலக்ட்ரிக் வெர்ஷனை வெளியிட்டது டாடா!
  • ஒரே நேரத்தில் பத்து பேர் வரை அமர்ந்து பயணிக்கும் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் வாகனத்தை டாடா மோட்டார்ஸ் வெளியீடு செய்திருக்கிறது.
  • ஏஸ் இவி-யை தழுவியே இந்த வாகனத்தை டாடா உருவாக்கி இருக்கின்றது. இதற்கு நிறுவனம் மேஜிக் இவி எனும் பெயரை வைத்திருக்கின்றது.

 

டாடா மோட்டார்ஸ் செம்ம சூப்பரான 10 சீட்டர் எலெக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போவிலேயே இந்த 10 சீட்டர் மின்சார வாகனத்தை டாடா மோட்டார்ஸ் வெளியீடு செய்திருக்கின்றது. நிறுவனத்தின் பிரபல வாகனமான ஏஸ் இவி-யை தழுவியே இந்த வாகனத்தை டாடா உருவாக்கி இருக்கின்றது. இதற்கு நிறுவனம் மேஜிக் இவி எனும் பெயரை வைத்திருக்கின்றது. இதன் மூலம் 140 கிமீ மைலேஜ் தரும் டாடா மேஜிக் எலக்ட்ரிக் வெர்ஷனை டாடா வெளியிட்டு இருக்கிறது!

 

இவ்-வாகனத்தை பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லுதல், அவசர கால வாகனமான ஆம்புலன்ஸ், ஸ்டோரேஜ் வாகனம் மற்றும் டெலிவரி பார்சல் வாகனம் என இவ்வாறு எந்த வகையில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸின் வெற்றிகரமான வர்த்தக பயன்பாட்டு வசதிக் கொண்ட வாகனமாக டாடா மேஜிக் இருக்கின்றது. இந்த வாகனத்தில் பூஜ்ஜியம் உமிழ்வு திறன் கொண்ட மின்சார வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி இருப்பதாக வர்த்தக வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

 

ஷேர் ஆட்டோ

குறிப்பாக, ஷேர் ஆட்டோ ஓட்டிகள் மத்தியில் இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் வெகு விரைவில் பூஜ்ஜியம் உமிழ்வு மொபிலிட்டிக்கு மாற இருக்கின்றது. அதாவது, மாசை வெளிப்படுத்தும் வாகனங்களின் உற்பத்தியை முழுமையாக நிறுத்திவிட்டு பசுமை இயக்கம் வசதிக் கொண்ட வாகனங்களை மட்டுமே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதை நோக்கிய நிறுவனத்தின் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே மேஜிக் இவி உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

தோற்றம்

இந்த வாகனத்தில் இட வசதி மிக அதிகம் ஆகும். இதன் நீளம் 3,790 mm, அகலம் 1,500 mm, உயரம் 1,870 mm -ஆக இருக்கின்றது. இதன் வீல் பேஸும் சற்று அதிகம் ஆகும். 2,100mm கொண்டதாகவே வீல்பேஸ் இருக்கின்றது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ்160 மிமீ ஆகும். இந்த வாகனத்தில் அட்வான்ஸ்ட் தொழில்நுட்பத்தினாலான பேட்டரி சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

பேட்டரி மற்றும் ரேஞ்ஜ் விபரம்

ஐபி 67 ரேட்டட் வாட்டர் மற்றும் ரஸ்ட் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதிக் கொண்டதாகவும் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பேட்டரி பேக் இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 140 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். டாடா மோட்டார்ஸ் இந்த வாகனத்தை 14-20 kWh பேட்டரி பேக் தேர்வில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

சிறப்பம்சங்கள்

இந்த வாகனம் பற்றிய இன்னும் பல்வேறு முக்கிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. வெகு விரைவில் அதுகுறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், டாடா மேஜிக் இவியில் 7 அங்குல டிஎஃப்டி இன்ஃபோடெயின்மென்ட் திரை, வாய்ஸ் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் பார்க் கேமிரா உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும், இந்த வாகனத்தை முழுமையாக சார்ஜ் 6 மணி முதல் 6.5 மணி நேரங்கள் வரை தேவைப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாஸ்ட் சார்ஜிங்

வழக்கமான சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் இந்த அளவு அதிக நேரத்தை மேஜிக் இவி எடுத்துக் கொள்ளும். அதேவேளையில், ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் ஒன்றரை மணி நேரங்களிலேயே முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியுமாம்.

 

மைலேஜ்

நாட்டிலேயே மின்சாரம், சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் முதல் மின்சார மினி லோடு வாகனம் ஆகும். இந்த வாகனத்தை நிறுவனம் இவோஜென் பிளாட்பாரத்தைக் கொண்டு உருவாக்குகின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் அதிகபட்சமாக 140 கிமீ வரை மைலேஜ் தரும்.

 

விலை

இந்த வாகனத்தை அமேசான், டெல்லிவெரி, டிஎச்எல், ஃபெட்எக்ஸ் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற வர்த்தக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு ஏதுவாக டாடா உருவாக்கி இருக்கிறது. டாடா மோட்டார்ஸின் இந்த ஏஸ் இவி எலெக்ட்ரிக் மினி லோடு வேனின் டெலிவரி பணிகள் தற்போது தொடங்கி விட்டது. இதன் விலை ரூ. 9.9 லட்சம் ஆகும்.

2022ஆம் ஆண்டின் சிறந்த மொபைலைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்!

https://www.indiangadgetawards.com/

The post 140 கிமீ மைலேஜ் தரும் டாடா மேஜிக் எலக்ட்ரிக் வெர்ஷனை வெளியிட்டது டாடா! first appeared on .

]]>
பட்டி 25 இவி எலக்ட்ரிக் மொபட்டை ஓட்ட லைசென்ஸ், ஆர்சி புக் எதுவும் தேவை இல்லை! https://www.91mobiles.com/tamil/revamp-moto-buddie-25-e-moped-launched/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=revamp-moto-buddie-25-e-moped-launched Mon, 19 Dec 2022 08:58:30 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4385 பட்டி 25 இவி (Buddie 25 EV) இந்தியாவில் கடந்த காலங்களைக் காட்டிலும் இப்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே இந்தியாவில் தற்போது விற்பனையாகிக் கொண்டிருக்கும் புதிய மின்சார இருசக்கர வாகனங்களின் தேர்வை பலப்படுத்தும் விதமாக, ரிவேம்ப் மோட்டோ (Revamp Moto) எனும் புதிய நிறுவனம் அதன் புதிய எலெக்ட்ரிக் மொபட் ரக வாகனத்தை ரிவேம்ப் பட்டி 25 இவி (Buddie 25 EV) எனும் பெயரில் விற்பனைக்கு கொண்டு […]

The post பட்டி 25 இவி எலக்ட்ரிக் மொபட்டை ஓட்ட லைசென்ஸ், ஆர்சி புக் எதுவும் தேவை இல்லை! first appeared on .

]]>

பட்டி 25 இவி (Buddie 25 EV)

இந்தியாவில் கடந்த காலங்களைக் காட்டிலும் இப்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே இந்தியாவில் தற்போது விற்பனையாகிக் கொண்டிருக்கும் புதிய மின்சார இருசக்கர வாகனங்களின் தேர்வை பலப்படுத்தும் விதமாக, ரிவேம்ப் மோட்டோ (Revamp Moto) எனும் புதிய நிறுவனம் அதன் புதிய எலெக்ட்ரிக் மொபட் ரக வாகனத்தை ரிவேம்ப் பட்டி 25 இவி (Buddie 25 EV) எனும் பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கிறது. இந்த எலக்ட்ரிக் மொபட்டை ஓட்ட லைசென்ஸ், ஆர்சி புக் எதுவும் தேவை இல்லை!

புக்கிங்

மற்ற வாகனங்களை ஒப்பிடும்போது இந்த இருசக்கர வாகனத்தின் தோற்றம் சற்று மாறுபட்டதாக இருக்கிறது. இந்த வாகனத்திற்கான புக்கிங் பணிகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலை தள பக்கம் வாயிலாக விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதனை புக் செய்ய வெறும் ரூ. 999 இருந்தால் போதும். இந்த மிகக் குறைவான முன் தொகையிலேயே புக்கிங்குகள் ஏற்கப்பட இருக்கின்றன. இது மட்டும் இல்லை. இந்த வாகனத்தை மிகக் குறைவான விலையில் விற்பனைச் செய்யவும் ரிவேம்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது பட்டி 25 இவி வாகனத்தை வெறும் 66 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. புக்கிங் பணிகள் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி அன்றே நாடு முழுவதும் தொடங்கி விட்டது.

டெலிவரி

ரிவேம்ப், இந்த வாகனத்தின் டெலிவரி பணிகளை அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்க இருக்கிறது. ரிவேம்ப் நிறுவனம் இந்த வாகனத்தை முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பாகவே உருவாக்கி இருக்கின்றது. இதன் உற்பத்தி பணிகள் மஹாராஷ்டிராவில் உள்ள தானே எனும் பகுதியிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. புதிய இருசக்கர வாகனத்தின் பக்கம் மக்களை ஈர்க்கும் விதமாக சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ரிவேம்ப் நிறுவனம் ஆரம்பித்து உள்ளது.

திட்டங்கள்

அந்தவகையில், வாடிக்கையாளர்கள் எளிதில் பட்டி 25 இவி-யை வாங்கும் விதமாக சில முன்னணி வங்கிகளுடன் கூட்டணியைத் தொடங்கி உள்ளது. குறிப்பாக இந்த மொபட் ரக மின்சார இருசக்கர வாகனத்தை ‘நோ காஸ்ட் இஎம்ஐ’ மூலம் வாங்கிக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன், இதற்கு இன்ஸ்டான்ட் லோனை வழங்கவும் ரிவேம்ப் மோட்டோ ஏற்பாடு செய்துள்ளது. இந்த இரு திட்டங்களும் வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பேட்டரி

பட்டி 25 இவி-யில் 48 V, 25 Ah லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த வாகனத்தை தனியாக பதிவு செய்ய வேண்டியதில்லை. இது குறைவான வேகத்தில் இயங்கும் வாகனம் என்பதால் இந்த வாகனத்திற்கு பதிவெண் அவசியம் இல்லை. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். இந்த அளவு குறைவான வேகம் கொண்ட வாகனங்களை இயக்க டிரைவிங் லைசென்ஸும் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே இந்த இருசக்கர வாகனத்தை சாலையில் பயன்படுத்த எந்த விதமான அனுமதியோ அல்லது ஆவணங்களோ தேவைப்படாது.

2 இன் 1

பட்டி 25 இவி-யில் வழங்கப்பட்டிருக்கும் 48 V, 25 Ah லித்தியம் அயன் பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணி நேரம் 45 நிமிடங்களே போதுமானது. இந்த இருசக்கர வாகனத்தை மாடுலர் யூடிலிட்டி பிளாட்ஃபார்மில் வைத்து நிறுவனம் கட்டமைத்துள்ளது. இந்த பிளாட்பாரத்தின் வாயிலாகவே இதனை டிரான்ஸ்ஃபார்மபிள் இவியாக ரிவேம்ப் வடிவமைத்துள்ளது. ஆம், பட்டி 25 இவி-யை தேவைப்படும்போது பொருட்களை ஏற்றிசெல்லும் வாகனமாக மாற்றிக் கொள்ள முடியும். இதனை வெறும் 30 செகண்டுகளிலேயே நம்மால் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கான கேரியர் அமைப்பு பின் பகுதியிலேயே வழங்கப்பட்டுள்ளது. இதில், பாக்ஸ், பெரிய பை என எதை வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும். மேலும், இந்த வாகனத்தில் சுமார் 120 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை ஏற்றி செல்ல முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றுடன், ஸ்மார்ட் இணைப்பு மற்றும் மாடுலர், ஆட்டோ ஹெட்லேம்ப் உள்ளிட்ட நவீன கால தொழில்நுட்ப வசதிகளும் இந்த மின்சார மொபட்டில் வழங்கப்பட்டுள்ளன.

The post பட்டி 25 இவி எலக்ட்ரிக் மொபட்டை ஓட்ட லைசென்ஸ், ஆர்சி புக் எதுவும் தேவை இல்லை! first appeared on .

]]>
சார்ஜிங் ஸ்டேஷன்களை கண்டறிய இவி யாத்ரா செயலி அறிமுகம்! https://www.91mobiles.com/tamil/president-of-india-launched-ev-yatra-app-for-public-charging-stations/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=president-of-india-launched-ev-yatra-app-for-public-charging-stations Thu, 15 Dec 2022 11:17:11 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4330 இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான இவி சார்ஜிங் ஸ்டேஷன்களை கண்டறிய பிரத்தியேக மொபைல் அப் அறிமுகமாகியுள்ளது. இதில் சார்ஜிங் ஸ்டேஷன் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்வதோடு, சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் ஏற்றுவதற்காக புக்கிங்கும் செய்து கொள்ளலாம். இது குறித்த விரிவான தெளிவான தகவல்களை காணலாம் வாருங்கள். அரசு முயற்சி இந்தியாவில் தற்போது மத்திய மாநில அரசுகள் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். பெட்ரோல் வாகனங்களில் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது. […]

The post சார்ஜிங் ஸ்டேஷன்களை கண்டறிய இவி யாத்ரா செயலி அறிமுகம்! first appeared on .

]]>

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான இவி சார்ஜிங் ஸ்டேஷன்களை கண்டறிய பிரத்தியேக மொபைல் அப் அறிமுகமாகியுள்ளது. இதில் சார்ஜிங் ஸ்டேஷன் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்வதோடு, சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் ஏற்றுவதற்காக புக்கிங்கும் செய்து கொள்ளலாம். இது குறித்த விரிவான தெளிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

அரசு முயற்சி

இந்தியாவில் தற்போது மத்திய மாநில அரசுகள் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். பெட்ரோல் வாகனங்களில் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது. இதை தடுக்க எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவித்து வருகின்றனர். இதன் மூலம் எதிர்காலத்தில் மாசுவை குறைக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் காரணமாக ஏராளமான மானியங்களை வழங்கி வருகிறது. ஆனால் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் மீதான ஈர்ப்பு மிக மெதுவாக தான் அதிகமாகி வருகிறது.

பிரச்சனை

இதற்கு முக்கியமான காரணம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான சந்தேகங்கள் மற்றும் பயம்தான். எலெக்ட்ரிக் வாகனங்கள் பெட்ரோல் டீசல் வாகனங்களை போல இல்லை. இன்றைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களில் நீண்ட தூரம் பயணிக்க முடியாது, பெட்ரோல் வானகங்களில் பயணத்தின் போது பெட்ரோல் காலியாகும் நிலை வந்தால் பெட்ரோல் பங்க்களுக்கு சென்று பெட்ரோலை நிரப்பிக்கொண்டு பயணிக்கலாம். ஆனால் இது எலெக்ட்ரிக் வாகனங்களில் சாத்தியமே இல்லை.

சார்ஜிங் ஸ்டேஷன்கள்

இன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் முழு சார்ஜில் குறிப்பிட்ட அளவு தூரம் மட்டுமே பயணிக்கும் திறன் இருக்கிறது. அதை மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும், பெட்ரோல் கார்கள் போல 5 நிமிடத்தில் முடியக்கூடிய வேலையில்லை. குறைந்த பட்சம் 45-50 நிமிடங்களாவது ஆகும். அதனால் எலெக்ட்ரிக் கார்கள் நீண்ட தூர பயன்பாட்டிற்கு பயன்படுத்த தயங்கி வருகின்றனர். இது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அதே நேரத்தில் தற்போது இந்தியாவில் பெட்ரோல் பங்க்கள் இருப்பது போல் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷன்கள் எல்லாம் இந்தியாவில் இல்லை.

அறிமுகம்

தற்போது இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் கூட எங்கு இருக்கிறது என தெரியவில்லை. இது முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு இவி யாத்ரா என்ற செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்த பிரச்சனையை முற்றிலுமாக தீர்த்து வைக்க இருக்கிறது. தேசிய ஆற்றல் சேமிப்பு தினமான டிசம்பர் 14ம் தேதி இந்த செயலியை இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு துவக்கி வைத்துள்ளார். எனர்ஜி எஃபிசியன்ஸி பியூரோ சார்பில் இந்த செயலி உருவாக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்பணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த செயலி மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

பயன்கள்

இந்த செயலில் பொது சார்ஜிங் மையங்களை வைத்திருப்பவர்கள் தங்கள் சார்ஜிங் மையங்கள் குறித்த தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த செயலியை தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஆகிய தளங்களுக்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இதில் சார்ஜிங் மையம் இருக்கும் இடம், மையத்தில் என்ன வகையான சார்ஜர்கள் இருக்கிறது போன்ற தகவல்களையும், சார்ஜிங் மையத்தில் எந்த நேரம் ஸ்லாட் இருக்கிறது, சார்ஜ் ஏற்ற எவ்வளவு கட்டணம் ஆகிய தகவல்களை இந்த ஆப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பொதுமக்கள் இந்த தகவல்களை அவர்கள் செல்போன் ஆப் மூலம் தெரிந்து கொள்ள முடியும். மேலும் குறிப்பிட்ட சார்ஜிங் ஸ்டேஷனில் அவர்கள் சார்ஜ் செய்ய விரும்பினால் அதையும் இந்த ஆப் மூலமே புக்கிங் செய்து கொள்ள முடியும். இது மட்டுமல்ல சார்ஜிங் பாயிண்ட் ஆப்ரேட்டர்கள் தங்கள் மையங்களில் வழங்கும் பிற சேவைகள் குறித்தும் இந்த ஆப்பில் பதிவு செய்யலாம். இதன் மூலம் சார்ஜிங் செய்ய வருபவர்கள் இந்த சேவைகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த ஆப்பை மக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

The post சார்ஜிங் ஸ்டேஷன்களை கண்டறிய இவி யாத்ரா செயலி அறிமுகம்! first appeared on .

]]>
சிறந்த எலக்ட்ரிக் கார் விருதை வென்றது அட்டோ3! https://www.91mobiles.com/tamil/byd-atto3-wins-award/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=byd-atto3-wins-award Mon, 12 Dec 2022 08:34:42 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4244 பிஒய்டி அட்டோ3 சமீபத்தில் பிஒய்டி நிறுவனம் அட்டோ 3 எனும் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிட்டது. இது இந்தியாவில் வெளியான பிஒய்டி நிறுவனத்தின் இரண்டாவது கார் ஆகும். அதுவரை இ6 எனும் எம்பிவி ரக எலெக்ட்ரிக் காரை மட்டுமே விற்பனை செய்து வந்தது. இந் நிலையில், இந்த அட்டோ 3 எனும் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காரை பிஒய்டி அறிமுகப்படுத்தியது. இதுவும் அதிக பிரீமியம் வசதிகள் கொண்டதாகும். இதுவரை இந்த காரை 1,500 -க்கும் அதிகமான இந்தியர்கள் […]

The post சிறந்த எலக்ட்ரிக் கார் விருதை வென்றது அட்டோ3! first appeared on .

]]>

பிஒய்டி அட்டோ3

சமீபத்தில் பிஒய்டி நிறுவனம் அட்டோ 3 எனும் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிட்டது. இது இந்தியாவில் வெளியான பிஒய்டி நிறுவனத்தின் இரண்டாவது கார் ஆகும். அதுவரை இ6 எனும் எம்பிவி ரக எலெக்ட்ரிக் காரை மட்டுமே விற்பனை செய்து வந்தது. இந் நிலையில், இந்த அட்டோ 3 எனும் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காரை பிஒய்டி அறிமுகப்படுத்தியது. இதுவும் அதிக பிரீமியம் வசதிகள் கொண்டதாகும். இதுவரை இந்த காரை 1,500 -க்கும் அதிகமான இந்தியர்கள் புக் செய்திருக்கின்றனர். ஏற்கனவே, பென்ஸ், ஆடி போன்ற சொகுசு கார்களை பயன்படுத்தி வரும் இந்தியர்களே இந்த காரை அதிகளவில் புக் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விருது

இந்த அட்டோ 3, தற்போது ‘விஏபி எலெக்ட்ரிக் ஃபேமிலி கார் ஆஃப் தி இயர் 2023’ (VAB Electric Family Car of the Year 2023) விருதை வென்றிருக்கின்றது. 15 நடுவர்கள் அடங்கிய குழுவே இந்த விருதை எலெக்ட்ரிக் காருக்கு வழங்கியிருக்கின்றது. இந்த 15 நடுவர்களும் மோட்டார் வாகன உலகைச் சேர்ந்த கை தேர்ந்த பத்திரிக்கையாளர்கள் ஆவார்கள். இவர்களின் நற்மதிப்புடன் சேர்த்து 74 க்கும் அதிகமானோர் தங்களின் குடும்பத்திற்கு ஏற்ற காராக இந்த எலெக்ட்ரிக் கார் இருப்பதாக வாக்களித்திருக்கின்றனர்.

போட்டியில் பிஒய்டி அட்டோ 3 உடன் சேர்த்து ஃபோக்ஸ்வேகன், ரெனால்ட், சிட்ரோன், நிஸான், சியூப்ஆர்ஏ, எம்ஜி, ஐவேஸ், செரஸ் மற்றும் சாங்யாங் ஆகிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களும் இந்த போட்டியில் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றின் தயாரிப்புகளைக் காட்டிலும் மிக சிறப்பானதாக பிஒய்டி அட்டோ3 காட்சியளிக்கின்றது. இதன் விளைவாகவே பல கட்ட ஆய்விற்கு பின்னர் அக்காருக்கு மிக சிறந்த விருது வழங்கப்பட்டுள்ளது. டிசைன், அதிக கம்ஃபோர்ட், தரம் என அனைத்திலும் இந்த கார் மிக தரமானது என்று மக்களால் பாராட்டப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அதிக வாரண்டி, லாபம், அதிக இட வசதி, உயர் தர சிறப்பம்சங்கள் ஆகியவைகள் விஷயத்திலும் இந்த கார் நற் மதிப்பையே பெற்றிருக்கின்றது.

ஐந்து ஸ்டார்

பிஒய்டி ஏற்கனவே அதிக பாதுகாப்பான வாகனம் என்கிற விருதையும் வென்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பான கார் என்ற ரேட்டிங்கைப் பெற்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு விருதுகளை இந்த கார் வெகு விரைவில் வாரி குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விலை

பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 33.99 லட்சம். இந்த காரின் டெலிவரி பணிகள் வரும் ஜனவரி மாதத்தில் இருந்தே நாட்டில் தொடங்கப்பட இருக்கின்றன. இந்த நிலையிலேயே ஏராளமான இந்தியர்கள் எலெக்ட்ரிக் காரை புக் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

மைலேஜ்

இந்த காரில் ஓர் ஃபுல் சார்ஜில் 521 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 60.48 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை 80 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பாயிண்டில் வாயிலாககூட சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதன் வாயிலாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் 0 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 50 நிமிடங்களில் ஏற்றிக் கொள்ள முடியும். இதேபோல், இக்காரை 2 ஏசி பாயிண்டிலும் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதில் சார்ஜ் செய்யும்போது முழு சார்ஜை எட்ட 10 மணி நேரங்களை அட்டோ 3 எடுத்துக் கொள்ளும்.

திறன்

இந்த மின்சார காரில் 201 எச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரையே பிஒய்டி பயன்படுத்தியிருக்கின்றது. இது வெறும் 7.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

வசதிகள்

இக்காரில் கூடுதல் சிறப்பு வசதிகளாக கேபினை விரைவில் குளிர்விக்கக் கூடிய பவர்ஃபுல் ஏசி, வட்ட வடிவ ஸ்பீக்கர்கள், 12.8 அங்குல ரொட்டேட் செய்யும் வசதிக் கொண்ட திரை, பனோரமிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், 5 அங்குல டிஜிட்ல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் பல ஏராளமான அம்சங்கள் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் முன்-பின் பக்க கொலிசன் வார்னிங் சிஸ்டம் உள்ளிட்டவையே பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

The post சிறந்த எலக்ட்ரிக் கார் விருதை வென்றது அட்டோ3! first appeared on .

]]>
423 கிமீ ரேஞ்ச், 32 நிமிடங்களில் 80% சார்ஜ் – ப்ரீமியம் வசதிகளுடன் பென்ஸின் 3வது எலக்ட்ரிக் கார்! https://www.91mobiles.com/tamil/mercedes-benz-eqb-e-car/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=mercedes-benz-eqb-e-car Mon, 05 Dec 2022 08:03:06 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4076 பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய சந்தையில் Mercedes-Benz EQB என்னும் புதிய எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கின்றது. பலவிதமான சிறப்பம்சங்களுடன் இந்த எலெக்ட்ரிக் காரை பென்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த சொகுசு மின்சார கார் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். ஏற்கனவே இந்திய சந்தையில் இக்யூஎஸ், இக்யூசி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை செய்து வருகிறது. மூன்றாவது எலெக்ட்ரிக் கார் […]

The post 423 கிமீ ரேஞ்ச், 32 நிமிடங்களில் 80% சார்ஜ் – ப்ரீமியம் வசதிகளுடன் பென்ஸின் 3வது எலக்ட்ரிக் கார்! first appeared on .

]]>

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய சந்தையில் Mercedes-Benz EQB என்னும் புதிய எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கின்றது. பலவிதமான சிறப்பம்சங்களுடன் இந்த எலெக்ட்ரிக் காரை பென்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த சொகுசு மின்சார கார் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏற்கனவே இந்திய சந்தையில் இக்யூஎஸ், இக்யூசி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை செய்து வருகிறது.

மூன்றாவது எலெக்ட்ரிக் கார்

இது நிறுவனத்தின் மூன்றாவது மின்சார கார் மாடல் ஆகும். இதே கார் மாடல் ஐசிஇ மோட்டாருடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது. அந்த வாகனம் ஜிஎல்பி எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். இக்யூபி சொகுசு எலெக்ட்ரிக் காருக்கு அறிமுக விலையாக ரூ. 74.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜிஎல்பி-யைக் காட்டிலும் 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே அதிகம் ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்யூபி ஓர் மூன்று வரிசைகள் இருக்கை அமைப்புக் கொண்ட எஸ்யூவி ரக காராகும்.

2 மாடல்கள்

இதனை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இக்யூபி 300 மற்றும் இக்யூபி 350 என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கிறது. இந்த காரின் வெளிப்புற தோற்றம் மட்டுமல்ல உட்புறமும் அசத்தலாக தயார் செய்யப்பட்டுள்ளது. பிளாங்கட்-ஆஃப் கிரில், ட்வீக் ரக ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் உள்ளிட்டவை இக்யூபி காரின் வெளிப்புறத்திற்கு அழகு சேர்க்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

நிறங்கள்

இதுமட்டுமின்றி, அழகான தோற்றம் கொண்ட பம்பர், முழு அகல எல்இடி லைட் பார், 18 அங்குல அலாய் வீல்கள் ஆகியவற்றையும் இந்த காரில் நிறுவனம் வழங்கியிருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. காஸ்மோஸ் பிளாக், ரோஸ் கோல்டு, டிஜிட்டல் ஒயிட், மவுண்டெயின் கிரே மற்றும் இரிடியம் சில்வர் ஆகிய ஐந்து விதமான தேர்வுகளிலேயே இக்யூபி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

அம்சங்கள்

இதேபோல் காரின் உட்பக்கமும் அட்டகாசமான பிரீமியம் அம்சங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப், 64 வண்ணங்கள் கொண்ட ஆம்பியன்ட் மின் விளக்கு, பவர்டு டெயில்கேட் மற்றும் எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் முன் பக்க இருக்கை உள்ளிட்டவை இக்யூபி எலெக்ட்ரிக் வழங்கப்பட்டிருக்கின்றன.

திறன்

ஏற்கனவே கூறியதைப் போல் இந்த கார் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் இக்யூபி வேரியண்டில் 228 எச்பி பவர் மற்றும் 390 என்எம் டார்க்கை வழங்கும் மின்சார மோட்டாரும், இக்யூபி 350 இல் 292 எச்பி பவர் மற்றும் 520 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின்சார மோட்டாரும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. பேட்டரி பேக்கை பொருத்தவரை இரு கார்களிலும் ஒரே மாதிரியான திறன் கொண்டதே பயன்படுத்தப்பட்டுள்ளது.

மைலேஜ்

66.5 kWh பேட்டரி பேக்கே இக்யூபி எலெக்ட்ரிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 423 கிமீ ரேஞ்ஜை தரும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் தரும் பேட்டரி பேக்கிற்கு 8 ஆண்டுகள் வாரண்டியை வழங்க நிறுவனம் முடிவு செய்திருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் 25 நிமிடங்கள் போதும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேட்டரி

வழக்கமான 11 kW ஏசி சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும் பட்சத்திலேயே இந்த அதிகபட்ச நேரத்தை இக்யூபி எலெக்ட்ரிக் கார் எடுத்துக் கொள்ளும். அதுவே, 100 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் வைத்து சார்ஜ் செய்தால் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 32 நிமிடங்களில் ஏற்றிக் கொள்ள முடியும். இந்த காரின் வருகை வால்வோ எக்ஸ்சி 40 எலெக்ட்ரிக் காருக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

The post 423 கிமீ ரேஞ்ச், 32 நிமிடங்களில் 80% சார்ஜ் – ப்ரீமியம் வசதிகளுடன் பென்ஸின் 3வது எலக்ட்ரிக் கார்! first appeared on .

]]>
விரைவில் புக்கிங்கை துவங்குகிறது ஹூண்டாய் ஐயானிக் 5 https://www.91mobiles.com/tamil/hyundai-ioniq-5-electric-car-india-official-booking-details/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=hyundai-ioniq-5-electric-car-india-official-booking-details Wed, 30 Nov 2022 08:49:17 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3992 இந்தியாவில் டாடா (Tata), எம்ஜி மோட்டார் (MG Motor) மற்றும் ஹூண்டாய் (Hyundai) போன்ற பல்வேறு நிறுவனங்கள் இங்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன. இதில், ஹூண்டாய் நிறுவனத்தை பொறுத்தவரையில் கோனா என்ற ஒரே ஒரு எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric) காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், இந்திய சந்தையில் தனது 2வது எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் நிறுவனம் முழு வீச்சில் […]

The post விரைவில் புக்கிங்கை துவங்குகிறது ஹூண்டாய் ஐயானிக் 5 first appeared on .

]]>

இந்தியாவில் டாடா (Tata), எம்ஜி மோட்டார் (MG Motor) மற்றும் ஹூண்டாய் (Hyundai) போன்ற பல்வேறு நிறுவனங்கள் இங்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன. இதில், ஹூண்டாய் நிறுவனத்தை பொறுத்தவரையில் கோனா என்ற ஒரே ஒரு எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric) காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், இந்திய சந்தையில் தனது 2வது எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் நிறுவனம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து அடுத்து வரவுள்ள எலெக்ட்ரிக் கார் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) ஆகும்.

முன்பதிவு

இந்த எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் நிறுவனம் தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் விற்பனைக்கு கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் காணப்படுகிறது. இப்படி ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்காக காத்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தற்போது மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு வெகு விரைவில் முன்பதிவு தொடங்கப்பட இருக்கிறது. வரும் டிசம்பர் 20ம் தேதியில் இருந்து (December 20) ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு தொடங்கப்படும் என ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ 2023 (Auto Expo 2023) திருவிழாவில் வைத்து ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைலேஜ்

இ-ஜிஎம்பி என சுருக்கமான அழைக்கப்படும் Electric-Global Modular Platform (E-GMP) அடிப்படையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காரும் இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், 58 kWh மற்றும் 72.6 kWh என 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த எலெக்ட்ரிக் காரின் அதிகபட்ச ரேஞ்ச் (Range) 480 கிலோ மீட்டர்கள் வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 பேட்டரி ஆப்ஷன்களுமே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்படும்.

வசதிகள்

இதன்படி பனரோமிக் சன்ரூஃப், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவற்றுக்கு தலா 1 திரைகள், தட்டையான அடிப்பாகம் கொண்ட 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் மற்றும் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் என பல்வேறு வசதிகளை ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிசைனை பொறுத்தவரையில், ஒருங்கிணைந்த எல்இடி பகல் நேர விளக்குகளுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்கள் ஆகியவை இடம்பெறலாம். மேலும் ஒருங்கிணைந்த ஸ்பாய்லர் மற்றும் சுறா துடுப்பு ஆன்டெனா ஆகிய அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் மிகச்சிறந்த எலெக்ட்ரிக் காராக ஹூண்டாய் ஐயோனிக் 5 இருக்கலாம். இந்திய சந்தையில் கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கு, ஹூண்டாய் ஐயோனிக் 5 மிக முக்கியமான போட்டியாளராக இருக்கும். கியா இவி6 எலெக்ட்ரிக் காரை விட, ஹூண்டாய் ஐயோனிக் 5 மிகவும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை

இந்திய சந்தைக்கு சிபியூ வழியில்தான் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் கொண்டு வரப்பட்டுள்ளது. (Completely Built Unit என்பதன் சுருக்கம்தான் CBU. அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. எனவே வரிகள் (Tax) உள்ளிட்ட காரணங்களால், கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் கியா இவி6 எலெக்ட்ரிக் கார், 59.95 லட்ச ரூபாய் முதல் 64.95 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

எதிர்பார்ப்பு

ஆனால் கியா இவி6 எலெக்ட்ரிக் காரை போல் அல்லாமல், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படவுள்ளது. எனவே கியா இவி6 எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது, ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு மிகவும் குறைவான விலையை ஹூண்டாய் நிறுவனத்தால் நிர்ணயம் செய்ய முடியும். இதன் காரணமாக இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

The post விரைவில் புக்கிங்கை துவங்குகிறது ஹூண்டாய் ஐயானிக் 5 first appeared on .

]]>
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% சாலை வரி குறைப்பு 2025 வரை நீட்டிப்பு- தமிழக அரசு அதிரடி! https://www.91mobiles.com/tamil/govt-plans-to-extend-100-percent-road-tax-exemption-for-ev/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=govt-plans-to-extend-100-percent-road-tax-exemption-for-ev Fri, 25 Nov 2022 08:40:39 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3905 தமிழக அரசு மின்சார வாகன விற்பனையை அதிகரிக்கும் விதமாக அவற்றிற்கு வழங்கப்பட்டு வரும் 100 சதவீத சாலை வரி குறைப்பு திட்டத்தை 2025 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோல் வாகனங்களை ஒப்பிடும் போது எலக்ட்ரிக் வாகனஙகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் விளைவாக அடித்தட்டு மக்களின் எட்டாக் கனியாக எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக மத்திய அரசு மானியம் உட்பட பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. இருந்த போதிலும் […]

The post எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% சாலை வரி குறைப்பு 2025 வரை நீட்டிப்பு- தமிழக அரசு அதிரடி! first appeared on .

]]>

தமிழக அரசு மின்சார வாகன விற்பனையை அதிகரிக்கும் விதமாக அவற்றிற்கு வழங்கப்பட்டு வரும் 100 சதவீத சாலை வரி குறைப்பு திட்டத்தை 2025 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெட்ரோல் வாகனங்களை ஒப்பிடும் போது எலக்ட்ரிக் வாகனஙகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் விளைவாக அடித்தட்டு மக்களின் எட்டாக் கனியாக எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக மத்திய அரசு மானியம் உட்பட பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது.

இருந்த போதிலும் இன்னும் ஒரு சில தரப்பு மக்களால் வாங்க முடியாத இடத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கின்றன. எனவேதான் இந்த விஷயத்தில் மாநில அரசுகளும் தங்களது பங்களிப்பை வழங்கிக் கொண்டு இருக்கின்றன. அந்தவகையில், தமிழக அரசு தனது பங்களிப்பாக வழங்கி வரும் 100 சதவீத வரி குறைப்பு திட்டத்தை இன்னும் சில ஆண்டுகள் நீட்டிக்க திட்டம் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி வரும் 2025 ஆம் ஆண்டு வரை 100 சதவீத வரி ரத்து குறைப்பு நீட்டிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மின்சார வாகனங்களின் விற்பனையை இரு மடங்கு ஆக்கும் பொருட்டு தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. இதனால் மின்சார வாகனங்களின் விலை 8 சதவீதம் வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டில் இருந்து மின்சார வாகனங்களுக்கு குறைவான வரியை விதிக்கும் செயலை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 750ம், தனிப்பட்ட பயன்பாட்டு வசதிக் கொண்ட (பிரைவேட்) கார்களுக்கு அதன் விலையில் 3 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை மட்டுமே வரி வசூலிக்கப்படுகின்றது. இதன் பின்னரே இந்த வரி தொகையை அரசாங்கம் பாதியாகக் குறைத்தது. இந்த பாதி வரி விதிப்புகூட மின் வாகன விற்பனைக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக 2019 இல் முதல் முறையாக 100 சதவீதம் வரி ரத்து அறிவிக்கப்பட்டது. முதலில் 2022 டிசம்பர் வரை மட்டுமே இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. எனவே வரும் ஜனவரி முதல் மின்சார வாகனங்களின் விலை மீண்டும் சற்று உயரும் என அஞ்சப்பட்டது.

இந்த நிலையிலேயே உரிய நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த 100 சதவீத வரி தள்ளுபடியை 2025 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க தமிழக அரசு ஆலோசித்து வருகின்றது. ஏற்கனவே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக போக்குவரத்துத்துறை முன்மொழிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலே தற்போது வெளியாகி ஒட்டுமொத்த தமிழக வாசிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. மக்களிடம் இருந்து மட்டுமல்ல ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கமும் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பை வழங்கி இருக்கின்றது.

ஆனால், இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. வெகு விரைவில் இது குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது, தனி நபர் மின்சார வாகனம் வாங்கினால் ரூ. 500 முதல் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. ஸ்மார்ட் கார்டுக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. ஆன்-ரோடுக்கான கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

சராசரியாக ஒவ்வொரு மாதமும் 4,500க்கும் அதிகமான மின்சார வாகனங்கள் புதிதாக சாலைக்கு பயன்பாட்டிற்கு வந்த வண்ணம் இருக்கின்றன. இதன் விளைவாக இந்த ஆண்டு மட்டும் 58 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்கள் புதிதாக இணைந்திருக்கின்றன. அதேவேலையில், தனி நபர் வாகனங்களை போல் வர்த்தக மின்சார வாகனங்களுக்கு வரி சலுகை வழங்கப்படுவதில்லை. எனவேதான் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தைப் போல் இங்கு அதிகளவில் நம்மால் எலெக்ட்ரிக் டாக்சிகளைக் காண முடிவதில்லை. விரைவில் அதற்கும் ஏதேனும் தீர்வு கிடைக்கும் என நம்புவோம்.

The post எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% சாலை வரி குறைப்பு 2025 வரை நீட்டிப்பு- தமிழக அரசு அதிரடி! first appeared on .

]]>
டாடா டிகோர் இவி எலக்ட்ரிக் காரின் புதிய 2022 மாடல் வெளியானது. https://www.91mobiles.com/tamil/2022-tata-tigor-ev-launched-in-india-price-features-driving-range/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=2022-tata-tigor-ev-launched-in-india-price-features-driving-range Thu, 24 Nov 2022 07:48:14 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3866 டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் விலை, வசதிகள் மற்றும் மைலேஜ் போன்ற தகவல்களை இப்போது பார்க்கலாம். ஏற்கனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV) மிகவும் பிரபலமாக இருக்கிறது. இதன் அப்டேட் செய்யப்பட்ட 2022 மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கிறது. டிரைவிங் ரேஞ்ச் இந்த புதிய மாடலில் டிரைவிங் ரேஞ்ச் […]

The post டாடா டிகோர் இவி எலக்ட்ரிக் காரின் புதிய 2022 மாடல் வெளியானது. first appeared on .

]]>

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் விலை, வசதிகள் மற்றும் மைலேஜ் போன்ற தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ஏற்கனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV) மிகவும் பிரபலமாக இருக்கிறது. இதன் அப்டேட் செய்யப்பட்ட 2022 மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது விற்பனைக்கு கொண்டு வந்து இருக்கிறது.

டிரைவிங் ரேஞ்ச்

இந்த புதிய மாடலில் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதல் வசதிகளும் (Features) வழங்கப்பட்டுள்ளன. 2022 டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில், 74 பிஹெச்பி மற்றும் 170 என்எம் பவர் அவுட்புட்டை கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் 26 kWh பேட்டரி தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது. பழைய மாடலிலும் இதே பேட்டரி தொகுப்புதான் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை இந்த பேட்டரி தொகுப்பின் டிரைவிங் ரேஞ்ச் 315 கிலோ மீட்டர்கள் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய டிரைவிங் ரேஞ்ச் ஆகும்.

புதிய வசதிகள்

இது முந்தைய மாடலின் டிரைவிங் ரேஞ்ச் உடன் ஒப்பிடும்போது, இது 9 கிலோ மீட்டர்கள் அதிகம் ஆகும். பழைய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் டிரைவிங் ரேஞ்ச் 306 கிலோ மீட்டர்கள் மட்டுமே. டிரைவிங் ரேஞ்ச் அதிகரிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், க்ரூஸ் கண்ட்ரோல், லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல் ஆகிய வசதிகள் புதிதாகவும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய நிறம்

அத்துடன் ‘மேக்னடிக் ரெட்’ என்ற புதிய கலர் ஆப்ஷனும் 2022 டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் மதிப்பு வாய்ந்த தேர்வாக இருக்கும். இதுதவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ‘ZConnect’ கனெக்டட் கார் தொழில்நுட்பம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் டயர் பஞ்சர் ரிப்பேர் கிட் ஆகிய அம்சங்களும் புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் இடம்பெற்றுள்ளன.

விலை

2022 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். இதன் விலை 12.49 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். அத்துடன் இது ஆரம்ப நிலை XE வேரியண்ட்டின் விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் இந்த காரின் XT வேரியண்ட்டின் விலை 12.99 லட்ச ரூபாயாகவும், XZ+ வேரியண்ட்டின் விலை 13.49 லட்ச ரூபாயாகவும், XZ+ Lux வேரியண்ட்டின் விலை 13.75 லட்ச ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவையும் எக்ஸ் ஷோரூம் விலைதான். இந்த விலைக்கு புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் மிகச்சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.

2022 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு வரும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புகளை பொய் ஆக்காமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் எலெக்ட்ரிக் காரை பல்வேறு விதங்களிலும் மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், 2022 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

The post டாடா டிகோர் இவி எலக்ட்ரிக் காரின் புதிய 2022 மாடல் வெளியானது. first appeared on .

]]>
தானாக சார்ஜ் செய்து கொள்ளும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார்! https://www.91mobiles.com/tamil/toyota-innova-hycross-hybrid-self-charging/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=toyota-innova-hycross-hybrid-self-charging Mon, 21 Nov 2022 07:54:42 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3768 புதிதாக வெளியாக இருக்கும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரில் இடம் பெற இருக்கும் ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சம் தானாகவே சார்ஜ் செய்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. டொயோட்டா நிறுவனம் வெகு விரைவில் அதன் இன்னோவா கார் மாடலை ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் டீசர் படங்களைத் தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. இந்த டீசர்களின் வாயிலாக இன்னோவா ஹைகிராஸ் காரில் இடம் பெற இருக்கும் […]

The post தானாக சார்ஜ் செய்து கொள்ளும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார்! first appeared on .

]]>

புதிதாக வெளியாக இருக்கும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரில் இடம் பெற இருக்கும் ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சம் தானாகவே சார்ஜ் செய்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொயோட்டா நிறுவனம் வெகு விரைவில் அதன் இன்னோவா கார் மாடலை ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் டீசர் படங்களைத் தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. இந்த டீசர்களின் வாயிலாக இன்னோவா ஹைகிராஸ் காரில் இடம் பெற இருக்கும் அம்சங்களை டொயோட்டா உறுதிச் செய்து வருகின்றது.

ஹைபிரிட் தொழில்நுட்பம்

டொயோட்டா இன்னோவா இந்த நிலையிலேயே ஹைபிரிட் தொழில்நுட்பம் இடம் பெற இருப்பதையும், இந்த சிஸ்டம் தானாகவே காரின் இயக்கத்தின் மூலம் சார்ஜ் செய்து கொள்ளும் என்பதையும் நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கின்றது. முன்னதாக இந்த தகவல்கள் வதந்தியாக மட்டுமே இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையிலேயே அதனை டொயோட்டா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கின்றது. இதனால் இன்னோவா கார் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக இந்த காரில் டொயோட்டா நிறுவனம் அடாஸ் அம்சத்தை வழங்க இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் இன்னும் அதிகப்படியானோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அடாஸ் அம்சத்தை டொயோட்டாவின் வேறு எந்த காரிலும் நம்மால் காண முடியாது என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது.

அடாஸ் அம்சம்

அடாஸ் அம்சத்தை முதல் முறையாக இன்னோவா ஹைகிராஸ் காரிலேயே டொயோட்டா வழங்கியிருக்கின்றது. இந்த அடாஸ் அம்சத்தின் வாயிலாக தானாக பிரேக் பிடித்தல், விபத்தைத் தவிர்த்தல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த அம்சங்கள் அனைத்தும் கூடுதலாக வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸில் வழங்க இருக்கின்றது. இதுதவிர பனோரமிக் சன்ரூஃப் போன்ற பிரீமியம் அம்சங்களும் இந்த காரில் இடம் பெற இருக்கின்றன. இதுதவிர, பெரிய க்ரில், எல்இடி ஹெட்லேம்ப், பகல் நேரத்தில் ஒளிரும் மின் விளக்குகள் உள்ளிட்டவையும் புதிய இன்னோவா ஹைகிராஸ் காரில் இடம் பெற உள்ளன.

வெளியீட்டு தேதி

டொயோட்டா நிறுவனம் இந்த காரை தற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவா க்ரிஸ்டா உடன் இணைந்தே புதிய இன்னோவா ஹைகிராஸ் காரையும் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இது வரும் நவம்பர் 25ம் தேதி வெளியாக இருக்கின்றது. இது என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. அறிமுக நாளின்போதே இதுகுறித்த தகவல் வெளியிடப்பட இருக்கின்றன.

அதேபோல், என்ன மாதிரியான மோட்டார் இக்காரில் பயன்படுத்தப்பட இருக்கின்றது என்பது பற்றிய விபரமும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேவேளையில், 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே இந்த ஸ்ட்ராங் ஹைபிரிட் வசதிக் கொண்ட இன்னோவா ஹைகிராஸில் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த தகவல் ஒரு பக்கம் வெளியாகிக் கொண்டிருக்க, மறுபக்கம் 1.5 லிட்டர் மோட்டாரிலேயே இன்னோவா ஹைகிராஸ் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

முன்பதிவு

இவ்வாறு அடுக்கடுக்காக இக்கார் பற்றிய தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில், டொயோட்டா நிறுவனத்தின் டீலர்கள் சிலர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்னரே இன்னோவா ஹைகிராஸுக்கான புக்கிங்குகளை ஏற்க தொடங்கியிருக்கின்றனர். ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் ப்ரீ புக்கிங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

The post தானாக சார்ஜ் செய்து கொள்ளும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார்! first appeared on .

]]>